بسم الله الرحمن الرحيم
Thursday 13th December 2018 | 04 ரபீஉல் ஆஹிர் 1440AH
பதாகை
news menu left
news menu right

பதாகை

பதாகை

  • Google Bookmarks
  • Twitter
  • Windows Live
  • Facebook
  • MySpace
  • deli.cio.us
  • Digg
  • Newsvine
  • reddit
  • StumbleUpon
  • Yahoo! Bookmarks
  • Yigg
புஷ்..ஷ்..ஷுன்னு.... போச்சு !?!...அச்சிடுகமின்-அஞ்சல்
08 மார்ச் 2013 காலை 10:38

புஷ்..ஷ்..ஷுன்னு.... போச்சு (1)

இந்த சிறு ஆக்கத்தில், ஊரில் நடந்த சிறு சிறு சம்பவங்களால் என் மனது சிறிது பதித்ததின் தொகுப்பு. யாரையும் புண்படுத்தும் நோக்கம் கண்டிப்பாக கிடையாது.

- அன்று இரவு சுமார் 10 மணி அளவில் என்னை வழிமறித்து, மச்சான் ஒரு விசயம் உன்னிடம் சொல்லனும், மனது வலிக்குது மச்சான்... என்று பரபரப்புடன் நின்றான், என் நண்பன்.

விசயம் அறிந்ததும் எனக்கும் அதிர்ச்சி தான். விசயம் என்னன்னா..

- அன்று இரவு சுமார் 8 மணி அளவில், ஊருக்குள் ஒரு சகோதர சமுதாயத்தின் இளைஞன், நம் சகோதரி ஒருத்தியை பைக்கில், வீட்டுக்கு அருகில் இறக்கி விட்டு விட்டு சென்றானாம்.

நான் நண்பனிடம்,

- நீ பார்த்தாயா..? என்றேன்.

- நானும் பார்த்தேன், அங்கு நின்றுகொண்டு இருந்த இந்த.. இந்த பெண்மணிகளும் பார்த்தார்கள். அனைவர்களும் கொதித்து விட்டார்கள், என்றான்.

- விசாரித்தேன், எனக்கு தெரிந்த பெண்மணி ஒருவரிடம். அதற்க்கு அந்த பெண்மணி கூறியது தான் அதிர்ச்சி.

- உண்மைதானாம். உடனே இரு பெண்மணிகள் அந்த பெண்ணின் வீட்டிற்கு சென்று, அவளின் தாயாரிடம் விபரம் கூறியதும், அந்த தாயார் ஒரு சிறு சலனம் கூட இல்லாமல்.. கூலாக.. கூறியது..

"என் மவ.. அவ பிரண்டு வீட்டுக்கு பாடம் படிக்க சென்றாள். இரவு டைம் ஆகி விட்டதாம். அதான் ஃபிரண்டின் அண்ணன் பைக்கில் விட்டுவிட்டு சென்றான் ".

புஷ்..ஷ்..ஷுன்னு.... போச்சுல்ல.. !!

எவ்வளவு விபரம் பார்த்தீர்களா..? எவ்வளவு விழிப்புணர்வு..??!!

முக்குக்கு முக்கு லவுட் ஸ்பீக்கர் வைத்து எத்தனை பயான்கள் ஒலிபரப்பு செய்து என்ன பயன்.!!

பின்பு.. அவளின் மாமாவிடம் விபரம் சொல்லி, ஸ்ட்ராங் ஆக கண்டிக்க வைக்கப்பட்டது கூடுதல் விசயம், காரணம் மாமா மகனை தான் பேசி வைத்து இருக்காங்களாம்.

என்று திருந்துமோ நம் சமூகம். பிராத்திப்போம் வல்ல நாயனிடம்.

புஷ்..ஷ்..ஷுன்னு.... போச்சு (2)

அன்று ஒரு காலம். நான் ஊரில் பஜாஜ் ஸ்கூட்டர் வைத்து இருந்த நேரம். நம் ஊரில் உள்ள முடுக்குகள் அதன் பயன்பாட்டை ஓரளவு முழுமையாக பயன் படுத்திய காலம்.

குத்துக்கல் தெருவில் இருந்து, பஸ் ஸ்டாண்ட் வருவதற்கு கூட, தெருவில் தலையை காட்ட மாட்டார்கள், நம் பெண்மணிகள். அதாங்க.. மகாத்மா காந்தி நினைவு ஆர்ச்சை தாண்டியதும், தலையில் இருந்த தொப்பியை கழற்றி வைப்போமே.. அந்த காலம்.

என் மனைவியை மருத்துவமனைக்கு அழைத்து செல்ல, ஸ்கூட்டரில் ஏறச்சொன்னேன். அவங்க பார்த்த சூடு பார்வை இருக்கே..! என்னமோ மொட்டை மாடியில் இருந்து குதிக்க சொன்னமாதிரி அதிர்ந்து விட்டார்கள்.

பின்பு, கெஞ்சி கூத்தாடி, தாஜா செய்தும், மிரட்டியும் வண்டியில் ஏற்றி சென்று விட்டேன்.

மருத்துவ மனையை அடைந்ததும், ஒரே சண்டை. இப்படி பண்ணிவிட்டீர்களே.. பஜார் வழியாக வந்து விட்டீர்களே, சங்கத்து படிகளில் இருந்த அனைவர்களும் பார்த்து விட்டார்களே.. என்று ஒரே புலம்பல்.

இன்றோ, மாறி விட்டது.. தற்போது ஊரில் ஸ்கூட்டியில் நம் பெண்கள் அவர்களே ஓட்டி வருவது ஆச்சரியமாகவும், சந்தோசமாகவும் உள்ளது. அனைத்தும். நன்று தான்.

- பொங்கல் மறுநாள் காலை, வீட்டில் கரண்ட் போடில் சிறு நெருப்பு பொறி வந்ததால், டெக்னீசியன் ஒருவரை அழைத்து வர தேவமார் தெருவுக்கு சென்று கொண்டு இருந்தேன்.( நகராட்சி தெருக்கு மேற்க்கில் இருக்கும் தெரு , ஆசாரிமார் தெரு - கோமான் புதூர் ரோடு).

அப்போது ஸ்கூட்டியில் இரண்டு பெண்மணிகள், கண்ணியமாக பர்தா அணிந்து, முகத்தை மறைத்து, அழகாக ஓட்டி வந்தார்கள்.

அப்போது.. தேவர்மார் தெரு முக்கில், மூன்று போலீஸ் காரர்களை பந்தோபஸ்துக்கு போட்டு இருந்தார்கள். இந்த போலீஸ் காரர்களை கண்டு, இந்த இரு சகோதரிகளும் கையை காட்டி, டாட்டா கட்டிக்கொண்டு செல்லவும், அதில் இருந்த ஒரு காவலர் பதிலுக்கு டாட்டா காட்டவும்..

இந்த டாட்டா சிறிது தூரம் வரை தொடர்ந்தது..!!!

புஷ்..ஷ்..ஷுன்னு.... போச்சுல்ல..!!

இதை கண்டதும் பூரித்த மனதில் பூசனம் பூத்து விட்டது. ஒருவேளை அவர்களுக்கு தெரிந்தவர்களாக இருக்கும் என்று மனதை ஆறுதல் படுத்திக்கொண்டேன்.

புஷ்..ஷ்..ஷுன்னு.... போச்சு (3)

சென்ற மாதம், அதிகமான பள்ளிகளிலும், பெண்கள் தைக்காக்களிலும் முஹியத்தீன் மௌலூது நடைபெற்றது.

எங்கள் பள்ளியிலும் நடைபெற்றது. மக்ரிப் தொழுததும் ஆரம்பித்து விடும். சில நாட்கள் நான் இதை அவதானித்து வந்ததில் ஒரு ஆச்சரியம்.

* முதல் நாள் ஓதுபவர்கள் எங்கு அமர்ந்து இருந்தார்களோ அதே இடத்தில் தான் தொடர்ந்து வந்த நாட்களிலும் அமர்ந்து இருந்தார்கள்.

* அதே ஆட்கள், அதே எண்ணிக்கையில் தான் இருந்தார்கள்.

* ஒருவர் இருவரை தவிர, மற்ற அனைவர்களையும் நான் இதற்க்கு முன்பு பார்த்தது இல்லை. நம்ம ஜமாஅத் ஆளே இல்லை.

ஆச்சரியமாக இருந்தது..! ஒரு சகோதரரிடம் என் ஆச்சரியங்களை பற்றி விசாரித்ததும், அவர்..

- அவர்கள் யாரும் நம் ஜமாஅத் இல்லை. மௌலூது ஓத காசு கொடுத்து அழைத்து வந்துள்ளார்கள். ஒரு பேக்கேஜ் மாதிரி, இத்தனை நாளைக்கு மௌலூத் ஓத இவ்வளவு ரூபாய் மற்றும் நார்ஷா என்று அக்ரிமெண்ட் போடாமல் அழைத்து வந்துள்ளார்களாம்.

புஷ்..ஷ்..ஷுன்னு.... போச்சுல்ல..!!

வல்ல அல்லாஹ் நம் அனைவர்களுக்கும் நல்வழியை காட்டுவானாக.

புஷ்..ஷ்..ஷுன்னு.... போச்சு (4)

அன்று நம்முடைய அரசாங்க மருத்துவமனைக்கு செல்ல நேரிட்டது. மாமா அவர்கள் காலில் உள்ள காயத்திற்கு கட்டு போடனும் என்று அழைத்து சென்றார்கள்.

மருத்துவமனை தூய்மையாகவும், ஆர்ச்சுகள், ஒலிபெருக்கிகள் என்று அமர்களமாக இருந்தது. கரை வேட்டி கட்டிய சகோதரர்கள், கட்சி கொடி கட்டிய வாகனங்கள் என்று ஒரே பரபரப்பு. முதல்வர் அம்மா அவர்களின் பிறந்தநாள் விழாவை முன்னிறுத்தி, அமைச்சர் அவர்கள் இரத்த தானம் கொடுக்கின்றார்கள்.

இவர்களுடன் சேர்ந்து நம் சகோதர அமைப்பும் இந்த இரத்ததான முகாமில் கலந்து கொண்டு, குருதி கொடை கொடுப்பதாக அறியமுடிந்தது. மிகவும் சந்தோசமாக இருந்தது. எந்த பாகுபாடும் இல்லாமல், குருதி கொடை கொடுப்பதை பாராட்டியே ஆகனும்.

சில மணி நேரம் காத்து இருந்தேன், விழா துவங்கப்போவதற்கான அறிகுறியோ, அமைச்சர் வருவதற்கான பரபரப்போ இல்லை. வீடு சென்றுவிட்டேன், நம் சகோதரர்களை மனதுக்குள் பாராட்டியப்படி.

பின்பு, வேலைகள் பல முடித்து விட்டு வீடு செல்லும் சமயம், தைக்கா தெருவில் சற்று பரபரப்பாக காணப்பட்டது. கரைவேட்டிகளும், கொடிகட்டிய வாகனமும்.

சென்று விசாரித்தேன், குருதி கொடை கொடுத்து விட்டு, சாஹிபு அப்பா தைக்காவில், முதல்வர் அம்மா அவர்களுக்காக, நீண்ட ஆயுளுடன் இருந்து, மக்களுக்காக தொண்டு செய்ய அப்பாவிடம் துஆ (பிராத்தனை) செய்யவதற்க்காக வந்து இருக்கின்றார்களாம்.

புஷ்..ஷ்..ஷுன்னு.... போச்சுல்ல..!!

பிராத்தனை யாரிடம் செய்யனும் என்று நாமும் அறியாமல், மற்றவர்களையும் அறிய வாய்ப்பளிக்காமல் இருக்கும் பரிதாப நிலையை என்ன சொல்லுவது.

புஷ்..ஷ்..ஷுன்னு.... போச்சு (5)

ஊரில் மக்கள் கூட்டம் அதிகம் இருக்கும் கடைகளில் ஒன்று மருந்துக்கடை அடுத்தது சாப்பாட்டுக்கடை. என்ன சாப்பிடனும் என்று நினைக்கின்றீர்களோ அது கிடைக்கும் இடம் நம்ம ஊர்தான். மாட்டு குடல் கறியில் இருந்து அக்கர புளிப்பு வரை ருசிக்கலாம்.

ஒரு சாப்பாட்டுக்கடையில் புரோட்டா வாங்க சந்தர்ப்பம் கிடைத்தது. சால்னா அவ்வளவு டேஸ்ட். நல்ல திக்காக, தேங்காய் நன்றாக அரைத்து, நாக்கில் வைத்தவுடன் புரோட்டா கரைந்து, வாயில் எச்சில் ஊற சாப்பிட முடிந்தது. அவ்வளவு ருசியாக இருந்தது.

இந்த சால்னாவிற்க்காகவே மீண்டும் மீண்டும் அந்த கடையில் புரோட்டா வாங்கி, வீட்டில் சாப்பாடு இருந்தாலும், நாவு அந்த ருசியை விரும்பியது. இப்படி அருமையாக சமையல் செய்கிறார்களே என்று மனதும் பாராட்டியது.

சென்ற வாரம், சவூதிக்கு கொண்டு வர, தம்மடை வாங்குவதற்க்காக தெரிந்த வீட்டிற்கு சென்று இருந்தேன். சற்று நேரத்தில், அந்த ஹோட்டலில் வேளை பார்க்கும் ஒருவர் அந்த வீட்டிற்கு வந்து ஒரு பக்கட் நிறைய எதையோ வாங்கிகொண்டு சென்றார்.

விசாரித்தேன். அவர்கள் வீட்டில் தம்மடை, சீப்பனியம் போன்ற பலகாரங்களுக்காக உபயோகப்படுத்திய, பால் எடுக்கப்பட்ட, பிழிந்த தேங்காய் பூவை இந்த ஹோட்டல்காரர் உபயோகிக்கின்றார்.

அதான் இவ்வளவு திக்காகவும், ருசியாகவும் இருக்கின்றதா சால்னா. இதில் அஜினமோட்டோ உடைய பங்கும் கூடுதல்.

புஷ்..ஷ்..ஷுன்னு.... போச்சுல்ல..!!

இந்த ஹோட்டல்களில் உபயோகிக்கும் ஆயிலை கண்டாலே நம்முடைய ஆயுள் குறைந்து விடும். இவர்கள் ஒரு சொட்டு ஆயிலை கூட வீணாக ஆக்குவதில்லை.

பொரிக்கும் சட்டியில் ஆயிலை ஊற்றி விட்டால் அவ்வளவு தான். அது கடைசியில் சங்கமம் ஆகும் இடம் நம் வயிறு. எத்தனை நாட்கள் வடை, சமூசா பொரிக்கனுமோ பொரித்து விட்டு, பாதி ஆயில் புரோட்டா மாஸ்டரிடம் வந்து விடும். மீதம் பாஸ்ட் பூட் (நூடுல்ஸ், பொறித்த சோறு) மாஸ்டரிடம் செற்றுவிடும்.

யார் இதை எல்லாம் கவனிக்கின்றார்கள். ஹனாயத்து கழிந்தால் சரிதான். பலரும் பல விழிப்புணர்வு கட்டுரைகள் எழுதி விட்டார்கள். பயன் என்று வருமோ.!

தொகுப்பு: சாளை S.I.ஜியாவுத்தீன்

Add comment

காயல் நியுஸ், வாசகர்கள் கருத்துக்களை வரவேற்கிறது. வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் நியுஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்த விதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். முரண்பாடான மரியாதைக்குறைவான, கண்ணியமில்லாத கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கும் அவைகளை நீக்குவதற்கும் எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு. தங்களது பெயர் மற்றும் கருத்துக்களை தமிழில் தட்டச்சு செய்யலாம். உதாரணமாக "காயல்பட்டினம்" என்று தட்டச்சு செய்ய ஆங்கிலத்தில் "kaayalpattinam" என்று தட்டச்சு செய்து Space bar-ஐ அழுத்தினால் தங்கள் தட்டச்சு செய்த சொல் தமிழாக மாற்றப்படும். ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.


Security code
Refresh

 

செய்திகள்

வாவு வஜீஹா வனிதையர் கல்லூரியில் மாநில அளவிலான திறன்மிகு கருத்தரங்கம்!
காயல்பட்டினத்தில் இருந்து இ சேவை மாற்றல் விஷயம்! மாவட்ட ஆட்சியரின் கவனத்திற்கு திங்களன்று கொண்டு செல்வதாக துணை தாசில்தார் உறுதி!!
இ சேவை மையம்: காயலபட்டினத்தில் இருந்து மாற்றப்படக்கூடாது என கோரி மாவட்ட ஆட்சியருக்கு பொது மக்கள் - ஈமெயில், FAX குறுஞ்செய்தி மற்றும் WHATSAPP செய்தி அனுப்ப வேண்டுகோள்!
மண்டலம் வாரியாக அதிகரிக்க உத்தேசிக்கப்பட்டுள்ள காயல்பட்டினம் நகராட்சியின் சொத்து வரி! உங்கள் தெரு எந்த மண்டலத்தில்?
படிவம் 7 பயன்படுத்தி வாக்காளர் பட்டியலில் தவறுதலாக இடம்பெற்றுள்ள பெயரை எவ்வாறு நீக்குவது?
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை

feed-imageFeed Entries

சுடச்சுட காயல் செய்திகள்! சுவையான இஸ்லாமிய கட்டுரைகள் !!
தொடர்பு கொள்ள : admin@kayalnews.com
© Copyright : Kayalnews.com