بسم الله الرحمن الرحيم
Saturday 25th May 2019 | 20 ரமலான் 1440AH
பதாகை
news menu left
news menu right

பதாகை

பதாகை

 • Google Bookmarks
 • Twitter
 • Windows Live
 • Facebook
 • MySpace
 • deli.cio.us
 • Digg
 • Newsvine
 • reddit
 • StumbleUpon
 • Yahoo! Bookmarks
 • Yigg
மேட்டரு இது அல்ல..! (1)அச்சிடுகமின்-அஞ்சல்
19 மார்ச் 2013 காலை 12:12

உங்கள் அனைவர்கள் மீது இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக.

கடன் அன்பை முறிக்கும் - அருமையாக முன்னோர்கள் சொல்லிவிட்டு சென்ற வழக்கு மொழி. அனுபவித்து பார்த்தால் இதன் அருமை புரியும்.

நானும் கடன்கள் பல கொடுத்து அனுபவித்து உள்ளேன். என்னிடம் கடன் வாங்கிய சிலர் என்னிடம் சலாம் கூட சொல்லுவது இல்லை. ஒரே காரணம் கொடுத்த கடனை திரும்ப கேட்டது தான்.

கடன் கொடுப்பதற்கு முன்பே உறவு துண்டிக்கப்படனும் என்றால், ஒரு சிறிய கேள்வி கேட்டால் போதும். அதாவது "நான் உனக்கு கடன் தருகிறேன், நீ எப்போது திருப்பித்தருவாய்? சரியான தேதி சொல்?". என்று சொன்னாலே போதும். உடனே அவர்களுக்கு கோபம் வந்து விடும்.

சென்ற விடுமுறைக்கு முந்திய விடுமுறை ஊருக்கு வந்து இருந்த சமயம் (ஒரு வருடங்களுக்கு முன்பு) , ஒரு சகோதரர் வீட்டிற்கு வந்து

" காக்கா.. என்னுடைய ஆட்டோ கண்டம் ஆகிவிட்டது. புதியது வாங்கணும், கொஞ்சம் கடன் கொடுத்து உதவுங்கள்" என்று கேட்டார்.

முன்பு கடன் கொடுத்து பட்ட பல அனுபவங்களால் தற்போது இயலாது என்று மறுத்து விட்டேன்.

பல மணி நேரம் கெஞ்சிவிட்டு சென்று விட்டார்.

அடுத்த நாள், பஜாரில் சந்தித்து, குடும்பம் மிகவும் கஷ்டத்தில் உள்ளது, பிள்ளைகளுக்கு பள்ளிக்கூட பீஸ் கட்டனும், அது இது என்று நகரவிடாமல் கெஞ்சினார். இங்கும் முடியாது என்று நாசுக்காக சொல்லிவிட்டேன்.

இரண்டு நாட்கள் கழித்து, KMT மருத்துவ மனையில் வைத்தும் தொல்லை. தப்பித்து விட்டேன்.

மீண்டும் சில நாட்கள் கழித்து, நண்பர்களுடன் தெருவில் கதைத்துக்கொண்டு இருக்கும் போது, எங்களையே சுற்றி சுற்றி வந்தார். தொந்தரவு தாங்காமல், கடன் கொடுக்க முடியாது. ஊரில் இரண்டு பைத்துல்மால்கள் உண்டு, அங்கு சென்று உதவி கேள் என்று சொல்லிவிட்டேன்.

பலமுறை வீட்டிற்கு வந்துள்ளார். அவருக்கு கடன் கொடுக்க மனைவி, மாமா ஆகியோர் தற்போது ரெகமண்ட் பண்ண ஆரம்பித்து விட்டார்கள்.

ஒரு கல்யாண வீட்டு ரிசப்சனிலும் பக்கத்து சேரில் உட்கார்ந்து கொண்டு நச்சரிப்பு, கடுமையாக மறுத்து விட்டேன்.

அடுத்த வாரம், திருசெந்தூரில் பைக்கை சர்வீஸ் பண்ண கொடுத்து, வாசலில் காத்து கொண்டு இருந்தேன். எப்படி தான் அவர் கண்ணில் பட்டேனோ.!! அங்கும் வந்து தொல்லை.

நீங்கள் கொடுக்கவில்லை என்றால் மனைவியுடைய நகைகளை அடகு வைத்து வட்டிக்கு தான் வாங்கனும் என்று சொன்னதும், என் மனது சற்று ஆட்டம் கண்டு விட்டது. வட்டி என்ற பெயரை அல்லவா உச்ச்சரிக்கின்றான்.. கொடுமை அல்லவா.

நாம் உதவவில்லை என்றால் அவர் வட்டியின் பக்கம் அல்லவா சென்று விடுவார், இந்த பாவத்திற்கு நாமும் காரணம் ஆகிவிடுவோமோ என்று பயம் வந்து விட்டது. அல்குர்ஆன் வசனங்களும், ஹதீஸ்களும் மனதில் மின்ன ஆரம்பித்து விட்டது.

யார் வட்டி (வாங்கித்) தின்கிறார்களோ, அவர்கள் (மறுமையில்) ஷைத்தானால் தீண்டப்பட்ட ஒருவன் பைத்தியம் பிடித்தவனாக எழுவது போலல்லாமல் (வேறுவிதமாய் எழ மாட்டார்கள்: இதற்குக் காரணம் அவர்கள், "நிச்சயமாக வியாபாரம் வட்டியைப் போன்றதே" என்று கூறியதினாலேயாம்; அல்லாஹ் வியாபாரத்தை ஹலாலாக்கி, வட்டியை ஹராமாக்கியிருக்கிறான்; ஆயினும் யார் தன் இறைவனிடமிருந்து நற்போதனை வந்த பின் அதை விட்டும் விலகிவிடுகிறானோ, அவனுக்கு முன்னர் வாங்கியது உரித்தானது - என்றாலும் அவனுடைய விவகாரம் அல்லாஹ்விடம் இருக்கிறது; ஆனால் யார் (நற்போதனை பெற்ற பின்னர் இப்பாவத்தின் பால்) திரும்புகிறார்களோ அவர்கள் நரகவாசிகள் ஆவார்கள்; அவர்கள் அதில் என்றென்றும் தங்கிவிடுவார்கள்.

( அல்குர்ஆன் 2:275 )

அபூ ஜுஹைஃபா(ரலி) அறிவித்தார்கள்

பச்சை குத்திவிடுபவளையும், பச்சை குத்திக்கொள்பவளையும், வட்டி உண்பவனையும், வட்டி உண்ணக் கொடுப்பவனையும் நபி(ஸல்) அவர்கள் சபித்தார்கள். நாய் விற்ற காசு, விபசாரியின் வருமானம் ஆகியவற்றைத் தடை செய்தார்கள். மேலும், (உயிரினங்களின்) உருவப் படங்கள் வரைபவரையும் நபி(ஸல்) அவர்கள் சபித்தார்கள்.

( ஸஹீஹுல் புகாரி 5347 : Volume :6 Book :68 )

சரி எவ்வளவு வேண்டும், எப்போது திருப்பித்தருவாய்.?

காக்கா, இவ்வளவு பணம் தேவை, சீட்டு ஒன்று போட்டு உள்ளேன், இரண்டு மாதத்தில் தந்து விடுகிறேன், என்றார்.

சரி, நாளைக்கு வந்து வாங்கிக்கொள். நான் இன்னும் இரண்டு வாரத்தில் ஊர் சென்று விடுவேன். நீ கண்டிப்பாக பணத்தை இரண்டு மாதத்தில் என் மாமாவிடம் கொடுத்து விடனும்.

சரிங்க காக்கா, கண்டிப்பாக.. என்று ஓனான் தலையை ஆட்டின மாதிரி ஆட்டினான்.

கொடுத்தேன், இரண்டு மாதங்கள் ஓடி விட்டன. நான்கு மாதம் கழித்து மாமாவிற்கு போன் போட்டு, அவனிடம் பணத்தை வசூலிங்க.. என்றேன். மாமாவும் பலமுறை கேட்டார்கள்.. சரியான பதில் இல்லை.

நான் பலமுறை போன் போட்டும் எடுப்பது இல்லை. ஒரு முறை நெட் போன் போட்டதும் எடுத்தார். என்னப்பா என்று ஆரம்பிப்பதற்குள் " காக்கா.. நீங்க ஊருக்கு வருவதற்குள் பணத்தை உங்கள் வீட்டில் கொடுத்து விடுகிறேன்.." என்றதும்.. பதில் பேசாமல் போனை வைத்து விட்டேன், இன்னும் சில மாதங்கள் தானே என்று.

மாமா அவர்களும் பலமுறை அவனிடம் நான் ஊர் வரும் விசயம் கூறியும் பணம் வருவதற்கான அறிகுறி இல்லை.

இரண்டு மாதங்களுக்கு முன்பு ஊர் வந்தேன்.பல முறை போன் அடித்தேன், சிலமுறை எடுத்தார், டவர் இல்லை..சப்தம் விளங்க வில்லை, என்று பல பதில்கள்.

ஒருமுறை பஜாரில் சந்திதேன். என்னப்பா பணம் என்னாச்சு..

- இல்லை காக்கா. கொஞ்சம் சிரமம் உள்ளது. இரண்டு நாளில் தந்து விடுகிறேன்.

ஒரு வாரம் ஆகிவிட்டது.. ஆனால் அவர் கூறிய இரண்டு நாட்கள் மட்டும் வரவில்லை.

ஒரு வாரம் கழித்து, ஜலாலிய அருகில் அவரை பார்க்க முடிந்தது. என்னப்பா.. இரண்டு நாள் சொன்னாய். இன்றோடு ஒன்பது நாட்கள் ஆகிவிட்டனவே.. என்றதும். ஒரு பதில் சொன்னானே பார்க்கலாம்,. என் தலையே சுற்றி மயக்கம் வந்து விடும்போல ஆகிவிட்டது.

என்ன சொன்னார்ன்னா கேட்கின்றீர்கள்.

"என்ன காக்கா.. உங்க பணத்தை எடுத்துவிட்டு ஓடியா விடப்போகின்றேன். இப்படி பார்க்கின்ற இடமெல்லாம் பணத்தை கேட்கின்றீங்க.." என்றாரே பார்க்கலாம்.

மேட்டர் இது அல்ல...!

நானும் டென்ஷன் ஆகாமால், நம்முடைய சேலை முள்ளில் விழுந்து விட்டது. அதற்கும் மேலாக, லேசாக இழுத்ததால் சேலை சற்று கிழிந்தும் விட்டது. ஆக கவனமாக எடுக்கனும் என்று டென்ஷன் ஆகவில்லை.

சரி, ஓகே. விட்டு பிடிப்போம் என்று இருந்த நேரத்தில், ஊருக்கு புறப்பட இரண்டு நாட்களுக்கு முன்பு, ஐயா அவர்கள் என் வீட்டிற்கு வந்தார்கள்.

மிகவும் பவ்யமாக, காக்கா.. ஆட்டோ ஓட்டி கட்டுப்படி ஆகவில்லை. நான் ஒரு அம்பாசடர் கார் ஒன்று பார்த்து வைத்து உள்ளேன், கொஞ்சம் பணம் தேவை படுகிறது, பார்த்து உதவி செய்யுங்களேன், இரண்டு மாதத்தில் அனைத்தையும் திருப்பி தந்து விடுகிறேன்" என்றாரே பாருங்க..

இப்போ உண்மையில் தலை சுற்றி விட்டது.

பாத்திரம் அறிந்து பிச்சை போடு என்பார்கள், அது கடனுக்கும் பொருந்தும் போல.

யாராவது உதவ தயாராக இருக்கின்றீர்களா..?

கட்டுரையாளர்

சாளை S.I.ஜியாவுத்தீன்,

Add comment

காயல் நியுஸ், வாசகர்கள் கருத்துக்களை வரவேற்கிறது. வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் நியுஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்த விதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். முரண்பாடான மரியாதைக்குறைவான, கண்ணியமில்லாத கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கும் அவைகளை நீக்குவதற்கும் எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு. தங்களது பெயர் மற்றும் கருத்துக்களை தமிழில் தட்டச்சு செய்யலாம். உதாரணமாக "காயல்பட்டினம்" என்று தட்டச்சு செய்ய ஆங்கிலத்தில் "kaayalpattinam" என்று தட்டச்சு செய்து Space bar-ஐ அழுத்தினால் தங்கள் தட்டச்சு செய்த சொல் தமிழாக மாற்றப்படும். ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.


Security code
Refresh

 
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை

feed-imageFeed Entries

சுடச்சுட காயல் செய்திகள்! சுவையான இஸ்லாமிய கட்டுரைகள் !!
தொடர்பு கொள்ள : admin@kayalnews.com
© Copyright : Kayalnews.com