بسم الله الرحمن الرحيم
Thursday 18th October 2018 | 07 ஸஃபர் 1440AH
பதாகை
news menu left
news menu right

பதாகை

பதாகை

  • Google Bookmarks
  • Twitter
  • Windows Live
  • Facebook
  • MySpace
  • deli.cio.us
  • Digg
  • Newsvine
  • reddit
  • StumbleUpon
  • Yahoo! Bookmarks
  • Yigg
அப்படியே ஆச்சரியப்பட்டுப் போனேன்! சாளை ஜியாவுத்தீன் கட்டுரை!!அச்சிடுகமின்-அஞ்சல்
31 மார்ச் 2015 மாலை 07:18

எல்லாப்புகழும் புகழ்ச்சியும் வல்ல அல்லாஹ் ஒருவனுக்கே.

அவன் படைத்த படைப்புக்களை கூர்ந்தது கவனித்தால் உண்மையில் நம்முடைய ஈமான் பலப்படுவதோடு, அல்லாஹ்வின் வல்லமையின் மகத்துவம் புரியும்.

திருமறையில் வல்ல அல்லாஹ்

3:190.நிச்சயமாக, வானங்கள், பூமி ஆகியவற்றின் படைப்பிலும்; இரவும், பகலும் மாறி மாறி வருவதிலும் அறிவுடையோருக்கு திடமாகஅத்தாட்சிகள் பல இருக்கின்றன.

6:99.அவனே வானத்திலிருந்து மழையை இறக்கினான். அதைக் கொண்டு எல்லா வகையான புற்பூண்டுகளையும் நாம் வெளியாக்கினோம்; அதிலிருந்து பச்(சை(த் தழை)களை வெளிப்படுத்துகிறோம்; அதிலிருந்து நாம் வித்துகளை அடர்த்தியான கதிர்களாக வெளிப்படுத்துகிறோம்; பேரீத்த மரத்தின் பாளையிலிருந்து வளைந்து தொங்கும் பழக்குலைகளும் இருக்கின்றன; திராட்சைத் தோட்டங்களையும், (பார்வைக்கு) ஒன்று போலவும் (சுவைக்கு) வெவ்வேறாகவும் உள்ள மாதுளை, ஜைத்தூன் (ஒலிவம்) ஆகியவற்றையும் (நாம் வெளிப்படுத்தியிருக்கிறோம்); அவை (பூத்துக்) காய்ப்பதையும், பின்னர் கனிந்து பழமாவதையும் நீங்கள் உற்று நோக்குவீர்களாக - ஈமான் கொள்ளும் மக்களுக்கு நிச்சயமாக இவற்றில்அத்தாட்சிகள் அமைந்துள்ளன

13:3.மேலும், அவன் எத்தகையவன் என்றால் அவனே பூமியை விரித்து. அதில் உறுதியான மலைகளையும், ஆறுகளையும் உண்டாக்கினான்; இன்னும் அதில் ஒவ்வொரு கனிவர்க்கத்திலிருந்தும் இரண்டு இரண்டாக ஜோடிகளை உண்டாக்கினான்; அவனே இரவைப் பகலால் மூடுகிறான் - நிச்சயமாக இவற்றில் சிந்திக்கும் மக்களுக்குப் பலஅத்தாட்சிகள் இருக்கின்றன.

அவனுடைய அத்தாட்சிகளை ஓய்வு கிடைக்கும் சமயம் கொஞ்சம் அசைபோட்டு பாருங்கள்.. அற்புதங்கள் புரியும்.

வைரமுத்து எழுதிய ஒரு பாடலில் ஒரு சில வரிகள் மட்டும் எனக்கு மிகவும் பிடிக்கும்.

" பூவுக்குள் ஒளிந்திருக்கும் கனிக்கூட்டம் அதிசயம்

வண்ணத்துப் பூச்சி உடம்பில் ஓவியங்கள் அதிசயம்

துழை செல்லும் காற்று மெல்லிசையாதல் அதிசயம்

குருநாதர் இல்லாத குயில் பாட்டு அதிசயம் ".

ஏன் பெரியதாக யோசிக்கனும். நம்முடைய அன்றாட வாழ்க்கையில் நடக்கும் சம்பவத்தை பார்த்தாலே அல்லாஹ்வின் வல்லமை புரியும்.

அன்று ஒரு நாள். அதிகாலை சுபுஹு தொழுகைக்கு வைத்த அலராம் அடிப்பதற்கு முன்பே தூக்கம் கலைந்தது. ஏதோ ஒரு வித்தியாச சப்தம். பேன் சுவிட்ச்சை ஆப் பண்ணிவிட்டு கூர்ந்து நோக்கியதில், வெளிக்கதவை யாரோ இடைவெளி விட்டு தட்டுவது போல ஓர் உணர்வு.

கண்ணாடி வழியாக பார்த்தேன். ஆட்கள் யாரும் தென்பட வில்லை. தட்டுதல் தொடர்ந்தது. மெதுவாக தாழ்ப்பாள்களைதிறந்து, சடார் என்று கதவை திறந்தேன். ஒரு கறுத்த ஆடு நின்றுகொண்டு இருந்தது. அட இது தானா..என்று அதை விரட்டி விட்டு, படுத்து விட்டேன்.

சுபுஹு பாங்கு சொன்னதும், பள்ளிக்கு தொழுக செல்லும் போது, அந்த ஆடு படிக்கு கீழே நின்றுகொண்டு இருந்தது, முகத்தில் கலவரத்துடன்.

தொழுதுவிட்டு வந்ததும், மங்கிய வெளிச்சத்தில் அந்த ஆட்டை கூர்ந்து கவனித்தேன். மிரட்சியுடன் பார்த்தது. தலையை அங்கும் ஆட்டி, நிலை கொள்ளாமல் தத்தளித்தது.

அட.. குட்டி போடுகிறது. மெதுவாக மெதுவாக ஒரு கறுத்த தலை வெளியில் எட்டிப்பார்க்க, சிறிது நிமிடத்தில் சுகப் பிரசவம்.கொஞ்ச கொஞ்ச இடைவெளியில் மூன்று குட்டிகளை ஈன்றது.

மருத்துவர் இல்லை, மருத்துவச்சி இல்லை, மருத்துவமனை இல்லை, நோ ஆபரேஷன், நோ இனிமா, நோ இன்ஜக்சன்.. அனைத்தும் சுபமாக முடிந்தது.

அந்த இடமே குட்டிகளின் காச் மூச் கத்தல்களால் அதிர்ந்தது.தாய் ஆடு, தன் நாவினால்குட்டிகளை சுத்தப் படுத்தும் அழகு, இரண்டு முலைக்காம்பில் மூன்று குட்டிகளுக்கு, லாவகமாக பால் கொடுக்கும் பாங்கு, சில நிமிடங்களில் அந்த குட்டிகள் அங்கும் இங்கும் ஓடும் குதூகலம்.. எல்லாம் அதிசயம்.

இதை எல்லாம் யார் கத்துக்கொடுத்தது.

ஒரு ஒருமணி நேரம் அதையே ரசித்து பார்த்துக்கொண்டே இருந்தேன்.

திடீர் என்று தாய் ஆடு, நகரத் தொடங்கியது. ஒரு பத்து அடி தூரம் நகர்ந்ததும், குட்டிகளும் கத்துவதை நிறுத்தாமல் தாயின் பின்னால் ஓடியது. சட்டென திரும்பிய தாய், "புர்ர்ர்..ர்" என்று ஒரு சப்தம் போட்டது.

உடனே, மூன்று குட்டிகளும் சப்தத்தை நிறுத்தி, படிக்கு கீழே வந்து படுத்துக் கொண்டது. நிசப்தம். நிசப்தம். தாய் ஆடு சென்று விட்டது.

எனக்கு அதிர்ச்சி. என்ன கொடுமையான தாய் இது. பெற்ற பிள்ளையை அனாதையாக விட்டு விட்டு சென்று விட்டதே.

யார் வீட்டு ஆடு..? தெரியவில்லை. என்ன செய்வது.. புரியவில்லை.

நகராட்சியால் குடும்ப கட்டுப்பாடு செய்து விடப்பட்ட நாய்கள் எல்லாம் வெறிகொண்டு சுத்துகின்றதே.நேற்று தானே நம் வீட்டு கோழியை விரட்டி சென்று தூக்கி கொண்டு சென்றது.

படுத்துக்கொண்டு இருக்கும் இந்த பச்ச குழந்தைகளை குதறி விடுமே..!

ஆக, டீ, டிபன் அனைத்தும் வெளிப்படியில் வைத்து சாப்பிட்டேன்.

நேரம் ஆக ஆக பல ஆடுகள் வரத்துவங்கின. ஏரியா பூராவும் ஆடுகளின் கத்தல்களும், நாய்களின் ஊளை களும், பள்ளிக்கூட மாணவர்களின் சப்தங்களும் ஆக நர்மல் நேரம் ஆகி விட்டது. தாய் ஆடு மட்டும் வரவில்லை.

அங்கு சுத்திகொண்டு இருந்த பல ஆடுகள் இந்த குட்டிகளை முகர்ந்து முகர்ந்து பார்த்து சென்றன. பள்ளிக்குழந்தைகள் வாஞ்சையுடன் குட்டிகளை தடவிச் சென்றார்கள். ஆனால் குட்டிகள் எந்த சஞ்சலமும் இல்லாமால், தலையை சுருட்டி தூங்கிக்கொண்டு இருந்தன.

என்ன செய்வது, 3 மணி நேரம் ஆகிவிட்டன. தாய் வரவில்லை. பலரிடமும் விவரங்களை சொல்லி விட்டாச்சு.

யாரும் ஆட்டையோ, குட்டியையோ தேடி வரவில்லை. வெயில் வேறு சுளீர் என்று அடிக்கின்றது. எனக்கோ தேவை இல்லாத டென்சன் அதிகரித்தது.

ஒரு அரை மணி நேரம் கழித்து, தூரத்தில் தாய் ஆடு ஓடி வருவது தெரிந்தது. கத்திக்கொண்டே வந்தது. அதன் குரலை கேட்டதும், குட்டிகள் குளிர்ந்த தண்ணீரை உடலில் ஊற்றினால் எப்படி பதறி எழுமோ, அது போல துள்ளிக்குதித்து, காச்... காச்...என்று அதிர அதிர கத்திக்கொண்டே தாயை நோக்கி ஓடியது. அப்பாடா..! நிம்மதியோ நிம்மதி.

தாய் ஆடு குட்டிகளை விட்டு செல்லும் சமயம், "புர்ர்..ர்" என்று ஒரு சப்தம் மட்டும் போட்டதே..! அதற்கு அர்த்தம் என்ன?

அந்த சப்தத்தை கேட்டதும் , நாடி நரம்புகள் அறுந்த மாதிரி, கப்சிப் என்று படிக்கு கீழே வந்து படுத்துக்கொண்டதே.! யார் கத்துக் கொடுத்தது..?

இந்த " புர்ர்..ர்" என்ற வார்த்தைக்குள் எத்தனை..எத்தனை. விசயங்கள். நான் சென்று வருகிறேன், நீங்கள் கத்தாமல் படுத்துக்கொள்ளுகள். யார் கூப்பிட்டாலும் செல்லாதீர்கள்..!!

பிறந்து ஒரு மணி நேரத்தில், மொழி, அதன் விளக்கம், ஒற்றை சொல்லில் ஒரு பெரிய விசயங்கள் ஆகியவற்றை கத்துக் கொடுத்தது யார்..?

பல ஆடுகள் கத்திக்கொண்டும், இந்த குட்டிகளை முகர்ந்துக்கொண்டும் சென்றனவே..?

தன் தாய் குரலுக்கும் வேறு குரலுக்கும் வித்தியாசத்தை அறியச் செய்தது யார்..?

அருகில் வந்த ஆடுகள், கோழிகள், நாய்கள், மனிதர்கள் ஆகியோரை பிறந்த ஒரு மணிநேரத்தில் வித்தியாசத்தை அறியச் செய்தது யார்..?

இது எல்லாம் வல்ல அல்லாஹ்வின் அற்புதம் அல்லவா..?

சிந்தித்துப் பாருங்கள். வல்ல அல்லாஹ்விற்கு உண்மையாக இருந்து நன்றி செலுத்துங்கள்.

சாளை எஸ்‌.ஐ.ஜியாவுத்தீன்,

Add comment

காயல் நியுஸ், வாசகர்கள் கருத்துக்களை வரவேற்கிறது. வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் நியுஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்த விதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். முரண்பாடான மரியாதைக்குறைவான, கண்ணியமில்லாத கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கும் அவைகளை நீக்குவதற்கும் எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு. தங்களது பெயர் மற்றும் கருத்துக்களை தமிழில் தட்டச்சு செய்யலாம். உதாரணமாக "காயல்பட்டினம்" என்று தட்டச்சு செய்ய ஆங்கிலத்தில் "kaayalpattinam" என்று தட்டச்சு செய்து Space bar-ஐ அழுத்தினால் தங்கள் தட்டச்சு செய்த சொல் தமிழாக மாற்றப்படும். ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.


Security code
Refresh

 

செய்திகள்

வாவு வஜீஹா வனிதையர் கல்லூரியில் மாநில அளவிலான திறன்மிகு கருத்தரங்கம்!
காயல்பட்டினத்தில் இருந்து இ சேவை மாற்றல் விஷயம்! மாவட்ட ஆட்சியரின் கவனத்திற்கு திங்களன்று கொண்டு செல்வதாக துணை தாசில்தார் உறுதி!!
இ சேவை மையம்: காயலபட்டினத்தில் இருந்து மாற்றப்படக்கூடாது என கோரி மாவட்ட ஆட்சியருக்கு பொது மக்கள் - ஈமெயில், FAX குறுஞ்செய்தி மற்றும் WHATSAPP செய்தி அனுப்ப வேண்டுகோள்!
மண்டலம் வாரியாக அதிகரிக்க உத்தேசிக்கப்பட்டுள்ள காயல்பட்டினம் நகராட்சியின் சொத்து வரி! உங்கள் தெரு எந்த மண்டலத்தில்?
படிவம் 7 பயன்படுத்தி வாக்காளர் பட்டியலில் தவறுதலாக இடம்பெற்றுள்ள பெயரை எவ்வாறு நீக்குவது?
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை

feed-imageFeed Entries

சுடச்சுட காயல் செய்திகள்! சுவையான இஸ்லாமிய கட்டுரைகள் !!
தொடர்பு கொள்ள : admin@kayalnews.com
© Copyright : Kayalnews.com