بسم الله الرحمن الرحيم
Sunday 18th February 2018 | 02 ஜமாதுல் ஆஹிர் 1439AH
பதாகை
news menu left
news menu right

பதாகை

பதாகை

  • Google Bookmarks
  • Twitter
  • Windows Live
  • Facebook
  • MySpace
  • deli.cio.us
  • Digg
  • Newsvine
  • reddit
  • StumbleUpon
  • Yahoo! Bookmarks
  • Yigg
சிறார்களின் வளர்ச்சியில் பெற்றோர்களின் பங்கு! (பாகம் 6)அச்சிடுகமின்-அஞ்சல்
23 செப்டம்பர் 2011 மாலை 11:08

குழந்தைகள் விளையாடும் பொழுது அவர்களுக்கு மத்தியில் அடித்துக் கொள்வார்கள். மண்ணை வீசிக் கொள்வார்கள். கல்லை வீசிக் கொள்வார்கள். சிறிது நேரத்தில் அவர்களுக்கு மத்தியில் சிரித்து விளையாடி மகிழ்வார்கள்.

இது சிறு பிள்ளைகளுக்கு மத்தியில் நடக்கக்கூடிய ஒரு நிகழ்வு. இதற்கு சில பெற்றோர்கள் தன் பிள்ளைகளை அடித்தää சண்டையிட்ட குழந்தையிடம் சண்டையிடுவதும் இதன் மூலம் பெரியவர்களுக்கு மத்தியில் சண்டைகள் ஊடுருவி பெரிய சண்டையாக உருமாறுகின்றது.

அதுவும் குடும்பமாக இருந்தால் ஏற்கெனவே இனபந்துக்களை வெட்டிட சந்தர்ப்பங்களை எதிர்ப்பார்த்துக் கொண்டிருக்கும் போது வாய்க்கு மெல்ல அவல் கிடைத்த கதையாகி விடும். இது ஒருபுறம். (பெரியவர்களுக்கு மத்தியில்) சண்டையிட்டுக் கொள்ளக்கூடிய பெற்றோர்கள் தன் பிள்ளைகள் தோழமையுடன் பழகி வந்த நட்புறவை தன் சண்டைக்கு பிறகு நட்பை அவர்களுக்கு மத்தியில் சண்டையையும் குரோதத்தையையும் உண்டுபண்ணுகிறார்கள். பகைமையை தொடரக் கூடியவர்களும் இருக்கிறார்கள்.


    ஒரு மனிதன் தன் சகோதரனுடன் மூன்று இரவுகளை விட அதிகமாக உறவைத் துண்டித்துக் கொள்வதும் இருவரும் பாதையில் ஒருவரையொருவர் சந்தித்தால் முகம் திருப்பிக் கொள்வதும் அனுமதிக்கப்பட்டதல்ல. எவர் சலாம் சொல்வதில் முந்திக் கொள்கிறாரோ அவரே அவ்விருவரில் சிறந்தவர் ஆவார் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
                அறிவிப்பாளர் : அபூஅய்யூப் அல் அன்சாரி(ரலி)
                நூல்கள் :- புஹாரி, முஸ்லிம்.
    மிக பகைமையை பாராட்டியவர்களை பார்த்தால் அவர்கள் மிக நெருக்கமான உறவாக இருப்பார்கள். அவர்களுக்கு மத்தியில் வாழ்விலும்,இறப்பிலும்  கலக்காமல் காலம் முழுக்க சண்டையுடன் இருக்கிறார்கள். இந்த நேரத்தில் தன் குழந்தைகள் அவர்களின் வீட்டிற்கு சென்றால்ää அல்லது அவர்களுடைய குழந்தைகளிடம் பேசினால் பிள்ளைகளை அடித்து,உதைத்து கதற வைக்கின்றனர்.
    குழந்தைக்கு என்ன எண்ணம் அப்போது உருவாகும் என்று பெற்றோர்கள் சிந்திப்பதில்லை.


    விதை விதைத்தவன் விதையறுப்பான்.
    வினை விதைத்தவன் வினையறுப்பான்.


    என்பது போல நாம் அவர்களிடம் பகைமையை காட்டச் சொல்லி வளர்த்தால் அக்குழந்தை பெரியதாகியதும் பகைமையை தன் உறவுகளுடன் வளர்த்துக் கொள்ளக்கூடும். ஏன் தன் தாயைக் கூட பகைமையாக பார்க்கலாம.; தன் உடன் பிறந்தவர்களை பகைக்கலாம். இப்படிப்பட்ட சூழ்நிலைக்கு தயவுசெய்து குழந்தைகளை தள்ளாதீர்கள் அன்பான பெற்றோர்களே!.
    ஏனெனில் இவ்வுலகம் மட்டும் வாழ்க்கை என்பதல்ல. மறுமை என்ற உலகமும் உள்ளது. அவற்றில் நாம் சொர்க்கத்தை பெற வேண்டும் என்றால் (இனபந்துக்களை) சொந்தங்களை சொந்தமாக்கி கொள்ள வேண்டும்.
    நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். இனபந்துக்களை வெட்டி வாழ்பவன் சுவனம் நுழைய மாட்டான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
                அறிவிப்பாளர் : ஜீபைர் இப்னு முத்இம் (ரலி)
                நூற்கள்     : புஹாரி,முஸ்லிம்
    சின்னச்சின்ன விஷயங்களுக்கெல்லாம் சண்டையிட்டு உறவுகளுடன் சேர்ந்து வாழாமல் இருப்பதற்கு காரணம் பொறாமை,காழ்ப்புணர்ச்சி விட்டுக் கொடுக்காத தன்மை இவைகள்தாம். இவைகளை பெற்றோர்கள் கைவிட்டால் குழந்தைகளும் இச்செயல்களில் ஈடுபட மாட்டார்கள்.
    உறவினர்களுடன் உறவாடும் போது பொருளாதாரம் வீணாகிவிடும் என்று நினைக்கிறார்கள் சிலர். இது தவறாகும். உறவுகளுடன் உறவாடும் போது செல்வம் கூடுதலாக தான் ஆகும்.
    தன் பிள்ளைகளை கஷ்டப்பட்டு படிக்க வைத்து நல்ல ஒழுக்கத்தை கற்றுக் கொடுக்கää காரணங்களில் ஒன்று குழந்தைகள் கை நிறைய சம்பாதிக்க வேண்டும். ஆரோக்கியமாக வழ வேண்டும். இம்மையிலும் மறுமையிலும் வெற்றிப் பெற வேண்டும் என்ற நோக்கம். அந்த ஆசையை பெற வழி என்ன தெரியுமா? பெற்றோர்களே!
    “யார் தன்னுடைய உணவு மற்றும் வாழ்நாள் அதிகரிக்கப்பட வேண்டும் என விரும்புகிறாரோ அவர் தன் உறவினரோடு ஓட்டி வாழட்டும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
                        அறிவிப்பாளர் : அனஸ் (ரலி)
                        நூற்கள்: புஹாரி, முஸ்லிம்
    அல்லாஹ்விடம் தனக்கும் தன் குழந்தைகளுக்கும் நல்ல பதவி கிடைக்க வேண்டும் என்றால் உறவோடு உறவாட வேண்டும். பிள்ளைகளையும் உறவாட அனுப்ப வேண்டும்.
    அல்லாஹ் கூறுகின்றான். நீங்கள் (அல்லாஹ்வின் வேதத்திற்கு கீழ்படிவதை விட்டும்) புறக்கணித்து பந்தத்தில் உள்ள உங்களது சுற்றத்தாரைத் துண்டித்து விடவும் முனைவீர்களா? அவர்கள் எத்தகையவர்கள் என்றால் அவர்களை அல்லாஹ் சபித்து அவர்களை செவிடாக்கிää அவர்களுடைய பார்வைகளையும் (போக்கிக்) குருடாக்கி விட்டான்.
                        அல்குர்ஆன் - 47:22,23
    உறவினர்களிடம் சண்டையிட்டு அவர்களின் உறவை துண்டித்து வாழ்ந்தால் அல்லாஹ்வின் வேதனைக்கும் சாபத்திற்கும் ஆளாக நேரிடும். அல்லாஹ் இதைவிட்டும் நம்மையும் நம் குழந்தைகளையும் காப்பானாக.
    நாம் சண்டையிட்டோமே எப்படி அவர்களுடன் பேசுவது என வரட்டு கவுரம் பார்க்க வேண்டாம்.
    உடனடியாக சலாம் சொல்லி பேச ஆரம்பிக்க வேண்டும் இன்ஷா அல்லாஹ்.
    இப்படி பேச நீங்கள் முன் வந்த பிறகும் உங்களிடம் அவர்கள் பேச மறுத்தால் விலகிச் சென்றால் கவலைபட தேவையில்லை.
    “ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் கூறினார்கள். அல்லாஹ்வின் தூதரே! எனக்கு சில உறவினர்கள் இருக்கிறார்கள். அவர்களுடைய உரிமைகளை நான் நிறைவேற்றுகிறேன். அவர்கள் என் உரிமைகளை நிறைவேற்றுவதில்லை. நான் அவர்களுடன் நல்ல விதமாக நடந்துக் கொள்கிறேன். அவர்கள் என்னுடன் மோசமாக நடந்துக் கொள்கிறார்கள்.

நான் அவர்களுடன் பொறுமையோடும் சகிப்புத் தன்மையோடும் நடந்து கொள்கிறேன். அவர்கள் என்னிடம் அறிவீனமாக நடந்துக் கொள்கிறார்கள் என அந்த மனிதர் கூறினார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். நீர் சொல்வதைப் போன்று அவர்களுடன் நடந்து கொண்டிருந்தால் அது அவர்களின் முகத்தில் கறி பூசுவது போன்றதாகும். அல்லாஹ் அவர்களுக்கு எதிராக எப்போதும் உமக்கு உதவிய வண்ணம் இருப்பான். நீர் இதே பண்பில் நிலைத்திருக்கும் வரை என்றார்கள்.
                        அறிவிப்பாளர் : அபூஹீரைரா(ரலி)
                        நூற்கள் : முஸ்லிம்,அஹ்மது.
    குழந்தைகளுக்கு சப்போர்ட் பண்ணியோ அல்லது பெரியோர்களின் பிரட்சனைக்கோ உறவை துண்டிக்க வேண்டாம்.
    நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அல்லாஹ் இனப்பந்துக்களிடம் உன்னுடன் சேர்ந்திருப்பவர்களுடன் நான் சேர்ந்திருப்பேன். உன்னை துண்டித்தவர்களோடு துண்டித்திருப்பேன் என்று கூறினான்.
                        அறிவிப்பாளர் : அபூஹீரைரா(ரலி)
                        நூற்கள் : புஹாரி, முஸ்லிம்.
    எனவே உறவுகளை வெட்டாமல் ஓட்டி வாழ்வோம். நம் குழந்தைகளையும் உறவோடு உறவாட செய்வோம்.
    அல்லாஹ் நமக்கு ஈருலகிலும் நன்மை செய்வானாக.                            

தொடரும் இன்ஷா அல்லாஹ்.

 K. M. ராபியா ரோஷன் சித்தீக்கியா M.A.


Add comment

காயல் நியுஸ், வாசகர்கள் கருத்துக்களை வரவேற்கிறது. வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் நியுஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்த விதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். முரண்பாடான மரியாதைக்குறைவான, கண்ணியமில்லாத கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கும் அவைகளை நீக்குவதற்கும் எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு. தங்களது பெயர் மற்றும் கருத்துக்களை தமிழில் தட்டச்சு செய்யலாம். உதாரணமாக "காயல்பட்டினம்" என்று தட்டச்சு செய்ய ஆங்கிலத்தில் "kaayalpattinam" என்று தட்டச்சு செய்து Space bar-ஐ அழுத்தினால் தங்கள் தட்டச்சு செய்த சொல் தமிழாக மாற்றப்படும். ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.


Security code
Refresh

 

செய்திகள்

வெளி மாநிலங்களில் இருந்து வியாபாரம் செய்ய வருபவர்கள்; வெளியூர்களில் இருந்து நகருக்கு புதிதாக குடிவருபவர்கள் ஆகியோர் மீதான கண்காணிப்பை அதிகப்படுத்தவும்: மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஆகியோரிடம் நடப்பது என்ன? குழுமம் கோரிக்கை
பிப். 08 இன்று மாதாந்திர பராமரிப்பு மின்தடை!
CCTV கேமராக்கள் நிறுவ அலட்சியம் காட்டும் காயல்பட்டினம் நகராட்சிக்கு கெடு விதிக்கவும்: மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஆகியோரிடம் நடப்பது என்ன? குழுமம் கோரிக்கை!*
கடையக்குடி, கற்புடையார்பள்ளி வட்டம் என்ற அதிகாரப்பூர்வ பெயர்களை பயன்படுத்துக_: மாவட்ட ஆட்சியர், மீன்வளத்துறை மற்றும் ஊடகத்துறையினரிடம் நடப்பது என்ன? குழுமம் வேண்டுகோள்!*
பேருந்து கட்டணங்கள்: மாற்றியமைக்கப்பட்ட கட்டணங்கள் திங்கட்கிழமை (இன்று) முதல் அமலுக்கு வருகிறது!
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை

feed-imageFeed Entries

சுடச்சுட காயல் செய்திகள்! சுவையான இஸ்லாமிய கட்டுரைகள் !!
தொடர்பு கொள்ள : admin@kayalnews.com
© Copyright : Kayalnews.com