بسم الله الرحمن الرحيم
Monday 11th December 2017 | 22 ரபீஉல் அவ்வல் 1439AH
பதாகை
news menu left
news menu right

பதாகை

பதாகை

  • Google Bookmarks
  • Twitter
  • Windows Live
  • Facebook
  • MySpace
  • deli.cio.us
  • Digg
  • Newsvine
  • reddit
  • StumbleUpon
  • Yahoo! Bookmarks
  • Yigg
சிறார்களின் வளர்ச்சியில் பெற்றோர்களின் பங்கு! (பாகம்-7)அச்சிடுகமின்-அஞ்சல்
10 அக்டோபர் 2011 காலை 08:49

கைக்குழந்தையை தாலாட்டு பாடி தூங்கவைக்கிறோம். அக்குழந்தைக்கு பாடல் புரிகிறதோ இல்லையோ.. அக்குழந்தை சொக்கி அப்படியே தூங்கிவிடுகின்றன. அக்குழந்தை பேசக்கூடிய வார்த்தையை புரிந்துக் கொள்கின்ற நேரத்தில் அவர்களை தூங்க வைக்க பெற்றோர்களில் பலர் கதை கூறுவதுண்டு. பெற்றோர்களில் சிலர் கதைச் சொல்ல விருப்பப்படாவிட்டாலும் பிள்ளைகள் கதைச் சொன்னால் தான் தூங்குவேன் என அடம்பிடிப்பவர்களும் உண்டு. அப்போது கதைச் சொல்ல ஆரம்பிக்கின்றனர்.

எதைச் செவியுறுகின்றார்களோ அதை அப்படியே மனதில் பதியவைக்கும் காலம் குழந்தைப் பருவம்.

இப்பருவக்காலத்தை பெற்றோர்கள் சரியான முறையில் பயன்படுத்த வேண்டும். கதைச் சொல்கின்றோம் என்ற பெயரில் பல கட்டுக்கதைகளை அவிழ்த்து விடுகிறார்கள். இப்படிச் செய்வதை முதலில் விட்டுவிட வேண்டும்.

சிங்கம்,புலி,யானை கரடி போன்றவற்றின் கதைகளையும் வடை சுடும் பாட்டியிடம் திருடிய காக்கையை ஏமாற்றிய நரியின் கதையையும் கூறும் போது ஏமாற்றும் தன்மையை குழந்தைகள் உணரவாய்ப்பிருக்கிறது. பொய் கூறலாம் என்ற தன்மையும் பிற்காலத்தில் வரவாய்ப்பிருக்கிறது.

சிலர் கதைச்சொல்லும் போது முடிவில் MORAL ஐயும் சேர்த்துச் சொல்கிறார்கள்.

நாங்கள் கதைகளை கூறும்போது அதன் படிப்பினைகளை (நீதி) பற்றி குறிப்பிட்டு தானே கதைக் கூறுகிறோம். இதில் என்ன தவறு? குழந்தைகள் நல்லதை தானே புரிவார்கள் என்று கூறுவதுண்டு. இஸ்லாமிய சரித்திரங்கள் இருக்கும்போது எதற்கு கட்டுகதைகள் சொல்ல வேண்டும் பெற்றோர்களே!

இஸ்லாத்தின் பெயரால் எத்தனையோ சரித்திரங்கள் உண்டு. அவற்றில் பல கற்பனைகளையும் அடைப்புளுகளும் உண்டு. ஆகவே திருமறைக்குர்ஆன் மற்றும் நபி (ஸல்) அவர்களின் பொன் மொழி இரண்டிலுள்ள சரித்திரங்களை மட்டும் குழந்தைகளுக்கு போதிக்க வேண்டும்.

சரித்திரங்களை எப்படி தெரிவது என்ற கவலையே  வேண்டாம் பெற்றோர்களே!. குர்;ஆனின் மொழிபெயர்ப்பும் அண்ணல் நபி (ஸல்) அவர்களின் பொன் மொழிகள் அடங்கிய கிதாபுகளின் தமிழாக்கமும் வந்துள்ளது. அவற்றை வாங்கி படிக்கலாம் அல்லது மார்க்கம் அறிந்தவர்கள் எத்தனையோ பேர் உண்டு. தேவையற்ற பேச்சுக்களை பேசாமல் அவர்களிடம் எனக்கு கொஞ்சம் சரித்திரங்கள் சொல்லுங்கள் என்று கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்.

குர்ஆனில் கூறப்பட்ட நபிமார்களின் சரித்திரங்கள் மற்றும் நபி (ஸல்) அவர்கள் முந்தைய காலத்தில் நடந்த சம்பவத்தை சொன்னார்களே அதை குழந்தைகளுக்கு போதிக்கும் போது நபிமார்கள் மார்க்கத்திற்காக எவ்வளவு கஷ்டப்பட்டார்கள். அவர்கள் எத்தனை துன்பங்களை அனுபவித்தார்கள் என்பதை அவர்கள் புரிந்துக் கொள்கிறார்கள். இதனால் அவர்கள் மார்க்க பற்றுள்ளவர்களாக வர வாய்ப்புண்டு.

குழந்தைகளுக்கு நபிமார்களின் சரித்திரங்களை போதிக்க சொல்லுவதற்கு இன்னொரு காரணமும் உண்டு. மற்ற கதைகைள சொல்லும் போது பொய்யும், கற்பனையும் நிரம்பியிருக்கும். ஆனால் நாம் உண்மையே பேச வேண்டும் இல்லாஹ் கூறுகின்றான்.

"விசுவாசிகளே! நீங்கள் அல்லாஹ்வுக்கு பயந்து (சொல்லிலும்,செயலிலும்) உண்மையாளர்களுடன் இருங்கள்.

அல்குர்ஆன் 9:119

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். நிச்சயமாக உண்மை நன்மையின் பக்கம் வழிகாட்டும். நிச்சயமாக நன்மை சுவனத்தின் பக்கம் வழிகாட்டும். நிச்சயமாக ஒருவர் உண்மை கூறுகிறார் என்றால் அவர் அல்லாஹ்விடம் உண்மையாளர் என எழுதப்படுகிறார். நிச்சயமாக பாவம் நரகத்தின் பக்கம் வழிகாட்டும். நிச்சயமாக ஒருவர் பொய்யுரைக்கிறார் என்றால் அவர் அல்லாஹ்விடம் பொய்யர் என எழுதப்படுவார்.

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் (ரலி)

நூற்கள் : புஹாரி, முஸ்லிம்.

எனக்கே சரித்திரங்கள் தெரியாது. நான் எப்படி குழந்தைகளுக்கு சரித்திரம் சொல்லுவேன் என்று சில பெற்றோர்கள் நினைக்கக்கூடும்.

ஆம்! நமக்கு தெரியாத ஒன்றை தெரிந்துக் கொள்ள முயற்சி செய்யத வேண்டும்.

ஒரே கல்லில் இரண்டு மாங்காய்

1. தெரியாத ஒன்றை நாம் தெரிந்துக் கொள்கிறோம். இதன்மூலம் நன்மையை பெறுகிறோம்.

2. நமக்கு தெரிந்த ஒன்றை நம் குழந்தைக்கு சொல்கிறோம்.

இந்த இரண்டிலுமே நபி (ஸல்) அவர்களின் போதனையல்லவா பின்பற்றுகிறோம்.

முதல் விஷயத்திற்குரிய ஆதாரம். அல்லாஹ் கூறுகின்றான். (அல்லாஹ்) தான் விரும்பியவர்க்கு (கல்வி) ஞானத்தைக் கொடுக்கின்றான். ஆதலால் எவர் (கல்வி) ஞானம் கொடுக்கப் பெறுகின்றாரோ அவர் நிச்சயமாக அநேக நன்மைகளைப் பெற்று விடுவார். ஆயினும் (இந்த ஞானக் கல்வியைக் கொண்டு)

இரண்டாம் விஷயத்திற்குரிய ஆதாரம்.

என்னை பற்றி ஒரு செய்தி கிடைத்தாலும் அதை பிறருக்கு எத்தி வையுங்கள் என நபி (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் :அபூ அம்மார்

ஆதாரம்: புஹாரி 

பெற்றோர்களே! நம் குழந்தைகளுக்கு கதை சொல்ல வேண்டு; என்பதற்காகவாவது சரித்திரங்களை தெரிகின்றோமே! இந்த வாய்ப்பு ஒரு அறிய வாய்ப்பல்லவா?

நாமும் சரித்திரங்களை அறிந்து நமது சந்ததிகளையும் அறிய செய்கின்றோமே இது எவ்வளவு பெரிய விஷயம்.

எனவே சரித்திரங்களை தெளிவாக அறிய முயற்சிக்க வேண்டும்.

 ஆக்கம் :K. M. ராபியா ரோஷன் சித்தீக்கியா M.A.

Add comment

காயல் நியுஸ், வாசகர்கள் கருத்துக்களை வரவேற்கிறது. வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் நியுஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்த விதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். முரண்பாடான மரியாதைக்குறைவான, கண்ணியமில்லாத கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கும் அவைகளை நீக்குவதற்கும் எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு. தங்களது பெயர் மற்றும் கருத்துக்களை தமிழில் தட்டச்சு செய்யலாம். உதாரணமாக "காயல்பட்டினம்" என்று தட்டச்சு செய்ய ஆங்கிலத்தில் "kaayalpattinam" என்று தட்டச்சு செய்து Space bar-ஐ அழுத்தினால் தங்கள் தட்டச்சு செய்த சொல் தமிழாக மாற்றப்படும். ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.


Security code
Refresh

 

செய்திகள்

காயல் குப்பை அரசியல்: பாகம் 18 - முன்னாள் நகர்மன்றத்தலைவர் வழங்கும் இடம் பயோ காஸ் திட்டத்திற்கு பொருத்தமில்லாத இடம் என உணர்த்திய - டெண்டர் விதிமுறைகள்!*
காயல் குப்பை அரசியல் (பாகம் 17): “காயல்பட்டினம் & ஆறுமுகநேரிக்குப் பொதுவான குப்பைக் கிடங்கு அமைய இரு ஊர் தலைவர்களும் மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து வேண்டுகோள்!” ‘நடப்பது என்ன?’ குழுமம் விளக்க அறிக்கை!!
காயல் குப்பை அரசியல்: பாகம் 16 - நகராட்சி ஏற்பாட்டில் - ஆற்காடு நகராட்சிக்கு சென்று வந்த நகர்மன்ற உறுப்பினர்கள்!
ஓகி புயலினால் காணாமல் போன மீனவர்களை மீட்க வலியுறுத்தி கன்னியாகுமரி மாவட்ட மீனவர் குடும்பத்தினர் தீவிர போராட்டம்!
காயல் குப்பை அரசியல்: பாகம் 15 - எத்தனை நாட்கள், வாரங்கள், மாதங்கள், ஆண்டுகள் ஆனாலும் சரி...?
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை

feed-imageFeed Entries

சுடச்சுட காயல் செய்திகள்! சுவையான இஸ்லாமிய கட்டுரைகள் !!
தொடர்பு கொள்ள : admin@kayalnews.com
© Copyright : Kayalnews.com