بسم الله الرحمن الرحيم
Monday 11th December 2017 | 22 ரபீஉல் அவ்வல் 1439AH
பதாகை
news menu left
news menu right

பதாகை

பதாகை

  • Google Bookmarks
  • Twitter
  • Windows Live
  • Facebook
  • MySpace
  • deli.cio.us
  • Digg
  • Newsvine
  • reddit
  • StumbleUpon
  • Yahoo! Bookmarks
  • Yigg
சிறார்களின் வளர்ச்சியில் பெற்றோர்களின் பங்கு! (பாகம்-8) அச்சிடுகமின்-அஞ்சல்
24 அக்டோபர் 2011 மாலை 01:49

ஒரு பொருளை ஒருவர் நம்மிடம் பாதுகாக்குமாறு ஒப்படைத்தால்அல்லது நமக்கு தேவையான ஒன்றை மற்றவர்களிடம் இரவல் வாங்கினால் அதை சரியான முறையில் ஒப்படைப்பதற்கு அமானிதம் பேணுதல் என்கிறோம்.

நம் குழந்தைகள் பாட சாலையிலிருந்து அல்லது வெளியிலிருந்து கொண்டு வருகின்ற பொருட்கள் நம்முடையது தானா? என்பதை முதலில் பார்வையிட வேண்டும். நாம் நம் பிள்ளைகளுக்கு வழங்காத ஒரு பொருளை அவர்கள் வைத்திருந்தால் அவர்களிடம் இதை உனக்கு தந்தது யார்? எதற்காக வாங்கினாய்? நீ பயன்படுத்த வாங்கியிருந்தால் அதை ஒப்படைக்காமல் ஏன் வீட்டிற்கு கொண்டு வந்தாய்? என்று கேட்க வேண்டும். அது ஒரு பென்சிலாகட்டும், இரப்பர்,ஆகட்டும்,அற்ப பொருள் ஆகட்டும் எதுவானாலும் அவர்களிடம் இது அமானிதம். இதை ஒப்படைக்க வேண்டும். வீட்டிற்கெல்லாம் கொண்டுவரக்கூடாது என்று உபதேசித்து அவர்களுக்கு தேவையான குர்ஆன் வசனங்களையும் ஹதீஸையும் எடுத்துச் சொல்ல வேண்டும்.

பெற்றோர்களாகிய நாமும் நம் வாழக்கையில் அமானிதத்தை பேணினால் குழந்தைகளும் தானாகவே அமானிதத்தை பேணுவார்கள். அமானித்திற்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். ஏனெனில் அமானிதத்தை பாழடிப்பது நயவஞ்சகத்தன்மையில் ஒன்று.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். நயவஞ்சகனின் அடையாளம் மூன்றாகும்.

1) அவன் பேசினால் பொய்யுரைப்பான்.

2) அவன் வாக்குறுதி அளித்தால் மாறு செய்வான்

3) அவனை நம்பினால் மோசம் செய்வான்

அறிவிப்பாளர் : அபூஹீரைரா (ரலி)

நூற்கள் : புஹாரி,முஸ்லிம்.

நயவஞ்சகர்களுக்கு நரகத்தின் அடிதட்டு என்பதை அல்லாஹ் கூறுகின்றான்.

"நிச்சயமாக இந்நயவஞ்சகர்கள் நரகத்தின் அடிதட்டில் தான் இருப்பார்கள். அவர்களுக்கு உதவி செய்யும் எவரையும் நீர் காணமாட்டீர்.

அல்குர்ஆன் : 4:145

நரகத்தின் அடிதட்டு என்று எதற்கு சொல்லப்பட்டதோ அதை விட்டும் நம்மையும் நம் சந்ததிகளையும் இறைவன் காப்பாற்றுவானாக!.

அமானிதத்தை நிறைவேற்ற நம் பிள்ளைகளுக்கு கற்றுக் கொடுக்க வேண்டும்.

(விசுவாசிகளே! உங்களிடம் நம்பி ஒப்படைக்கப்பட்ட) அமானிதப் பொருள்களை அவற்றின் சொந்தக்காரர்களிடம் நீங்கள் ஒப்படைத்து விடும்படியும் மனிதர்களுக்கிடையில் நீங்கள் தீர்ப்புக் கூறினால் (பாரபட்சமின்றி) நீதமாகவே தீர்ப்பளிக்குமாறும் நிச்சயமாக அல்லாஹ் உங்களுக்கு கட்டளையிடுகிறான்

அல்குர்ஆன் : 4:58

அமானிதத்தை நம்மால் பாதுகாக்க இயலாவிட்டால் அடுத்தவரின் பொருளை வாங்குவதை தவிர்க்க வேண்டும். வானம் பூமி மற்றும் மலைகள் கூட அமானிதத்தை சுமக்கப் பயந்தன. அப்படியானால் அவற்றில் இருக்கும் கேட்டை புரிய வேண்டும்.

இதைபற்றி அல்லாஹ் கூறுகின்றான்.

நிச்சயமாக (நிச்சயமாக அமானிதத்தை பொறுப்பைச்) சுமந்து கொள்வீர்களா? என்று நாம் வானங்கள்,பூமி, மலைகள் முதலியவைகளிடத்தில் வினவினோம். அதற்கு அவை அதனைப் பற்றி பயந்து அதனைச் சுமந்து கொள்ளாது விலகி விட்டன. அத்தகையதைத் தான் மனிதன் சுமந்து கொண்டான். (ஆகவே) நிச்சயமாக அவன் அறியாமையால் தனக்கு தானே தீங்கிழைத்துக் கொண்டான்.

அல்குர்ஆன் : 33:72

அப்படியானால் நாம் அதற்கு எவ்வளவு பயப்பட வேண்டும்? நம் பிள்ளைகளையும் பயப்பட வைக்க வேண்டும் என்பதை பெற்றோர்களே..கவனத்தில் கொள்ளுங்கள். அதே நேரத்தில் அமானித்ததை நிறைவேற்றினால் சொர்க்கத்திற்கு இலேசாக சென்று விடலாம்.

மறுமை நாளில் அல்லாஹ் மக்களை ஒன்று சேர்ப்பான். முஃமின்கள் (தங்கள் மண்ணறைகளிலிருந்து) எழுந்து நிற்பார்கள். சுவர்க்கம் அவர்களுக்கு சமீபமாக்கப்படும். அப்பொழுது அம்மக்கள் நபி ஆதம் (அலை) அவர்களிடம் வந்து எங்களின் தந்தையே! இந்த சுவனத்தை எங்களுக்காக திறக்கச் செய்யுங்கள் எனக்கூறுவார்கள். அதற்கு ஆதம் (அலை) அவர்கள் உங்கள் தந்தையின் தவறு தான் உங்களை சுவனத்தை விட்டு வெளிறேச் செய்து விட்டது. ஆகவே நான் (சுவனத்தை திறக்கச் செய்யும்) இப்பணிக்கு உரியவன் அல்ல! நீங்கள் என் பிள்ளை நபி இபுராஹீம் கலீலுல்லாஹ்விடம் செல்லுங்கள் எனக் கூறுவார்கள். பின்னர் மக்கள் நபி இபுராஹீம் (அலை) அவர்களிடம் வருவார்கள். (அவர்களிடம் இதே கோரிக்கையை முன் வைப்பார்கள்).

அதற்கு நபி இபுராஹீம் (அலை) அவர்கள் நான் இப்பணிக்குக்குரியவன் அல்ல. நான் இறைவனின் உற்ற நேசனாக ஆகி விட்டதெல்லாம் மிகப் பின்னால் தான் (பணிவுக்காக இவ்வாறு கூறுகிறார்கள்.) நீங்கள் அல்லாஹ்விடம் உரையாடிய நபி மூஸா (அலை) அவர்களை நாடுங்கள் எனக்கூறுவார்கள். (அதன்படி) மக்கள் மூஸா (அலை) அவர்களிடம் வந்தார்கள். (முந்திய நபிமார்களிடம் கூறியது போன்றே அவர்களிடமும் கூறினார்கள்.) அதற்கு மூஸா (அலை) நான் இப்பணிக்கு உரியவனல்ல. நீங்கள் அல்லாஹ்வின் சொல்லும் ரூஹீமான (அல்லாஹ்வின் குன் என்ற சொல்லால் படைக்கப்பட்டு ரூஹீ ஊதப்பெற்றவரான) நபி ஈஸா (அலை) அவர்களிடம் செல்லுங்கள் எனக் கூறினார்கள். அது போன்றே மக்கள் ஈஸா (அலை) அவர்களிடம் சென்று அவ்வாறு கூறினார்கள். நான் இப்பணிக்கு உரியவனல்ல எனக்கூறினார்கள். (அதனைத் தொடர்ந்து) மக்கள் அண்ணல் நபி (ஸல்) அவர்களிடம் வந்தார்கள். முந்தைய நபிமார்களிடம் கூறியது போன்றே கூறினார்கள். அப்போது அண்ணலார் எழுந்தார்கள். அவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது.

பின்னர் அமானிதத்தையும் உறவு பந்தத்தையும் அனுப்பப்படும். அவை இரண்டும் ஸிராத்துல் முஸ்தகீம்) பாலத்தின் இருபக்கங்களிலும் வலது, இடதுபுறமாக நின்று கொள்ளும். உங்களில் முந்தியவர் மின்னலைப் போல அப்பாலத்தைக் கடந்து செல்வார். இப்பொழுது நான் (அபூஹீரைரா) கேட்டேன். என் தாயும் தந்தையும் தங்களுக்கு அர்ப்பணமாகட்டும். மின்னலின் வேகம் என்றால் எவ்வாறு? என்று கேட்டார்கள்.

அதற்கு நபி (ஸல்) நீங்கள் மின்னல் எவ்வாறு கண் சிமிட்டும் நேரத்தில் கடந்து செல்கிறது என்பதைப் பார்க்கவில்லையா என்றுக் கூறினார்கள். பின்னர் (உங்களில் சிலர்) காற்றைப் போன்றும் பின்னர் சிலர் பறவையின் பறத்தலைப் போன்றும் (பின்னர்) வேகமாக ஓடும் மனிதனின் ஓட்டத்தைப் போன்றும் (வேகமாக) அப்பாலத்தைக் கடந்து செல்வர். (இவ்வாறு) அவர்களுடைய அமல்கள் அவர்களை அழைத்துச் செல்லும் உங்களுடைய நபி ஸிராத் பாலத்தில் நின்றவராக என் இரட்சகனே! ஈடேற்றமடைய செய்வாயாக! எனக் கூறிக் கொண்டிருப்பார். எதுவரையெனில் ஒரு மனிதர் வருவார் அவர்  பித்தத்தில் இழுத்துக் கொண்டவராக வருவார். அவர் அதனைக் கடப்பதற்கு சக்தி பெறமாட்டார்.

அவரது நல் அமல்கள் (மிகக்குறைவாக இருந்ததால் இந்நிலை) (ஸிராத்துல்முஸ்தகீம்) பாலத்தின் இருபகுதிகளிலும் முட்கள் தொங்கவிடப்பட்டிருக்கும். யாரைப் பிடிக்கும் படி ஏவப்படுகிறதோ அவரை அது பிடித்துவிடும். அம்முட்களால் (லேசாக) தைக்கப்பட்டு விடுபவர் ஈடேற்றமடைந்து விடுவார். அங்கிருந்து கீழே தள்ளப்பட்டு விடுபவர் நரகினில் ஆகிவிடுவார். அபூஹீரைராவின் உயிர் யார் வசம் இருக்கிறதோ அவன் மீது ஆணையாக! ஜஹன்னம் என்ற நரகின் ஆழம் எழுபது ஆண்டுகளின் தொலை தூரமாகும்.

அறிவிப்பாளர்: அபூஹீரைரா (ரலி)

ஹீதைபா (ரலி)

நூல் : முஸ்லிம்

ஸிராத்துல் முஸ்தகீம் மெல்லிய நுட்பமான பாலத்தின் இரு ஓரங்களிலும் அமானிதமும், இன பந்துகளும் நின்று கொண்டு இருக்கும் என்று சொல்லப்பட்டுள்ளதே அப்படியானால் அந்த அமானிதத்தை பேணினால் கிடைக்கும் சிறப்பு எவ்வளவு உயர்வாக இருக்க முடியும் என்பதை பெற்றோர்களே.. நம் பிள்ளைகளுக்கு எடுத்து சொல்ல வேண்டும்.

சிறுவர் முதல் பெரியவர் வரை அமானிதத்தை பேண வல்ல ரஹ்மான் தவ்ஃபீக் செய்வாயாக.

இன்ஷாஅல்லாஹ் தொடரும்.

ஆக்கம்  : K. M. ராபியா ரோஷன் சித்தீக்கியா M.A.


Add comment

காயல் நியுஸ், வாசகர்கள் கருத்துக்களை வரவேற்கிறது. வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் நியுஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்த விதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். முரண்பாடான மரியாதைக்குறைவான, கண்ணியமில்லாத கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கும் அவைகளை நீக்குவதற்கும் எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு. தங்களது பெயர் மற்றும் கருத்துக்களை தமிழில் தட்டச்சு செய்யலாம். உதாரணமாக "காயல்பட்டினம்" என்று தட்டச்சு செய்ய ஆங்கிலத்தில் "kaayalpattinam" என்று தட்டச்சு செய்து Space bar-ஐ அழுத்தினால் தங்கள் தட்டச்சு செய்த சொல் தமிழாக மாற்றப்படும். ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.


Security code
Refresh

 

செய்திகள்

காயல் குப்பை அரசியல்: பாகம் 18 - முன்னாள் நகர்மன்றத்தலைவர் வழங்கும் இடம் பயோ காஸ் திட்டத்திற்கு பொருத்தமில்லாத இடம் என உணர்த்திய - டெண்டர் விதிமுறைகள்!*
காயல் குப்பை அரசியல் (பாகம் 17): “காயல்பட்டினம் & ஆறுமுகநேரிக்குப் பொதுவான குப்பைக் கிடங்கு அமைய இரு ஊர் தலைவர்களும் மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து வேண்டுகோள்!” ‘நடப்பது என்ன?’ குழுமம் விளக்க அறிக்கை!!
காயல் குப்பை அரசியல்: பாகம் 16 - நகராட்சி ஏற்பாட்டில் - ஆற்காடு நகராட்சிக்கு சென்று வந்த நகர்மன்ற உறுப்பினர்கள்!
ஓகி புயலினால் காணாமல் போன மீனவர்களை மீட்க வலியுறுத்தி கன்னியாகுமரி மாவட்ட மீனவர் குடும்பத்தினர் தீவிர போராட்டம்!
காயல் குப்பை அரசியல்: பாகம் 15 - எத்தனை நாட்கள், வாரங்கள், மாதங்கள், ஆண்டுகள் ஆனாலும் சரி...?
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை

feed-imageFeed Entries

சுடச்சுட காயல் செய்திகள்! சுவையான இஸ்லாமிய கட்டுரைகள் !!
தொடர்பு கொள்ள : admin@kayalnews.com
© Copyright : Kayalnews.com