بسم الله الرحمن الرحيم
Monday 11th December 2017 | 22 ரபீஉல் அவ்வல் 1439AH
பதாகை
news menu left
news menu right

பதாகை

பதாகை

  • Google Bookmarks
  • Twitter
  • Windows Live
  • Facebook
  • MySpace
  • deli.cio.us
  • Digg
  • Newsvine
  • reddit
  • StumbleUpon
  • Yahoo! Bookmarks
  • Yigg
சிறார்களின் வளர்ச்சியில் பெற்றோர்களின் பங்கு! பெருநாள் சிந்தனை! (பாகம் -9)அச்சிடுகமின்-அஞ்சல்
05 நவம்பர் 2011 மாலை 03:17

ஹஜ் பெருநாள் இதோ நெருங்கிவிட்டது. நகரெங்கும் கடை வீதிகள்  மற்றும் சாலைகளில் பரபரப்பு..

நம் உறவுகள் அனைவரும்  வெளியூர் மட்டும் வெளிநாடுகளிலிருந்து பெருநாள் கொண்டாட ஊருக்கு விஜயம் என குதூகலம்...

Thoothukudi-712

நம்மில் சிலர் பெருநாள் வந்துவிட்டாலே சிலர் சில செயல்களில் ஈடுபடுகிறார்கள். பட்டாசு வெடிப்பது,சினிமா தியேட்டருக்கு செல்வது போன்ற செயல்களில் ஈடுபடுகிறார்கள்.

பட்டாசு வெடிப்பது பெருநாளில் மட்டுமல்ல. சில காரியங்களில் வெற்றியடைந்தாலும் பட்டாசு வெடிக்கின்றார்கள். சிறுவர் முதல் பெரியவர் வரை பட்டாசு வெடிக்கின்றனர்.

சிறுவர்கள் கயிறுவெடி,பென்சில் வெடி, மத்தாப்பூ, கொலவானம், பாம்புவெடி,கலர் தீக்குச்சி போன்றவைகளை பயன்படுத்துவது வழக்கமாக்கிக் கொள்கிறார்கள்.

குழந்தைகள் கையில் பட்டாசு தவழ யார் காரணம்? பெற்றோர்கள் வாங்கி கொடுத்திருக்க வேண்டும். அல்லது (காசு) பணம் கொடுத்திருக்க வேண்டும்.

child

வெடியை பயன்படுத்தியதால் பலருக்கு ஆபத்து ஏற்பட்டிருக்கிறது. சிலரின் கை கால்களில் காயம் கண் பாதிக்கப்படுதல், கையை இழந்தல் போன்ற செயல்கள் நடைப்பெற்றிருக்கிறது. இது நாம் அறிந்ததே!

பட்டாசு பயன்படுத்தினால் நம் பிள்ளைகளுக்கு ஆபத்து ஏற்படலாம். மற்றவர்களுக்கும் கெடுதி ஏற்படலாம்.எனவே நம் சிறார்களை பட்டாசு வெடிக்காமல் தடுக்க வேண்டும்.

சில குழந்தைகளை ரோட்டில் நடமாடிக் கொண்டே கலர் தீக்குச்சியினை பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். அந்த ஒரு குச்சியினால் பல விபரீதங்கள் ஏற்பட வாய்ப்பிருக்கிறது என்பதை அவர்கள் உணரமாட்டார்கள். அவர்களுக்கு பெற்றோர்களாகிய நாம் தான் உணர வைக்கவேண்டும்.

ஒரு மரத்தில் பல தீக்குச்சிகளை தயாரிக்கலாம். ஆனால் ஒரு தீக்குச்சியால் பல மரங்களைää பல உயிர்களை அழிக்க முடியும் என்பதனை புரிய வைக்க வேண்டும்.

பட்டாசு வெடிப்பது நம் மார்க்கம் அனுமதித்த காரியம் அல்ல. மாற்று மதத்தவர்கள் தீபாவளி அன்றும் புத்தாண்டு அன்றும் கிறிஸ்துமஸ் அன்றும் பயன்படுத்துவார்கள்.

யார் மாற்று மத கலாச்சாரத்தை பின்பற்றுவாரோ அவர் அவரையே சார்ந்தவர் என்பது நபிமொழி.

நூல் : திர்மிதி.

மேலும் பட்டாசு வெடித்தல் என்பது வீண்விரயமான காரியம். இதை இறைவன் நேசிப்பதில்லை. அல்லாஹ் கூறுகின்றான் "ஆதமுடைய மக்களே! தொடும் இடத்திற்கெல்லாம் ஆடைகளினால்) உங்களை அலங்கரித்துக் கொள்ளுங்கள். (இறைவன் உங்களுக்கு அனுமதித்தவற்றை) நீங்கள் (தாராளமாய்) புரியுங்கள். பருகுங்கள். எனினும் (அவற்றில்) அளவு கடந்து (வீண்) செலவு செய்யாதீர்கள். ஏனென்றால் நிச்சயமாக அல்லாஹ் அளவு கடந்து (வீண்) செலவு செய்வோரை நேசிப்பதில்லை.

அல்குர்ஆன் :7:31

மேலும் அல்லாஹ் கூறுகின்றான். (செல்வத்தை) அளவு கடந்து வீண் செலவு செய்ய வேண்டாம். ஏனென்றால் மிதமிஞ்சி செலவு செய்வோர் ஷைத்தானுடைய சகோதரர்களாக இருக்கின்றனர். ஷைத்தானோ தன் இறைவனுக்குக் கூட நன்றி செலுத்தா (து மாறு செய்) தவன்

அல்குர்ஆன் :17:26,27

வீண் விரயம் செய்வோரை இறைவன் ஷைத்தானுடைய சகோதரர்களாக வர்ணித்துள்ளதால் இக்காரியங்களை செய்யாமல் தவிர்க்க வேண்டும். நாம் இப்பொழுது துல்ஹஜ் மாதத்தில் இருந்துக் கொண்டிருக்கிறோம். துல்ஹஜ் மாதம் முதல் 10 நாட்களில் செய்யும் அமலை அல்லாஹ் மிக நேசிக்கின்றான்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். துல்ஹஜ் மாதத்தின் முதல் பத்து நாட்களில் செய்யப்படும் நல் அமல்கள் மற்ற நாட்களின் நல் அமல்களை விட அல்லாஹ்வுக்கு மிகப்பிரியமானவையாகும். அதற்குத் தோழர்கள் அல்லாஹ்வின் பாதையில் ஜீஹாதையும் விடவா? என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள் ஆம்! எனினும் அல்லாஹ்வின் பாதையில் தம் உயிர்ää பொருளை எடுத்துக் கொண்டு புறப்பட்டுச் சென்ற பின்னர் அதில் எதனையும் திருப்பிக் கொண்டு வரவில்லையோ அவரின் அமலைத் தவிர எனக் கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ்

இப்னுஅப்பாஸ் (ரலி)

நூல்: புஹாரி.

துல்ஹஜ்ஜின் 10 நாளின் சிறப்பைப் பற்றி நமக்கு நபி (ஸல்) அவர்கள் தெள்ளத் தெளிவாக கூறிவிட்டார்கள். இந்த துல்ஹஜ் மாதத்தின் பிறை தான் அரபா.

இதன் சிறப்பைப் பற்றியும் நமக்கு நபி (ஸல்) கூறியிருக்கிறார்கள். அரபா நாளில் நாம் நோன்பு பிடிக்க வேண்டும்.

அபூகதாதா (ரலி) அறிவிக்கிறார்கள். அரபா நாள் நோன்பைப் பற்றி நபி (ஸல்) அவர்களிடம் வினவப்பட்டது. அதற்கவர்கள் அந்நோன்பு அதற்கு முந்திய ஓராண்டு பாவங்களையும் அழித்து விடுகிறது எனக்கூறினார்கள்.

நூல் : முஸ்லிம்.

முந்திய,பிந்திய ஓராண்டு பாவங்கள் மன்னிக்கப்படும் என்று சொன்னார்களே. அப்படிப்பட்ட ஒரு செயலை செய்ய தயங்கக்கூடாது. அசால்டாக இருந்து விடவும் கூடாது. அரபா தினத்தில் சிலர் சிறார்களை பள்ளியில் ஓத வைப்பது. புதுமுனை புகுவிழா நிகழ்ச்சி, காதுகுத்தும் நிகழ்ச்சி என்றெல்லாம் வைத்து தடால்புடால் என செலவு செய்து அவர்கள் விருந்துக்கள் வைப்பதும் உண்டு. நோன்பு பிடிப்பதில்லை. எதை அரஃபா தினத்தில் செய்யவேண்டும் என நபி (ஸல்) அவர்கள் சொல்லி தந்தார்களோ அதை விட்டு விடுகிறார்கள்.

அன்னை ஆயிஷா (ரலி) அறிவிக்கிறார்கள் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அரபாவின் நாளைப் போன்று நரகை விட்டும் தன் அடியார்களை வேறு எந்த நாளிலும் மிக அதிகமாக விடுதலை செய்வதில்லை.

நூல் : முஸ்லிம்.

எனவே அரஃபா தினத்திலும் பெருநாள் தினத்திலும் நிறைய அமல்களை செய்ய நம் சிறார்களை தூண்ட வேண்டும். அந்த அமல்களை நாமும் செய்ய வேண்டும்.

ஏழைகள் இல்லங்களுக்கு வந்தால் 1ரூபாய் கொடுக்கிறோம். சிலர் கூடுதலாக கொடுக்கலாம். சிலர் விரட்டியும் விடலாம். ஆனால் பட்டாசுக்காக 1000 கணக்கில் செலவழிக்கிறார்கள். ஏழைகளுக்கு உதவினால் (பணம்) செல்வம் குறைந்து விடும் என்று எண்ணுபவர்கள் 1000 கணக்கில் பட்டாசை வாங்கி வெடித்தால் செல்வம் குறையுமே என்று சிந்திப்பதில்லை.

பெருநாள் தினத்தில் நபி (ஸல்) அவர்கள் அதிகமதிகம் தர்மம் செய்ய சொல்லியிருக்கிறார்கள். ஆகவே வீண் விரயம் செய்யாமல் தர்மங்களை மேற்கொண்டு இறைவனும் இறைத்தூதர் (ஸல்) அவர்களும் காட்டித் தந்த வழிமுறையை பின்பற்றி நம் சிறார்களையும், நம்மையும் வழிநடக்க செய்வோம். இதற்கு இறைவன் உதவி செய்வானாக.

இன்ஷாஅல்லாஹ் தொடரும்.

 ஆக்கம் : K. M. ராபியா ரோஷன் சித்தீக்கியா M.A.


Add comment

காயல் நியுஸ், வாசகர்கள் கருத்துக்களை வரவேற்கிறது. வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் நியுஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்த விதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். முரண்பாடான மரியாதைக்குறைவான, கண்ணியமில்லாத கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கும் அவைகளை நீக்குவதற்கும் எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு. தங்களது பெயர் மற்றும் கருத்துக்களை தமிழில் தட்டச்சு செய்யலாம். உதாரணமாக "காயல்பட்டினம்" என்று தட்டச்சு செய்ய ஆங்கிலத்தில் "kaayalpattinam" என்று தட்டச்சு செய்து Space bar-ஐ அழுத்தினால் தங்கள் தட்டச்சு செய்த சொல் தமிழாக மாற்றப்படும். ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.


Security code
Refresh

 

செய்திகள்

காயல் குப்பை அரசியல்: பாகம் 18 - முன்னாள் நகர்மன்றத்தலைவர் வழங்கும் இடம் பயோ காஸ் திட்டத்திற்கு பொருத்தமில்லாத இடம் என உணர்த்திய - டெண்டர் விதிமுறைகள்!*
காயல் குப்பை அரசியல் (பாகம் 17): “காயல்பட்டினம் & ஆறுமுகநேரிக்குப் பொதுவான குப்பைக் கிடங்கு அமைய இரு ஊர் தலைவர்களும் மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து வேண்டுகோள்!” ‘நடப்பது என்ன?’ குழுமம் விளக்க அறிக்கை!!
காயல் குப்பை அரசியல்: பாகம் 16 - நகராட்சி ஏற்பாட்டில் - ஆற்காடு நகராட்சிக்கு சென்று வந்த நகர்மன்ற உறுப்பினர்கள்!
ஓகி புயலினால் காணாமல் போன மீனவர்களை மீட்க வலியுறுத்தி கன்னியாகுமரி மாவட்ட மீனவர் குடும்பத்தினர் தீவிர போராட்டம்!
காயல் குப்பை அரசியல்: பாகம் 15 - எத்தனை நாட்கள், வாரங்கள், மாதங்கள், ஆண்டுகள் ஆனாலும் சரி...?
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை

feed-imageFeed Entries

சுடச்சுட காயல் செய்திகள்! சுவையான இஸ்லாமிய கட்டுரைகள் !!
தொடர்பு கொள்ள : admin@kayalnews.com
© Copyright : Kayalnews.com