بسم الله الرحمن الرحيم
Monday 11th December 2017 | 22 ரபீஉல் அவ்வல் 1439AH
பதாகை
news menu left
news menu right

பதாகை

பதாகை

  • Google Bookmarks
  • Twitter
  • Windows Live
  • Facebook
  • MySpace
  • deli.cio.us
  • Digg
  • Newsvine
  • reddit
  • StumbleUpon
  • Yahoo! Bookmarks
  • Yigg
சிறார்களின் வளர்ச்சியில் பெற்றோர்களின் பங்கு! (பாகம்-10)அச்சிடுகமின்-அஞ்சல்
29 ஜனவரி 2012 மாலை 03:24

ஆள்பாதி ஆடை பாதி என்பார்கள். ஒரு மனிதனுக்கு அழகு தருவதில் ஒன்று அவனுடைய ஆடை. இந்த ஆடைகளை எப்படியும் அணியலாம் என்ற நிலைமை கைவிட்டுவிட்டு இப்படித்தான் அணிய வேண்டும் என்று இஸ்லாம் கூறும் வரையறைகளை மனதில் கொண்டு செயல்பட வேண்டும்.

சிறுகுழந்தையாக இருக்கும் போது ஆடைகளை சரியான முறையில் போட வைத்தால் தான் பெரிய பிள்ளையானதும் ஆடைகள் விஷயத்தில் கவனம் எடுப்பார்கள்.

இன்றைய ஆடைகளுக்கு சினிமா படங்களின் பெயரை நடிகைகளின் பெயரை அல்லது நாடகங்களின் பெயரை சூட்டி விற்பனை செய்கின்றனர். இப்படங்களின் மோகத்தினால் சில ஆடைகள் பிரபல்யமானதாகி விடுகின்றது. இந்த பிரபல்யமான ஆடைகளை நம் பிள்ளைகளுக்கு வாங்கி கொடுக்கின்றோம். அந்த ஆடை பிள்ளைகளின் ஒழுக்கத்தை பேண வல்லதா என்பதை உற்று நோக்குவதில்லை.

கையில்லாத சுடிதார், கையில்லாத சட்டை, நெட்டிலான துணியை உள்துணியில்லாமல் கையை வைத்தால் மிக மெல்லிய ஆடை மிக இறுக்கமான ஆடை, ஜூன்ஸ் பேண்ட் இதுபோன்ற ஆடைகளை நம் பெண் மக்களுக்கு போட்டு விடுகின்றோம்.

சில பெண் பிள்ளைகள் ஒன்பது வயது வந்தவுடன் பூப்பெய்து விடுகிறார்கள். அவர்களின் சில பெற்றோர்கள் "என் பிள்ளை சின்னவயதிலேயே பூப்பெய்து விட்டாள். உடனே ஃபர்தா போட்டு கஷ்டப்படுத்த விரும்பவில்லை எனக்கூறி ஃபர்தாவை போட மறுத்துவிடுகிறார்கள்.

பூப்பெய்தி விட்டாலே பருவத்தை அடைந்து விட்டாள் என்று தானே அர்த்தம். எனவே பூப்பெய்தியவுடன் அவர்களுக்கு ஃபர்தாவை (ஹிஜாபை) அணிய வைக்க வேண்டும்.

சில ஊர்களில் பள்ளி சீருடை என்பது பெண்மக்களுக்கு "சீருடை" ஆக இருக்கின்றது. எல்.கே.ஜி முதல் 3ம் வகுப்பு அல்லது நான்காம் வகுப்பு வரை போட்டால் பரவாயில்லை. ஆனால் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவிகளுக்கும் அதே சீருடை. முழங்கால்கள் தெரிகின்றன. சூ-சாக்ஸ் போட்டாலும் தெரிய தான் செய்கிறது. அதே வகுப்பில் ஆண் பிள்ளைகளும் (பசங்களும்) படிக்கிறார்கள். 10-ம் வகுப்பு படிக்கும் மாணவனுக்கு 15 வயது. இந்நிலையில் அந்த பசங்கள் பருவத்தை அடைந்து இருப்பார்கள்.

ஆண்,பெண் இருபாலர் சேர்ந்து பயிலும் பாடசாலைகளில் இதுபோன்ற ஆடைகளை அணிந்து செல்லும் நிலையில் நம் முஸ்லிம் பெண் மக்களை சேர்த்து படிக்க வைக்கிறார்கள். இப்படி செய்யக்கூடாது.

இது சாதாரண விஷயமா?

பெற்றோர்களே! எல்லா விஷயத்திலும் பிள்ளைகளை கண்ணும் கருத்துமாக பார்க்கும் போது ஆடைகள் விஷயத்திலும் பாடசாலைகள் விஷயத்திலும் செலுத்த வேண்டும். பெண்களின் உடை எப்படி இருக்க வேண்டும் என்பது பற்றி இஸ்லாம் அழகாக கூறுகின்றது. அதை நம் பிள்ளைகளுக்கும் பேண வேண்டும்.

ஆண்களுக்கு ஒப்பாகாதிருத்தல்:-

ஆண்களைப் போன்று ஆடை அணியும் பெண்களும் பெண்களைப் போன்று ஆடை அணியும் ஆண்களும் எங்களைச் சேர்ந்தவர்கள் அல்ல என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

நூல் : அஹ்மது, நஸயீ,ஹாகிம்

மூவர் சுவனம் புக மாட்டார்கள். அல்லாஹ் மறுமையில் அவர்களை ஏறெடுத்தும் பார்க்கமாட்டான். (அவர்கள் யாரென்றால்) தனது பெற்றோருக்கு அநியாயம் செய்தவன். மேலும் ஆண்களைப் போன்று நடந்து கொள்ளும் பெண், மற்றும் தனது மனைவி விபச்சாரத்தில் ஈடுபடுவதை அங்கீகரித்து அதற்கு ஒத்தாசையாக இருப்பவன் ஆகியோராவார் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

நூற்கள்: அஹ்மது, இப்னுஹிப்பான்.

மேற்கண்ட ஹதீஸ்களின் மூலம் பெண் பிள்ளைகளுக்கு ஆண்கள் ஆடையையும்,ஆண் பிள்ளைகளுக்கு பெண்கள் ஆடையையும் அணியக்கூடாது எனத் தெரிகிறது. ஆனால் நம் பிள்ளைகளுக்கு பாடசாலையில் நடக்கும் நிகழ்ச்சியின்போது நாடக காட்சிகளில் நடிக்க மாறுவேடம் போட அனுமதிக்கின்றோம். திருமண இல்லங்களில் மணமகனை ஏமாற்ற ஆண் மக்களை பெண்ணை மாதிரி ஜோடனை செய்து வரும் பழக்கம் நம்மில் ஒரு சிலரிடம் இருக்கின்றது. இதனை அறவே விட்டொழிக்க வேண்டும்.

காபிர்களுக்கு ஒப்பாகாதிருத்தல் :-

நான் காவி நிறத்திலான ஆடைகளை அணிந்திருப்பதைக் கண்ட நபி (ஸல்) அவர்கள் இவை காபிர்களுடைய ஆடைகள். எனவே இவற்றை அணியாதீர் என்றார்கள்.

நூல் : முஸ்லிம்

எனவே காஃபிர்கள் அணியக்கூடிய காவி நிற ஆடைகளை அணிவிப்பதை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும்.

கனமான ஆடை:-

மெல்லிய ஆடைகளை அணிந்துக்கொண்டு ஃபர்தா போடமல் வெளியே சில பெண்கள் செல்கிறார்கள். தங்களின் குழந்தைகளுக்கும் மெல்லிய ஆடைகளை அணிவிக்கிறார்கள். இதனை கைவிட வேண்டும். ஏனெனில்! நபி (ஸல்) கூறினார்கள்.

எனது உம்மத்தில் பிந்திய காலத்தில் சில பெண்கள் தோன்றுவார்கள். அவர்கள் ஆடை அணிந்த நிர்வாணிகளாக இருப்பார்கள். அவர்களின் தலைகளின் மேல் ஒட்டகங்களின் திமில் போன்றவை (தலைமுடி வைக்கப்பட்டு) இருக்கும். அவர்களை சபியுங்கள். நிச்சயமாக அவர்கள் சபிக்கப்பட்டவர்களே.

நூல் : அத்தப்ரானி

எனவே சாபத்திற்குரிய விஷயமான இந்த மெல்லிய உடைகளை அணிவதை தவிர்க்க வேண்டும். பெண்களுக்கான உடைகளை பற்றிய விவரங்களை கண்டோம். அதேபோன்று ஆண் பிள்ளைகள் விஷயத்திலும் கவனம் எடுக்க வேண்டும்.

இன்ஷா அல்லாஹ் அடுத்த வாரம் ஆண் ஆடை அணியும் முறைகள் பற்றி பார்ப்போம்.


ஆக்கம் : K. M. ராபியா ரோஷன் சித்தீக்கியா M.A.


Add comment

காயல் நியுஸ், வாசகர்கள் கருத்துக்களை வரவேற்கிறது. வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் நியுஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்த விதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். முரண்பாடான மரியாதைக்குறைவான, கண்ணியமில்லாத கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கும் அவைகளை நீக்குவதற்கும் எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு. தங்களது பெயர் மற்றும் கருத்துக்களை தமிழில் தட்டச்சு செய்யலாம். உதாரணமாக "காயல்பட்டினம்" என்று தட்டச்சு செய்ய ஆங்கிலத்தில் "kaayalpattinam" என்று தட்டச்சு செய்து Space bar-ஐ அழுத்தினால் தங்கள் தட்டச்சு செய்த சொல் தமிழாக மாற்றப்படும். ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.


Security code
Refresh

 

செய்திகள்

காயல் குப்பை அரசியல்: பாகம் 18 - முன்னாள் நகர்மன்றத்தலைவர் வழங்கும் இடம் பயோ காஸ் திட்டத்திற்கு பொருத்தமில்லாத இடம் என உணர்த்திய - டெண்டர் விதிமுறைகள்!*
காயல் குப்பை அரசியல் (பாகம் 17): “காயல்பட்டினம் & ஆறுமுகநேரிக்குப் பொதுவான குப்பைக் கிடங்கு அமைய இரு ஊர் தலைவர்களும் மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து வேண்டுகோள்!” ‘நடப்பது என்ன?’ குழுமம் விளக்க அறிக்கை!!
காயல் குப்பை அரசியல்: பாகம் 16 - நகராட்சி ஏற்பாட்டில் - ஆற்காடு நகராட்சிக்கு சென்று வந்த நகர்மன்ற உறுப்பினர்கள்!
ஓகி புயலினால் காணாமல் போன மீனவர்களை மீட்க வலியுறுத்தி கன்னியாகுமரி மாவட்ட மீனவர் குடும்பத்தினர் தீவிர போராட்டம்!
காயல் குப்பை அரசியல்: பாகம் 15 - எத்தனை நாட்கள், வாரங்கள், மாதங்கள், ஆண்டுகள் ஆனாலும் சரி...?
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை

feed-imageFeed Entries

சுடச்சுட காயல் செய்திகள்! சுவையான இஸ்லாமிய கட்டுரைகள் !!
தொடர்பு கொள்ள : admin@kayalnews.com
© Copyright : Kayalnews.com