بسم الله الرحمن الرحيم
Monday 11th December 2017 | 22 ரபீஉல் அவ்வல் 1439AH
பதாகை
news menu left
news menu right

பதாகை

பதாகை

  • Google Bookmarks
  • Twitter
  • Windows Live
  • Facebook
  • MySpace
  • deli.cio.us
  • Digg
  • Newsvine
  • reddit
  • StumbleUpon
  • Yahoo! Bookmarks
  • Yigg
சிறார்களின் வளர்ச்சியில் பெற்றோர்களின் பங்கு ( பாகம் -11 )அச்சிடுகமின்-அஞ்சல்
10 பிப்ரவரி 2012 மாலை 11:04

அஸ்ஸலாமு அலைக்கும் ..

சென்ற தொடரில் பெண் பிள்ளைகளின் ஆடை விசயங்களை மிகுதியாக படித்தோம் இந்த வார தொடரில் இன்ஷா அல்லாஹ்  ஆன் ஆடைகள் அணிவது  பற்றி பார்ப்போம்.

மனிதர்கள் இன்னின்ன ஆடைகளைத்தான் அணிந்திட வேண்டும் எனப் பணித்திடும்போது, இஸ்லாம், நல்லொழுக்கம்,அழகு.கற்பு  ஆண், பெண் ஆகியோரது அகத்தன்மைகள் என்பனவற்றிற்கே முக்கியம் தந்திருக்கின்றது.

இந்தத் தனித்தன்மைகளுக்குத் தடையாக அமைகின்ற ஆடைகளையும், இந்தத் தனித்தன்மைகளைப் பேணிடுவதில் தடையாக அமைகின்ற ஆடைகளையும், இந்தத் தனித்தன்மைகளை வளர்த்திடுவதற்குத் தடையாக அமைகின்ற அலங்காரங்களையும் இஸ்லாம் அனுமதிப்பதில்லை.

அகந்தை, அகம்பாவம், வீண் பெருமை ஆகியவைகளை ஏற்படுத்துகின்ற ஆடைகளை இஸ்லாம் முழுமையாகத் தடை செய்துள்ளது.

மனிதன் தனது மனிதத்தன்மைகளை மதித்து நடந்திட வேண்டும் என எதிர்பார்க்கின்றது இஸ்லாம். ஏனெனில் மனிதத்தன்மை என்பது மனிதனுக்கு இறைவனால் அருளப்பட்ட சிறப்பு  தகுதியாகும்.

அத்துடன் மனிதன் இந்த மனிததன்மைக்கு ஊறுவிளைவிக்கின்ற அத்தனை அனாச்சாரங்களிலிருந்தும் விலகி இருக்க வேண்டும் என்பதும் இறைவனின் விருப்பமாகும்.

இதனால்தான் இஸ்லாம் சில வகையான ஆடைகளுக்கும் சிலவகைக் கச்சாப் பொருட்களால் தயாரிக்கப்பட்ட ஆடைகளுக்கும் தடை விதித்துள்ளது. (உதாரணம்) முழுக்க முழுக்கப் பட்டால் தயாரான ஆடைகள். இந்த அடிப்படையில்தான் சில வகையான அலங்காரப் பொருட்களையும் தடை செய்துள்ளது இஸ்லாம். (உதாரணம்) தங்கத்தை ஆண்கள் அலங்காரப் பொருளாகப் பயன்படுத்துவதை இஸ்லாம் தடை செய்துள்ளது.

ஆண் பிள்ளைகளுக்கு பட்டாலான ஆடைகள் அணிவிக்க கூடாது.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். பட்டை அணியாதீர்கள். யார் அதனை உலகில் அணிகிளாரோ அவர் அதனை மறுமையில் அணியமாட்டார்.

அறிவிப்பாளர் : உமர்பின் ஹத்தாப் (ரலி)

நூல் : திர்மிதி.

ஆண்பிள்ளைகளுக்கு தங்கத்தை அணியக்கூடாது. பெரியவர்கள் தான் தங்கத்தை அணியக்கூடாது. சின்ன பிள்ளைகளுக்கு தங்கத்தை போடலாம் என்று சில எண்ணி சிறிய (ஆண்) குழந்தைகளுக்கு தங்கசெயின் தங்க மோதிரம் அணிவிக்கிறார்கள்.

நபி (ஸல்) அவர்கள் பட்டை எடுத்து அதனை தங்கள் வலது கையிலும், தங்கத்தை எடுத்து அதனை தங்கள் இடது கையிலும் வைத்துக் கொண்டதை நான் பார்த்தேன். பின்னர் கூறினார்கள். இவ்விரண்டும் என் உம்மத்தின் (சமுதாயத்தின்) ஆண்கள் மீது ஹராமாகும்- விலக்கப்பட்டதாகும் எனக் கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அலி (ரலி)

நூல் : அபூதாவூது

கீழ் ஆடைகளை தரையில்படும்படி ஆண் பிள்ளைகள் ஆடையை அணியக்கூடாது.

யார் பெருமையடிப்பதற்காக தம் ஆடையை பூமியில் தரை கூட்டும்படி அணிந்து செல்கிறாரோ அவரை கியாமத் நாளில் அல்லாஹ் (தன் அருட்பார்வையால்) பார்;;க்க மாட்டான். அப்பொழுது அபூபக்கர் (ரலி) கேட்டார்கள். யாரஸூலுல்லாஹ்! நிச்சயமாக என் வேட்டி என்னை அறியாமல் கீழே இறங்கி விடுகின்றது எனக் கூறினார்.இதற்கு நபி (ஸல்) அவர்கள் நீர் பெருமைக்காக அவ்வாறு செய்பவர் அல்லர் எனக் கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ்இப்னு உமர் (ரலி)

நூல் : புஹாரி.

கணுக்காலுக்குக் கீழ் எந்த ஆடை தொங்கி விடுகிறதோ அது நரகில் உள்ளதாகும் என நபி (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹீரைரா (ரலி)

நூற்கள் : புஹாரி, முஸ்லிம்

ஆண் பிள்ளைகளுக்கும் பெண் பிள்ளைகளுக்கும் எப்படி ஆடை அணியும் முறையை இஸ்லாம் கற்று தருகின்றதோ அந்த முறையை வாழ்வில் செயல்படுத்த வேண்டும்.

ஆடைகள் அணியும் போது ஓதும் துஆவை பிள்ளைகளுக்கு கற்று கொடுத்து ஓத வைக்க வேண்டும். நபி (ஸல்) அவர்கள் ஏதாவது புத்தாடையை அணிந்தால் அதன் பெயரை தலைப்பாகை, சட்டை, மேலங்கி எனக் கூறினார்கள்.

பின்னர் இறைவா! எல்லாப் புகழும் உனக்கே! இந்த ஆடையை நீ எனக்கு அணிவித்தாய். இந்த ஆடையின் நலனையும், இந்த ஆடை எதற்காக செய்யப்பட்டதோ அதன் நலனையும் உன்னிடம் கேட்கிறேன். மேலும் இவ்வாடையின் தீமை மற்றும் எதற்காக தயார் செய்யப்பட்டதோ அதன் தீமையிலிருந்தும் உன்னிடத்திலே பாதுகாவல் தேடுகிறேன்.

அறிவிப்பாளர் : அபூஸயீதுல்குத்ரி

நூற்கள் : அபூதாவூது, திர்மிதி

ஆடை அணியும்போது ஓத வேண்டிய துஆவையும் கற்றுக் கொடுக்க வேண்டும்.

 என்னிடமிருந்து எந்த சக்தியுமில்லாமல் இந்த ஆடையை எனக்கு வழங்கிய இறைவனுக்கே எல்லாப்புகழும்.

நூல் : அபூதாவூது

பல ஊர்களில் காதல் மற்றும் பாலியல் பிரச்னைகளில் பிள்ளைகள் மாட்டிக் கொள்கிறார்கள். அதற்கு முக்கிய காரணம் பெற்றோர்கள்தான். பெற்றோர்கள் சிறு பிள்ளையாக இருக்கும்போது அவர்களின் ஆடை விஷயத்திலும் குணம் விஷயத்திலும் ஒழுக்க விஷயத்திலும் கவனம் எடுத்திருந்தால் பிள்ளைகள்  கீழான நிலைக்கு செல்வதற்கு  வாய்ப்பில்லை.

எனவே பெற்றோர்கள் வெள்ளம் வரும் முன்னே அணைகள் கட்டிவிட வேண்டும். பிள்ளைகள் மோஷமான நடவடிக்கையை எடுப்பதற்கு முன்பே இஸ்லாம் கூறும் ஆடைகள், இஸ்லாம் கூறும் ஒழுக்கவியல் என்ற அணையை பிள்ளைகளுக்கு கட்டினால் பிள்ளைகள் ஒழுக்கத்தில் சிறந்தவர்களாக மேன்மையானவர்களாக திகழ்வார்கள். அப்படிபட்ட நன்மக்களாக நம் மக்களை அல்லாஹ் ஆக்கி அருள்புரிவானாக.

ஆக்கம் :

K. M. ராபியா ரோஷன் சித்தீக்கியா M.A.

Add comment

காயல் நியுஸ், வாசகர்கள் கருத்துக்களை வரவேற்கிறது. வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் நியுஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்த விதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். முரண்பாடான மரியாதைக்குறைவான, கண்ணியமில்லாத கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கும் அவைகளை நீக்குவதற்கும் எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு. தங்களது பெயர் மற்றும் கருத்துக்களை தமிழில் தட்டச்சு செய்யலாம். உதாரணமாக "காயல்பட்டினம்" என்று தட்டச்சு செய்ய ஆங்கிலத்தில் "kaayalpattinam" என்று தட்டச்சு செய்து Space bar-ஐ அழுத்தினால் தங்கள் தட்டச்சு செய்த சொல் தமிழாக மாற்றப்படும். ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.


Security code
Refresh

 

செய்திகள்

காயல் குப்பை அரசியல்: பாகம் 18 - முன்னாள் நகர்மன்றத்தலைவர் வழங்கும் இடம் பயோ காஸ் திட்டத்திற்கு பொருத்தமில்லாத இடம் என உணர்த்திய - டெண்டர் விதிமுறைகள்!*
காயல் குப்பை அரசியல் (பாகம் 17): “காயல்பட்டினம் & ஆறுமுகநேரிக்குப் பொதுவான குப்பைக் கிடங்கு அமைய இரு ஊர் தலைவர்களும் மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து வேண்டுகோள்!” ‘நடப்பது என்ன?’ குழுமம் விளக்க அறிக்கை!!
காயல் குப்பை அரசியல்: பாகம் 16 - நகராட்சி ஏற்பாட்டில் - ஆற்காடு நகராட்சிக்கு சென்று வந்த நகர்மன்ற உறுப்பினர்கள்!
ஓகி புயலினால் காணாமல் போன மீனவர்களை மீட்க வலியுறுத்தி கன்னியாகுமரி மாவட்ட மீனவர் குடும்பத்தினர் தீவிர போராட்டம்!
காயல் குப்பை அரசியல்: பாகம் 15 - எத்தனை நாட்கள், வாரங்கள், மாதங்கள், ஆண்டுகள் ஆனாலும் சரி...?
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை

feed-imageFeed Entries

சுடச்சுட காயல் செய்திகள்! சுவையான இஸ்லாமிய கட்டுரைகள் !!
தொடர்பு கொள்ள : admin@kayalnews.com
© Copyright : Kayalnews.com