சிறார்களின் வளர்ச்சியில் பெற்றோர்களின் பங்கு! (பாகம் - 12) | ![]() | ![]() |
29 பிப்ரவரி 2012 மாலை 03:43 | |
அல்லாஹ்விடத்தில் ஒப்புக்கொள்ளப்பட்ட மார்க்கம் இஸ்லாம். அந்த இஸ்லாமிய உணர்வு நம் யாவருக்கும் தேவை. சில நேரங்களில் சில விஷயங்களில் மார்க்கத்தை பின்பற்ற தவறிவிடுகிறோம். அதில் ஒன்று பெயர் சூட்டும் வைபவம். குழந்தை பிறந்த ஏழாம் நாள் குழந்தைக்கு பெயர் வைத்து மொட்டையடித்து, கத்னா செய்து அகீகா கொடுப்பது நபிவழி. அகீகாவை சிலர் கொடுப்பதேயில்லை. குழந்தை பிறந்தவுடன் பெயர் சூட்டும் வைபவம் என்று வைத்து அதை ஆடம்பரமாக செயல்படுகின்றார்கள். பின் குழந்தைக்கு ஒரு வயது வந்தவுடன் HAPPY BIRTH DAY என்ற பெயரில் கேக் வெட்டி, மெழுகுவர்த்தி ஏற்றி பலருக்கும் சுவீட் கொடுத்து கொண்டாடி வருகிறார்கள். பாடசாலையில் சென்று படிக்கும்போது BIRTH DAY வந்தால் பள்ளிக்கூடத்தில் பணியாற்றுகின்ற அத்தனை ஆசிரிய ஆசிரியைகளுக்கும் சுவீட் வழங்குகிறார்கள். தோழிமார்களுக்கும் சுவீட் கொடுத்து மகிழ்கிறார்கள். பெற்றோர்கள் சிறுகுழந்தையாக இருந்தபோது பிறந்தநாள் கொண்டாடியதை பிள்ளைகள் வளர்ந்த பின்னும் அதை தொடருகிறார்கள். இந்த பிறந்தநாள் கொண்டாட்டம் நமது மார்க்கம் அனுமதித்த செயல் அல்ல. நபி (ஸல்) அவர்களோ அவர்களின் தோழர்களோ சஹாபிய பெண்மணிகளோ யாரும் பிறந்தநாள் கொண்டாடியது இல்லை. நபி (ஸல்) அவர்கள் என்னில் ஒரு சதைத்துண்டு என்று தங்களின் மகள் ஃபாத்திமாவை கூறினார்களே அந்த ஃபாத்திமா (ரலி) அவர்களுக்கோ அவர்களின் புதல்வர்களான ஹஸன், ஹூஸைன் என்ற பேரப்பிள்ளைகளுக்கோ பிறந்தநாள் கொண்டாடியிருக்கிறார்களோ? கொண்டாடியதே இல்லை. நபி (ஸல்) அவர்கள் பிறந்தநாள் கொண்டாடவிட்டாலும் சஹாபாக்கள் கொண்டாடியிருக்கலாம். அதற்கு நபி அனுமதித்திருக்கலாம் என்றால் அவர்களும் பிறந்தநாளை கொண்டாடவில்லை. பிறந்தநாள் கொண்டாட்டங்கள் கிறிஸ்தவர்களின் பழக்கம், யூதர்களுக்கும், கிறிஸ்தவர்களுக்கும் ஒப்பாகாதீர்கள். அவர்களுக்கு மாற்றமாக நடங்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர் : அபூஹீரைரா (ரலி) நூற்கள் : புஹாரி, முஸ்லிம் இந்த நபிமொழியை பிறந்த நாள் கொண்டாடும் முஸ்லிம்கள் கவனத்தில் வைக்க வேண்டும். அடுத்து ஆண்குழந்தையாக இருந்தால் சிலர் விருத்தசேதனம் (மார்க்கம்) செய்யும் போது அதற்கு பைத்து சொல்லி, பூமாலை போட்டு ஊர்வலம் வரக்கூடிய நிலையைப் பார்க்கிறோம். பெண்பிள்ளையாக இருந்தால் காது குத்துதலுக்கென்று பெரிய விழா வைத்து லட்டு, ஹல்வா என சுவீட்களை வழங்குகிறார்கள். மேலும் பெண் பிள்ளைகள் பூப்பெய்தியவுடன் ஏழாம் நாளில் தண்ணீர் ஊற்றி அதற்கு பலரை அழைத்து விருந்து வைக்கிறார்கள். நீராட்டுவிழா, காதுகுத்து வைபவம் மாற்று மதத்தவர்கள் செய்யும் செயல். நுபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். யார் பிற சமுதாயத்திற்கு ஒப்பாக நடக்கிறாரோ அவர் அம்மதத்தையே சார்ந்தவர்கள் என்றார்கள். எனவே இதுபோன்ற செயல்களை நம் சிறார்களுக்கு செய்யாமல் நம்மை தடுத்து கொள்ள வேண்டும். இது மட்டுமின்றி சில மூடநம்பிக்கைகளும் நிலவி வருகின்றன. ஜோசியம் முஸ்லிம்களில் சிலர் பார்க்கத்தான் செய்கிறார்;கள். ஜோசியர்கள் சொல்லக்கூடிய வார்த்தைகளை வைத்து தனக்கு பிறந்த குழந்தையின் மீது பாசமோ, வெறுப்போ வைக்கின்றார்கள். மேலும் சிலர் ஐந்தாவதாக பிறக்கும் குழந்தை பெண் குழந்தையாக இருந்தால் தரித்திரம் என்றும் ஆறு விரல்களுடைய பிள்ளையாக பிறந்தால் அல்லது மச்சங்கள் உள்ள பிள்ளையாக பிறந்தால் பரக்கத் மாறு கண்ணுடைய பிள்ளையாக இருந்தாலும் பரக்கத் என்று சொல்லி மருத்துவரிடம் செல்வதில்லை. இப்படியாக சில விசயங்களில் பீடையுள்ள பிள்ளை என்றும், பரக்கத் மிக்க பிள்ளை என்றும் பிரிவினை ஏற்படுத்தி பிள்ளைகளுக்கு மத்தியில் பாரபட்சமாக நடக்கின்றார்கள். ஒருவருக்கு மூன்று பிள்ளை எனில், இரண்டு பிள்ளைக்குமு; கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தநிலையில் 3ம் பிள்ளை பிறந்தபிறகு அவருக்கு பரக்கத் ஏற்பட்டால் அந்த மூன்றாம் பிள்ளையை அதிக பாசத்துடன் வளர்க்கிறார்கள். மற்ற பிள்ளைகளை சரிவர கவனிப்பதில்லை. இச்சூழல் நிலவினால் அந்த பிள்ளைகள் சரியாக வளர வாய்ப்பில்லை. பிள்ளைகளுக்கிடையே நீதமாக நடக்க வேண்டும். நிச்சயமாக அல்லாஹ் நீதமாக நடப்பவர்களையே நேசிக்கின்றான். அல்குர்ஆன் : 60:8 அடுத்து பிள்ளைகளுக்கு நோய் செய்தால் உடனே ஓதி பார்த்து தாயத்து போடுகிறார்கள். இதற்கு மட்டும் தாயத்து போடுவதில்லை. ஒரு கர்ப்பிணி பெண் அவள் நான்கு மாதமாக இருந்தால் தாயத் அவள் குழந்தையை பெற்றெடுத்தவுடுன் குழந்தையின் தொட்டிலுக்கும், குழந்தைக்கும் தாயத்து. குழந்தை வளரத் தொடங்கியதும் குழந்தையின் கையிலும் கழுத்திலும் இடுப்பிலும் தாயத்து போடுகிறார்கள். எதற்கெடுத்தாலும் தாயத்தை போட்டுக்கொள்ளும் பழக்கம் சிலரிடம் உள்ளது. 'யார் தாயத்தை தொங்கவிடுகிறாரோ அவர் இணை வைத்துவிட்டார் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர் : உக்பா (ரலி) நூல் : அஹ்மது குழந்தைக்கு கண்திருஷ்டி ஏற்பட்டு விட்டது என்று எண்ணினால் அதற்காக நபி (ஸல்) அவர்கள் கற்றுத் தந்த துஆவை ஓதிவிட வேண்டும். நபி (ஸல்) அவர்கள் ஹஸன், ஹூஸைன் (ரல்) அவர்களுக்கு பாதுகாப்பு தேடக்கூடியவர்களாக இருந்தார்கள். நபி (ஸல்) சொன்னார்கள். இஸ்மாயில் (அலை) இஸ்ஹாக் (அலை) அவர்களுக்கு அவருடைய தந்தை இதைக் கொண்டு பாதுகாப்பு தேடுவார்கள். அவூது பிகலிமாத்தில்லாஹித்தாம்ம மின்குல்லி ஷைத்தானின் ஹாம்ம வமின்குல்லி அய்னின் லாம்மா அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ் (ரலி) நூல் : புஹாரி. மார்க்கம் எதை நமக்கு செய்ய ஏவுகின்றதோ அதை செய்யவேண்டும். எதை விட்டும் நம்மை தடுக்கின்றதோ அதை விட்டும் தவிர்க்க வேண்டும். இது நம் வாழ்வில் மட்டுமல்ல, நம் சிறார்களை பராமரிப்பதிலும் கடைப்பிடிக்க வேண்டும். ஓவ்வொரு பெற்றோருக்கும் சிறார்களின் விஷயத்தில் பலவிதமான ஆசைகள் இருக்கும். எந்த பெற்றோரும் தன் பிள்ளை தவறான வழிக்கு செல்வதை விரும்பமாட்டார்கள். ஏதோ ஒரு விஷயத்தில் சிறார்கள் தவறு செய்தால் அதனை பெரிதுபடுத்தாமல் உரிய முறையில் உபதேசம் செய்ய வேண்டும். மேலும் இறைவனிடத்தில் 'நன் மக்களாக ஆக்கி தா' என்று இறைஞ்சி துஆ கேட்க வேண்டும். இருகரம் ஏந்தி பிரார்த்தித்தால் அந்த கரத்தை வெறுமனே முயற்சி செய்வோம். யா அல்லாஹ்! எம் பிள்ளைகள் யாவரையும் சீரான வழியில் நடத்தி இம்மையிலும் மறுமையிலும் அவர்களுக்கு வெற்றியை வழங்குவாயாக. எங்களுக்கும் ஈருலகிலும் வெற்றியை நல்குவாயாக. அல்லாஹ் மிக்க அறிந்தவன். ஆக்கம் : நமது கட்டுரையாளர் K. M. ராபியா ரோஷன் சித்தீக்கியா M.A.
Add commentகாயல் நியுஸ், வாசகர்கள் கருத்துக்களை வரவேற்கிறது. வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் நியுஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்த விதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். முரண்பாடான மரியாதைக்குறைவான, கண்ணியமில்லாத கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கும் அவைகளை நீக்குவதற்கும் எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு. தங்களது பெயர் மற்றும் கருத்துக்களை தமிழில் தட்டச்சு செய்யலாம். உதாரணமாக "காயல்பட்டினம்" என்று தட்டச்சு செய்ய ஆங்கிலத்தில் "kaayalpattinam" என்று தட்டச்சு செய்து Space bar-ஐ அழுத்தினால் தங்கள் தட்டச்சு செய்த சொல் தமிழாக மாற்றப்படும். ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும். |
செய்திகள்
![]() | புதிய சாலைகள் போடுவதற்கு முன்பு பழைய சாலை தோண்ட படவேண்டும்: உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி உத்தரவு! |
![]() | ஏப்ரல் 4 (புதனன்று) - காயல்பட்டினத்தில் இரத்த தான முகாம்! |
![]() | வாவு வஜீஹா வனிதையர் கல்லூரியில் ஆங்கிலத்துறை சார்பாக சர்வதேச அளவில் ஒருநாள் பயிற்சிபட்டறை! |
![]() | காயல்பட்டினம் புறநகர் பகுதிகளில் சமுதாயக் கூடம் கட்ட நிலம் தேர்வு நடவடிக்கை! “நடப்பது என்ன?” குழுமத்திற்கு அரசு தகவல்!! |
![]() | அஞ்சல் நிலைய வாடகைக் கட்டிடம் தொடர்பாக நகராட்சி நிர். ஆணையருடன் “நடப்பது என்ன?” குழும நிர்வாகிகள் சந்திப்பு! |
சமீபத்திய கட்டுரைகள்
![]() | பிப் 14ஆம்தேதி . காதலர் தினம்..? ஓர் இஸ்லாமிய பார்வை!! |
![]() | எறும்பின் குற்றம்..! கட்டுரை!! |
![]() | ஒவ்வொருவரும் கண்காணிக்கப்படுகிறோம்! கட்டுரை!! |
![]() | இன்று போதை ஒழிப்பு தினம்! போதை என்னும் அழிவுப்பாதை! கட்டுரை!! |
![]() | வெயிலைச் சமாளிப்பது எப்படி? கட்டுரை!! |
ஏகத்துவம்
![]() | அல்லாஹ்வின் நேசர்களுக்கு எந்தப் பயமும் இல்லை,அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள்! |
![]() | "வெள்ளை வெளேர் என்ற நிலையில் உங்களை நான் விட்டுச் செல்கிறேன்! அதன் இரவும் பகலைப் போன்றது!! (நபிமொழி) |