بسم الله الرحمن الرحيم
Friday 18th January 2019 | 11 ஜமாதுல் அவ்வல் 1440AH
பதாகை
news menu left
news menu right

பதாகை

பதாகை

  • Google Bookmarks
  • Twitter
  • Windows Live
  • Facebook
  • MySpace
  • deli.cio.us
  • Digg
  • Newsvine
  • reddit
  • StumbleUpon
  • Yahoo! Bookmarks
  • Yigg
சிறார்களின் வளர்ச்சியில் பெற்றோர்களின் பங்கு! (PART-3)அச்சிடுகமின்-அஞ்சல்
22 ஜூலை 2011 மாலை 08:23

பெற்றோர் வளர்ப்பு முறையில் தான் சிறார்கள் உருவாகிறார்கள். பசுமரத்தில் அறைந்த ஆணிப்போல் குழந்தைகள் களங்கமற்றவர்கள். அவர்களின் உள்ளத்தில் எது சரியென பதிவாகிறதோ அது தான் இறுதிவரை நீடிக்கும் இந்நிலையில் அவர்கள் காணும் காட்சிகள் நல்லவையாக இருந்தால் நல்லவர்களாக உருவாகிறார்கள். கெட்டவையாக இருந்தால் கெட்டவர்களாக உருவாகிறார்கள்.

சிறு பிராயத்தில் எது சரி? எது தவறு என்பதை அவர்களால் பிரித்தறிய  இயலாது. அப்படியானால் தாய் எதை செய்கிறாளோ? அதை அப்படியே குழந்தையும் செய்யும் தந்தை எதை செய்கிறாரோ அதை அப்படியே குழந்தைகள் செய்வார்கள்.

15072011005

தாயைப் போல பிள்ளை நூலைப் போல சேலை என்பார்கள்.

எந்தக் குழந்தையும் பிறக்கும் போது இஸ்லாத்தில் தான் பிறகின்றது . அவர்களை யூதராகவோ  கிறிஸ்தவராகவோ நெருப்பு வணங்கியாகவோ அவர்களின் பெற்றோர்கள் தான் மாற்றுகிறார்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். நூற்கள் : புஹாரி அஹ்மது

எனவே பெற்றோர்கள் சிறார்களை சரியான முறையில் பராமரிக்க வேண்டும். சரியான முறையில் பராமரிக்க அவசியமானதில் ஒன்று கல்வி.

பெற்றோர்கள் காலை எழுந்தவுடன் பரபரப்பு! பிள்ளைகளை பள்ளிக்கூடங்களுக்கு அனுப்புவது. மாலையில் டியூசன் இரவில் வீட்டு பாடம் (ஹோம் வொர்க்) இடையிடையே அடி உதை திட்டு (ஏச்சு)

இதனால் அவர்களின் உள்ளம் வெறுப்பை சந்திக்கிறது. தாயுடைய தாலாட்டை கேட்டு நிம்மதியாக உறங்க நினைக்கும் குழந்தைக்கு கம்ப்யூட்டர் கணிதம் பல பாடல்கள் (ரைம்ஸ்) இவற்றையெல்லாம் திணித்து விடுகிறோம்.

02062011001

2 வயதில் பால்வாடி 3வயதில் பிரிகேஜி  எல்.கே.ஜி மற்றும் யுவ்.கே.ஜி என தொடங்குகிறோம்.

இதை நேரங்களில் தனது குழந்தைகள் ½ மதிப்பெண் குறைவாக எடுத்தாலும் ஏதோ ஐ.ஏ.எஸ் அல்லது ஐ.பி.எஸ் படிப்பதாக எண்ணி திட்டி தீர்ப்பது. விருந்தினர் வந்தால் குழந்தைகள் ரைம்ஸ் பாடச்சொல்வது. அந்த நேரத்தில் பாடாமல் முரண்டு பிடித்தால் தனக்கு ஏனோ பெரிய அவமானத்தை குழந்தை தேடி தந்ததாக நினைத்து விருந்தினர் சென்றதும் சிறார்களை ஒருவாறு  பண்ணுவது இப்படிபட்ட நிலை நமது சமுதாயத்தில் நீடித்துக் கொண்டே வருகிறது.

தாய் தான் குழந்தைகளுக்கு முதல் பள்ளிக் கூடம் ஆசிரியை. அம்மா என்று சொல்லிக் கொடுக்கும் போது தமிழ் ஆசிரியையாகவும் பொருட்களின் எண்ணிக்கை சொல்லும் போது கணித ஆசிரியையாகவும் வானம் இது பூமி இது சேவல் கோழி என்றெல்லாம் சொல்லிக் கொடுக்கும் போது சமூக அறிவியல் ஆசிரியையாகவும்... இவ்வாறாக அனைத்து விஷயங்களை சொல்லிக் கொடுக்கும் போது ஆசிரியையாக ஒரு தாய் திகழ்கிறாள். தாய் முதலில் இறைவனைப் பற்றியும் அவனது ஆற்றலைப் பற்றியும் அவனுக்கு அஞ்ச வேண்டிய முறைகளை பற்றியும் விளக்கிச் சொல்ல வேண்டும்.

"என் மகனே! நீ அல்லாஹ்வுக்கு இணை வைக்காதே நிச்சயமாக இணை வைப்பது மாபெரும் அநீதமாகும் என்று லுக்மான் (அலை) தன் மகனுக்கு உபதேசம் செய்யும் சமயம் கூறினார்கள்.

அல்குர்ஆன் 31:13

இறைவனைப் பற்றி எடுத்து சொல்லும் போதும் மார்க்க காரியங்களை நிறைவேற்ற வைக்கும் போதும் மென்மையை கையாள வேண்டும். அதாவது கல்வியை கற்றுக் கொடுக்கும் போது மென்மையை கையாள வேண்டும்.

பெருமானார் (ஸல்) அவர்களின் காலத்தில் நபித் தோழியர்கள் தங்கள் குழந்தைகளை நோன்பு நோற்க வைப்பார்கள். இடையில் அவர்கள் பசித்து அழுதால் பொம்மைகளை கொண்டு விளையாட்டுக் காட்டி நேரத்தை போக்குவார்கள்.

அறிவிப்பாளர் : ருபைஃ பினத் முஅவ்வித் (ரலி) நூல் : புஹாரி

star_sisters


மேலும் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். எவர் சிறுவர்களிடம் இரக்கம் காட்ட வில்லையோ இன்னும் பெரியவர்களுக்கு மரியாதை செலுத்தவில்லையோ அவர்கள் நம்மை சார்ந்தவர் அல்ல.

அறிவிப்பாளர் : அனஸ் (ரலி)

நூல் : திர்மதி

சில பெற்றோர் மார்க்க கல்வியாகட்டும் பொது கல்வியாகட்டும். கற்றுக் கொடுக்கும் போது குழந்தைகள் தவறு செய்தால் உடனடியாக (அகப்பையை) கரண்டியை அடுப்பில் சூடேற்றி குழந்தைகள் மீது வைத்து விடுவார்கள். சிலர் காயம் ஏற்படும் அளவிற்கு அடிப்பார்கள். இவ்வாறான செயல்களை பெற்றோர்கள் கைவிட வேண்டும்.

"பெண்களிலேயே குறைஷிக்குலப் பெண்கள் தான் சிறந்தவர்கள். ஏனெனில் அவர்கள் தான் தங்கள் குழந்தைகளிடம் கருணையுடன் நடந்துக் கொள்கிறார்கள் என நபி (ஸல்) கூறினார்கள். நூல் : புஹாரி, முஸ்லிம்

கல்வி... கல்வி... என நினைப்பவர்கள் மத்தியில் கல்வின்னா என்ன என கேட்பவர்களும் உண்டு.

கல்வியை கற்றுக் கொடுப்பதில் பெற்றோர்களுக்கிடையே வித்தியாசம்.

சில பெற்றோர்கள் மார்க்கத்தை பற்றி எடுத்துச் சொல்லாமல் உலக விஷயங்களுக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுக்கிறார்.

28122010005

சில பெற்றோர்கள் மார்க்க விஷயங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து விட்டு உலக கல்விக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை. சிலர் இரண்டிற்கும் முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். சிலர் இரண்டிற்குமே முக்கியத்துவம் கொடுப்பதில்லை.

மனிதனின் உயர்வுக்கும் தாழ்வுக்கும் காரணமாக இருப்பவை கல்வியே! ஒரு நாட்டின் உயர்வுக்கு கூட அந்நாட்டு மக்கள் படித்திருப்பது அவசியமாகிறது. எந்த நாட்டில் படித்தவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறதோ அந்தளவிற்கு பொரளாதாரத்தில் அந்நாடு சிறந்து விளங்கும்.

ஞானம் உள்ளவனும் இல்லாதவனும் சமமாவானா?

அல்குர்ஆன்

பத்ரு போர்களத்தில் கைதிகளை பிடித்து வரப்பட்டவர்கள் ஈட்டுத் தொகை பெறப்பட்டு விடுதலை செய்யப்பட்டார்கள். அவர்களில் பணவசதி இல்லாதவர்கள் முஸ்லிம்களின் குழந்தைகளுக்கு எழுதப்படிக்க கற்றுக் கொடுத்து விட்டு விடுதலையாகளாம். என நபி (ஸல்) அவர்கள் அறிவித்தார்கள்.

இவ்வாறு இஸ்லாம் கல்வியின் மேன்மையை பறைச்சாற்றி கொண்டிருக்கும் வேலையில் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டவர்கள் இன்றுவரை கல்வியில் பின்தங்கியவர்களாக இருக்கின்றார்கள்.


தொடரும் இன்ஷா அல்லாஹ்..

கே.எம் ராபியா ரோஷன் சித்தீக்கியா


Add comment

காயல் நியுஸ், வாசகர்கள் கருத்துக்களை வரவேற்கிறது. வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் நியுஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்த விதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். முரண்பாடான மரியாதைக்குறைவான, கண்ணியமில்லாத கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கும் அவைகளை நீக்குவதற்கும் எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு. தங்களது பெயர் மற்றும் கருத்துக்களை தமிழில் தட்டச்சு செய்யலாம். உதாரணமாக "காயல்பட்டினம்" என்று தட்டச்சு செய்ய ஆங்கிலத்தில் "kaayalpattinam" என்று தட்டச்சு செய்து Space bar-ஐ அழுத்தினால் தங்கள் தட்டச்சு செய்த சொல் தமிழாக மாற்றப்படும். ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.


Security code
Refresh

 

செய்திகள்

வாவு வஜீஹா வனிதையர் கல்லூரியில் மாநில அளவிலான திறன்மிகு கருத்தரங்கம்!
காயல்பட்டினத்தில் இருந்து இ சேவை மாற்றல் விஷயம்! மாவட்ட ஆட்சியரின் கவனத்திற்கு திங்களன்று கொண்டு செல்வதாக துணை தாசில்தார் உறுதி!!
இ சேவை மையம்: காயலபட்டினத்தில் இருந்து மாற்றப்படக்கூடாது என கோரி மாவட்ட ஆட்சியருக்கு பொது மக்கள் - ஈமெயில், FAX குறுஞ்செய்தி மற்றும் WHATSAPP செய்தி அனுப்ப வேண்டுகோள்!
மண்டலம் வாரியாக அதிகரிக்க உத்தேசிக்கப்பட்டுள்ள காயல்பட்டினம் நகராட்சியின் சொத்து வரி! உங்கள் தெரு எந்த மண்டலத்தில்?
படிவம் 7 பயன்படுத்தி வாக்காளர் பட்டியலில் தவறுதலாக இடம்பெற்றுள்ள பெயரை எவ்வாறு நீக்குவது?
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை

feed-imageFeed Entries

சுடச்சுட காயல் செய்திகள்! சுவையான இஸ்லாமிய கட்டுரைகள் !!
தொடர்பு கொள்ள : admin@kayalnews.com
© Copyright : Kayalnews.com