சிறார்களின் வளர்ச்சியில் பெற்றோர்களின் பங்கு! (PART-4)அச்சிடுக
30 ஜூலை 2011 மாலை 04:23

பெண்கள் கல்வி விஷயத்தில் மிக அவசியமாக உள்ளனர். சில ஊர்களில் என்று பெண்கள் பூப்பெய்து விடுகிறார்கள். அன்றிலிருந்து அவர்களை கல்வி கற்க அனுப்பவதில்லை.

மானிடராய் பிறந்த ஒவ்வொரு மனிதனுக்கும்கல்வி மிக அவசியம். ஒருவனுக்கு எவ்வகையிலும் அழிவே இல்லாத சிறந்த செல்வம் கல்வியே ஆகும். அது தவிர்த்த பொண்ணும் மணியும் பொருளும் நிலையான செல்வம் அல்ல. அப்படிப்பட்ட கல்வியை பெற்றோர்களின் சிலர் ஆண்மக்களுக்கு மட்டும் தேவை பெண்ணுக்கு தேவையில்லை என நினைத்து ஆண்மக்களை தரம் வாய்ந்த பாடசாலைகளிலும் பெண்மக்களை தரம் குறைந்த இடங்களிலும் சேர்க்கிறார்கள்.

பெற்றோர்களே!

ஒரு ஆண் மகன் கல்வி கற்றால் அவன் மட்டும் பயன் பெறுவான். அவனது சம்பாத்தியத்தின் மூலம் தான் மற்றவர்கள் பயன் பெறுவார்கள். சிலரைத் தவிர ஆனால் ஒரு பெண் கல்வி கற்றால் அவள் குடும்பமே பயன்பெறும். ஏனெனில் ஆண் மகன் சம்பாதிக்க கடல் கடந்து நாடு கடந்து மாநிலம் மற்றும் மாவட்டம் கடந்து சென்று விடுகின்றான். ஆனால் பெண்மகள் தன் குழந்தைகளுக்கு கல்வி கற்றுக் கொடுத்து பண்பாட்டை சொல்லிக் கொடுத்து ஆளாக்குகிறார்கள். பெண் இனம் மக்களில் தாழ்ந்தவர் இல்லை. இவ்வுலக வாழ்க்கையை நன்றாக நடத்தும் முறையில் ஆண் மக்களை காட்டிலும் மிகுந்த பொறுமையும் ஆழ்ந்த நுண்ணறிவும் கொண்டு வளர்க்கிறார்கள்.

கல்வியென்னும் துண்டா மணிவிளக்கை தராமல் அவர்களை அறியாமை என்னும் பேரருளில் போகச் சொல்லும் பெற்றோர்கள் உண்மை அறிந்தவர் அல்லர். தன்பிள்ளைகள் அழியாத செல்வங்களை பெற வேண்டும் என்ற எண்ணம் நம்மில் ஒவ்வொருவரிடத்திலும் இயற்கையாகவே காணப்படுகிறது.

சிப்பியில் உள்ள முத்தின் ஒளியும் பாசி மூடிய பவளத்தின் நிறமும் மாரியில் மறைந்த மதியின் துவக்கம் கூடை கவிழ்ந்த விளக்கின் ஒளியும் போல் நம்மை மூடிக் கொண்டிருக்கும் அறியாமை என்னும் இருளில் அகப்பட்டவர்களாகி நம் அறிவை இழந்து அழிந்து போகும் பொருள்களையே நிலையாக இருக்க வேண்டும் என்று நினைத்து முயற்சிக்கின்றோம்.

உண்மையான அறிவுகல்வியே இதை பெண்மக்களுக்கும் கண்டிப்பாக கொடுப்பது பெற்றோரின் கடமை ஏனெனில் இறுதிவரை நம்மை பின் தொடர்வது கல்வியே!.

"ஆதமுடைய மகன் இறந்து விட்டால் மூன்று விஷயங்களைத் தவிர மற்ற விஷயங்கள் அனைத்தும் அவனை விட்டும் துண்டிக்கப்பட்டு விடும். ஒன்று நிலையான தர்மம். மற்றொன்று பயன்தரக்கூடிய கல்வி மூன்றாவது அவனுக்காக துஆச் செய்யக் கூடிய நல்லக்குழந்தை என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹீரைரா (ரலி)

ஆதாரம் : முஸ்லிம்.

இப்படிபட்ட கல்வியை நம்முடைய குழந்தைகளுக்கு கொடுத்து நன்மையை ஈருலகிலும் பெற முயற்சி செய்வோம். இன்ஷா அல்லாஹ்.

நான் படிக்கிறேன்மா என வம்பு செய்யும் பிள்ளைகளை நீ படித்து கலெக்டர் வேலைக்கோ போக போகிறாய் என அடித்து அடக்கி விடுகிறார்கள்.

இப்படி பெண்களுக்கு கல்வி மறுக்கப்பட்டதால் தான் மூடப்பழக்கங்கள் பெண் குழந்தை உயிரோடு சொல்லுதல், வரதட்சனை,வட்டி போன்ற செயல்கள் இவர்களிடம் புகுந்து கொள்கின்றன.

நோய்க்கு மருத்துவம் செய்யாமல் பேய்க்கு பார்ப்பதால் பணத்தையும், கற்பையும் சிலர் இழக்கிறார்கள். இது போன்ற செயல்கள் இவ்வுலகை விட்டும் விரட்டியடிக்க பெண்மக்களுக்கு கல்வியறிவு மிக அவசியம்.

எனவே கல்வியை இடையிலேயே நிறுத்திவிடாமல் பாதுகாப்பான நிறுவனங்களில் படிக்க அனுப்ப வேண்டும். இது பெற்றோர்களின் மீதுள்ள அவசியமான செயல்களில் இதுவும் ஒன்று.

கல்வியை கற்க அனுப்புவோம்!  கல்லாமையை ஒழிப்போம்!

இன்ஷா அல்லாஹ்

தொடரும்


கே.எம் ராபியா ரோஷன் சித்தீக்கியா


Add comment

காயல் நியுஸ், வாசகர்கள் கருத்துக்களை வரவேற்கிறது. வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் நியுஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்த விதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். முரண்பாடான மரியாதைக்குறைவான, கண்ணியமில்லாத கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கும் அவைகளை நீக்குவதற்கும் எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு. தங்களது பெயர் மற்றும் கருத்துக்களை தமிழில் தட்டச்சு செய்யலாம். உதாரணமாக "காயல்பட்டினம்" என்று தட்டச்சு செய்ய ஆங்கிலத்தில் "kaayalpattinam" என்று தட்டச்சு செய்து Space bar-ஐ அழுத்தினால் தங்கள் தட்டச்சு செய்த சொல் தமிழாக மாற்றப்படும். ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.


Security code
Refresh