بسم الله الرحمن الرحيم
Tuesday 16th July 2019 | 13 துல்கஃதா 1440AH
பதாகை
news menu left
news menu right
 • Google Bookmarks
 • Twitter
 • Windows Live
 • Facebook
 • MySpace
 • deli.cio.us
 • Digg
 • Newsvine
 • reddit
 • StumbleUpon
 • Yahoo! Bookmarks
 • Yigg
சிறார்களின் வளர்ச்சியில் பெற்றோர்களின் பங்கு (PART - 5)அச்சிடுகமின்-அஞ்சல்
13 ஆகஸ்ட் 2011 மாலை 04:54

குழந்தைகள் என்றவுடன் நினைவிற்கு வருவது அவர்களின் சிரிப்பும், கள்ள கபடம் இல்லா மழலைப் பேச்சும் தத்தி தத்தி தவழும் தன்மையும் தான்.

எதையாவது கண்டு அவர்கள் மகிழ்ச்சியடைந்தால் நாமும் மகிழ்ச்சியடைவோம். குழந்தைகள் எப்போதும் மகிழ்ச்சியில் மிதக்க பெற்றோர்கள் விரும்புவதுண்டு.

அவர்களை மகிழ்விப்பதற்காக விளையாட்டுப் பொருட்கள் மற்றும் பறவைகளான கோழி,கோழிக்குஞ்சு, கிளி மற்றும் ஆட்டுக்குட்டி போன்றவைகளை வாங்கி கொடுப்பது பெற்றோர்களின் வழக்கம்.

உருவப்படங்கள் வைக்கக்கூடாது என்று நபி (ஸல்) அவர்கள் கட்டளையிட்டிருந்தாலும் விளையாட்டு பொம்மைகள் குழந்தைகள் விளையாட கொடுக்கலாம் என்பதை அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் சிறு வயதுடையவராக இருந்தபோது அவர்கள் இறக்கைகள் பொருத்தப்பட்ட குதிரை உட்பட பல பொம்மைகளை தன் அறையில் வைத்திருந்த போது நபி (ஸல்) அவர்கள் கண்டிக்காமல் இருந்ததன் மூலம் அனுமதி உண்டு என்பதை தெளிவுப் படுத்தியுள்ளார்கள். இச்செய்தி அபூதாவூதில் பதிவாகியுள்ளது.

பறவைகளை குழந்தைகளுக்கு வாங்கி தரும் போது கொஞ்சம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அறியாத குழந்தைகள் அப்பறவையின் கழுத்தை பிடித்து நசுக்கி விட வாய்ப்புண்டு அல்லது இறக்கைகளை ஒடித்து சித்ரவதை செய்ய வாய்ப்புண்டு. இப்படி செய்வதால் அதற்கு வேதனையை தரும் என்பதை அவர்கள் அறிய மாட்டார்கள்.

சில பிள்ளைகள் பறவைகள் மற்றும் ஆடு மாடுகளை கண்டால் பயப்படுவார்கள். சில குழந்தைகள் பயப்பட மாட்டார்கள். பயப்படாத குழந்தைகள் பறவைகளுக்கு நன்மை செய்ய வாய்ப்புண்டு. தீமை செய்யவும் வாய்ப்புண்டு. ஆகையால் பெற்றோர்கள் தீமைகள் செய்யவிடாமல் தன் குழந்தைகளை பாதுகாக்க வேண்டும். கோழியை (அசைக்க முடியாதவாறு பூமியில்) நட்டி அதன்மீது அம்புகளை எறிந்துக் கொண்டிருந்த சில நபர்களை இப்னு உமர் (ரலி) அவர்கள் கடந்து சென்றார்கள். அம்மக்கள் இப்னு உமர் (ரலி) அவர்களைப் பார்த்ததும் களைந்து சென்று விட்டனர். அப்போது இப்னு உமர் (ரலி) அவர்கள் இதனை செய்தது யார்? என வினவி விட்டு இவ்வாறு யார் செய்கிறாரோ அவரை நபி (ஸல்) அவர்கள் சபித்தார்கள் என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : ஸைது இப்னு ஜீபைர்

நூல் : முஸ்லிம்


யார் உயிருள்ள ஆத்மாவை அம்பு எரியும் இலக்காக வைப்பாரோ அவர்களை நபி (ஸல்) அவர்கள் சபித்தார்கள்.

அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ் (ரலி)

நூல் : முஸ்லிம்


பறவைகளுக்கு தீமை செய்வது சாபத்திற்குரிய செயல். எனவே இந்த செயலை செய்ய விடாமல் பாதுகாக்க வேண்டும். இதை விட்டும் தவறிவிட்டால் அல்லாஹ்வின் சாபமும் நபி (ஸல்) அவர்களின் சாபமும் நரகமும் கிடைக்கும். இதை விட்டும் அல்லாஹ் பாதுகாப்பனாக!

நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள். பூனையின் மூலம் ஒரு பெண் வேதனை செய்யப்பட்டாள். ஏனெனில் அது இறக்கும் வரை கட்டி வைத்த காரணத்தால் நரகத்திற்கு சென்றாள். அவன் அதற்கு உணவு வழங்கவுமில்லை. தண்ணீர் புகட்டவுமில்லை. பூமியின் புற்பூண்டுகளை சாப்பிட (வெளியே) விடவுமில்லை.

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி)

நூல் : புஹாரி


இந்த ஹதீஸின் மூலம் உயிரினங்களை சித்ரவதைச் செய்தால் நரகம் கிடைக்கும் என்பதை உணருகிறோம்.

ரசூல் (ஸல்) அவர்கள் சொன்னார்கள் பாதையில் ஒரு மனிதர் சென்றுக் கொண்டிருந்தபோது அவருக்கு தாகம் கடுமையாக ஏற்பட்டது. அவர் ஒரு கிணற்றை அடைந்து அதில் இறங்கி தண்ணீர் குடித்து மேலே ஏறினார். அப்போது ஒரு நாய் தாகத்தின் காரணத்தால் ஈர மண்ணை நக்கியது.தமக்கு ஏற்பட்ட தாகம் இந்த நாய்க்கும் ஏற்பட்டுள்ளது என்று நினைத்த அம்மனிதர் கிணற்றில் இறங்கினார். அவருடைய காலுறையில் தண்ணீரை நிரப்பி வாயில் பற்றிக் கொண்டு மேலே ஏறி நாய்க்கு நீர் புகட்டினார். அவருக்கு அல்லாஹ் நன்றியாக மன்னிப்பை வழங்கினான். நபி (ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது. அல்லாஹ்வின் தூதரே! எங்களுக்கு கால்நடை விஷயத்திலும் கூலி உண்டா? என்றதும் நபி (ஸல்) அவர்கள் ஒவ்வொரு உயிருள்ளவற்றிற்கும் கூலி உண்டு என்றார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹீரைரா (ரலி)

ஆதாரம்: அஹ்மது


அறியாத பருவத்தில் செய்தக் குற்றத்திற்காக அவர்கள் குற்றம் பிடிக்கப்பட மாட்டார்கள். ஆனால் பெற்றேர்களாகிய நாம் அவர்களை தவறு செய்யவிடாமல் பாதுகாக்க வேண்டும். அப்போது தான் அவர்கள் நல்லவர்களாக வல்லவர்களாக வளருவார்கள் இன்ஷா அல்லாஹ்.

ஒருமுறை பெருமானார் (ஸல்) அவர்களிடம் சதக்காவுடைய பொருட்கள் வந்தபோது அவர்களது பேரர் ஹஸன் (ரலி) அவர்கள் அதிலிருந்து ஒரு பேரீத்தம் பழத்தை எடுத்து சாப்பிடலானார்கள். உடனே நபி (ஸல்) அவர்கள் வேண்டாம் துப்பு! நபியின் குடும்பத்திற்கு சதக்கா ஹராம் என்று கூறினார்கள்.

நூல்கள்: புகாரி முஸ்லிம்

இதன் மூலம் சிறுபிள்ளையாக இருந்தாலும் தவறை செய்ய விடாமல் தவறை தட்டிக்கேட்டு அவர்களை காக்க வேண்டும்.

அல்லாஹ் மிக்க மேலானவன்.

(வளரும்..இன்ஷா அல்லாஹ்)

 K. M. ராபியா ரோஷன் சித்தீக்கியா M.A.

Add comment

காயல் நியுஸ், வாசகர்கள் கருத்துக்களை வரவேற்கிறது. வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் நியுஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்த விதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். முரண்பாடான மரியாதைக்குறைவான, கண்ணியமில்லாத கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கும் அவைகளை நீக்குவதற்கும் எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு. தங்களது பெயர் மற்றும் கருத்துக்களை தமிழில் தட்டச்சு செய்யலாம். உதாரணமாக "காயல்பட்டினம்" என்று தட்டச்சு செய்ய ஆங்கிலத்தில் "kaayalpattinam" என்று தட்டச்சு செய்து Space bar-ஐ அழுத்தினால் தங்கள் தட்டச்சு செய்த சொல் தமிழாக மாற்றப்படும். ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.


Security code
Refresh

 
பதாகை
பதாகை
பதாகை

feed-imageFeed Entries

சுடச்சுட காயல் செய்திகள்! சுவையான இஸ்லாமிய கட்டுரைகள் !!
தொடர்பு கொள்ள : admin@kayalnews.com
© Copyright : Kayalnews.com