بسم الله الرحمن الرحيم
Thursday 13th December 2018 | 04 ரபீஉல் ஆஹிர் 1440AH
பதாகை
news menu left
news menu right
  • Google Bookmarks
  • Twitter
  • Windows Live
  • Facebook
  • MySpace
  • deli.cio.us
  • Digg
  • Newsvine
  • reddit
  • StumbleUpon
  • Yahoo! Bookmarks
  • Yigg
பேராசிரியராக பெருமானார் (ஸல்) அவர்கள்.. (பாகம் - 1)அச்சிடுகமின்-அஞ்சல்
01 ஏப்ரல் 2012 மாலை 03:13

முகவுரை :-

கற்றலின் முழுமையான பயனே கற்பித்தலில் தான் உள்ளது. கற்பித்தல் இல்லாத கல்வி வீணானது. எனவேதான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், 'யார் குர்ஆனை தானும் கற்று பிறருக்கும் கற்று கொடுக்கிறாரோ அவரே உங்களில் சிறந்தவர் என்று கூறினார்கள்.

அல்லாஹ் தஆலாவும் பெருமானார் (ஸல்) அவர்களை இந்த உலகிற்கு அனுப்பி வைத்ததற்கான நோக்கத்தைப் பற்றி குறிப்பிடும்போது,

அவனே எழுதப்படிக்க தெரியாத சமுதாயத்தில் அவர்களிலிருந்தே ஒரு தூதரை அனுப்பினான். அவர்களுக்கு அவர் அவனது வசனங்களை கூறிக்காண்பித்து அவர்களை பரிசுத்தப்படுத்துகிறார். அவர்களுக்கு வேதத்தையும், ஞானத்தையும் கற்றுக் கொடுக்கிறார். அவர்கள் இதற்கு முன்பு தெளிவான வழிகேட்டில் இருந்தனர். (அல்குர்ஆன் 62:2)

என்றும் மற்றொரு இடத்திலே, '(நபியே!)' உமக்கு எது இறக்கியருளப்பட்டதோ (அந்த வேதத்தை) அதனை நீர் மக்களுக்கு தெளிவாக மக்களுக்கு விளக்க வேண்டும் என்பதற்காகவே உம்மை நாம் அனுப்பி வைத்தோம் (அல்குர்ஆன்)

என்றும் நபிகளார் மீது தான் சுமத்தியிருக்கும் கற்பித்தல் பணியைப் பற்றி அல்லாஹ் தெளிவாகவே விளக்குகிறான்.

கல்வியைக் கற்ற ஒருவன் அதனை தான் மட்டும் கற்றுக்கொண்டு பிறருக்கு எடுத்துச் சொல்லாமல் கற்பிக்காமல் மறைத்து வைத்தல் மாபெரும் தவறு என்பதை நபி (ஸல்) அவர்கள் மிகத் தெளிவாகவே சுட்டிக் காட்டுகிறார்கள்.

'எவனொருவன் (அவனுக்குத் தெரிந்த) ஞானத்தைப் பற்றி கேட்கப்பட்டும் அதனை (பிறருக்குச் சொல்லாமல்) மறைக்கிறானோ அவனுக்கு (மறுமை நாளில்) நெருப்பினாலான கடிவாளங்கள் அணிவிக்கப்படும்.

(ஆதாரம்: அபூதாவூது, திர்மிதீ)

என்ற நபி (ஸல்) அவர்களின் கூற்று கற்றலின் நோக்கமே கற்பித்தலில் தான் என்று நமக்கு மிகத் தெளிவாகவே உணர்த்துகிறது.

கற்பித்தல் எப்படி இருக்க வேண்டும் :-

மேற்கண்ட வசனங்கள் மற்றும் நபிமொழிகள் வாயிலாக கற்பித்தல் அவசியம் என்பதை நாம் உணர்ந்தோம். ஆனாலும் கற்பித்தல் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கான சில வழிமுறைகளும், நெறிமுறைகளும் உண்டு. அடிப்படையான இரண்டு விஷயங்களை கட்டாயம் கடைபிடிக்கப்பட வேண்டும்.

1. தெளிவாக இருக்க வேண்டும்.

2. இலகுவாக கற்பவர்கள் புரியும் விதத்தில் அமைய வேண்டும்.

புரிய வைக்க முடியாத கற்பித்தலால் ஏதேனும் பலன் இருக்க முடியுமா? நிச்சயம் இருக்க முடியாது. கல்வியின் மீது வெறுப்பும் சடைவும்தான் ஏற்படும்.

பொதுவாக ஆசிரியர்களை இரண்டு வகையினராக நாம் பிரிக்கலாம். ஒரு வகையினர் பாடங்களை அழகிய முறைகளில் விளக்கி வகுப்பறைகளை உயிர்ப்புடன் முறைகளில் விளக்கி வகுப்பறைகளை உயிர்ப்புடன் வைத்திருப்பவர்கள் (Ideal Teachers)

மற்றொரு வகையினர், ஏனோதானோவென்று பாடம் நடத்தி வகுப்பறையை தூங்கி வழியச் செய்பவர்கள் முதலாவாது வகை ஆசிரியர்களிடம் பயிலும் மாணவர்கள் தான் ஆர்வத்தோடு பயின்று அதிக மதிப்பெண்கள் பெற முடியும் இரண்டாவது வகை ஆசிரியர்கள் மாணவர்களுக்கு கல்வியின் மீது வெறுப்பையும், சலிப்பையும் ஏற்படுத்துகிறார்கள்.

இந்த செய்திகளையெல்லாம் படிக்கும்போதே நம் கண் முன்னால் நம் பள்ளிப்பருவத்தில் சந்தித்த இரண்டு வகையான ஆசிரியர்களும் நம் மனதில் தோன்றலாம். இன்றும் கூட சிறந்த ஆசிரியர்களும், அவர்கள் கற்றுத்தந்த பல பாடங்களும் நம் நெஞ்சில் பசுமரத்தாணி போல பதிந்திருக்கக் கூடும். நம் முதுமைக்காலத்தில் கூட சில ஆசிரியர்களை நம்மால் மறக்க இயலாது காரணம் அவர்கள் பயன்படுத்திய கற்பித்தல் முறைகள்.

சிறந்த கற்பித்தல் முறைகள் :-

கற்பித்தல் முறைகள் சிறந்ததாகவும், மேம்படுத்தப்பட்டதாகவும் அமைய வேண்டும் என்பதற்கான விழிப்புணர்வு இன்றைய காலத்தில் மிக அதிகமாகவே காணப்படுகிறது. மனனம் செய்து தேர்வு எழுதுதல் என்ற பழைய முறை மாற்றப்பட வேண்டும் என்பதே பெரும்பாலான கல்வியாளர்களின் கருத்தாக உள்ளது.

செயல்வழிக் கற்றல் :-

பாடமுறைகள் தற்போது பரவலாக அறிமுகப்படுத்தப்பட்டு பெற்றோர்களிடையே நல்ல வரவேற்பையும் பெற்று வருகிறது சில ஆண்டுகளுக்கு முன்னால் அரசாங்கத்தாலே கூட இம்முறைகள் அரசுத் தொடக்கப்பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை அறிமுகப்படுத்தப்பட்டு வெற்றியும் பெற்றுள்ளது.

மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களிடையே பரவலாக இம்முறைக்கு நல்ல வரவேற்பும் கிடைத்துள்ளது. இம்முறைகளில் கல்வி கற்கும் மாணவர்களின் புரிதல் திறன் மற்ற மாணவர்களை விட அதிகமாக இருப்பதாக நிரூபிக்கப்பட்டும் உள்ளது.

பல தனியார் பள்ளிகளிலும் கூட, கற்பித்தல், மனனம் செய்வித்தல், ஒப்புவித்தல், தேர்வு எழுதுதல் என்ற பழைய முறைகள் மாற்றப்பட்டு செயல்வழிக் கற்றல், மாண்டிசோரி சிஸ்டம் என்று பல்வேறு வகையான கற்பித்தல் முறைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. அதற்காக ஆசிரியர்களுக்கான சிறப்புப் பயிற்சிகள் கூட அளிக்கப்படுகின்றன.

இன்னும் சொல்லப்போனால் கல்லூரிப் பட்டப்படிப்போடு, இந்த மாண்டிச்சோரி பயிற்சி எடுத்த ஆசிரியர்கள் மற்றவர்களை விட வேலைவாய்ப்பு வழங்கப்படுவதில் முன்னுரிமை அளிக்கப்படுகிறார்கள் என்பதே உண்மை.இப்படி தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கான தகுதி இதுபோன்ற செயல்வழிக்கற்றல் சம்பந்தமான ஏதேனும் ஒரு பயிற்சி சான்றிதழ இருக்க வேண்டும் என்றால்,உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்களோ கண்டிப்பாக B.Ed முடித்திருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறார்கள். எவ்வளவு திறமையான ஆசிரியர்களாய் இருந்தாலும் டீ.நுன முடித்திருந்தால் தான் தனியார் பள்ளிகளில் அதிக சம்பளமும் சலுகைகளும் எதிர்பார்க்க முடியும். அரசுப் பள்ளிகளிலோ B.Ed  தகுதி இல்லையென்றால் அரசு வேலை என்ற பேச்சுக்கே இடமில்லை.

B.Ed தகுதியின் எதிர்பார்ப்பிற்கான அவசியம் என்ன?

B.Ed என்பது ஆசிரியர்களுக்கான ஒரு பயிற்சிக்களம். ஒருவர் தான் பெற்ற பட்டப்படிப்பில் முதல் வகுப்பு தேறியிருந்தாலும் சரி கோல்டு மெடலே வாங்கியிருந்தாலும் சரி. அவர் B.Ed பயிற்சி முடிந்திருந்தால்தான் முழுமையான ஆசிரியர் ஆவதற்கான எல்லா தகுதியையும் பெறுகிறார். அப்படி என்னதான் அந்த பயிற்சியில் கற்றுத் தரப்படுகிறது என்பதை பார்ப்போம்.

தொடரும் இன்ஷா அல்லாஹ்..

ஆக்கம் : நமது கட்டுரையாளர்

உம்மு நுமைரா

Add comment

காயல் நியுஸ், வாசகர்கள் கருத்துக்களை வரவேற்கிறது. வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் நியுஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்த விதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். முரண்பாடான மரியாதைக்குறைவான, கண்ணியமில்லாத கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கும் அவைகளை நீக்குவதற்கும் எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு. தங்களது பெயர் மற்றும் கருத்துக்களை தமிழில் தட்டச்சு செய்யலாம். உதாரணமாக "காயல்பட்டினம்" என்று தட்டச்சு செய்ய ஆங்கிலத்தில் "kaayalpattinam" என்று தட்டச்சு செய்து Space bar-ஐ அழுத்தினால் தங்கள் தட்டச்சு செய்த சொல் தமிழாக மாற்றப்படும். ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.


Security code
Refresh

 

செய்திகள்

வாவு வஜீஹா வனிதையர் கல்லூரியில் மாநில அளவிலான திறன்மிகு கருத்தரங்கம்!
காயல்பட்டினத்தில் இருந்து இ சேவை மாற்றல் விஷயம்! மாவட்ட ஆட்சியரின் கவனத்திற்கு திங்களன்று கொண்டு செல்வதாக துணை தாசில்தார் உறுதி!!
இ சேவை மையம்: காயலபட்டினத்தில் இருந்து மாற்றப்படக்கூடாது என கோரி மாவட்ட ஆட்சியருக்கு பொது மக்கள் - ஈமெயில், FAX குறுஞ்செய்தி மற்றும் WHATSAPP செய்தி அனுப்ப வேண்டுகோள்!
மண்டலம் வாரியாக அதிகரிக்க உத்தேசிக்கப்பட்டுள்ள காயல்பட்டினம் நகராட்சியின் சொத்து வரி! உங்கள் தெரு எந்த மண்டலத்தில்?
படிவம் 7 பயன்படுத்தி வாக்காளர் பட்டியலில் தவறுதலாக இடம்பெற்றுள்ள பெயரை எவ்வாறு நீக்குவது?

சுடச்சுட காயல் செய்திகள்! சுவையான இஸ்லாமிய கட்டுரைகள் !!
தொடர்பு கொள்ள : admin@kayalnews.com
© Copyright : Kayalnews.com