بسم الله الرحمن الرحيم
Monday 20th August 2018 | 08 துல்ஹஜ் 1439AH
பதாகை
news menu left
news menu right
  • Google Bookmarks
  • Twitter
  • Windows Live
  • Facebook
  • MySpace
  • deli.cio.us
  • Digg
  • Newsvine
  • reddit
  • StumbleUpon
  • Yahoo! Bookmarks
  • Yigg
பேராசிரியராக பெருமானார் (ஸல்) அவர்கள் (பாகம் -2)அச்சிடுகமின்-அஞ்சல்
10 ஏப்ரல் 2012 மாலை 06:13

ஆசிரியர் பயிற்சி அமைப்பின் அம்சங்கள்:-

நல்ல தகுதியும் திறமையும் மிக்கவர்கள் மேலும் சிறந்த ஆசிரியர்களாக உருவாகுவதற்கு இந்த பயிற்சி வகுப்புகள் பட்டைத் தீட்டுகின்றன. மாணவர்களை சடைவடையச் செய்யாமல் எவ்வாறு எளிதான முறையில் பாடங்களை விளக்க வேண்டும். அவர்களது முழு கவனத்தையும் எவ்வாறு பாடத்தில் பக்கம் திருப்ப வேண்டும். படங்கள் (Diagram) அட்டைப் படங்கள் (Chart Works) மூலமாக எப்படி அவர்கள் கடினமாக விஷயத்தையும் எளிதாக புரிய வைக்கலாம் என்பதையெல்லாம் இந்த பயிற்சி வகுப்புகளில் கற்றுத் தரப்பட்டு திறன்மிகு பயிற்சியும் அளிக்கப்படுகிறது.

அது மட்டுமல்ல! மாணவர்களுக்கு பாடம் நடத்த ஆரம்பிக்கும் முன்பே நேரடியாக பாடத்திற்குள் நுழையாமல் அவர்களுக்கு அந்த பாடத்தின் பக்கம் ஆர்வத்தை மறைமுகமாக ஊட்டவேண்டும். (Motivation) உதாரணங்கள் மூலம் எளிதில் விளங்க வைக்க வேண்டும். கேள்விகள் எவ்வாறு கேட்க வேண்டும். தேர்வு முறைகள் எங்கனம் அமைய வேண்டும் என்பது போன்ற பல விஷயங்களை அந்த B.Ed பயிற்சியின் ஒரு வருடகாலத்திலே அந்த ஆசிரியர்கள் பெறுகிறார்கள்.

இங்கு கற்ற பயிற்சியினை நல்ல முறையில் வகுப்பறைகளில் செயல்படுத்தும் ஆசிரியர்களே மிகச்சிறந்த ஆசிரியர்களாகவும் உள்ளனர். இதுபோக அவ்வப்போது அவர்களுக்கு சில சிறப்பு பயிற்சி பாசறைகளும் (Work Shop) கூட்டு கல்வி நிறுவனங்களால் இடையிடையே நடத்தப்படுகின்றன.

கற்பித்தல் முறையைப்பற்றி இவ்வளவு பெரிய முன்னோட்டம் எதற்காக? அண்ணல் நபிகாளருக்கும் இந்த  பயிற்சி வகுப்புகளுக்கும் என்ன சம்பந்தம் என்று பலருக்கு தோன்றலாம். அதற்கான விடைதான் இக்கட்டுரையின் நோக்கம்.

ஆம்! அண்ணல் நபி (ஸல்) அவர்களின் நடைமுறைகள், செயல்கள், சொற்கள் அடங்களிய நபிமொழித் தொகுப்புகளை நாம் தொடாந்;து படித்த வந்தபோது இந்த பயிற்சி வகுப்பகளில் வரையறுக்கப்பட பயிற்சி முறைகள் அனைத்தையும் விட மிகச் சிறப்பாக அண்ணல் நபி (ஸல்) அவர்களின் கற்பித்தல் முறைகள் அமைந்த்திருந்ததை காண முடிந்தது.

அல்லாஹ்வின் அருள்மறையையும், தனது அழகிய வாழ்வியல் நடைமுறைகளையும் அருமைத் தோழர்களுக்கு எடுத்து விளக்கும்போது, பல்வேறுபட்ட கற்பித்தல் முறைகளை பெருமானார் (ஸல்) அவர்கள் பயன்படுத்தியுள்ளார்கள். இவைகளை ஆராய்ந்து பார்த்தாலே போதும். கற்பித்தல் பயிற்சி வகுப்புகள் எல்லாம் அர்த்தமற்றதாகி விடுகிறது.

இந்த நவீனயுகத்து பயிற்சி முறைகள் எல்லாம் ஆயிரத்து நானூறு ஆண்டுகளுக்கு முன்பே அண்ணல் பெருமானார் (ஸல்) அவர்களால் பயன்படுத்தப்பட்டிருப்பதைப் பார்த்து ஆச்சரியமாக உள்ளது.

இன்ஷா அல்லாஹ் பெருமானார் (ஸல்) அவர்களை பேராசிரியராக நாம் தொடர்ந்து காண ஆர்வமுடன் அடுத்தடுத்து படிப்போம்.

ஆக்கம் : உம்மு நுமைரா

ஆச்சரியங்கள் தொடரும்..

இன்ஷா அல்லாஹ்...

Add comment

காயல் நியுஸ், வாசகர்கள் கருத்துக்களை வரவேற்கிறது. வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் நியுஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்த விதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். முரண்பாடான மரியாதைக்குறைவான, கண்ணியமில்லாத கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கும் அவைகளை நீக்குவதற்கும் எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு. தங்களது பெயர் மற்றும் கருத்துக்களை தமிழில் தட்டச்சு செய்யலாம். உதாரணமாக "காயல்பட்டினம்" என்று தட்டச்சு செய்ய ஆங்கிலத்தில் "kaayalpattinam" என்று தட்டச்சு செய்து Space bar-ஐ அழுத்தினால் தங்கள் தட்டச்சு செய்த சொல் தமிழாக மாற்றப்படும். ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.


Security code
Refresh

 

செய்திகள்

அரசு மருத்துவமனை வளாகத்தில் ‘இயற்கையைத் தேடி’ மூலிகைத் திருவிழா! 3 நாட்கள் நடைபெற்ற விழாவில் மாணவ-மாணவியர் உட்பட திரளானோர் பங்கேற்பு!!
அபூதபீ கா.ந.மன்றம் ஆக. 19இல் நடத்தும் முதலுதவி விழிப்புணர்வு & பயிற்சி முகாமில் பங்கேற்க இணையதளம் வழியே பெயர் பதிவு செய்யலாம்!
ஆக. 19 அன்று அபூதபீ கா.ந.மன்றம் & ஷிஃபா நடத்தும் முதலுதவி விழிப்புணர்வு & பயிற்சி முகாமில் பங்கேற்க ஆன்லைனில் பெயர் பதிவு செய்ய வசதி!
ஆக. 19 அன்று, காயல்பட்டினம் நகர மக்களுக்கு மருத்துவ சேவையாற்றிய மருத்துவர்களுக்கு “நடப்பது என்ன?” குழுமம் சார்பில் பாராட்டு விழாவில் கவுரவிக்கப்படும் மருத்துவர்கள் விபரம்!
அமெரிக்காவில் மீண்டும் ஒரு காயல் மாணவி ‘ஹாஃபிழத்துல் குர்ஆன்’

சுடச்சுட காயல் செய்திகள்! சுவையான இஸ்லாமிய கட்டுரைகள் !!
தொடர்பு கொள்ள : admin@kayalnews.com
© Copyright : Kayalnews.com