بسم الله الرحمن الرحيم
Tuesday 21st May 2019 | 16 ரமலான் 1440AH
பதாகை
news menu left
news menu right
 • Google Bookmarks
 • Twitter
 • Windows Live
 • Facebook
 • MySpace
 • deli.cio.us
 • Digg
 • Newsvine
 • reddit
 • StumbleUpon
 • Yahoo! Bookmarks
 • Yigg
பேராசிரியராக பெருமானார் (ஸல்) அவர்கள் (பாகம் - 3)அச்சிடுகமின்-அஞ்சல்
19 ஏப்ரல் 2012 மாலை 02:34

பெருமானார் (ஸல்) அவர்கள் பயன்படுத்திய கற்பித்தல் முறைகள் முறை 1

கேட்பவர்களை சடைவடையச் செய்யாதிருத்தல் (Do not bore the listens) கற்பித்தலின்போது, அனைத்து ஆசிரியர்களும் கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கிய விஷயம் கேட்பவர்களை சடைவடையச் செய்யாமல் இருத்தல் வேண்டும். சொல்ல வேண்டியதை சுருக்கமாகவும், இனிமையாகவும் (Short and sweet) சொல்ல வேண்டும். நபி (ஸல்) அவர்களின் அணுகுமுறையும் இவ்வாறுதான் அமைந்திருந்தது.

 தனது உரைகளின் போது நபி (ஸல்) அவர்கள் பயன்படுத்தும் வார்த்தைகளை நாம் விரல் விட்டு எண்ணிக்கொள்ளும் அளவுக்கு மிகக் குறைவாகவே இருக்கும் என்று ஆயிஷா (ரழி) அவர்கள் கூறுகிறார்கள்.

 பெரும்பாலும் மிக நீண்ட சொற்பொழிவாக அவர்களது பேச்சுக்கள் அமையாது.

 அண்ணலாரது உரைகள் சுருக்கமாகவும், சுற்றிவளைக்காமலும், தெளிவான வார்த்தைகளைக் கொண்டதாகவும் இருக்கும்.

இதனால்தான் நபி (ஸல்) அவர்கள் அறிவித்த பெரும்பாலான செய்திகளை நபித்தோழர்களினால் ஒருமுறை கேட்ட மாத்திரத்திலேயே இலகுவாக மனனம் செய்ய முடிந்தது. ஏன் நம்மால் கூட பல ஹதீஸ்களை அதன் மூல அரபி மொழியிலேயே மனனம் செய்ய முடிவதற்கும் இதுதான் காரணம்.

இதற்கு உதாரணமாக மிகப்பிரபலமான சில ஹதீஸ்களை காண்போம்.

புஹாரி ஹதீஸ் கிரந்தத்தின் முதலாவது ஹதீஸான இன்னமல் அஃமாலு பின்னிய்யாதீ நிச்சயமாக செயல்கள் அனைத்தும் எண்ணங்களின் அடிப்படையிலேயே அமைந்துள்ளது என்பதாகும்.

அறிவிப்பவர் : உமர்பின் ஹத்தாப் (ரழி) அவர்கள் இந்த ஹதீஸின் அரபிவரிகள் நம்மில் பெரும்பாலானவர்களுக்கு தெரிந்திருக்கும் காரணம் அதன் எளிமையும், இனிமையும், சுருக்கமாக அழகாக சொல்லப்பட இந்த ஹதீஸின் திரண்ட கருத்தோ பரந்து விரிந்தது.

மற்றொரு செய்தி :-

'ஒரு பேரீத்தம் பழத்தைக் கொண்டேனும் நரக நெருப்பை விட்டும் நீங்கள் அஞ்சிக்கொள்ளுங்கள்' அவ்வாறு இல்லையெனில் நல்ல வார்த்தைகளை கொண்டேனும்'.

அறிவிப்பவர் : அதீபின் அபீஹாத்தம்

ஆதாரம் : புஹாரி.

என்ற செய்தி சொல்லும் கருத்துக்கள் ஏராளம். ஆனால் வார்த்தைகளின் அழகும் எளிமையுமோ அற்புதம். மற்றொரு செய்தியைக் காண்போம்.

' கீழிருக்கும் கையை விட மேலிருக்கும் கையே சிறந்தது'

அறிவிப்பவர் : ஹகீம் பின் ஹிஜாம் (ரலி)

ஆதாரம் : புஹாரி

வாங்கும் கரத்தை விட கொடுக்கும் கரமே உயர்ந்து என்ற உயரிய கருத்தை இரத்தினச் சுருக்கமாகவும், அழகிய நடையின் மூலமும் சுட்டிக்காட்டிய இதுபோன்ற ஏராளமான செய்திகள் அண்ணலாரின் அறிவிப்பிலெங்கும் பரவிக் கிடக்கின்றன.

இப்னு மஸ்வூது (ரழி) அவர்கள் தன்னுடைய மாணவர்களுக்கு ஒவ்வொரு வியாழக்கிழமையன்று மட்டும் பாடம் நடத்தக் கூடியவர்காள இருந்துள்ளார்கள். ஆனால் அவர்களது மாணவர்களோ கல்வியின் மீது கொண்ட அந்த ஆர்வத்தால் ஒவ்வொரு நாளும் தங்களுக்கு பாடம் நடத்தும்படி வேண்டுகிறார்கள். ஆனால் இப்னு மஸ்வூது (ரழி) அவர்களோ தினமும் உங்களுக்கு கல்வி கற்பிக்க என்னால் முடியும். ஆனால் நபி (ஸல்) அவர்கள் எங்களுக்கு காட்டித் தந்த வழிமுறை இதுதான். நீங்கள் சடைவடைந்து போய் அதன் காரணமாக கற்பதில் ஆர்வம் காட்டாது போய்விடுவீர்களோ! என்று நான் அஞ்சுகிறேன் என்று கூறினார்கள்.

(புஹாரி : ஹதீஸ் எண் 70)

மேற்கண்ட செய்தியிலிருந்து நாம் விளங்குவது என்ன? நபி (ஸல்) அவர்கள் நபித்தோழர்களுக்கு கற்றுக் கொடுப்பதற்காக குறிப்பிட்ட ஒரு தினத்தை மட்டுமே ஏற்படுத்தியிருந்திருக்கிறார்கள் என்பதை நாம் உணர முடிகிறது.

இமாம் புஹாரி அவர்கள் கூட தமது நூலில் 'கற்பித்தலின் போது மிதமான முறையை கையாடுதல் என்று தனி பாடத்தையே ஏற்படுத்தியுள்ளார்கள். அப்பாடத்தின் கீழ், அப்துல்லாஹ் இப்னு மஸ்வூது (ரழி) அவர்கள் அறிவித்ததாக பின்வரும் செய்தி இடம் பெறுகிறது.

'நபி (ஸல்) அவர்கள் எங்களுக்கு உபதேசம் செய்வதற்காக ஒரு சில நாட்களை மட்டுமே ஏற்படுத்தியிருந்தார்கள். காரணம் நாங்கள் சடைவடைந்து விடக்கூடாது என்று அஞ்சியே அவ்வாறு செய்தார்கள்' என்ற செய்தி இடம்பெறுகிறது.

(புஹாரி ஹதீஸ் எண் :68)

சுருக்கமாக, அழகாக, தெளிவாக எண்ணிவிடும் அளவுக்கு குறைவான வார்த்தைகளை பயன்படுத்தி பேசக்கூடிய நபி (ஸல்) அவர்களே, தனது பேச்சுக்களின் மூலம் மக்களை சடைவடையச் செய்துவிடக்கூடாது என்பதில் மிகக் கவனமுடன் செயல்பட்டிருக்கிறார்கள் என்பதை மேற்கண்ட செய்திகள் நமக்குத் தெளிவாக உணர்த்துகின்றன.

ஆனால் இன்று உலகில் பெரும்பாலான பேச்சாளர்கள், உபதேசிப்பாளர்கள், கற்பிப்பாளர்கள் ஒலிபெருக்கி கிடைத்தால் போதும் மணிகணக்கில் பேசி கேட்பவர்களை ஒரு வழி பண்ணிவிடுகிறார்கள்.

இரண்டு மூன்று மணி நேரம் அவர்கள் பேசி முடித்த பிறகு, அந்தப் பேச்சின் பாராம்சம் என்னவென்று பார்வையாளர்களை கேட்டால் யாருக்குமே எதுவும் நினைவிலிருக்காது. பசியும், உடல்வலியும், அசதியும், சடைவும் தான் இறுதியில் மிச்சமாகும். பார்வையாளர்கள் சூசகமாக மணி பார்ப்பதை உணர்;ந்தால் கூட தாங்கள் கொண்டு வந்த குறிப்புக்கள் எல்லாம் தீரும் வரை இவர்கள் விடுவதாயில்லை.

நாகரீகம் மிகுந்த இக்காலத்தில் கூட பலரும் இவ்வாறு நடந்துக் கொள்கிறார்கள். ஆனால் ஆயிரத்து நானூறு ஆண்டுகளுக்கு முன்பே பார்வையாளர்களை தன் அழகிய வார்த்தைகளால் கட்டிப்போடும் ஆற்றல் நிரம்பப் பெற்றிருந்தும், மேடை நாகரீகத்தையும் தனிமனிதனின் நேரத்தை மதிக்கும் தன்மையையும், கற்பித்தல் முறையின் ஆரம்ப சூட்சுமத்தையும் தன் சொல்லாலும், செயலாலும் நமக்கு விளங்க வைத்த அண்ணலார் மிகச்சிறந்த ஆசிரியர்தானே!

இன்ஷா அல்லாஹ் தொடரும்..

ஆக்கம்: உம்மு நுமைரா

Add comment

காயல் நியுஸ், வாசகர்கள் கருத்துக்களை வரவேற்கிறது. வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் நியுஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்த விதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். முரண்பாடான மரியாதைக்குறைவான, கண்ணியமில்லாத கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கும் அவைகளை நீக்குவதற்கும் எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு. தங்களது பெயர் மற்றும் கருத்துக்களை தமிழில் தட்டச்சு செய்யலாம். உதாரணமாக "காயல்பட்டினம்" என்று தட்டச்சு செய்ய ஆங்கிலத்தில் "kaayalpattinam" என்று தட்டச்சு செய்து Space bar-ஐ அழுத்தினால் தங்கள் தட்டச்சு செய்த சொல் தமிழாக மாற்றப்படும். ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.


Security code
Refresh

 

சுடச்சுட காயல் செய்திகள்! சுவையான இஸ்லாமிய கட்டுரைகள் !!
தொடர்பு கொள்ள : admin@kayalnews.com
© Copyright : Kayalnews.com