بسم الله الرحمن الرحيم
Wednesday 21st February 2018 | 05 ஜமாதுல் ஆஹிர் 1439AH
பதாகை
news menu left
news menu right
  • Google Bookmarks
  • Twitter
  • Windows Live
  • Facebook
  • MySpace
  • deli.cio.us
  • Digg
  • Newsvine
  • reddit
  • StumbleUpon
  • Yahoo! Bookmarks
  • Yigg
பேராசிரியராக பெருமானார் (ஸல்) அவர்கள் (பாகம் - 4)அச்சிடுகமின்-அஞ்சல்
04 மே 2012 மாலை 02:56

கேட்பவர்களின் அறிவுக்கும் (Capasity) திறனுக்கும் ஏற்றவாறு பேச்சுக்களை அமைத்துக் கொள்ளுதல் :-

கேட்பவர்கள் பல்வேறுபட்ட நிலைகளில் இருக்கக் கூடும். எல்லோராலும், எல்லா உரைகளையும் எப்போதும் புரிந்து கொள்ள முடியும் என்று கூற இயலாது. அவரவர்களின் திறனுக்கும் அறிவுக்கும் ஏற்பவே அவர்களால் புரிந்துகொள்ள முடியும். நாம் எல்லாமே தெரிந்து வைத்துள்ளோம் என்பதற்காக நமது மேதாவித்தனத்தை கேட்பவர்கள் அனைவர் மீதும் திணித்து விட முடியாது.

பாத்திரம் எவ்வளவு கொள்ளுமோ அவ்வளவுதான் கொடுக்க முடியும். பாத்திரத்தின் அளவுக்கும் மிச்சமாக வழங்கினால் அது விடிலுக்கு இறைத்த நீராகத்தான் முடியும்.

எனவேதான் எந்தவொரு மனிதனும் தன் சக நண்பர்களுடன் உரையாடும் போது கூட அவர்களின் நிலைக்கும், புரிந்து கொள்ளும் திறனுக்கு ஏற்பவும் ஏரியோ அல்லது இறங்கியோ பேசத் தெரிந்திருக்க வேண்டும். இது ஆசிரியர்களுக்கும் சரி! பேச்சாளர்களுக்கும் சரி மிகவும் பொருந்தும்.

ஆசிரியர் தனது துறையில் டாக்டரேட் முடித்தவராகக் கூட இருக்கலாம். ஆனால் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு பாடம் சொல்லித் தரும்போது, அவர்களின் தரத்திற்கும், வயதிற்கும் ஏற்ப இறங்கி வந்துதான் அவர் பாடம் நடத்தியாக வேண்டும்.

மார்க்கத்தின் அடிப்படையும் தெரியாமல உலகக் கல்வியும் கிடைக்கப்பெறாமல் சமூகத்தின் அடித்தளத்தில் வாழும் மக்களிடம் போய் நமது மொழிப்புலமையையும், பேச்சாற்றாலையும் பறைசாற்றும் வண்ணம் உயர்ந்த நடைமொழியில் நம்மால் பேசவோ சொற்பொழிவாற்றவோ முடியுமா?

ஆக, ஒரு சொற்பொழிவாளராகட்டும் அல்லது ஆசிரியராகட்டும் அவர்கள் தங்களது திறமை மற்றும் அறிவை மட்டும் எடை போடாது. எதிலிருப்பவர்கள் திறன் (ஊயியஉவைல) அளவு என்ன என்பதைத்தான் கவனத்தில் கொள்ள வேண்டும்.

நபி (ஸல்) அவர்களின் நடைமுறையிலும் இதற்கான உதாரணங்களை நாம் காணமுடியும். இமாம் புஹாரி அவர்கள் தனது நூலிலே சில விஷயங்களை சிலருக்கு மட்டுமே கற்பித்து விட்டு சிலருக்கு அவர்கள் தவறாக புரிந்து கொண்டு விடுவார்கள் என்று கருதி கற்பிக்காமல் விட்டு விடுதல் என்ற ஒரு பாடத்தையே உருவாக்கி உள்ளார்கள். அதன்கீழ் இடம்பெற்றுள்ள ஹதீஸ் பின்வருமாறு.

நபி (ஸல்) அவர்கள் ஒருமுறை முஆது (ரழி) அவர்களை அழைத்து, 'யார் லாயிலாஹ இல்லல்லாஹ் முஹம்மதுர் ரசூலுல்லாஹ்' என்ற திருக்கலிமாவை உண்மையாக, உளப்பூர்வமாக கூறுகிறானோ அவன் நிச்சயம் சுவர்க்கம் செல்வான்' என்று கூறினார்கள்.

உடனே முஆது (ரழி) அவர்கள் (இந்த நல்ல செய்தியை) நான் அனைவர்க்கும் அறிவிக்கட்டுமா? என்று கேட்டபோது, நபி (ஸல்) அவர்கள் 'வேண்டாம்! இந்த செய்தியை செவியுற்றால் (சில பலகீனமான) மக்கள் இந்த ஹதீஸையே முழுக்க சார்ந்திருந்து விட்டு தங்கள் மார்க்கக் கடமைகளில் அசட்டையாக இருந்து விடுவார்கள் என்று கூறினார்கள் என்ற செய்தி இடம்பெற்றுள்ளது.

மேற்கண்ட செய்தி நமக்கு உணர்த்துவது என்ன? 'லாயிலாஹ இல்லல்லாஹ் முஹம்மதுர்  ரசூலுல்லாஹ்' என்ற திருக்கலிமாவை இதயசுத்தியுடன் மொழியும் அனைவருக்கும் சுவர்க்கம் உறுதி என்ற செய்தி உண்மையானது என்றாலும் கூட அனைத்துத் தரப்பு மக்களாலும் அதனை சரியான முறையில் புரிந்து கொள்ள முடியாது. சில பாமரமக்களோ அல்லது ஈமானில் சிறு பலகீனம் கொண்ட மக்களோ, மார்க்கத்தின் கடமைகளை விட்டும் அசட்டையாக இருந்து விடுவதற்கு இது காரணமாகி விடக்கூடும் என்பதால் அதனை தற்போது பொதுமக்களிடம் கூற வேண்டாம் என்று மசூது (ரழி) அவர்களை நபி (ஸல்) தடுத்தார்கள்.

அதே சமயத்தில் முஆது (ரழி) இந்த ஹதீஸின் செய்தியை சரியான முறையில் புரிந்து கொள்வார்கள் என்பதாலும் அவர்கள் மார்க்கக் கடமைகளில் இருந்து பின்வாங்குவதற்கு இந்த ஹதீஸின் செய்தி எந்த விதத்திலும் அவருக்கு தடையாக அமையாது என்ற நம்பிக்கை நபிகளாருக்கு முஆது (ரழி) அவர்கள் மீது இருந்த காரணத்தாலும் அவரிடம் இந்த நற்செய்தியை நபிகளார் கூறினார்கள்.

இன்றும் கூட நம்மில் பெரும்பாலோனர் உள்ளனர். மார்க்கத்தில் தங்களுக்கு இலகுவாக ஏதேனும் இருக்கும் பட்சத்தில் அதனை தங்களுக்கு சாதகமாக எவ்வாறு பயன்படுத்திக் கொள்ளலாம் என்பதிலே தான் அதிக கவனம் செலுத்துகிறார்கள்.

உதாரணத்திற்கு தூக்கம், மறதி இந்த இரண்டின் காரணமாக தொழுகை தவறிவிட்டால் அது குற்றமில்லை என்ற ஹதீஸை நம்மில் எத்தனைப்பேர் தமக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டு சுபுஹ் மற்றும் அஸர் தொழுகைகளில் அலட்சியமாக இருந்துக் கொண்டு நம்மை நாமே ஏமாற்றிக் கொள்கிறோம்.

து சம்பந்தமாக மற்றுமொரு செய்தியையும் பார்ப்போம்.

அப்துல்லாபின் அம்ருப்னுல் ஆஸ் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள். ஒருமுறை நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் இருந்த போது, ஒரு இளைஞர் வந்து நபிகளாரிடம், 'நான் நோன்பு வைத்திருக்கும் நிலையில் எனது மனைவியை முத்தமிடலாமா? என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் 'கூடாது' என்று அந்த இளைஞர்க்கு அனுமதி மறுத்து விட்டார்கள். பின்னர் ஒரு வயதானவர் வந்து நபிகளாரிடம் இதே கேள்வியை கேட்டபோது, அவருக்கு ஆம்! கூடும் என்று அனுமதித்தார்கள். நாங்கள் குழப்பத்துடன் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டோம். (எங்கள் குழப்பதைக் கண்ட நபி (ஸல்) அவர்கள்) எங்களிடம், அந்த வயதான மனிதரால் தன்னை (வரம்பு மீறாமல்) கட்டுப்படுத்திக் கொள்ள முடியும். (அதனால்தான் அவருக்கு அனுமதியளித்தேன்) என்று விளக்கம் அளித்தார்கள்.

(ஆதாரம் : அஹ்மது)

இந்த ஹதீஸ் நமக்கு உணர்த்தும் செய்தி என்ன? நோன்பாளியான நிலையில் மனைவியை முத்தமிடுவது கூடும் என்றாலும் கூட புதிதாக திருமணமான இளைஞர்க்கு நபி (ஸல்) அவர்கள் அனுமதி வழங்கவில்லை. யார் தன்னைத்தானே கட்டுப்படுத்திக் கொள்ளும் அளவுக்கு பக்குவம் பெற்றிருக்கிறாரோ அவருக்கு மட்டுமே அனுமதியளிக்கிறார்கள்.

ஆக, எல்லோருக்கும் எல்லா செய்திகளையும் எல்லா நேரத்திலும் கூறிவிட முடியாது. அவர்களின் கலை, வயது, தரம், முதிர்ச்சி புரிந்து கொள்ளும் திறன், பக்குவம், ஆகிய விஷயங்களை கவனத்தில் கொண்ட எடுத்துக் கூற முடியும். ஓவ்வொரு ஆசிரியரும் மாணவர்களின் திறனளவு அறிந்து செயல்பட வேண்டும் என்ற முறையை அன்றே கடைபிடித்து அண்ணல் நபிகள் (ஸல்) அவர்கள் மிகச்சிறந்த ஆசிரியராக இருந்திருக்கிறார்கள்.

ஆக்கம் : உம்மு நுமைரா

Add comment

காயல் நியுஸ், வாசகர்கள் கருத்துக்களை வரவேற்கிறது. வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் நியுஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்த விதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். முரண்பாடான மரியாதைக்குறைவான, கண்ணியமில்லாத கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கும் அவைகளை நீக்குவதற்கும் எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு. தங்களது பெயர் மற்றும் கருத்துக்களை தமிழில் தட்டச்சு செய்யலாம். உதாரணமாக "காயல்பட்டினம்" என்று தட்டச்சு செய்ய ஆங்கிலத்தில் "kaayalpattinam" என்று தட்டச்சு செய்து Space bar-ஐ அழுத்தினால் தங்கள் தட்டச்சு செய்த சொல் தமிழாக மாற்றப்படும். ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.


Security code
Refresh

 

செய்திகள்

வெளி மாநிலங்களில் இருந்து வியாபாரம் செய்ய வருபவர்கள்; வெளியூர்களில் இருந்து நகருக்கு புதிதாக குடிவருபவர்கள் ஆகியோர் மீதான கண்காணிப்பை அதிகப்படுத்தவும்: மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஆகியோரிடம் நடப்பது என்ன? குழுமம் கோரிக்கை
பிப். 08 இன்று மாதாந்திர பராமரிப்பு மின்தடை!
CCTV கேமராக்கள் நிறுவ அலட்சியம் காட்டும் காயல்பட்டினம் நகராட்சிக்கு கெடு விதிக்கவும்: மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஆகியோரிடம் நடப்பது என்ன? குழுமம் கோரிக்கை!*
கடையக்குடி, கற்புடையார்பள்ளி வட்டம் என்ற அதிகாரப்பூர்வ பெயர்களை பயன்படுத்துக_: மாவட்ட ஆட்சியர், மீன்வளத்துறை மற்றும் ஊடகத்துறையினரிடம் நடப்பது என்ன? குழுமம் வேண்டுகோள்!*
பேருந்து கட்டணங்கள்: மாற்றியமைக்கப்பட்ட கட்டணங்கள் திங்கட்கிழமை (இன்று) முதல் அமலுக்கு வருகிறது!

சுடச்சுட காயல் செய்திகள்! சுவையான இஸ்லாமிய கட்டுரைகள் !!
தொடர்பு கொள்ள : admin@kayalnews.com
© Copyright : Kayalnews.com