بسم الله الرحمن الرحيم
Monday 20th August 2018 | 08 துல்ஹஜ் 1439AH
பதாகை
news menu left
news menu right
  • Google Bookmarks
  • Twitter
  • Windows Live
  • Facebook
  • MySpace
  • deli.cio.us
  • Digg
  • Newsvine
  • reddit
  • StumbleUpon
  • Yahoo! Bookmarks
  • Yigg
பேராசிரியராக பெருமானார் (ஸல்) அவர்கள் (பாகம் - 5)அச்சிடுகமின்-அஞ்சல்
09 ஜூன் 2012 காலை 08:50

கற்பித்தலின் மூன்றாவது முறை:-

கேள்விகள் மற்றும் விவாதங்கள் (Debates) மூலமாக புரியவைத்தல்:-

ஒரு நல்ல ஆசிரியர் தான் நடத்தும் பாடல்களை முழுமையாக தனது மாணவர்களின் மனதில் பதிய வைப்பதற்கு பயன்படுத்த வேண்டிய அழகிய முறை இது.

பொதுவாகவே ஒரு பாடம் நடத்தும் போது அந்த பாடம் சம்பந்தமான செய்திகளை தகவல்களை வெறுமனே தெரிவிப்பதை விட அது சம்பந்தமான கேள்விகள் மற்றும் விவாதங்களை உருவாக்கி கலந்துரையாடி பாடம் நடத்தினால் மறக்க முடியாத அளவிற்கு நெஞ்சில் நீங்கா இடம்பெற்று விடும்.

கேள்விகளையும், விவாதங்களையும் எழுப்பி அந்த தகவல் தொடர்பான முழுமையான சிந்தனையை தூண்டி விடுவதே இம்முறையின் நோக்கமாகும். இந்த முறையினாலான கற்பித்தலை பெருமானார் (ஸல்) அவர்களும் பயன்படுத்தியிருப்பதை நாம் சில ஹதீஸ்களின் வாயிலாக காண்போம்.

நாம் அனைவரும் அறிந்த பிரபலமான ஒரு செய்தி தான். ஐவேளை தொழுகையின் முக்கியவத்துவத்தை உணர்த்துவதற்கான இந்த செய்தியை நபி (ஸல்) அவர்களிடம் இருந்து அபூஹீரைரா (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

'உங்களின் ஒருவரது வீட்டின் முன்பாக ஒரு ஆறு ஓடிக்கொண்டிருந்து அதிலே அவர் தினமும் ஐந்துவேளை குளித்தால் அவரது உடலில் ஏதேனும் அழுக்கு எஞ்சியிருக்கும் என்று நீங்கள் கருதுகிறீர்களா? என்று நபி (ஸல்) அவர்கள் (நபித் தோழர்களை நோக்கி) கூற நான் செவியுற்றேன். அதற்கு நபித்தோழர்கள் 'இல்லை' அல்லாஹ்வின் தூதர் அவர்களே! எந்த அழுக்கும் அவனது உடலில் எஞ்சியிருக்காது' என்று பதில் அளித்தார்கள்.

' அப்படியானால் இப்படித்தான் ஐவேளைத் தொழுகைகளும் உங்களிடம் எந்த பாவங்களும் எஞ்சியிருக்காமல் உடைத்தெறிந்து விடுகிறது' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

(ஆதாரம் : புஹாரி, முஸ்லிம்)

மேற்கண்ட ஹதீஸில் நபி (ஸல்) அவர்கள் கையாண்டிருக்கும் அணுகுமுறையை பாருங்கள். 'ஐவேளைத் தொழுகைகளும் உங்களது பாவங்களை முழுமையாக அழித்து விடுகிறது' என்று நேரடியாக ஒரு செய்தியை கூறும்போது ஏற்படும் தாக்கத்தை விட, 'வீட்டின் முன்னால் ஓடும் ஒரு ஆற்றை உதாரணமாகக் கூறி, கேள்வி கேட்டு, மக்களின் சிந்தனை சக்தியை தூண்டிவிட்டு பின்னர் செய்தியைக் கூறும் போது ஏற்படும் தாக்கம் ஆழமானது என்றுமே மறக்க முடியாத அளவிற்கு நினைவில் பதிந்துவிடும் என்பது திண்ணம். மற்றொரு செய்தியொன்றையும் உதாரணமாகக் காண்போம்.

அபூஹீரைரா (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள். நபி (ஸல்) அவர்கள் ஒருமுறை (நபித்தோழர்களை நோக்கி) முஃபிலிஸ் என்றால் யார்? என்று தெரியுமா? என்று கேட்டார்கள். நபித்தோழர்கள் எங்களில் யார் ஒரு திர்ணமும், பொருளும் இல்லாமல் இருக்கிறார்களோ அவரே முஃபிலிஸ் என்று பதிலளித்தார்கள்.

அதற்கு நபி (ஸல்) அவர்கள் (அப்படியல்ல) என்னுடைய சமுதாயத்தைப் பொறுத்தவரை முஃபிலிஸ் யார் தொயுமா?  ஒருவன் மறுமை நாளையில் (இறைவன் முன்னால்) நிறைய தொழுகைகள், நோன்புகள், ஜகாத் போன்ற நல்ல அமல்களுடன் வந்து நிற்பான். (ஆனால் அந்த அமல்கள் அவளுக்கு பலனளிக்காது). ஏனெனில் அவன் இன்னாரைத் திட்டினான். இன்னார் மீது அவதூறு கூறினான். இன்னாருடைய பொருளை அநியாயமாக சாப்பிட்டான். இவன் இன்னாரின் இரத்தத்தை ஓட்டினான். இன்னாரை அடித்தான் என்று அவன் மீது ஏகப்பட்ட புகார்கள் குவிந்த வண்ணம் இருக்கும். இதனால் அந்த மனிதன் செய்த நன்மைகள் அனைத்தும் அவனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பங்கு பிரித்து கொடுக்கப்படு விடும். அவன் மீது தீர்ப்புச் சொல்லி முடிக்கப்படும் முன்பே அவனுடைய நன்மைகள் அனைத்தும் தீர்ந்து விடுமானால் அவனால் பாதிக்கப்பட்டவர்களுடைய பாவக்கணக்குகளில் இருந்து இந்த மனிதனுடைய கணக்கில் சேர்க்கப்பட்டு பாவச் சுமைகள் மட்டுமே சுமந்தவனாக நரகத்தில் தூக்கி எறியப்படுவான். இவனே (உண்மையான) 'முஃபிலிஸ்' என்று நபி (ஸல்) அவர்கள் விளக்கினார்கள்.

(ஆதாரம்: முஸ்லிம்)

மேற்கண்ட செய்தியிலிருந்து விளங்கும் கற்பித்தல் அணுகுமுறை என்ன?

முஃபிலிஸ் என்ற வார்த்தைக்கு மொழியியல் ரீதியான அகராதி அர்த்தம் அவ்வுலகில் அனைத்துப் பொருட்களும் கஷ்டப்பட்டு ஒன்றுமில்லாமல் நிர்கதியாக நிற்பவன் (திவாலானவன்) என்பதுதான் என்றாலும் முஹம்மது (ஸல்) அவர்களின் 'உம்மதத்தைப் பொறுத்தவரை 'முஃப்லிஸ்' இப்படிப்பட்டவன் தான் என்று பெருமானார்(ஸல்) அவர்கள் வேறொரு விளக்கம் அளித்தார்கள்.

'முஃபிலிஸ் என்ற வார்த்தைக்கு மக்கள் மனதில் பதிந்திருக்கும் உலகியல் ரீதியான கண்ணோட்டத்தை மாற்றி மறுமை நோக்கிலான விளக்கத்தை மனதில் தெளிவாக பதிய வைக்க வேண்டும் என்பதே நபி (ஸல்) அவர்களின் நோக்கமாகும்.

மக்களிடம் இருந்து இந்த பதில்தான் வரும் என்று எதிர்பார்த்த நபி (ஸல்) அவர்கள் அந்தக் கேள்வியை கேட்கிறார்கள். காரணம் அவர்களது பதில் மறுக்கப்பட்டு அதற்கு வேறொரு விளக்கம் கொடுக்கப்படும் போதே அது மறக்க முடியாத அளவிற்கு மனதில் பதிந்து விடும். ஏனெனில் மனித இயல்பு அதுதான். ஒரு விஷயத்தை நேரடியாக கற்பதை விட தவறுகள் திருத்தப்பட்டு அதன் மூலம் கற்பது மனதை விட்டு என்றுமே அகலாது.

இந்த அணுகுமுறைதான் அண்ணல் பெருமானார் (ஸல்) அவர்களால் இந்த செய்தியில் கையாளப்பட்டுள்ளது. இந்த அணுகுமுறையானது ஆசிரியர்களால் மட்டுமே அணுகப்பட வேண்டிய முறையல்ல. பெற்றோர்களுக்கு மிகவும் பயனுள்ள அணுகுமுறை. தங்கள் குழந்தைகளுக்கு சில விஷயங்களை புரிய வைப்பதற்காக தாங்களே கேள்விகள் பல கேட்டு அவர்களின் பதிலை பெற்று தவறுகளை சரியான முறையில் திருத்திக்கொடுத்து விஷயங்களை அவர்களின் மனதில் பசுமரத்தாணி போல பதியச் செய்யலாம்.

வளரும்.. இன்ஷா அல்லாஹ்..

ஆக்கம் : உம்மு நுமைரா

Add comment

காயல் நியுஸ், வாசகர்கள் கருத்துக்களை வரவேற்கிறது. வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் நியுஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்த விதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். முரண்பாடான மரியாதைக்குறைவான, கண்ணியமில்லாத கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கும் அவைகளை நீக்குவதற்கும் எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு. தங்களது பெயர் மற்றும் கருத்துக்களை தமிழில் தட்டச்சு செய்யலாம். உதாரணமாக "காயல்பட்டினம்" என்று தட்டச்சு செய்ய ஆங்கிலத்தில் "kaayalpattinam" என்று தட்டச்சு செய்து Space bar-ஐ அழுத்தினால் தங்கள் தட்டச்சு செய்த சொல் தமிழாக மாற்றப்படும். ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.


Security code
Refresh

 

செய்திகள்

அரசு மருத்துவமனை வளாகத்தில் ‘இயற்கையைத் தேடி’ மூலிகைத் திருவிழா! 3 நாட்கள் நடைபெற்ற விழாவில் மாணவ-மாணவியர் உட்பட திரளானோர் பங்கேற்பு!!
அபூதபீ கா.ந.மன்றம் ஆக. 19இல் நடத்தும் முதலுதவி விழிப்புணர்வு & பயிற்சி முகாமில் பங்கேற்க இணையதளம் வழியே பெயர் பதிவு செய்யலாம்!
ஆக. 19 அன்று அபூதபீ கா.ந.மன்றம் & ஷிஃபா நடத்தும் முதலுதவி விழிப்புணர்வு & பயிற்சி முகாமில் பங்கேற்க ஆன்லைனில் பெயர் பதிவு செய்ய வசதி!
ஆக. 19 அன்று, காயல்பட்டினம் நகர மக்களுக்கு மருத்துவ சேவையாற்றிய மருத்துவர்களுக்கு “நடப்பது என்ன?” குழுமம் சார்பில் பாராட்டு விழாவில் கவுரவிக்கப்படும் மருத்துவர்கள் விபரம்!
அமெரிக்காவில் மீண்டும் ஒரு காயல் மாணவி ‘ஹாஃபிழத்துல் குர்ஆன்’

சுடச்சுட காயல் செய்திகள்! சுவையான இஸ்லாமிய கட்டுரைகள் !!
தொடர்பு கொள்ள : admin@kayalnews.com
© Copyright : Kayalnews.com