بسم الله الرحمن الرحيم
Tuesday 21st May 2019 | 16 ரமலான் 1440AH
பதாகை
news menu left
news menu right
 • Google Bookmarks
 • Twitter
 • Windows Live
 • Facebook
 • MySpace
 • deli.cio.us
 • Digg
 • Newsvine
 • reddit
 • StumbleUpon
 • Yahoo! Bookmarks
 • Yigg
பேராசிரியராக பெருமானார் (ஸல்) அவர்கள் (பாகம் - 6)அச்சிடுகமின்-அஞ்சல்
04 ஜூலை 2012 காலை 09:17

நான்காவது முறை:-

உதாரணங்களைப் பயன்படுத்தி விளக்குதல்:-

விளங்குவதற்கும், புரிவதற்கும் கடினமான சில விஷயங்கள் கூட நடைமுறையில் காணப்படக் கூடிய எளிய உதாரணங்களைக் கொண்டு விளக்கப்படும்போது சுலபமாக புரிந்து கொள்ளப்படும். பின்னர் அந்த செய்திகளை மனதில் முழுமையாக இழுத்திக்கொள்வதற்கு அது சம்பந்தப்பட்ட உதாரணங்களை நினைவில் வைத்துக் கொள்வதே போதுமானதாக இருக்கும்.

உதாரணத்திற்கு ஒன்றை எடுத்துக்கொள்வோம். கணிதத்தில் 'அல்ஜீப்ரா' (Algebra) என்ற பாடம் உண்டு. இப்பாடத்தில் 10 + (Plus) மற்றும்  - (minus)  குறியீடுகள் கொண்ட கணக்குகள் ஆரம்பத்தில் குழப்பும் விதத்திலேதான் இருக்கும். நான் எட்டாம் வகுப்பு பயிலும் போது என்னுடைய கணித ஆசிரியை 10+ (Plus) குறியீடு கொண்ட எண்களை நம்மிடம் இருக்கும் இருப்புத் தொகை (Balance for hand) என்றும் (-) குறியீடு கொண்ட எண்களை நாம் (பிறருக்கு) கொடுக்க வேண்டிய பற்று (கடன்) என்றும் உதாரணமாக மனதில் பதிய வைத்து பாடம் நடத்தியதை இன்றும் மறக்க முடியாது. அதுவரை குழப்பிக் கொண்டிருந்த அந்த பாடம் அந்த உதாரணத்திற்கு பிறகு சுலபமாக புரியும் வகையில் அமைந்தது.

திருக்குர்ஆன் நெடுகிலும் கூட அல்லாஹ் தஆலா பல விஷயங்களை உதாரணங்கள் மூலமாக புரிய வைத்துள்ளதை நாம் காண முடிகிறது. ஓவ்வொரு விஷயத்திற்கும் சிறு சிறு உதாரணங்களை கூறி விளக்கும் ஆசிரியர்களே மாணவர்களால் மிகவும் விரும்பப்படும் சிறந்த ஆசிரியர்களாக அமைவர். அவர்களது வகுப்பறைகளும் எப்போதுமே உயிரோட்டமுள்ளதாக காணப்படும்.

பெருமானார் (ஸல்) அவர்களின் அணுகுமுறையில் உதாரணங்களுமன் விளக்கப்பட்ட செய்திகளை ஏராளமாக நாம் காணமுடிகிறது. அவைகளில் ஓராண்டை நாம் இப்போது காண்போம்.

ஒருமுறை நபி (ஸல்) அவர்களிடம் 'ஜீலைஹனா' கோத்திரத்தைச் சார்ந்த ஒரு பெண்மணி வந்து என்னுடைய தாயார் 'ஹஜ்' செய்வதாக நேர்ச்சை செய்திருந்தார். ஆனால் அதனை நிறைவேற்றும் முன்பே மரணம் அடைந்து விட்டார். அவருக்காக அதனை நான் நிறைவேற்றுவது என் மீது கடமையா? என்று வினவினார்கள். நபி (ஸல்) அவர்கள் ஆம்! உங்கள் மீது அது கடமையே!' உங்கள் தாயாருக்கு (அவரது மரணத்திற்கு முன்பு) கடன்பாக்கி ஏதேனும் இருந்தால் அதனை நிறைவேற்றுவது உங்கள் மீது கடமையல்லவா அதுபோலத்தான் இதுவும் அல்லாஹ்வுக்கு அவர்கள் நிறைவேற்ற வேண்டிய கடனாகும். (கடன்கள் நிறைவேற்றப்படுவதற்கு) மற்ற எவரையும் விட அல்லாஹ் மிகத் தகுதியானவன் என்று பதிலளித்தார்கள். இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் அறிவிக்கும் இந்த செய்தி புஹாரி, முஸ்லிம் போன்ற கிரந்தங்களில் இடம்பெறுகிறது.

மேற்கண்ட செய்தியில் நபி (ஸல்) அவர்கள் எந்தப் பெண்மணியிடம் ஆம்! உங்கள் தாய்க்காக ஹஜ்ஜை நீங்கள் நிறைவேற்றுவது உங்கள் மீது கடமை என்று மட்டும் பதிலளித்திருந்தாயே அந்தப் பெண்ணுக்கான பதில் கிடைத்திருக்கும் என்றாலும் அந்தக் கடமையின் முக்கியத்துவத்தை உணர வைப்பதற்காக மற்ற கடன்களை நிறைவேற்றுவது எப்படி முக்கியமோ அதுபோல இறைவனுக்கான கடனையும் நிறைவேற்றுவது அவசியம் என்று மேலதிகமாக ஒரு உதாரணத்தைக் கூறி விளங்க வைக்கிறார்கள். இனி எக்காலத்தும் இந்த செய்தியை யாருமே மறக்க முடியாத அளவுக்கான மிகச்சிறந்த விளக்கமாக இது அமைந்து உள்ளது.

அதுபோல நபி (ஸல்) அவர்கள் எப்போதும் அதிகமாக ஹது மலையை உதாரணமகாக் கூறக் கூடியவர்களாக இருந்துள்ளார்கள் என்பதை நாம் பல செய்திகள் மூலமாகக்; காண்கிறோம் என்று மக்களது கண் முன்னால் ஓங்கி உயர்ந்து நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். உங்களில் ஒருவர் ஒரு சிறிய பேரீத்தம் பழத்தையோ (அல்லது) சதக்காலாக ஒருவருக்கு வழங்கும் போது அல்லாஹ் அந்த தர்மத்தை ஒட்டகக் குட்டியை வளர்ப்பது போன்று மலையளவு வளரச் செய்வான்.

(ஆதாரம் : இப்னு ஹிப்பான்)

மற்றொரு செய்தி :

நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூஸயீதுல் குத்ரீ (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

குர்ஆனின் சிறப்பு:

குர்ஆனை புரிந்துகொள்ளுதல் சம்பந்தமாகநபி (ஸல்) அவர்கள் கூறிய ஒரு செய்தியை இப்போது பார்ப்போம்.

குர்ஆனை ஒதுகின்ற ஒரு முஃமீனின் உதாரணம் நார்த்தங்காய் பழத்தைப் போன்றதாகும். அது மணமும் உடையது. அதன் சுவையும் நல்லது. குர்ஆனை ஓதாத ஒரு முஃமீனின் உதாரணம் பேரீத்தம் பழத்தைப் போன்றதாகும். அதற்கு நறுமணம் கிடையாது. ஆனால் அதன் சுவை இனிப்பானதாகும். குர்ஆனை ஓதுகின்ற நயவஞ்சகனின் உதாரணம் ஒரு பூவைப் போன்றதாகும். அதற்கு நறுமணம் உண்டு. ஆனால் அதன் சுவை கசப்பானது. குர்ஆனை ஓதாத நயவஞ்சகனின் உதாரணம் குமட்டிக்காய் போன்றதாகும். அதற்கு நறுமணமும் கிடையாது. அதன் சுவையும் கசப்பானது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூமூஸா அல்-அஷ்கர்

(ஆதாரம் : புஹாரி மற்றும் முஸ்லிம்)

சகோதரத்துவம்:-

இதுபோல சகோதரத்துவம் பற்றி நபி (ஸல்) அவர்கள் கூறிய மற்றொரு செய்தியைக் காண்போம்.

நுஃமான் பின் பஷீர் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள். ஒருவருக்கொருவர் நேசிப்பதிலும், ஒருவருக்கொருவர் அக்கறைக் கொள்வதிலும், ஒருவருக்கொருவர் இரக்கம் கொள்வதிலும் முஃமீன்களுக்கிடையான உதாரணமாவது ஒர் உடம்பை; போன்றதாகும். உடம்பில் ஏதேனும் ஒரு உறுப்பு நோய் வாய்பட்டிருந்தாலும் கூட மொத்த உடம்புமே காய்ச்சலாலும், தூக்கமின்மையாலும் அவதிப்படுகிறது.

(ஆதாரம் : புஹாரி முஸ்லிம்)

முஃமீன்களுக்கிடையே காணப்பட வேண்டிய பிணைப்பையும் நேசத்தையும் இதைவிட அழகான உதாரணம் மூலம் யாரேனும் விளக்கியிருக்க முடியுமா? மற்றுமொரு செய்தியைக் காண்போம்.

ஒரு முஃமீனுக்கும் மற்றொரு முஃமீனுக்குமான உறவுப்பிணைப்பு ஒன்றையொன்று சார்ந்து பிணைந்திருக்கக் கூடிய (உறுதியான) கட்டிடத்தைப் போன்றதாகும். அதிலிருந்து ஒரு செங்கல்லை உருவினால் கூட ஒட்டுமொத்த கட்டிடமும் ஆட்டம் கண்டுவிடும் என்று நபி (ஸல்) அபூ மூஸா (ரழி) அவர்கள் அறிவிக்கும் ஹதீஸ் புகாரி மற்றும் முஸ்லிமின் இடம் பெற்றுள்ளது.

இப்படி பெருமானார் (ஸல்) அவர்களின் ஹதீஸ்கள் நெடுகிலும் உதாரணங்களுடன் விளக்கப்பட்ட செய்திகளை ஏராளமாக நாம் காணலாம். விரிவஞ்சியே இங்கு நாம் ஓராண்டை மட்டும் குறிப்பிட்டுள்ளோம்.

ஆக்கம் : உம்மு நுமைரா

Add comment

காயல் நியுஸ், வாசகர்கள் கருத்துக்களை வரவேற்கிறது. வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் நியுஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்த விதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். முரண்பாடான மரியாதைக்குறைவான, கண்ணியமில்லாத கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கும் அவைகளை நீக்குவதற்கும் எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு. தங்களது பெயர் மற்றும் கருத்துக்களை தமிழில் தட்டச்சு செய்யலாம். உதாரணமாக "காயல்பட்டினம்" என்று தட்டச்சு செய்ய ஆங்கிலத்தில் "kaayalpattinam" என்று தட்டச்சு செய்து Space bar-ஐ அழுத்தினால் தங்கள் தட்டச்சு செய்த சொல் தமிழாக மாற்றப்படும். ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.


Security code
Refresh

 

சுடச்சுட காயல் செய்திகள்! சுவையான இஸ்லாமிய கட்டுரைகள் !!
தொடர்பு கொள்ள : admin@kayalnews.com
© Copyright : Kayalnews.com