தொழில் நுட்ப சாதனை? இளைஞர்களுக்கு சோதனை! கட்டுரையாளரின் முன்னுரை!!அச்சிடுக
23 நவம்பர் 2011 காலை 12:21

மதிப்போடும்,மரியாதையோடும் மனிதனை வாழ வைத்த அல்லாஹ்வுக்கே  மாபெரும் புகழ் அனைத்தும். மனிதருக்குள் மறைந்திருந்த மிருகத்தைப் பிரித்தெடுத்து மனதில் வரும் நோய்களுக்கு மருந்தளிக்கும் சாந்தி மார்க்கம் இஸ்லாத்தின் ஊடாகவும், இளைஞர்களின் நிதர்சன வாழ்க்கையில் ஏற்படும் நேர்மறை மற்றும் எதிர்மறை சிந்தனைகளை மனதிற்கொண்டு "தொழில்நுட்ப சாதனை.. இளைஞர்களுக்கு சோதனை " என்கின்ற கட்டுரையை நுகரும் முன் உங்களோடு சில வார்த்தைகள்......

 நபிகளாரின் பொன்மொழிகளின் அடிப்படையில் என்னைப் போன்ற இளைய சமுதாயத்துக்காக நான் அறிந்த விதத்தில் நபிகளாரின் பொன்மொழிக்கு இணங்க (" உங்களில் சிறந்தவர் தான் கற்ற கல்வியை பிறருக்கு கற்றுக் கொடுப்பவரே ஆவார்.") இந்த கட்டுரையை எழுதுகின்றேன்.

baby_lap_copy

நான் படித்த ,கேட்ட,அறிந்த இன்னும் பார்க்கின்றவைகளை எழுதவேண்டும் என்று எனக்கு ஒரு ஆசை வெகு காலமாக இருந்து வந்தது. மேலும் அதற்குரிய உந்துதல் காலம்,நேரம் கிட்டாதிருந்தது.அப்படியிருக்க நான் ஹஜ்ஜுப் பெருநாளை முன்னிட்டு நமதூருக்கு சென்ற போது காயல்நியூஸ் குழுமத்தினர் தம்பி.. நீ சும்மா கமெண்ட்ஸ் மட்டும் தட்டினால் போதாது.. ஏதேனும் ஆக்கப்பூர்வமான இஸ்லாமிய கட்டுரையை எழுது.. என்று அவர்கள் அன்போடு கூறிய மாத்திரத்தில் சிறிது தயக்கம் இருந்தாலும் அவர்களின் மேலான ஊக்கம் என்னுடைய மனதில் உன்னாலும் முடியும் என்று தைரியத்தை தந்தது அல்ஹம்துலில்லாஹ்.

இந்த நவீன விஞ்ஞான யுக்தி மனிதன் பல்வேறு வகையான தொழில்நுட்ப சாதனங்களை மிகவும் நுட்பமாகவே கண்டுப்பிடித்து சாதனைகளை படைத்துக்கொண்டே இருக்கின்றான். (உதாரணம் ) விண்வெளிக்கு சென்று அங்கு வாழ தேவையான அடிப்படை வசதிகளை செய்து இன்னும் குறுகிய காலத்தில் குடியேற காத்துக்கொண்டு இருக்கின்றான். இவ்வாறு தொழில்நுட்ப சாதனை வளர்ந்துக்கொண்டே இருக்க, அந்த சாதனை எனும் சோதனையில் மனிதன் தன்னுடைய மனிதத்தன்மையை இழந்து தட்டித் தடுமாறிக் கொண்டு அதிலிருந்து மீள முடியாமல் அவதிப்பட்டுக்கொண்டும் இருக்கின்றான் என்றால் அது மிகையாகாது! இத்தகைய சோதனையில் அதிகமாக மூழ்கி தத்தளித்துக் கொண்டு இருப்பது என்னவோ இளைய சமுதாயமே!

computer_lab_sm_copy

இப்படி தத்தளித்துக் கொண்டு இருக்கும் இளைய சமுதாயத்தை  கைத்தூக்கி விடுவது யார் பொறுப்பு? எந்த இளைஞனும்,இளைஞியும் வேண்டுமென்றே கெட்டுப்போக நினைப்பதில்லை. இளைய சமுதாயத்தின் கவனத்தை திசை திருப்புவது, தொழில் நுட்பம் தான். அத்தகைய தொழில் நுட்பம், அதன் மூலம் ஏற்படும் நவநாகரீக கலாச்சார சீர்கேடு அந்த சோதனையிலிருந்து நாம் எவ்வாறு சாதனை படைக்க வேண்டும் என்பன  பற்றியவைகளை நான் அறிந்த விதத்தில் எழுதுகின்றேன்.இன்ஷா அல்லாஹ் ..

lap_copy

என்னை படைத்த இறைவனுக்கும்,பெற்றெடுத்த பெற்றோருக்கும்,உருவாக்கிய ஜாவியா அரபிக்கல்லூரி,கீழக்கரை புஹாரி ஆலிம் அரபிக்கல்லூரி அகியவற்றின் ஆசிரியர்களுக்கும்,என்னை எழுத தூண்டி அதை பிரசுரிக்க தயாராக இருக்கும் காயல்நியூஸ் குழுமத்திற்கும்  என் மனமார்ந்த நன்றியை உரித்தாக்குகின்றேன்.ஜஸாக்கல்லாஹு ஹைர்.

குறைகள் ஏதேனும் எதிர்படின் அடியேனிடம் சுட்டிக் காட்டுங்கள் அதை திருத்திக் கொள்கின்றேன்.ஆலோசனைகளையும் விருப்பமுடன் வரவேற்கின்றேன்; ஏனெனில் அவற்றிற்கான முழு பொறுப்பும் என்னையே சாரும்.

நிறைகள் ஏதேனும் எதிர்படின் அடியேனுக்காக இறைவனிடம் துஆ செய்யுங்கள் புகழ் அனைத்தும் வல்ல இறைவன் அல்லாஹ் அவன் ஒருவனுக்கே சொந்தம்.

யா அல்லாஹ்! நீயே அனைத்தையும் அறிந்தவன் இந்த அடியானின் சிறிய ஊடக விழிப்புணர்வு பணியை ஏற்றுக் கொள்வாயாக,ஆமீன்!

கட்டுரையாளர்

அல் ஹாஃபிழ்  A.W.முஹம்மது அப்துல் காதிர்,

ஆலிம் புஹாரி, BBA

மும்பை.

Add comment

காயல் நியுஸ், வாசகர்கள் கருத்துக்களை வரவேற்கிறது. வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் நியுஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்த விதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். முரண்பாடான மரியாதைக்குறைவான, கண்ணியமில்லாத கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கும் அவைகளை நீக்குவதற்கும் எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு. தங்களது பெயர் மற்றும் கருத்துக்களை தமிழில் தட்டச்சு செய்யலாம். உதாரணமாக "காயல்பட்டினம்" என்று தட்டச்சு செய்ய ஆங்கிலத்தில் "kaayalpattinam" என்று தட்டச்சு செய்து Space bar-ஐ அழுத்தினால் தங்கள் தட்டச்சு செய்த சொல் தமிழாக மாற்றப்படும். ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.


Security code
Refresh