بسم الله الرحمن الرحيم
Wednesday 24th October 2018 | 13 ஸஃபர் 1440AH
பதாகை
news menu left
news menu right

பதாகை

பதாகை

  • Google Bookmarks
  • Twitter
  • Windows Live
  • Facebook
  • MySpace
  • deli.cio.us
  • Digg
  • Newsvine
  • reddit
  • StumbleUpon
  • Yahoo! Bookmarks
  • Yigg
தொழில்நுட்ப சாதனை இளைஞர்களுக்கு சோதனை!! (பாகம்-1)அச்சிடுகமின்-அஞ்சல்
30 நவம்பர் 2011 மாலை 12:39

மிக உயர்ந்த உமது இறைவனின் பெயரைத் துதிப்பீராக!

அவனே படைத்தான்,ஒழுங்குற அமைத்தான்.

அவனே நிர்ணயித்தான்.வழி காட்டினான்.(அல்குர் ஆன் 87:1,2,3)

இந்த மூன்று வசனங்களில் படைப்பினங்களைப் பற்றிய ஒரு நியதியை வல்ல அல்லாஹ் குறிப்பிடுகின்றான்.அனைத்துப் பொருட்களையும் படைத்தான்,பின்னர் அவற்றை ஒழுங்குப்படுத்தினான்,அவற்றின் நுட்பத்தை முழுமைப்படுத்தினான்.அதற்கு பொருத்தமான,நிறைவான எல்லையை அவை அடையும்படிச் செய்தான்.

ஒவ்வொரு படைப்புக்கும் அதனதன் வழியையும் அவற்றின் இலக்கையும் நிர்ணயித்தான்.பின்னர் அவற்றை எந்த நோக்கத்திற்காக படைத்தானோ அந்த நோக்கத்தின் குறிக்கோளையும்,அவை அடைவதற்கான வழியையும் அவற்றிற்கு காட்டினான்.அவை இப்புவியில் வாழும் காலம் வரை அவற்றிற்கு தேவையான அனைத்தையும் நிர்ணயம் செய்து அவற்றை அவன் அடையும் வழியையும் காட்டியுள்ளான்.

இந்த நியதி இப்பிரபஞ்சத்தின் எல்லாப் பொருட்களிலும் காணப்படுகின்றது.அவை எவ்வளவு பெரிய பொருளாயினும் சரி! மிகச் சிறிய ஒன்றாயினும் சரி! அற்பமான பொருளாயினும் சரி! பிரமாண்டமான பொருளாயினும் சரி! இப்பேரண்டத்தின் ஒவ்வொரு பொருளுமே மிகுந்த நுட்பத்துடன் சீராக அமைக்கப்பட்டு முழுமையாக வடிவமைக்கப்பட்டுள்ளன.

space

தொழில்நுட்பம் என்பது கருவிகள்,கைவினைகள் முதலியவற்றை பயன்பாட்டுடனும்,அவை எவ்வாறு அவற்றை பயன்படுத்துவோர் தமது சூழலைக் கட்டுப்படுத்தவும்,அதனோடு இயைந்து வாழவும் கூடிய தகுதியில்,தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என்பதுடன் தொடர்புள்ள ஒரு பரந்த கருத்துரு ஆகும்.எனினும் ஒரு இறுக்கமான வரைவிலக்கணம் இதற்குக் கொடுக்க முடியாது என்று விக்கிபீடியா இதற்கு விளக்கம் தருகின்றது.

மனித இனத்தின் தொழில்நுட்பப் பயன்பாடு இயற்கை வளங்களை எளிமையான கருவிகளைச் செய்வதற்குப் பயன்படுத்தியதுடன் தொடங்குகிறது.

technology

ஆதி மனிதன் ஹழ்ரத் ஆதம் (அலை) அவர்கள் முதல் இந்தக்கணம் பிறக்கும் குழந்தை வரை சந்தித்திருக்கும் அனுபவங்களிலிருந்து சேகரித்திருக்கும் அறிவை பயன்படுத்தி தமது தேவைக்கேற்ப ஒரு குறிப்பிட்ட செயலை மாற்றிச் செய்வதும் அல்லது குறிப்பிட்ட சூழலை மாறுபட்டு எதிர்க்கொள்ளும் திறனை வளர்த்துக்கொள்வதும் தொழில்நுட்பத்தின் ஆரம்ப நிலை ஆகும்.

ஆதி மனிதன் பழங்கள் போன்ற தாவரங்களை பறித்தும்,முயல்,மான் போன்ற மிருகங்களை வேட்டையாடியும் உண்டு வந்தான் என்று வரலாறு கூறுகின்றது.மேலும் எப்பொழுது அவன் தான் வேட்டையாடிய மிருகத்தின் மாமிசத்தை வெட்டி எடுக்க கூறிய கற்களை பயன்படுத்த துவங்கினானோ,அப்பொழுதே மனித வாழ்வில் தொழில்நுட்பம் பிரவேசித்துவிட்டது என்று கூறினால் அது மிகையாகாது!. மேலும் இயந்திரம் மட்டும் மனிதனின் தொழில்நுட்பத்தின் பிரதிபலிப்பு அல்ல.சக்கரத்தைக் கண்டுபிடிப்பதற்கு முன்னரே தொழில்நுட்பம் துவங்கி விட்டது என்று சொல்வதே சரியாகும்.

இந்த நிலை படிப்படியாக வளர்ந்து,மூங்கில் கம்பைச் சீவி வேட்டைக்குப் பயன்படுத்துதல்,பயிரிடுதல்,பசு எருமை போன்ற கால்நடைகளை பராமரித்தல் மற்றும் மரத்திற்கு அடியில்,குகை போன்றவற்றில் வாழ்வைத் துறந்து வீடு கட்டி வாழ்வது என்று மனிதனுடைய தொழில்நுட்பம் பல பரிணாமத்தில் வளர்ந்துக்கொண்டே வந்தது. மேலும் வளர்ந்துக்கொண்டே வருகின்றது கியாமத் நாள் (உலகம் அழியும் நாள்) வரை வளர்ந்துக்கொண்டே இருக்கும்.

Cave-Homes-Interiors-500x391

தமிழில் ஒரு பழ மொழி " கோழியா - முட்டையா எது முதலில் வந்தது? " என்று அப்படிப்பட்ட பழமொழியைப் போல மனிதனால் தொழில்நுட்பம் வளர்ந்ததா?அல்லது தொழில்நுட்பத்தால் மனிதனின் வாழ்வில் மாற்றம் வந்ததா? என்பதை திட்டவட்டமாக சொல்லமுடியாது.

எப்படி ஒரு நபரை பார்த்து இவர் நல்லவர் அவர் கெட்டவர் என்று சொல்ல முடியாதோ,அதே மாதிரி தான் எந்தவிதமான தொழில்நுட்பத்தையும் இது நல்லது அது கெட்டது என்று வரையறுக்கமுடியாது. தொழில்நுட்பம் என்றும் தவறாகாது நாம் அதைத் தவறாகப் பயன்படுத்தாமல் இருக்கும் காலம் வரை!!!

நமது வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் தொழில்நுட்பத்தின் பங்கு உள்ளது என்பதை மறுக்க முடியாத உண்மை. ஆனால் தொழில்நுட்பம் மட்டுமே நாம் வாழும் முறையை நிர்ணயித்தால் நாம் எங்கோ சிந்திக்க தவறிவிட்டோம்.என்பதை மனதில் கொள்ளவேண்டும்.

உ.தா;- காலையில் நம்மை தொழுகைக்காக எழுப்பும் அலாரம் முதல் புத்துணர்ச்சி தரும் தேனீர்,காலை சிற்றூண்டி பின்னர் பள்ளிக்கூடம்,அலுவலகம் போன்றவற்றிக்கு நாம் செல்ல பயன்படுத்தும் பேருந்து முதல் 2 அல்லது 4 சக்கர வாகனம் தொட்டு உங்களின் துறை சார்ந்த கருவிகள் இப்படி பல வகையில் தொழில்நுட்பத்தை நாம் தினம்தினம் சந்திக்கிறோம்.அவற்றின் தேவையை நம்மால் மறுக்கவே முடியாது.அதாவது இன்றைய சூழலில் தொழில்நுட்பத்துடன் முழுமையாக தொடர்பற்று இருப்பது என்னவோ இயலாத செயலாக இருக்கலாம்.அதற்காக வேண்டி தொழில்நுட்பத்திற்கு நாம் அடிமையாக கூடாது அது தான் நமக்கு அடிமையாக இருக்க வேண்டும்.

இதனையே வல்ல அல்லாஹ் அவனது திருமறையில் இவ்வாறு குறிப்பிடுகின்றான்.

'அவனே வானங்களிலுள்ளவை, பூமியிலுள்ளவை அனைத்தையும் தன் அருளால் உங்களுக்கு வசப்படுத்திக் கொடுத்திருக்கிறான். அதில் சிந்திக்கும் சமூகத்தாருக்கு நிச்சயமாகப் பல அத்தாட்சிகள் உள்ளன. (ஸூறா ஜாதியா : 13).

மனிதனுக்காக நாம் அனைத்தையும் வசப்படுத்திக்கொடுத்தோம் என்று குறிப்பிடும் அல்லாஹ் தஆலா இறுதியாக சிந்திக்கும் படி சொல்கின்றான்.எப்படியெனில் நமக்காக அவன் வசப்படுத்திக் கொடுத்ததை பற்றி நாம் சிந்திக்காத காரணத்தால் அவை நம்மை வசப்படுத்திக் கொண்டு நரகத்தின் வாயிலை நோக்கி இழுத்துச் செல்கின்றது. அதிலிருந்து நம்மை அல்லாஹ் காப்பாற்றுவானாக ஆமீன்!.

நம் வாழ்வையும்,நாம் வாழும் முறையையும் மேம்படுத்தும் கருவிதான் தொழில்நுட்பமே தவிர நாம் எப்படி வாழ வேண்டும் என்பதை நிர்ணயிப்பது நாம் தான்.

agi-technology-basic


கீழே கிடக்கும் கல்லின மேல் நாமே மோதிவிட்டு " கல் அடித்து விட்டது கல் அடித்து விட்டது " என்று கல் மேல் பழி சுமத்தாமல் நாம் தான் கவனக் குறைவாக இருந்துவிட்டோம். என்று நம் செயலுக்கு நாமே பொறுப்பேற்றுக் கொள்ளவேண்டும்.இந்த மனப் பக்குவம் நமக்குள் வந்துவிட்டாலே போதும் எத்தகைய தொழில்நுட்ப முன்னேற்றம் வந்தாலும்,நமது தனித்தன்மையை இழக்காமல் சுமூகமாக வாழலாம்.

வளரும்..இன்ஷா அல்லாஹ்..

ஆக்கம் :ஹாஃபிழ் A.W. முஹம்மது அப்துல் காதிர்,

ஆலிம் புஹாரி, BBA

மும்பை.



Add comment

காயல் நியுஸ், வாசகர்கள் கருத்துக்களை வரவேற்கிறது. வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் நியுஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்த விதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். முரண்பாடான மரியாதைக்குறைவான, கண்ணியமில்லாத கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கும் அவைகளை நீக்குவதற்கும் எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு. தங்களது பெயர் மற்றும் கருத்துக்களை தமிழில் தட்டச்சு செய்யலாம். உதாரணமாக "காயல்பட்டினம்" என்று தட்டச்சு செய்ய ஆங்கிலத்தில் "kaayalpattinam" என்று தட்டச்சு செய்து Space bar-ஐ அழுத்தினால் தங்கள் தட்டச்சு செய்த சொல் தமிழாக மாற்றப்படும். ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.


Security code
Refresh

 

செய்திகள்

வாவு வஜீஹா வனிதையர் கல்லூரியில் மாநில அளவிலான திறன்மிகு கருத்தரங்கம்!
காயல்பட்டினத்தில் இருந்து இ சேவை மாற்றல் விஷயம்! மாவட்ட ஆட்சியரின் கவனத்திற்கு திங்களன்று கொண்டு செல்வதாக துணை தாசில்தார் உறுதி!!
இ சேவை மையம்: காயலபட்டினத்தில் இருந்து மாற்றப்படக்கூடாது என கோரி மாவட்ட ஆட்சியருக்கு பொது மக்கள் - ஈமெயில், FAX குறுஞ்செய்தி மற்றும் WHATSAPP செய்தி அனுப்ப வேண்டுகோள்!
மண்டலம் வாரியாக அதிகரிக்க உத்தேசிக்கப்பட்டுள்ள காயல்பட்டினம் நகராட்சியின் சொத்து வரி! உங்கள் தெரு எந்த மண்டலத்தில்?
படிவம் 7 பயன்படுத்தி வாக்காளர் பட்டியலில் தவறுதலாக இடம்பெற்றுள்ள பெயரை எவ்வாறு நீக்குவது?
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை

feed-imageFeed Entries

சுடச்சுட காயல் செய்திகள்! சுவையான இஸ்லாமிய கட்டுரைகள் !!
தொடர்பு கொள்ள : admin@kayalnews.com
© Copyright : Kayalnews.com