بسم الله الرحمن الرحيم
Saturday 25th May 2019 | 20 ரமலான் 1440AH
பதாகை
news menu left
news menu right

பதாகை

பதாகை

 • Google Bookmarks
 • Twitter
 • Windows Live
 • Facebook
 • MySpace
 • deli.cio.us
 • Digg
 • Newsvine
 • reddit
 • StumbleUpon
 • Yahoo! Bookmarks
 • Yigg
தொழில்நுட்ப சாதனை! இளைஞர்களுக்கு சோதனை!! (பாகம் - 2)அச்சிடுகமின்-அஞ்சல்
07 டிசம்பர் 2011 மாலை 05:33

இயற்கையின் செயல்பாடுகளை நாம் ஆழ்ந்து உற்று நோக்கும் போது அதில் அல்லாஹ்வின் வல்லமையையும்,மேலும் அவன் இந்த இயற்கையை எவ்வளவு சிக்கனமானதாகவும்,அழகானதானதாகவும் அதே பட்சத்தில் நல்ல பயனுள்ளதாகவும் படைத்துள்ளான் என்பதை நம்மால் அறிந்துக் கொள்ள முடிகின்றது.மனிதன் இயற்கையின் ஒவ்வொரு அசைவுகளையும் அவன் காணும் போதெல்லாம் அவனது படைப்புத்திறன் மேலோங்கி விடுகின்றது.

blue-sky

(உதா) மாமிசத்தை சுடுவதற்கு ஆதி மனிதன் உராய்ந்த கற்களில் தொடங்கி இந்தியாவில் இருப்பவனும் இங்கிலாந்தில் இருப்பவனும் பக்கத்தில் இருந்து  பேசுவது போல் ஒரே நேரத்தில் முகம் பார்த்து பேசும் கருவி என்று எட்டாத எத்தனையோ கண்டுப்பிடிப்புகள் கண்டுபிடிக்கப்பட்டுக்கொண்டே வருகின்றது.

illustration_243-RoomDesign5

மனிதன் என்பவன் தான் கண்டுப்பிடிக்கும் படைப்புகள் அனைத்தையும் அவன் இயற்கையிடமிருந்தே பாடம் படிப்பதை வல்ல அல்லாஹ் த ஆலா அவனது அருள் மறையில் சுட்டிக்காட்டுகின்றான்.

crow

நபி ஆதம் (அலை) மகன்,தன் சகோதரரின் பிரேதத்தை எவ்வாறு மறைக்க வேண்டும் என்பதை அவருக்கு அறிவிப்பதற்காக அல்லாஹ் அவருக்கு அறிவிப்பதற்காக அல்லாஹ் ஒரு காகத்தை அனுப்பி வைத்தான்,அது அவருடைய சகோதரரின் உடலை எவ்வாறு மறைப்பது என்பதை அவருக்கு காண்பிப்பதற்காகப் பூமியைத் தோண்டிற்று.(அல்குர் ஆன் 5:31)

இதைப்போன்று நபி மூஸா (அலை) அவர்களின் கூட்டத்தாரில் ஒருவர் சாமிரீ அவர் மக்களின் தங்க ஆபரணங்களை நெருப்பில் இட்டு உருக்கி ஒரு காளைக்கன்றின் சிலையை செய்தார். அது காளை மாட்டின் சப்தத்தையும் வெளிப்படுத்தியது. இதைக்கண்ட சிலர் இதுதான் உங்களுக்கும் மூஸாவிற்கும் இறைவனாகும் என்றனர். இது விஷயமாக ஹழ்ரத் மூஸா (அலை) அவர்கள் கோபப்பட்டு சாமீரியிடம்,ஏன் இவ்வாறு செய்தாய்? என்று கேட்ட போது...

அதற்கவன் "அவர்கள் பார்க்காத ஒன்றை நான் பார்த்தேன்,தூதர் (மலக்கு) ஜிப்ரயீல் (அலை) காலடி மண்ணில் ஒரு பிடியை எடுத்து காளைக் கன்றின் சிலையில் எறிந்தேன்,அது சப்தமிட்டது". (அல்குர் ஆன் 20:96)

இப்படி ஒவ்வொரு படைப்பு திறனையும் மனிதன் இயற்கையிடமிருந்து தான் பாடம் கற்று தொழில் நுட்பங்களை படைக்கின்றான்.

அப்படி அவன் படைத்த தொழில் நுட்பத்தில் மிகவும் முன்னோடியாக திகழும் முக்கியமான சாதனங்கள் மூன்று.

1) தொ(ல்)லைப்பேசி

2) தொ(ல்)லைக்காட்சி

3) கணினி

ஆகிய இந்தவகையான தொழில்நுட்ப சாதனங்களை பற்றி நாம் பார்ப்போம்.

suite

தொ(ல்)லைப்பேசி:

தொலைபேசி (Telephone) என்பது தொலைவில் இருப்பவருடன் பேசப் பயன்படும் ஒரு மின்கருவி. இக்கருவியை அலெக்சாண்டர் கிரகாம் பெல் (Alexander Graham Bell) கண்டுபிடித்தார் என்று பொதுவாகக் கூறினும், 1849-1875 ஆண்டுகளுக்கிடையே பல ஆய்வாளர்கள் முன்னோடியாக உழைத்து இது பற்றி பல கண்டுபிடிப்புகள் நிகழ்த்தியுள்ளனர். இக்கருவி எவ்வாறு இயங்குகிறது எனில் ஒலி அலைகளால் அதிரும் ஒரு தகட்டிலிருந்து அவ்வதிர்வுகளை மின் குறிப்பலைகளாக மாற்றி, பின்னர் இம்மின்னலைகளை மின் கம்பியின் வழியே செலுத்தி மறு முனையில் மீண்டும் ஒலியலைகளாக மாற்றப்படுகின்றன. இவ்வாறு ஒருவர் பேசுவது மற்றொருவர் உலகில் எங்கிருந்தாலும் கேட்கும் வண்ணம் பயன் படும் கருவிக்குத் தொலைபேசி என்று விக்கிபீடியா இதற்கு விளக்கம் தருகின்றது.

தொ(ல்)லைக்காட்சி:

தொலைக்காட்சி (டிவி) என்பது ஒரு தொலைத்தொடர்பு ஊடகம் ஆகும் .அது கருப்பு மற்றும் வெள்ளை அல்லது ஒற்றை நிற அல்லது பல வண்ணம் உடையதாக இருக்கும். இது ஒளி, ஒலியை ஒன்றாக இணைத்து ஒளிபரப்பப்படுகிற விதத்தில் தொகுத்துத் தருகின்றது. இது கண்களால் காணக்கூடிய ஒளியைக் காட்டிலும் குறைவான அதிர்வெண்ணைக் கொண்ட மின்காந்த அலைகளைக் கொண்டு இயங்குகிறது என்று விக்கிபீடியா இதற்கு விளக்கம் தருகின்றது.

கணினி :

கணினி என்பது பல எலக்ரானிக் இளைகளினால் ஆன transistors, capacitors, diodes, resistors போன்றவற்றால் பல உறுப்புகளை ஒன்றினைத்து உருவாக்கப் பெற்ற ஓர் எலக்ரானிக் இயந்திரம். கணினிக்கு தேவைப்படும்  சில மென்பொருள் ஊடாக  இயங்கச் செய்து,அதன் மூலம் ஒரு வேலையை துல்லியமாகவும், வேகமாகவும்; தன்னிச்சையாக செயல்பட்டு செய்விக்க கூடியதாக உருவாக்கப் பெற்ற ஒரு கருவியே கணினி என அழைக்கப் பெறுகின்றது. 

இன்றைய காலகட்டத்தில் டைப் அடிக்கத் தெரியாத முதியவர்களும் இன்று கணினியைப் பயன்படுத்தியாக வேண்டும் என்ற கட்டாயத்துக்கு ஆளாகி இருக்கிறார்கள். நமது நாட்டின் தகவல் தொழில் நுட்ப வளர்ச்சி, கணினிப் பயன்பாட்டை அதிகரித்துக்கொண்டே போகிறது. மொபைல் போன் அளவுக்கு கணினிப் பயன்பாடு இல்லையென்றபோதிலும் ஒப்பீட்டளவில் இதன் வளர்ச்சி அபாரமானதாகவே இருக்கிறது. கிராமப்புறங்களில் உள்ள இளைஞர்களும்கூட மின்னஞ்சல் முகவரி ஒன்று வைத்திருக்க வேண்டும் என்பது இன்றைய எதார்த்தமாக மாறியுள்ளது.

வளரும் இன்ஷா அல்லாஹ்..

ஆக்கம்: : ஹாஃபிழ் A.W. முஹம்மது அப்துல் காதிர்

ஆலிம் புஹாரி, BBA


Add comment

காயல் நியுஸ், வாசகர்கள் கருத்துக்களை வரவேற்கிறது. வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் நியுஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்த விதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். முரண்பாடான மரியாதைக்குறைவான, கண்ணியமில்லாத கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கும் அவைகளை நீக்குவதற்கும் எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு. தங்களது பெயர் மற்றும் கருத்துக்களை தமிழில் தட்டச்சு செய்யலாம். உதாரணமாக "காயல்பட்டினம்" என்று தட்டச்சு செய்ய ஆங்கிலத்தில் "kaayalpattinam" என்று தட்டச்சு செய்து Space bar-ஐ அழுத்தினால் தங்கள் தட்டச்சு செய்த சொல் தமிழாக மாற்றப்படும். ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.


Security code
Refresh

 
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை

feed-imageFeed Entries

சுடச்சுட காயல் செய்திகள்! சுவையான இஸ்லாமிய கட்டுரைகள் !!
தொடர்பு கொள்ள : admin@kayalnews.com
© Copyright : Kayalnews.com