بسم الله الرحمن الرحيم
Saturday 25th May 2019 | 20 ரமலான் 1440AH
பதாகை
news menu left
news menu right

பதாகை

பதாகை

 • Google Bookmarks
 • Twitter
 • Windows Live
 • Facebook
 • MySpace
 • deli.cio.us
 • Digg
 • Newsvine
 • reddit
 • StumbleUpon
 • Yahoo! Bookmarks
 • Yigg
தொழில்நுட்ப சாதனை! இளைஞர்களுக்கு சோதனை!! (பாகம் - 3)அச்சிடுகமின்-அஞ்சல்
13 டிசம்பர் 2011 மாலை 08:16

அல்லாஹ்வின் அழகிய திருப்பெயரால் துவங்குகிறேன்..

சென்ற தொடரில் தொலைகாட்சி,தொலைப்பேசி மற்றும் கணினி போன்ற இந்த நூற்றாண்டின் தொழில் நுட்பத்தில் மிகவும் முன்னோடியாக திகழும் விஷங்களை பட்டியலிட்டோம்.

இப்படி தொழில்நுட்பத்தோடு மனிதனுடைய வாழ்க்கையை  சிலந்தி வலையைப் போல பின்னிப் பிணைந்துள்ளது. நாம் மேலே பார்த்த இந்த மூன்று சாதனங்களும் மனிதனுடைய வாழ்க்கைக்கு இன்றியமையாத ஒன்றாக உருமாறிவிட்டது. அது ஒருபுறமிருக்க தொழில்நுட்பம் சாதனை என்கின்ற போர்வையில் பல்வேறு சோதனைகளை நடத்திக் கொண்டு இருக்கின்றது.

techFlowDiagram


அப்படிப்பட்ட சோதனைகளின் மூலம் நம் மனித சமுதாயம் குறிப்பாக தூய இஸ்லாத்தை தன்னுடைய வாழ்க்கை நெறியாக எடுத்து நடக்க வேண்டிய நம் போன்ற இஸ்லாமிய இளைஞர்கள் அந்த சிலந்தி வலையில் மாட்டிக் கொண்டு தட்டித் தடுமாறி தத்தளிக்கும் ஈயைப் போல அந்த மாய வலையில் தன்னையே மெய் மறந்து அதிலிருந்து வெளியில் வர முடியாமல் முழித்துக் கொண்டு இருக்கின்றோம்...

How-is-the-progress-of-Information-and-Communication-Technology-2012_copy

இந்த தொழில்நுட்ப யுகத்தில் இளைஞர்கள் தன்னுடைய தன்மானத்தை இழந்து நிற்கதியான நிலைக்கு தள்ளப்படுவதற்கு முக்கிய சக்தி வாய்ந்த கருவிதான் இந்த தொலைக்காட்சி.. நமது தேவைக்காக படைக்கப்பட்ட ஒரு அற்ப படைப்பு நம்மை ஆட்டிப் படைக்கின்றது....

தொலைவில் நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை அப்படியே அந்நேரமே வீட்டிலிருந்தபடியே பார்க்க முடிவது மிகச்சிறந்த அறிவியல் அற்புதம் தான். ஆனால் இன்று தொலைக்காட்சிகள் வெறும் விளம்பர நிறுவனமாகவும், சினிமா தியேட்டராகவும் மாறி இளைஞர்களின் மதியை கொள்ளையடித்து பணம் சம்பாதிக்கின்றன.

Tv_2

சினிமா என்பது ஒரு பொழுது போக்குக் கலை, தொலைக்காட்சி என்பது ஒரு ஊடகம். இரண்டும் வேறு. அனேக தொலைகாட்சி நிறுவனங்கள்  இதை உணராமல் தங்கள் நிகழ்ச்சிகள் முழுவதையும் சினிமாவை கொண்டே நிரப்பிக் கொள்கிறார்கள். சுதந்திர தின நிகழ்ச்சியானாலும் சரி, குழந்தைகள் தினம் அந்த தினம் இந்த தினம் என்று எல்லா தினத்திலும் திரைப்படக் கலைஞர்களின் பேட்டிகளையும் அவர்கள் ஆடிப் பாடிக் கூத்தடிப்பதை தான் தான் காட்டுகிறார்கள். இந்த செயல் இளைஞய சமுதாயத்தின் உள்ளத்தில் இது தான் உலகம் இவர்கள் தான் நம்முடைய வழிக்காட்டிகள் இவர்கள் சொல்வதை தான் நாம் செய்ய வேண்டும் என்று!!!!! உள்ளம் கூறுகின்றது.

திரைப்படங்களின் கொள்கையானது பெரும்பாலான ரசிகர்களின் மட்டமான ரசனையை குறிவைத்தும்.மனித மனங்களின் அழுக்குகள், வக்கிரங்களுக்குத் தீனி போட்டும் மூன்று மணி நேரம் திரை அரங்கத்துக்குள் ரசிகர்களை முடிந்த அளவு குஷிப்படுத்தி காசு சம்பாதிப்பதிலும் தான் இருக்கிறது.. மேலும் கதா நாயகர்கள் மதுவருந்துவது, சிகரெட் குடிப்பது,பெண்களோடு கூத்தடிப்பது சட்டத்தை கையிலெடுத்து சட்டாம்பியாவது,துப்பாக்கிகளை தூக்கிகொண்டு அலைவது வேண்டாதவர்களை பட் பட்டென போட்டுத் தள்ளுவது, கண்ணாடியை உடைத்துக்கொண்டு பலமாடி கட்டடத்திலிருந்து குதிப்பது. என்று அவர்கள் செய்யும் போது அது பிஞ்சு உள்ளங்களின் உள்ளத்தை வருடுகின்றது இது தான் அவர்கள் இளைஞராக ஆகும் போது அந்த விஷயம் ஊதி வெடித்து நாமும் அதைப் போல செய்தால் தான் என்னெ? என்று மனதில் உதிக்கின்றது.

alco

சமீபத்தில் Center on Alcohol Marketing and Youth (CAMY) மேற்கொண்ட ஆய்வில் வெளியான புள்ளிவிபரங்களின்படி 2001 க்கும் 2006 க்கும் இடைப்பட்ட காலத்தில் மது அருந்துதலை ஊக்குவிக்கும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் 30% அதிகரித்துள்ளதாக அதிர்ச்சித் தகவல்களை வெளியிட்டுள்ளது.

(உ.தா) எனது நண்பர் ஒருவர் அவருடைய நண்பரின் பிறந்த நாள் விழாவிற்கு சென்றுள்ளார். அங்கு அவருடன் இருந்த சக மாற்றுமத நண்பர்கள் மச்சி. சும்மா இந்த பிரேண்டை கொஞ்சம் டேஸ்ட் பாரேன் என்று!!!!! அவர் சொன்னவுடன் அவன் அங்கு இருந்த அனைத்து வகையான பிராண்டையும் கொஞ்சம் ருசிப்பார்த்து விட்டு பெருமையாக தன்னுடைய சகோதரனிடம் சொல்லியும் இருக்கின்றான் கொஞ்சமும் வெட்கமில்லாமல்,இதற்கு காரணம் அவன் திரைப்படத்தில் நடிகர்கள் குடிப்பதை பார்த்தன் விளைவுதான். அதுவும் அவன் 5 வேளை சரியாக தொழக்கூடியவன் .தற்போது அவனுடைய தவறை உணர்ந்து விட்டான்.. அல்ஹம்துலில்லாஹ்.

நான் ஹஜ்ஜுப் பெருநாளை முன்னிட்டு நமதூருக்கு வந்த போது ஒரு சம்பவம் நடந்தது நமதூரில் பிரபல்யமான ஒரு சமையல் காரரிடம் மும்பைக்கு ஒரு சமையல் ஆள் தேவைப்படுகின்றது மேலும் அவர் 5 வேளை தொழுகக்கூடிய நபராகவும்,குடிக்காதவராகவும் இருக்கும ஏதேனும் ஆள் இருந்தால் சொல்லுங்களே..காக்கா என்ற கூறிய மாத்திரத்தில் அந்த நபர் தம்பி ஆள் கிடைக்கும் ஆனா.........அவர் வாரத்துக்கு ஒரு முறையாவது தண்ணீ அடிப்பார் பா...........மேலும் அவர் சொன்ன வார்த்தை தான் என்னை அப்படியே மெய்சிலிர்க்க வைத்தது இந்த காலத்தில் எந்த சமையல் காரர் தண்ணீ அடிக்காமல் இருக்கானுவ????????

வளரும் இன்ஷா அல்லாஹ்..

ஆக்கம்: : ஹாஃபிழ் A.W. முஹம்மது அப்துல் காதிர்

ஆலிம் புஹாரி, BBA


Add comment

காயல் நியுஸ், வாசகர்கள் கருத்துக்களை வரவேற்கிறது. வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் நியுஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்த விதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். முரண்பாடான மரியாதைக்குறைவான, கண்ணியமில்லாத கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கும் அவைகளை நீக்குவதற்கும் எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு. தங்களது பெயர் மற்றும் கருத்துக்களை தமிழில் தட்டச்சு செய்யலாம். உதாரணமாக "காயல்பட்டினம்" என்று தட்டச்சு செய்ய ஆங்கிலத்தில் "kaayalpattinam" என்று தட்டச்சு செய்து Space bar-ஐ அழுத்தினால் தங்கள் தட்டச்சு செய்த சொல் தமிழாக மாற்றப்படும். ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.


Security code
Refresh

 
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை

feed-imageFeed Entries

சுடச்சுட காயல் செய்திகள்! சுவையான இஸ்லாமிய கட்டுரைகள் !!
தொடர்பு கொள்ள : admin@kayalnews.com
© Copyright : Kayalnews.com