بسم الله الرحمن الرحيم
Thursday 19th April 2018 | 03 ஷஃபான் 1439AH
பதாகை
news menu left
news menu right

பதாகை

பதாகை

  • Google Bookmarks
  • Twitter
  • Windows Live
  • Facebook
  • MySpace
  • deli.cio.us
  • Digg
  • Newsvine
  • reddit
  • StumbleUpon
  • Yahoo! Bookmarks
  • Yigg
தொழில்நுட்ப சாதனை! இளைஞர்களுக்கு சோதனை!! (பாகம் - 4)அச்சிடுகமின்-அஞ்சல்
12 ஜனவரி 2012 காலை 09:52

மனிதனின் இன்றியமையாத தேவைகள் என்பது 3 என்பது பழைய பழமொழி இந்த விஞ்ஞான யுகத்தில் அது 4 ஆக உருமாறி விட்டது அவை.

1)உணவு

2)உடை

3)செல்போன்

4)இருப்பிடம்

four_needs

ஆக இந்த யுகத்திலே செல்போன் (வீடு) இருப்பிடத்தை பின்னுக்கு தள்ளிவிட்டு விட்டது என்று சொன்னால் அது மிகையாகாது.

1983ல் டாக்டர் மார்டின் கூப்பர் 2500 பவுண்ட் விலையில் முதன் முதல் மோட்டாரோலா டைனா ஏ.டி.சி 800 எக்ஸ் என்னும் மொபைல் போனை வர்த்தக ரீதியாகக் கொண்டு வந்தார். அப்போதெல்லாம் பெரும் செல்வந்தர்களின் சொகுசு சாதனமாக செல்போன் இருந்து வந்தது. இந்நிலை நீண்ட நாட்களாக இருந்து வந்த போதிலும் அண்மைக்காலமாக அன்றாட வாழ்க்கையின் அத்தியாவசிய சாதனமாக அது மாறிவிட்டது.

மொபைல் போன் முதன் முதலில் வந்து ஓராண்டு கழிந்த பின்னர் உலகில் சுமார் 12 ஆயிரம் பேரே அதன் உபயோகிப்பாளர்களாக இருந்தனர். ஆனால் இன்று அனைத்து நாடுகளிலும் கோடிக்கணக்கானோர் பயன்படுத்தி வருகின்றனர். இந்தியாவில் மட்டும் மொபைல் போனை உபயோகிப்பவர்களின் எண்ணிக்கை 670 மில்லியன் என அரசு செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.

மோட்டாரோலாவின் செங்கல் போன்ற மொபைல் போனலிருந்து இன்றைய ஆப்பிள் 3ஜி போன், பிளாக் பெர்ரி (Black berry) போன் வரை வளர்ச்சியைக் கொண்ட மொபைல் போனின் வயது சுமார் 29 ஆகிறது.பேசுவதற்கு மட்டும் வந்த இந்த மொபைல் போன் இன்று டெக்ஸ்ட் மெஸேஜ்களை (எஸ்எம்எஸ்) அனுப்புவதற்கும் பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது. இதனைத் தொடர்ந்து பெரிய அளவில் டேட்டா (Data) பரிமாற்றத்திற்காக ஏற்படுத்தப்பட்டதே இன்று 3ஜி மற்றும் இனி வர இருக்கும் 4ஜி மொபைல் சேவைகள் ஆகும். இந்த வேக மாற்றங்கள் இனிவரும் காலங்களில் மொபைல் போனில் எத்தகைய மாற்றங்கள் ஏற்படும் என்பது கற்பனை கூடசெய்து பண்ணிப் பார்க்க முடியாத நிலையிலுள்ளது.

செங்கல் அளவுக்கு இருந்த மொபைல் போன்கள் இப்போது தீப்பெட்டி அளவுக்கு சிறிய அளவில் கைத்தொலைபேசிகள் வந்த போதிலும் மெல்லிய மாடல்களுக்கு சந்தையில் கிராக்கி அதிகம். பேப்பர் தடிமனில் ATM கார்டு போன்ற மெல்லிய கைத்தொலைபேசிகள் விரைவில் விற்பனைக்கு வர உள்ளது. புதுமை விரும்பிகளுக்கு இது ரொம்ப பிடிக்கும் என்கின்றனர் கனடாவை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள். ஆன்டாரியோ கிங்ஸ்டனில் உள்ள குவீன்ஸ் பல்கலைகழக இயக்குநர் ரோயல் வெர்டிகால் இதை வடிவமைத்துள்ளார்.

PAPER-MOBILE-PHONE

பேப்பர் கைத்தொலைபேசியின் எடை மிகவும் குறைவாகவே இருக்கும். மெல்லிய பிலிமால் உருவாக்கப்பட்டுள்ள இதில் தற்போதைய ஸ்மார்ட் போனில் உள்ளதை விட அதிக வசதிகள் உள்ளது. புதிய பேப்பர் போன் பயன்பாட்டில் இல்லாத போது பேட்டரி சார்ஜ் குறையாது. நீண்ட நேரம் இருக்கும். அடிக்கடி சார்ஜ் செய்யத் தேவையில்லை என்பது தான் இதன் கூடுதல் சிறப்பம்சம். ஏராளமான தகவல்களை இதில் பதிவு செய்து கொள்ளலாம். இதன் திரை 9.5 செமீ அளவு கொண்டது மொபைல் போன் என்பது இன்றைய நாகரீக உலகில் அனைவருக்கும் ஒரு அத்தியாவசியப் பொருளாகி விட்டது என்றே கூறலாம்.

முட்டையை அவிக்கும் அளவிற்கு மொபைல் போனில் கதிர் வீச்சு வீரியமாக இருப்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

மொபைல் மூலம் முட்டைகளை அவித்துக் காட்டி இரண்டு ரஷ்ய பத்திரிகையாளர்கள் சாதனை புரிந்துள்ளனர். இன்றைய நவீன காலத்தில் மொபைல் போன்கள் தவிர்க்க முடியாத ஒன்றாகி விட்டது. ஆனால் அதே நேரத்தில் அவை எந்த அளவு ஆபத்தான பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பதையும் நாம் மறந்து விடுவதற்கில்லை. மொபைல் போன்களிலிருந்து வெளியாகும் கதிர்வீச்சு எந்த அளவுக்கு வீரியமானவை என்பதை இரண்டு ரஷ்ய பத்திரிகையாளர்கள் சோதனை மூலம் செய்து காட்டியுள்ளனர். மொபைல் போன்களிலிருந்து வெளி வரும் கதிர்வீச்சு, முட்டைகளையே வேக வைக்க கூடியது என்பதை அவர்கள் நிரூபித்துள்ளனர். ..

mobile_egg

இதற்காக அவர்கள் ஒரு சிறிய மைக்ரோவேவ் கருவியை உருவாக்கி உள்ளனர். ஒரு மொபைல் போனிலிருந்து மற்றொரு மொபைல் போனை அழைத்து அவற்றை பேசக்கூடிய நிலையில் வைத்தனர். அதே நேரத்தில் அவற்றுடன் ஒரு டேப் ரிகார்டரை இணைத்து இரு போன்களுக்கு இடையே உரையாடல் நடப்பதாக காண்பித்து இரு போன்களும் தொடர்ந்து பேசும் நிலையில் இருக்கச் செய்தனர். 15நிமிடத்தில் போன்களுடன் இணைக்கப்பட்டிருந்த மைக்ரோவேவ் கருவியில் வைக்கப்பட்டிருந்த முட்டை சூடேற ஆரம்பித்தது. 40வது நிமிடத்தில் முட்டையின் வெப்பம் கடுமையாகியது. 65வது நிமிடத்தில் முட்டை முழுவதுமாக வெந்து காணப்பட்டது

இந்த அளவுக்கு நீண்ட நேரம் எவரும் பேச வாய்ப்பு இல்லை என்றாலும் அவ்வாறு பேசினால் எத்தகைய பாதிப்பு ஏற்படும் என்பதையே இந்த சோதனை விளக்குகிறது. காதின் அருகில் இருக்கும் மூளைப் பகுதியை இந்த கதிர் வீச்சு எந்த அளவு பாதிக்கும் என்பதையும் இதன் மூலம் உணரலாம். 2 நிமிடம் தொடர்ந்து மொபைல் போனில் பேசினாலே அதிலிருந்து வரும் கதிர்வீச்சு,மூளையைப் பாதுகாக்கும் பகுதியில் ஊடுருவி விடும் என்பது விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்பு.

குழந்தைகள் 15 வயதாகும்வரை அவர்களுக்கு மொபைல் ஃபோன்களை வாங்கிக் கொடுக்காதீர்கள் என லண்டனில் இண்டிபெண்டண்ட் ஸ்கூல்ஸ் கவுன்சில் சேர்மன் பர்னபி லினன் பெற்றோர்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

உலகில் மொபைல் ஃபோன் பயனீட்டாளர்களில் ஐந்தில் ஒருவர் இந்தியர் ஆவார். மூன்று வருடத்திற்குள் மொபைல் டிஜிட்டல் சமூகத்தில் இந்தியா முதலிடத்தை பிடிக்கும் என கருதப்படுகிறது.

mobile_addict1

ஆகையால் குழந்தைகள் டெக்னாலஜியின் அடிமைகளாக மாறிவிடாமல் பாதுகாக்க வேண்டியது பெற்றோர்களின் கடமையாகும்.

மொபைல் போனில் பொழுதுபோக்காக வாலிபர்களிடம் பேசி, காதலில் விழ அலைய வைக்கும் பெண்கள் மீது வரும் புகாரின் எண்ணிக்கை கூடி வருவதாக, கோவை சைபர் க்ரைம் போலீசார் "அதிர்ச்சி' தகவல் தெரிவிக்கின்றனர்.

கோவை மாநகர குற்றப்பிரிவின் கீழ் செயல்படும், "சைபர் க்ரைம்' பிரிவுக்கு வரும் புகார்களில், மொபைல்போன் மூலம் ஆபாச அழைப்பு விடுத்தல், "செக்ஸ் மெசேஜ்' மற்றும் ஆபாச படங்கள் அனுப்பி, "டார்ச்சர்' கொடுப்பது தான் அதிகம்.பள்ளி, கல்லூரி மாணவர்கள், வாலிபர்கள், தனியார் மற்றும் அரசு அலுவலர்கள் தங்களுக்கு பிடித்தமானவர்களுக்கு மட்டுமன்றி, முன் பின் அறிமுகமில்லாத மாணவியர், வேலைக்கு செல்லும் இளம்பெண்கள் மற்றும் குடும்ப பெண்களுக்கும் அனுப்பி தங்களுக்குள் சந்தோஷம் கொள்கின்றனர்.

girl

தொடர்ந்து பெறப்படும் ஆபாச அழைப்புகளால் மனவேதனை அடையும் பெண்கள், மாணவியர் கோவை மாநகர போலீஸ் கமிஷனரிடம் தரும் புகாரின் எண்ணிக்கை கூடியுள்ளன.சைபர் க்ரைம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு, "டார்ச்சர்' கொடுக்கும் ஆசாமிகளை வளைத்து பிடிக்கின்றனர். இவர்களிடம் விசாரணை நடத்தியதில், ஜாலிக்காகவும், ஆர்வ கோளாறு காரணமாகவும் மெசேஜ் அனுப்புவதாகக் கூறி, மன்னிப்பு கேட்டு மன்றாடி தங்களை விடுவித்துக் கொள்கின்றனர்.

சமீபத்தில், கோவை மாநகர சைபர் க்ரைம் பிரிவுக்கு வந்த 160க்கும் மேற்பட்ட புகார்கள், புகார்தாரரின் வேண்டுகோளின்படி எச்சரித்து அனுப்பப்பட்டுள்ளனர்.

என்ன டெக்னாலஜி என்றாலும் அதில் நன்மையும், தீமையும் உண்டு.. மனிதர்களின் குணநலனின் அடிப்படையில்தான் அதிகமாக பாதகம் ஏற்பட வாய்ப்புள்ளது. இளம் பெண்களை காதல் வலையில் சிக்கவைப்பதில் பெற்றோரால் வாங்கி கொடுக்கப்படும் மொபைல் ஃபோன்களும் அதிக பங்கை வகிக்கிறது.

இறைவன் நம் இளைய சமூகத்தை பாதுகாப்பானாக!

தொடரும்..இன்ஷா அல்லாஹ்..


 ஆக்கம் :ஹாஃபிழ் A.W. முஹம்மது அப்துல் காதிர்

ஆலிம் புஹாரி, BBA


.

Add comment

காயல் நியுஸ், வாசகர்கள் கருத்துக்களை வரவேற்கிறது. வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் நியுஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்த விதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். முரண்பாடான மரியாதைக்குறைவான, கண்ணியமில்லாத கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கும் அவைகளை நீக்குவதற்கும் எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு. தங்களது பெயர் மற்றும் கருத்துக்களை தமிழில் தட்டச்சு செய்யலாம். உதாரணமாக "காயல்பட்டினம்" என்று தட்டச்சு செய்ய ஆங்கிலத்தில் "kaayalpattinam" என்று தட்டச்சு செய்து Space bar-ஐ அழுத்தினால் தங்கள் தட்டச்சு செய்த சொல் தமிழாக மாற்றப்படும். ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.


Security code
Refresh

 
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை

feed-imageFeed Entries

சுடச்சுட காயல் செய்திகள்! சுவையான இஸ்லாமிய கட்டுரைகள் !!
தொடர்பு கொள்ள : admin@kayalnews.com
© Copyright : Kayalnews.com