بسم الله الرحمن الرحيم
Wednesday 21st February 2018 | 05 ஜமாதுல் ஆஹிர் 1439AH
பதாகை
news menu left
news menu right

பதாகை

பதாகை

 • Google Bookmarks
 • Twitter
 • Windows Live
 • Facebook
 • MySpace
 • deli.cio.us
 • Digg
 • Newsvine
 • reddit
 • StumbleUpon
 • Yahoo! Bookmarks
 • Yigg
தொழில்நுட்ப சாதனை! இளைஞர்களுக்கு சோதனை!! (பாகம் - 5)அச்சிடுகமின்-அஞ்சல்
22 ஜனவரி 2012 காலை 06:11

 மனிதனுடைய மூளைக்குள் அகப்பட மறுத்த பூமிப்பந்து இன்று அவனது உள்ளங்கையில் உட்கார்ந்திருக்கின்றது. புரியாதிருந்த ஏராள புதிர்களின் முடிச்சுக்களை விஞ்ஞானம் ஒவ்வொன்றாக அவிழ்த்து வருகின்றது.

மனித வாழ்வின் சகல பரிணாங்களையும் விஞ்ஞானம் படிப்படியாக மாற்றி வருகின்றது. "மாற்றங்கள் நிகழும் என்பது மட்டுமே மாறாது" என்ற உண்மையை நவீன விஞ்ஞானம் மென்மேலும் நிரூபித்து வருகின்றது.

மேலும் இன்றைய தொழில்நுட்பம் பல நல்ல பொக்கிஷங்களை நமக்கு வாரி வாரி வழங்கி இருந்தாலும், அதன் பின்னணியில் விளைவது என்னவோ தீமைதான். மக்களின் எண்ணங்கள், விருப்பு வெறுப்புக்கள், சிந்தனைப் பாங்கு ஆகியவற்றை உருவாக்குவதில் நவீன தொடர்புச் சாதனங்கள் மிக முக்கிய இடத்தை வகிக்கின்றன என்று சொல்லும் அளவுக்கு வளர்ந்து விட்டது.

மனித நாகரிக வரலாற்றின் ஒரு மைல் கல்லாக அமைந்திருக்கும் இன்டர்நெட் தொழில் நுட்பம், முழு உலகையும் நமது கைவீச்சுக்குக்கள் கொண்டுவந்துள்ளது. கைக்கெட்டாத் தூரங்களில் இருக்கும் வாய்ப்புக்களை அருகே கொண்டுவந்து சேர்த்துள்ளது. விஞ்ஞானம், தொழில்நுட்பம் என்பவற்றடன் புதிய கலை கலாசாரங்கள், வாழ்க்கைமுறைகள், அரசியல், சமூக, பொருளாதாரம் போன்ற பல துறைகள் சார்ந்த அறிவுகளின் தோற்றுவாயாக இன்டர்நெட் நம்மை வந்தடைந்துள்ளது.

internet-browsers

இன்றைய இணைய உலகில் 50 வயதை தாண்டிய இளையவர்களே(?) காதில் ஐபாடும், செல்போன் கையுமாக வலம் வருகின்ற இந்த விஞ்ஞான யுக காலத்தில் இளசுகளாகிய இன்றைய இள இரத்தங்களைப் பற்றி பற்றி கேட்கவா வேண்டும்? காற்று, தண்ணீர், உணவை விட இன்டர்நெட் தேவைதான் இன்றைய இளைஞர்களுக்கு மிக அத்தியாவசிய தேவையாகிப்போனது.

ஒரு 7 அல்லது 8 வருடத்திற்கு முன்னர் இணையத்தில் உலாவர கம்ப்யூட்டர், அதன் பின்னர் லேப்டாப் என தேவையாக இருந்தது. ஆனால் இப்போது ஆப்பிள் ஜ போன் ஏன் அவ்வளவு தூரம் செல்ல வேண்டும் நமது மத்திய அரசின் புதிய கண்டுப்பிடிப்பு ஆகாஷ் டேப்லெட் கையில் உள்ள 5 அங்குல மொபைல்போனிலேயே ஒட்டுமொத்த உலகையும் இழுத்து வந்துவிடுகிறது இணையம்.

tablets

இன்றைய இணைய உலகில் கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகள், பணிக்கு எத்தனையோ இளைஞர்கள்... அவ்வளவு ஏன் பள்ளிக்கு செல்லும் பையன்கள் கூட இன்டர்நெட் இணைப்புடன் கூடிய மொபைல்போன் சகிதமாகத்தான் உலா வருகின்றனர். ஆனால் அந்த இணைய இணைப்பை பயன்படுத்திக் கொள்வதில்தான் நபருக்கு நபருக்கு மாற்றம்!

iphone-ipods

இந்நிலையில் இன்றைய இளைஞர்களிடம் இன்டர்நெட் பயன்பாடு எந்த அளவில் உள்ளது என்பது குறித்து ஆய்வு ஒன்று நடத்தப்பட்டது.

இதில் 5க்கு நான்கு கல்லூரி மாணவ, மாணவியர்கள் மற்றும் பணிக்கு செல்லும் இள இரத்தம், இன்டர்நெட் தங்களுக்கு முக்கியமானது என்றும், தங்களது வாழ்க்கைக்கு மிகவும் அத்தியாவசியமானது என்றும் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்கா, கனடா, மெக்ஸிகோ, பிரேசில்,பிரிட்டன், பிரான்ஸ், ரஷ்யா, இந்தியா மற்றும் சீனா உள்ளிட்ட 14 நாடுகளை சேர்ந்த 1,441 கல்லூரி மாணவர்கள் (18 முதல் 24 வயதுடையவர்கள்) மற்றும் 1,412 இளவயது பணியாளர்களிடம் (21 முதல் 29 வயதுடையவர்கள்) இந்த கருத்து கணிப்பு நடத்தப்பட்டது.

அளப்பரிய நன்மைகளை நமக்குத் தேடித்தந்துள்ள இந்த விஞ்ஞான விந்தை, சில தீமைகளையும் தன்னகத்தே கொண்டிருக்கத் தவறவில்லை. குறிப்பாக குழந்தைகளுக்குப் பயன் மிக்க ஒரு கல்விச் சாதனமாக இருப்பதுடன், சமயங்களில் சில குழந்தைகளைப் படுகுழியில் வீழ்த்துவதற்கும் இது காரணமாக இருந்து வருகின்றது!. இதே இன்டர்நெட் வழியாகத்தான் குழந்தைகளின் மனங்களில் நஞ்சை விதைக்கக்கூடிய படங்களும் காட்சிகளும் காண்பிக்கப்படுகின்றன.

குடும்பம் எனும் பூங்காவில் வீசும் புதுத் தென்றல் குழந்தைகள். பலரது வரண்டுபோன வாழ்க்கையில் வசந்தத்தைத் தோற்றவிப்பவர்கள் குழந்தைகள். இவர்கள் எமது எதிர்கால சமூகத்தின் நம்பிக்கைக்கும் எதிர்பார்ப்புக்கும் காரணமாக விளங்கும் விலை மதிப்பற்ற சொத்துக்கள். இத்தகைய குழந்தைச் செல்வங்களை விஞ்ஞானத்தின் புது வரவான இன்டர்நெட், சேதப்படுத்திச் செயலிழக்கச் செய்கின்றது என்பதை அனைவரும் அறிவோம்.

அப்படிப்பட்ட இணைய உலகத்தில் மேலும் ஒரு மிகப்பெரிய பூதம் பிடித்தாட்டுகின்றது அதை பற்றி இன்ஷா அல்லாஹ் அடுத்த வாரம் பார்ப்போம்.

ஆக்கம் :ஹாஃபிழ் A.W. முஹம்மது அப்துல் காதிர் ஆலிம் புஹாரி, BBA

Add comment

காயல் நியுஸ், வாசகர்கள் கருத்துக்களை வரவேற்கிறது. வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் நியுஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்த விதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். முரண்பாடான மரியாதைக்குறைவான, கண்ணியமில்லாத கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கும் அவைகளை நீக்குவதற்கும் எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு. தங்களது பெயர் மற்றும் கருத்துக்களை தமிழில் தட்டச்சு செய்யலாம். உதாரணமாக "காயல்பட்டினம்" என்று தட்டச்சு செய்ய ஆங்கிலத்தில் "kaayalpattinam" என்று தட்டச்சு செய்து Space bar-ஐ அழுத்தினால் தங்கள் தட்டச்சு செய்த சொல் தமிழாக மாற்றப்படும். ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.


Security code
Refresh

 

செய்திகள்

வெளி மாநிலங்களில் இருந்து வியாபாரம் செய்ய வருபவர்கள்; வெளியூர்களில் இருந்து நகருக்கு புதிதாக குடிவருபவர்கள் ஆகியோர் மீதான கண்காணிப்பை அதிகப்படுத்தவும்: மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஆகியோரிடம் நடப்பது என்ன? குழுமம் கோரிக்கை
பிப். 08 இன்று மாதாந்திர பராமரிப்பு மின்தடை!
CCTV கேமராக்கள் நிறுவ அலட்சியம் காட்டும் காயல்பட்டினம் நகராட்சிக்கு கெடு விதிக்கவும்: மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஆகியோரிடம் நடப்பது என்ன? குழுமம் கோரிக்கை!*
கடையக்குடி, கற்புடையார்பள்ளி வட்டம் என்ற அதிகாரப்பூர்வ பெயர்களை பயன்படுத்துக_: மாவட்ட ஆட்சியர், மீன்வளத்துறை மற்றும் ஊடகத்துறையினரிடம் நடப்பது என்ன? குழுமம் வேண்டுகோள்!*
பேருந்து கட்டணங்கள்: மாற்றியமைக்கப்பட்ட கட்டணங்கள் திங்கட்கிழமை (இன்று) முதல் அமலுக்கு வருகிறது!
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை

feed-imageFeed Entries

சுடச்சுட காயல் செய்திகள்! சுவையான இஸ்லாமிய கட்டுரைகள் !!
தொடர்பு கொள்ள : admin@kayalnews.com
© Copyright : Kayalnews.com