بسم الله الرحمن الرحيم
Thursday 19th April 2018 | 03 ஷஃபான் 1439AH
பதாகை
news menu left
news menu right

பதாகை

பதாகை

  • Google Bookmarks
  • Twitter
  • Windows Live
  • Facebook
  • MySpace
  • deli.cio.us
  • Digg
  • Newsvine
  • reddit
  • StumbleUpon
  • Yahoo! Bookmarks
  • Yigg
உலகை ஒரு பூதம் பிடித்தாட்டுகிறது! (பாகம்- 6)அச்சிடுகமின்-அஞ்சல்
22 பிப்ரவரி 2012 காலை 09:10

தொலைத்தொடர்புத் துறையில், இன்று பெரும் பங்கு வகிக்கும், சமூக வலைதளங்களில் வெளியிடப்படும், பதிவுகளை மற்றவர்கள் தவறாக பயன்படுத்தும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. இதனால், பதிவுகளை வெளியிடுவதில் எச்சரிக்கையாக இல்லாவிட்டால், தேவையற்ற பிரச்னைகளை சந்திக்க நேரும் என்று, வலைதள வல்லுனர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

facebook-front-page

கல்வி, வணிகம், திருமணம், வேலைவாய்ப்பு போன்ற எந்த ஒரு விஷயங்களுக்கும், தேவையான தகவல்களைத் தருவதில், இணையதளங்கள் முன்னணியில் உள்ளன. அதனால், நவீன உலகில் உடனுக்குடன் தகவல்களை பெற, இணையதளத்தை மக்கள் அதிகமாக நாடிச் செல்கின்றனர். தொலை தூரக் கல்வியிலிருந்து மாறி, இணையதளத்தில், "ஆன்-லைன்' கல்வி கற்கும் நிலையும் வந்துவிட்டது.  இத்தகைய நவீன தொழில்நுட்ப முன்னேற்றங்களுடன், தற்போது இளம் தலைமுறையினரை சுண்டியிழுக்க, "சோஷியல் நெட்வொர்க்ஸ்' என்கிற சமூக வலைதளங்கள் குவிந்து கிடக்கின்றன.  ஒவ்வொரு வலைதளமும், போட்டி போட்டு தொழில்நுட்ப வசதிகளைத் தருகின்றன.

அந்த வரிசையில் கடந்த ஐந்தாண்டுகளாக, இணையத்தில் சமூக வலைதளங்களின் ஆக்கிரமிப்பு அதிகமாக உள்ளது. பிரபலமான " ஆர்குட், பேஸ்புக் ' போன்ற நான்காயிரம் சமூக வலைதளங்கள், இணையதளத்தில் கொட்டிக் கிடக்கின்றன.

உலகை ஒரு பூதம் பிடித்தாட்டுகிறது. பேஸ்புக் என்னும் பூதம்தான் அது! அந்த பூதம் எதையும் பகிர்ந்து கொள்ள தூண்டுகிறது.நேரம் காலம் பார்க்காமல் எப்போதும் அப் டேட்டுகளை வெளியிட வைக்கிறது.எங்கிருந்தாலும் என நடத்தாலும் பேஸ்புக்கில் தெரிவித்து விடும் மோகத்திற்கு பய‌னாளிகளை மாற்றியிருக்கிறது அது.

இந்த பேஸ்புக் அடிமைத்தனத்திற்கு சமீபத்திய உதாரணமாக அமெரிக்க வாலிபர் ஒருவர் கடத்தல் நாடகத்திற்கு மத்தியில் அதில் அரங்கேறிய காட்சிகளை பேஸ்புக்கில் வெளியிட்டு பரப‌ரப்பை ஏற்படுத்தியிருக்கிறார்.

இரு நண்பர்கள் பேசிக்கின்றனர்"

பல வருடம் சந்திப்பிற்கு பின் நீண்ட உரையாடலுக்குப் பின்

மச்சான்: உன்னுடைய பேஸ்புக் அட்ரஸ் என்னது டா!  மச்சான்: என்கிட்ட ஆர்குட் அட்ரஸ் தான் இருக்கு டா!

மச்சான்: டேய் என்னடா ஆர்குட்டா???

உங்கிட்ட அப்ப பேஸ்புக் அட்ரஸே இல்லையாடா......

என்னடா மச்சான் உலகமே அதுலத்தான் இருக்கு..

நீ என்னடா  இன்னும் ஆர்குட்டிலே இருக்குறா !!!

facebook ன்னா என்னன்னு தெரியுமா உனக்கு ......?

என்னைக்காவது ஒரு நாள் facebook அக்கௌன்ட் ஓபன் பண்ணி status போட்டு இருக்கியா .........?

வந்து பார் ...........

ஒரு நாளைக்கு எத்தனை பேர் status போடுறாங்கன்னு ............

எவ்வளவு லைக்

எவ்வளவு லவ்வு

எவ்வளவு கமெண்ட்

எவ்வளவு டார்ச்சர்

எவ்வளவு பிளாக்

எத்தனை குரூப்

எத்தனை சண்டைன்னு

இருக்கிறவனுக்கு தான் தெரியும்.

சிக்கன் பிரியாணி வாங்குனா லெக் பீஸ் பார்த்து வாங்கனும்ன்னு சொல்லுறேன்.

புரியலை உனக்கு...

ஒரு நாள் ...ஒரு நாள் நீ facebook புக் ஓபன் பண்ணி status போட்டு பார்.அப்போ தெரியும்..

உலகில் இன்று மிகவும் பரவலாகப் பேசப்படும் ஒரு விடயமாக இது மாறியுள்ளது.பேஸ்புக் ஒரு உலகளாவிய வலைப்பின்னல்.. இதில், செக்ஸ் மற்றும் ஆபாச தகவல்களுக்காக மட்டும் 5,000 வலைதளங்கள் உள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்த இணையதளத்தின் முகப்பு பக்கத்தில் துவங்கி, ஆபாச தகவல்கள் படிப்படியாக, பல்வேறு இணையதளங்களின் வழியே நீண்டுக் கொண்டு செல்கின்றன. தகவல் தொழில்நுட்பத்தின் வளர்ச்சியானது, ஒரு புறம் நன்மைக்காக பயன்பட்டாலும், இன்றைய தலைமுறையினரை தவறான வழியில் சீரழிப்பதாகவும் மாறியுள்ளது.

facebook-privacy-danger

இதுகுறித்து, "பேஸ்புக்' வலைதளத்தின், சென்னை அலுவலக ஒருங்கிணைப்பாளர் வசந்த் கூறியதாவது: "பேஸ்புக்'கில் பல லட்சம் உறுப்பினர்கள் இணைந்த வண்ணம் உள்ளனர். இது, தற்போது ஒரு குழுமம் அல்லது தனிநபர் பற்றிய தகவல்களின் தொகுப்பு இணையமாக, முதலிடத்தில் உள்ளது. மற்ற, "ஆர்குட், ஹைபைவ், ட்விட்டர்' போன்ற நெட்வொர்க்குகளும், சமமான உறுப்பினர்களைக் கொண்டுள்ளன. பள்ளி மாணவர்களை சுண்டியிழுக்கும் ஆபாச படங்கள் இணையதளங்களில் அதிகமாக உள்ளன. இவற்றின் மீது, தகவல் தொழில் நுட்பச் சட்டத்தின் மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆபாச தளங்களை பார்க்க, எந்த கட்டுப்பாடும் வரையறுக்கப்படாததால், பல இளைஞர்களின் வாழ்க்கை சீரழிகிறது. இவ்வாறு வசந்த் கூறினார்.

மார்க் சுகர்பேர்க் என்பவரின் உருவாக்கம்தான் பேஸ்புக்.பேஸ்புக்கின் ஸ்தாபகரும், உரிமையாளருமான இவரே அதை மூடப்போவதாகவும் அறிவித்துள்ளார்.

அமெரிக்காவில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட புள்ளிவிபரக் கணக்கெடுப்பு ஒன்றின்படி 6-17 வயதுகளுக்கு இடைப்பட்ட பிள்ளைகள் உள்ள 70 சதவீதமான வீடுகளில் கம்ப்யூட்டரும் இன்டர்நெட்டும் உபயோகிக்கப்பட்டு வருகின்றன. இன்டர்நெட்டை உபயோகிக்கும் சிறுவர்களுள் 20 சதவீதமானோர் பாலியல் ரீதியான நோக்கங்களுடன் அணுகப்பட்டுள்ளனர்.

இவர்களுள் 22 சதவீதமான சிறுவர்கள் தமது நண்பர்கள், உறவினர்கள் உட்பட, பிறரது வீடுகளில் இன்டர்நெட்டை உபயோகிக்கும்போதே இவ்வாறு அணுகப்பட்டுள்ளார்கள். 25 சதவீதமான சிறுவர்களுக்கு நிர்வாணப் படங்களும் பாலியல் காட்சிகளும் இன்டர்நெட் வழியாகக் காண்பிக்கப்பட்டுள்ளன. 17குழந்தைகளுக்கு ஒரு குழந்தை என்ற விகிதாசாரத்தில் இன்டர்நெட் மூலமாக அச்சுறுத்தல்கள்,தொந்தரவு செய்தல் போன்றன இடம்பெற்றுள்ளன.

இன்டர்நெட்டில் பாலியல் ரீதியான படங்களையும் காட்சிகளையும் கண்ட சிறுவர்களுள் சுமார் 23சதவீதமானோர் தாம் மிக மோசமாக மனம் குழம்பிக் கலக்கம் அடைந்ததாக ஒப்புக்கொண்டுள்ளனர். பாலியல் துஷ்பிரயோகத்துக்கான 89 சதவீத முயற்சிகள் Chat Room களிலும், Instant Message மூலமாகவும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தகாத இணையத்தளங்களைப் பார்வையிட்ட சிறுவர்களுள் சுமார் 40சதவீதமானோர் இத்தகவலை இரகசியமாகவே தமக்குள் மூடி மறைத்து வைத்திருந்துள்ளார்கள்.

தொடரும் இன்ஷா அல்லாஹ்...

ஆக்கம் :ஹாஃபிழ் A.W. முஹம்மது அப்துல் காதிர் ஆலிம் புஹாரி, BBA


Add comment

காயல் நியுஸ், வாசகர்கள் கருத்துக்களை வரவேற்கிறது. வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் நியுஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்த விதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். முரண்பாடான மரியாதைக்குறைவான, கண்ணியமில்லாத கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கும் அவைகளை நீக்குவதற்கும் எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு. தங்களது பெயர் மற்றும் கருத்துக்களை தமிழில் தட்டச்சு செய்யலாம். உதாரணமாக "காயல்பட்டினம்" என்று தட்டச்சு செய்ய ஆங்கிலத்தில் "kaayalpattinam" என்று தட்டச்சு செய்து Space bar-ஐ அழுத்தினால் தங்கள் தட்டச்சு செய்த சொல் தமிழாக மாற்றப்படும். ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.


Security code
Refresh

 
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை

feed-imageFeed Entries

சுடச்சுட காயல் செய்திகள்! சுவையான இஸ்லாமிய கட்டுரைகள் !!
தொடர்பு கொள்ள : admin@kayalnews.com
© Copyright : Kayalnews.com