بسم الله الرحمن الرحيم
Friday 26th April 2019 | 20 ஷஃபான் 1440AH
பதாகை
news menu left
news menu right

பதாகை

பதாகை

  • Google Bookmarks
  • Twitter
  • Windows Live
  • Facebook
  • MySpace
  • deli.cio.us
  • Digg
  • Newsvine
  • reddit
  • StumbleUpon
  • Yahoo! Bookmarks
  • Yigg
மீடியா உலகில் முஸ்லிம்கள்! (பாகம் -10) அச்சிடுகமின்-அஞ்சல்
05 மார்ச் 2014 மாலை 03:31

மார்ச்- 1ம் தேதி அந்த சந்தேஷ் நாளிதழில் வந்த தலைப்புச் செய்தி இப்படிக் கூறியது:

நவயார்ட் பகுதியில் ஒரு "குட்டி பாகிஸ்தான்" இருக்கிறது.

இது போன்ற பகுதிகள் நகருக்குள் உருவாக்கப் படுவதாகவும், உத்திரப் பிரதேசத்திலிருந்து இங்கே குடிபெயர்ந்து வந்த பணியாட்களிலுள்ள கிரிமினல் களைப் பற்றி காவல் துறை கவனிக்கவேண்டும் என்றும் அந்தச் செய்திக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

குஜராத்தில் இன்னொரு முன்னணி நாளிதழாக விளங்குகிறது குஜராத் சமாச்சார். இதுவும் முஸ்லிம் இனப்படுகொலையில் பகைமைத்தீயை மூட்டுவதில் பெரும்பங்குவகித்தது. ஆனால் சந்தேஷ் நாளிதழ்போல் தொடர்ந்து பகைமைச் செய்திகளை வெளியிடாவிட்டாலும், அவ்வப்பொழுது விஷமச் செய்திகளை வெளியிட்டது குஜராத் சமாச்சார்.

அத்தோடு வகுப்புவாத நல்லிணக்கம் வேண்டும் என்று வலியுறுத்தியும் அதில் கட்டுரைகள் வெளிவந்தன. பிப்ரவரி 28 அன்று அந்த நாளிதழில் இப்படி ஒருதலைப்புச் செய்தி முதல் பக்கத்தில் கொட்டை எழுத்துகளில் வந்தது: "3-4 இளம் பெண்கள் கடத்தல்!"

இந்தச் செய்திக்கு எந்தஆதாரத்தையும் அந்தநாளிதழ் வெளியிடவில்லை. அதே தேதியிட்ட நாளிதழில் பக்கம் 10ல்ஒரு செய்தி வெளிவந்திருந்தது. 10 இளம் பெண்கள் கடத்தப்பட்டதாக விஷ்வ ஹிந்து பரிஷத்தலைவர் கவ்ஷிக் படேல் கூறியதாக அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது.

முதல்பக்கத்தில் 4 பெண்கள்என்றும், பக்கம் 10ல் 10 பெண்கள் என்றும் செய்திகள் வந்திருந்தன. அந்தச் செய்தியை வெளியிட்ட நிருபர் இந்த முரண்பாடுகளைப் பற்றி கவலைப்படவில்லை. இந்த இட்டுக்கட்டப்பட்ட செய்தி குறித்து அவர் காவல்துறை ஐ,ஜி.யிடமோ, ரயில்வே போலீசிடமோ உறுதி செய்யவுமில்லை.

கடத்தப்பட்ட பெண்களின் பெயர்களும் அந்தச் செய்தியில் வெளியிடப்படவில்லை. கடத்தல் குறித்து வேறு எந்தத் தகவலும் அந்தச் செய்தியில் இடம் பெறவில்லை. பக்கம் 2ல் வந்த இன்னொரு செய்தியில் சுஷ்ரி ஹிடால் பென் என்ற நேரடி பெண்சாட் சிவதோதராவுக்கு ரயில் வண்டி வந்தடைந்தவுடன் கூறியதாக ஒருதகவல் வந்தது. "அஷ்ரல் வாடி என்ற பகுதியைச் சார்ந்த இளம் பெண்கள் எங்களுடன் ரயிலில்பயணித்தனர். அவர்களைக் காணவில்லை" என்று அவர் அந்தச் செய்தியில் கூறியிருந்தார்.

மார்ச் 6ம்தேதி குஜராத் சமாச்சார் நாளிதழின் கடைசிப் பக்கத்தில் வெளிவந்த ஒருதலைப்பு இப்படிக் கூறியது: "ஒரு பெட்டியை அல்ல, மொத்த ரயில் வண்டியையும் எரிப்பதற்குத்தான் திட்டம் தீட்டப்பட்டது."

அதே பக்கத்தில் வந்த ஒரு பெட்டிச் செய்தி இவ்வாறு கூறியது: "இரண்டாவது தாக்குதலுக்கு ஒரு கும்பல் தயாராக இருக்கிறது."

இங்கேயும் செய்தியின் ஆதாரம் குறிப்பிடப்படவில்லை. ஆனால் அந்தச் செய்களின் தொனி அனைத்து மேக வனமாக புலனாய்வு செய்யப்பட்டு வெளியிடப்படுவதாக இருந்தது.

மார்ச் 7 அன்று குஜராத் சமாச்சார் நாளிதழின் கடைசிப்பக்கத்தில் வெளிவந்த ஒருபெட்டிச் செய்தியில் இவ்வாறு கூறப்பட்டிருந்தது: "ஐ.எஸ்.ஐ, குஜராத்தில் பிரச்னைகளை உருவாக்குகிறது. கலோட்டாவும், அவருடன் பணிபுரிபவர்களும் இதில் முக்கிய தொடர்புள்ளவர்கள். கொல்கத்தாவில் கைதான HUJI என்ற அமைப்பின் துணைத் தளபதி இந்தச் சதித்திட்டத்தைஒப்புக்கொண்டுள்ளார்."

இந்தச் செய்தியில் சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயில் வண்டியில் பெரும் துயரத்தை உண்டு பண்ணிய அந்த நாளில் பயணித்தவர்களை" ராமபக்தர்கள்" என்று பலதடவை குறிப்பிடப்பட்டுள்ளது.

மார்ச் 6ம்தேதிஇப்படிஒருசெய்திவெளிவந்தது: "கோத்ரா ரயில் பெட்டியை எரிப்பதற்கு முற்கூட்டியே திட்டம் தீட்டப்பட்டது. ரயில் பெட்டியின் வேக்யூம் குழாய்களை எப்படி துண்டிப்பது என்று ஒருரயில்வே அதிகாரி மூலம் கலோட்டா தெரிந்து கொண்டார்."

ஆனால் இந்தச் செய்திக்கு எந்த ஆதாராத்தையும் அந்தநாளிதழ் குறிப்பிடவில்லை.

paper1

மார்ச் 16ம் தேதி நாளிதழில் பக்கம் 1ல் இவ்வாறு ஒரு செய்திக்கு தலைப்பிடப்பட்டிருந்தது: "ஃபதே ஹ்கஞ்ச் மஸ்ஜிதிலிருந்து பயங்கர துப்பாக்கிச்சூடு!"

ஆனால் இது முற்றிலும் பொய்யாகப் புனையப்பட்ட செய்தி. முஸ்லிம்கள் ஹிந்துக்களைத் தாக்குவதற்காக பெருமளவில் ஒன்றுசேர்ந்து கொண்டிருந்ததாக பலப்பல கதைகள் செய்திகளாகவந்தன.

சமீபகாலங்களாக நடந்து வரும் இனப்படுகொலைகளை நாம் ஆராய்ந்து பார்த்தோமானால் நமக்கொரு உண்மை விளங்கவரும். அதாவது மீடியாவில் ஒரு பகுதியினர் பாதிக்கப்பட்டவர்களை தாக்குதல் புரிபவர்களாகவும், அநியாயமாகத் தாக்கி அக்கிரமம் புரிபவர்களை பாதிப்படைந்தவர்களாகவும் சித்தரிக்கும் ஒரு தந்திரத்தைக் கையாண்டு வருவதை நாம் உணரலாம்.

மார்ச் 24ம் தேதி குஜராத் சமாச்சார் நாளிதழில், பக்கம் 1ல் வெளிவந்த ஒரு செய்திக்கு இவ்வாறு தலைப்பிடப்பட்டிருந்தது: "சாட்கைவால் கோயிலுக்கு ஆபத்து. சர்சா கோவிலும், பாடசாலாவும்ஆபத்தில்இருக்கின்றன. அவை ரிமோட் கண்ட்ரோல் மூலம் தகர்க்கப்படும் அபாயத்தில் உள்ளன."

அதே நாளிதழில் பக்கம் 2ல் வெளிவந்த ஒரு செய்திக்குத் தலைப்பு இது: "பயங்கர ஆயுதங்களைக் கொண்டு தாக்குவதற்கு வாய்ப்பு. உளவுத்துறையினருக்குக் கிடைத்த செய்தி. மத, கல்வி நிறுவனங்களுக்குக் குறி. அனைத்துமாவட்டதுணைகண்காணிப்பாளருக்கும்எச்சரிக்கை."

மார்ச் 26ம்தேதி, குஜராத் சமாச்சார் நாளிதழில் கடைசிப் பக்கத்தில் இவ்வாறு ஒரு செய்தி வந்திருந்தது: "சபர்மதி எக்ஸ்பிரஸ் சம்பவம் முற்கூட்டியே நன்கு திட்டமிடப்பட்டது. நிறைய இளைஞர்கள் கொடும் குற்றங்களைப் புரிவதற்கு தயார் நிலையில் இருக்கிறார்கள். அவர்கள் பிலாலின் உத்தரவுக்காகக்காத்துக் கொண்டிருக்கிறார்கள்."

இந்தச் செய்திகளுக்கு எந்தஅடிப்படை ஆதாரங்களும் இல்லை. இப்படி பொய்ச் செய்திகளை அங்குள்ள நாளிதழ்கள் பரப்பிக்கொண்டே இருந்தன.

.இந்திய மீடியா உலகம் வேண்டுமென்றே சொல்லும் பொய்களையும், புரட்டுகளையும் நாம் சொல்லிக்கொண்டே போகலாம். ஆயுதங்களைக் கடத்துதல் என்ற பொய்ச் செய்தியாகட்டும், ஹவாலா பயங்கரவாதிகளின் தாக்குதல் போன்ற செய்திகளாகட்டும், அந்தச் செய்திகளின் பாணி ஒரேமாதிரியாக இருக்கும். காவல்துறைகூறும் கதைகள் அப்படியே வாந்தி எடுக்கப்பட்டு உண்மைபோல் செய்திகளாக வெளிவரும். இதுதான் இந்திய மீடியாவின் இன்றையநிலை.

ஆனால் இந்த மீடியாவை நாமும் எதிர் கொள்ளலாம். ஆக்கபூர்வமாக சில பணிகளைச் செய்யலாம். பாதிப்புகளை ஓரளவு தடுக்கலாம்.

ஆக்கம் : எம்.எஸ் அப்துல் ஹமீத்

Add comment

காயல் நியுஸ், வாசகர்கள் கருத்துக்களை வரவேற்கிறது. வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் நியுஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்த விதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். முரண்பாடான மரியாதைக்குறைவான, கண்ணியமில்லாத கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கும் அவைகளை நீக்குவதற்கும் எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு. தங்களது பெயர் மற்றும் கருத்துக்களை தமிழில் தட்டச்சு செய்யலாம். உதாரணமாக "காயல்பட்டினம்" என்று தட்டச்சு செய்ய ஆங்கிலத்தில் "kaayalpattinam" என்று தட்டச்சு செய்து Space bar-ஐ அழுத்தினால் தங்கள் தட்டச்சு செய்த சொல் தமிழாக மாற்றப்படும். ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.


Security code
Refresh

 

சுடச்சுட காயல் செய்திகள்! சுவையான இஸ்லாமிய கட்டுரைகள் !!
தொடர்பு கொள்ள : admin@kayalnews.com
© Copyright : Kayalnews.com