بسم الله الرحمن الرحيم
Wednesday 22nd May 2019 | 17 ரமலான் 1440AH
பதாகை
news menu left
news menu right

பதாகை

பதாகை

 • Google Bookmarks
 • Twitter
 • Windows Live
 • Facebook
 • MySpace
 • deli.cio.us
 • Digg
 • Newsvine
 • reddit
 • StumbleUpon
 • Yahoo! Bookmarks
 • Yigg
மனித நேயத்துக்கு வித்திட்ட பத்ர் யுத்தம்! அச்சிடுகமின்-அஞ்சல்
15 ஜூலை 2014 மாலை 08:13

,ஸ்லாமிய வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட்ட தினம் ரமழான் மாதம் பிறை 17வது நாளாகும். ரமழான் மாதம் மனிதர்களை மனித நேயமிக்க புனிதர்களாக மாற்ற வருகின்ற மாதம். இந்த மாதத்தில் தான் சத்தியத்திற்கும் அசத்தியத்திற்குமிடையில் போர் (பத்ர்) நடைபெற்றது.

இந்தப் போரின் மூலம் உலகளாவிய முஸ்லிம் உம்மத்துக்கு பல்வேறு படிப்பினைகள் தோற்றுவிக்கப்பட்டன. முஸ்லிம்களின் மன உறுதி, தியாகம், பொறுமை, சத்தியம், உண்மை, நேர்மை என்பன பரீட்சிக்கப்பட்டு இஸ்லாம் நிலைநாட்டப்பட்ட நாள்.

79157558

இந்நாளில் போரில் ஈடுபட்ட ஸஹாபாக்களை பத்ர் ஸஹாபாக்கள் தினம் என நினைவு கூருகின்றோம். இந்த யுத்தம் ஹிஜ்ரி இரண்டாம் ஆண்டில் நடைபெற்றது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மக்காவில் வாழ்ந்துகொண்டிருந்தபோது இஸ்லாமிய பிரசாரத்தை மேற்கொண்டார்கள். மக்கள் அநாச்சாரங்களில் வாழ்ந்து கொண்டிருந்தார்கள். அவர்களை நல்வழிப்படுத்துவதற்காக இஸ்லாத்தைப் போதித்தார்கள்.

இவ்வேளையில், மக்கத்து குறைஷிக் காபிர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கும் இஸ்லாத்தை ஏற்றவர்களுக்கும் அநியாயம் செய்தனர். கொடுமைகள் புரிந்தனர். இதனை சகிக்க முடியாமல் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முஸ்லிம்களை மக்கத்தை விட்டு மதீனாவுக்குச் சென்று வாழுமாறு பணித்தார்கள். நாயகம் (ஸல்) அவர்களும் மதினாவுக்குச் சென்றார்கள்.

மதீனத்து மக்கள் முஸ்லிம்களை வரவேற்று உபசரித்து மகிழ்ந்தனர். இஸ்லாம் மிகவேகமாக மதீனாவில் பரவியது. நாயகம் (ஸல்) அவர்களின் போதனைகளையும், கட்டளைகளையும் ஏற்றனர். இதனால் மக்கத்து குறைஷிக் காபிர்கள் பொறாமை கொண்டு முஸ்லிம் மக்கள் மீது போர் தொடுக்க முடிவு செய்தனர்.

குறைஷிகள் அதிகமான படையுடன் வந்திருந்தனர். ஆயிரம் பேர் கொண்ட காலாட் படை, எழுநூறு ஒட்டகைகள், நூறுபேர் கொண்ட குதிரைப் படை, யுத்த தளவாடங்கள் உட்பட குறைஷிகளின் முக்கிய தலைவர்களும் வந்திருந்தனர்.

குறைஷிகளின் ஆக்கிரமிப்பை எதிர்த்துப் போராட அல்லாஹ்வின் உத்தரவு முஸ்லிம்களுக்குக் கிடைத்தது. எதிரிகளுடன் போராட முன்னூற்று பதின்மூன்று முஸ்லிம் படை வீரர்கள் முஸ்லிம் படையில் இணைந்து கொண்டனர். இவர்களை அழைத்துக்கொண்டு குறைஷிக் காபிர்களை எதிர்த்துப் போராட நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் புறப்பட்டார்கள்.

பத்ர் எனும் இடத்தில் இருதரப்பினரும் சந்தித்தனர். எதிரிகளின் படைப்பலத்தையும், முஸ்லிம்களின் நிலைமையையும் அவதானித்த பெருமானார் (ஸல்) அவர்கள் அல்லாஹ்விடம் வெற்றிக்காகப் பிரார்த்தித்தார்கள். முஸ்லிம்களை அடியோடு அழித்துவிட முடியும் என்ற திடமான நம்பிக்கையுடன் எதிரிகள் முஸ்லிம்களுடன் போரில் ஈடுபட்டனர்.

போர் மும்முரமாக நடந்தது. முஸ்லிம்கள் ஒவ்வொருவரும் பல வீரர்களுக்கு ஈடாக நின்று போரிட்டார்கள். இப்போரில் அல்லாஹ்வின் உதவி இருந்தது. இதனால் முஸ்லிம்கள் வெற்றிபெற்றார்கள்.

சத்தியத்திற்கும், அசத்தியத்திற்கும் இடையில் நடைபெற்ற இந்தப் போரில் சத்தியம், உண்மை, நேர்மை, மனித நேயம் ஆகியன வென்றன. அசத்தியம் அழிந்து பொய்மை தோற்றது. அல்லாஹ் வாக்களித்தபடி முஸ்லிம்களைக் காப்பாற்றினான். இஸ்லாம் உண்மையான மார்க்கம் என பகிரங்கப்படுத்தப்பட்டது. நாயகம் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் உண்மையான தூதர் என்பதும் நிரூபிக்கப்பட்டது.

இந்த யுத்தத்தில் கலந்து கொண்ட ஸஹாபாக்கள் இஸ்லாமிய வரலாற்றில் என்றும் நினைவு கூரப்பட்டுக்கொண்டே உள்ளனர்.

பத்ர் ஸஹாபாக்களின் தியாகம், நேர்மை, மன வலிமை, இஸ்லாத்தின் பற்று இந்தப் போரில் வெற்றியடையச் செய்தது. எந்த ஒரு சக்தியாலும் சத்தியத்தையும், நேர்மையையும் ஒருபோதும் அழித்துவிட முடியாது என்பது நிரூபிக்கப்பட்டது. இந்த யுத்தத்தின் மூலம் நாங்கள் படிப்பினை பெறவேண்டும். இதற்காகத்தான் வாழ்நாளில் ஒவ்வொரு வருடமும் வருகின்ற ரமழானில் 17ம் நாள் இதனை உணர்த்தி நிற்கின்றது.

ஒவ்வொரு முஸ்லிமின் உள்ளத்திலும் ஈமானின் உறுதி செயலில் உண்மை, நடத்தையில் நேர்மை, இறையச்சம் ஆகியன இருக்க வேண்டும்.

இஸ்லாமிய நடைமுறைகளைப் பின்பற்றி வாழ்வதற்காக இஸ்லாத்தில் முதலாவதாக இடம்பெற்ற யுத்தம் பத்ர். இதன் மூலம் அல்லாஹ் இஸ்லாத்துக்கு வெற்றியைக் கொடுத்ததன் பயனாக இன்று நாம் முஸ்லிம்களாக வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.

பத்ர் ஸஹாபாக்களை நாம் இன்றைய தினம் நினைவு கூரும் அதேவேளை அவர்கள் விட்டுச் சென்ற நல்லெண்ணம், நற்குணம், உண்மை, நேர்மை, பொறுமை, சகிப்புத்தன்மை போன்ற குணாதிசயங்களை எம் வாழ்விலும் கடைப்பிடித்து இஸ்லாமிய பற்றுள்ள முஸ்லிம்களாக வாழ்வோமாக.

வல்லவன் அல்லாஹ் எமது நல்லெண்ணங்களையும், நற்குணங்களையும் மனித நேயமிக்கதாக ஆக்குவானாக.

ஆக்கம் : மெளலவி எஸ். எம். எம். முஸ்தபா ஃபலாஹி

நன்றி : தினகரன் - இலங்கை பதிப்பு

  TUESDAY, JULY ,15, 2014

Add comment

காயல் நியுஸ், வாசகர்கள் கருத்துக்களை வரவேற்கிறது. வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் நியுஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்த விதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். முரண்பாடான மரியாதைக்குறைவான, கண்ணியமில்லாத கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கும் அவைகளை நீக்குவதற்கும் எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு. தங்களது பெயர் மற்றும் கருத்துக்களை தமிழில் தட்டச்சு செய்யலாம். உதாரணமாக "காயல்பட்டினம்" என்று தட்டச்சு செய்ய ஆங்கிலத்தில் "kaayalpattinam" என்று தட்டச்சு செய்து Space bar-ஐ அழுத்தினால் தங்கள் தட்டச்சு செய்த சொல் தமிழாக மாற்றப்படும். ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.


Security code
Refresh

 

சுடச்சுட காயல் செய்திகள்! சுவையான இஸ்லாமிய கட்டுரைகள் !!
தொடர்பு கொள்ள : admin@kayalnews.com
© Copyright : Kayalnews.com