بسم الله الرحمن الرحيم
Friday 22nd September 2017 | 01 முஹர்ரம் 1439AH
பதாகை
news menu left
news menu right

பதாகை

பதாகை

 • Google Bookmarks
 • Twitter
 • Windows Live
 • Facebook
 • MySpace
 • deli.cio.us
 • Digg
 • Newsvine
 • reddit
 • StumbleUpon
 • Yahoo! Bookmarks
 • Yigg
சுவனமே இலக்கு! ஆன்மீக கட்டுரை!!அச்சிடுகமின்-அஞ்சல்
13 அக்டோபர் 2015 மாலை 09:35

நபித்தோழர்கள் நிம்மதி அற்றவர்களாக ஒருபோதும் இருக்கவில்லை. அவ்வாறெனில் அவர்களால் மட்டும் அது எவ்வாறு சாத்தியமாயிற்று..? சுவனத்தை இலக்காகக் கொண்டுசெயல்பட்டமைதான் அதற்கான காரணம். இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தமது தோழர்களின் உள்ளங்களின் அந்த சிந்தனையைத்தான் விதைத்தார்கள்.

சுவனத்திற்காக எதை வேண்டுமென்றாலும் இழக்கலாம் எனும் குறிக்கோளுடன் வாழ்ந்த நபித்தோழர் தான் சுஹைப் அர்ரூமி (ரலி).

ஏழை நபித்தோழர். ரோம் தேசத்தைச் சார்ந்தவர். மக்காவுக்கு வந்து வியாபாரம் செய்து பெரும் செல்வந்தர் ஆனார். இஸ்லாத்தை ஏற்கின்றார். வியாபாரம் செல்வச் செழிப்புடன் நடைபெற்றுக்கொண்டிருக்கும்போது 'ஹிஜ்ரத்' எனும் நாடு துறத்தல் நடைபெறுகிறது.

சம்பாதித்த மொத்த செல்வத்தையும் எடுத்துக்கொண்டு மதீனாவுக்குப் புறப்படத் தயார் ஆகிறார். செல்வத்தின் மதிப்பு எவ்வளவு என்று எமக்குத் தெரியாது. ஆனால் அவற்றைச் சுமக்க பதினைந்து ஒட்டகங்கள் தேவைப்பட்டது என்பது மட்டும் வரலாற்றுச் செய்தி. சுஹைப் (ரலி) மதீனாவுக்குப் புறப்படுகிறார் என்ற செய்தி குறைஷிகளுக்குத் தெரியவந்தபோது, பின் தொடர்ந்து வந்து அவரைப் போகவிடாமல் தடுத்தனர். வாக்குவாதம் நடைபெற்றது.

குறைஷிகள்: 'எங்கு செல்கிறீர்.. சுஹைப்?'

சுஹைப் (ரலி): 'இறைத்தூதர் (ஸல்) அவர்கள் இருக்கும் இடத்திற்கு இறைவழியில் நாடு துறந்து (ஹிஜ்ரத்) செல்கிறேன்'.

குறைஷிகள்: 'சுஹைப்..! மக்காவுக்கு வரும்போது நீர் ஏழையாய் இருந்தீர். எங்களிடம் வந்தபின்னரே செல்வ நிலையை அடைந்தீர். மக்காவை விட்டு செல்வதாக இருந்தால் தாராளமாகச் செல்லலாம். ஆனால், இந்த செல்வம் எல்லாம் எங்களுடையது. இவற்றை இங்கே விட்டுவிட்டு நீங்கள் மட்டும் செல்வதாக இருந்தால் செல்லுங்கள். இவற்றை எடுத்துச் செல்ல ஒருபோதும் நாங்கள் அனுமதிக்க மாட்டோம்'.

இந்த இடத்தில் சுஹைப் (ரலி) அவர்களுக்குப் பதிலாக நீங்களோ நானோ இருந்திருந்தால் என்ன செய்திருப்போம் என்பதை கொஞ்சம் சிந்தனை செய்துபார்ப்போம். அங்குதான் நமக்கும் நபித்தோழர்களுக்குமான பெரிய வேறுபாடு பளிச்சென்று தெரியவருகிறது.

பணத்தைத் தரமுடியாது என்றால்.. மக்காவிலேயே இருக்கலாம். ஆனால், இருபெரும் பேரிழப்புகள் ஏற்படுமே. சாதாரண இழப்புகளா அவை..? ஒன்று: அருமை நபி (ஸல்) அவர்களுடன் இருக்கும் பாக்கியம் பறிபோகும். இரண்டு: ஹிஜ்ரத் எனும் நாடு துறக்கும் புண்ணியம் கிடைக்காமல் போகும். இது சாதாரண இழப்பு அல்லவே.

ஒரு தீர்க்கமான முடிவுக்கு வந்தபின் சுஹைப் (ரலி) குறைஷிகளிடம் கேட்டார்: 'எனது முழு செல்வத்தையும் நான் விட்டுத்தந்தால்.. நான் விரும்பியபடி மதீனா செல்வதற்கு நீங்கள் அனுமதிப்பீர்களா..?'

குறைஷிகள்: 'ஆம்'

சுஹைப் (ரலி): 'அவ்வாறெனில் இதோ எனது முழுச் செல்வமும்..! எடுத்துக்கொள்ளுங்கள்!' என்று கூறி தமது ஒட்டகத்தில் ஏறி பயணிக்க முயன்றார் சுஹைப் (ரலி) அவர்கள்.

குறைஷிகள் விடவில்லை. 'சுஹைப்..! நீர் பயணிக்கும் இந்த ஒட்டகம்.. இதுவும் எங்கள் நாட்டில் சம்பாதித்தது தானே..!' என்று அவர் பயணித்த ஒட்டகத்தையும் பிடுங்கினர்.

சுஹைப் (ரலி): 'ஒட்டகமா வேண்டும்.. இதோ எனது ஒட்டகம். எடுத்துக்கொள்ளுங்கள்'.

அத்தோடு விட்டால் கூட பரவாயில்லை.. 'சுஹைப்! நீர் அணிந்திருக்கும் இந்த விலை உயர்ந்த மேலாடை..?'

சுஹைப் (ரலி): 'நான் அணிந்திருக்கும் ஆடையும் வேண்டுமா.. இதோ எனது ஆடை. வைத்துக்கொள்ளுங்கள். இப்போது நான் செல்லலாமா..?'

குறைஷிகள்: 'ஆம், தாராளமாக..!'

பெரும் செல்வந்தர்.. அணிந்திருந்த ஆடையைத் தவிர ஐந்து நிமிட நேரத்தில் அனைத்தையும் இழந்து.. ஐயோ இழந்துவிட்டோமே.. என்ற எவ்வித கவலையும் இன்றி, இறைத்தூதர் (ஸல்) அவர்களைச் சந்திக்கச் செல்கிறோம் என்ற வேட்கையில் உதடுகளில் புன்னகையைத் தேக்கியவராக மதீனாவை நோக்கி வேகமாக நடக்கிறார். அவரது காலடிகள் மட்டுமே மதீனாவை நோக்கியதாக இருந்தது. ஆனால், சிந்தை முழுவதும் சுவனத்தை அடைவது எப்படி என்ற லட்சிய வேட்கையே ஓடிக்கொண்டிருந்தது.

மதீனாவின் எல்லையை அடைந்ததும்.. அங்கே அவரை வரவேற்க இறைத்தூதர் (ஸல்) அவர்கள் புன்னகையுடன் காத்து நிற்கின்றார்கள். சுஹைப் (ரலி) அவர்களைக் கண்டதும் என்ன வார்த்தைகளைக் கூறி நபிகளார் வரவேற்றார்கள் தெரியுமா..

'சுஹைப்..! வெற்றிகரமான வியாபாரம்..! லாபகரமான வணிகம்!'

நூறு சதவீதம் வெற்றிகரமான வியாபாரம் என்ற வார்த்தைகளைக் கூறி வரவேற்கின்றார்கள் நபி (ஸல்) அவர்கள்.

சுஹைப் (ரலி) இழந்தது தமது வாழ்நாள் முழுவதும் சம்பாதித்த செல்வத்தை. ஆனால் நபிகளாரோ அதனை வியாபாரம் என்கிறார்கள். அதுவும் லாபகரமான வியாபாரம் என்று கூறுகின்றார்கள். எனில், இந்த வியாபாரத்தின் மூலம் சுஹைப் (ரலி) எதை விற்றார்..? எதை வாங்கினார்..?

ஆம், தமது முழுச் சொத்தையும் கொடுத்து அவர் சுவனத்தை வாங்கிவிட்டார். அதையே வெற்றிகரமான வியாபாரம் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

இந்த சிந்தனைத் தெளிவு நம்மிடம் இருந்தால்.. ஒருபோதும் நிம்மதியை இழக்க மாட்டோம். இழந்தது இறைவனுக்காக என்றால் அதைவிட சிறந்த ஒன்றை அதே இறைவன் தருவான் என்ற உறுதி இருந்தால் எது வந்தபோதும் ஒருபோதும் கலங்க மாட்டோம்.

ஆக்கம் : முஹம்மத் நூஹ் மஹ்ழரி

Add comment

காயல் நியுஸ், வாசகர்கள் கருத்துக்களை வரவேற்கிறது. வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் நியுஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்த விதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். முரண்பாடான மரியாதைக்குறைவான, கண்ணியமில்லாத கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கும் அவைகளை நீக்குவதற்கும் எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு. தங்களது பெயர் மற்றும் கருத்துக்களை தமிழில் தட்டச்சு செய்யலாம். உதாரணமாக "காயல்பட்டினம்" என்று தட்டச்சு செய்ய ஆங்கிலத்தில் "kaayalpattinam" என்று தட்டச்சு செய்து Space bar-ஐ அழுத்தினால் தங்கள் தட்டச்சு செய்த சொல் தமிழாக மாற்றப்படும். ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.


Security code
Refresh

 

செய்திகள்

ஊழலை எதிர்ப்பவர்கள் அனைவருமே தனது உறவினர்கள்: நடிகர் கமல் , டில்லி முதல்வர் கெஜ்ரிவால் சந்திப்பு!!
செவ்வாயன்று ஆய்வுகள் மேற்கொண்டோம்! சிங்கித்துறையில் மீன்பிடி தளம் / அணுகு சாலை குறித்த வழக்கில் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் வாக்குமூலம்!
நாளை ஆகஸ்ட் 22 அன்று நகர மஜக சார்பில் ரோஹிங்யா முஸ்லிம்கள் இன அழிப்புக்கு எதிரான" மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்!
காயல்பட்டினம் அரசு மருத்துவமனையின் மூன்றாவது மருத்துவராக டாக்டர் SD ஹமீது ஹில்மி பணியில் இணைந்தார்! சுகாதாரத்துறையின் முதன்மை செயலர், DMS இயக்குனர் ஆகியோருக்கு நடப்பது என்ன? குழுமம் நன்றி!!*
அக். 03இல் நடைபெறும் குருதிக்கொடை முகாமில் பங்கேற்க 3 வழிகளில் முன்பதிவு செய்யலாம்! “நடப்பது என்ன?” குழுமம் அறிவிப்பு!!

சுடச்சுட காயல் செய்திகள்! சுவையான இஸ்லாமிய கட்டுரைகள் !!
தொடர்பு கொள்ள : admin@kayalnews.com
© Copyright : Kayalnews.com