بسم الله الرحمن الرحيم
Friday 22nd September 2017 | 01 முஹர்ரம் 1439AH
பதாகை
news menu left
news menu right

பதாகை

பதாகை

  • Google Bookmarks
  • Twitter
  • Windows Live
  • Facebook
  • MySpace
  • deli.cio.us
  • Digg
  • Newsvine
  • reddit
  • StumbleUpon
  • Yahoo! Bookmarks
  • Yigg
சுவனத்தின் விலை என்ன? கட்டுரை!அச்சிடுகமின்-அஞ்சல்
20 அக்டோபர் 2015 மாலை 08:57

நபித்தோழர்களில் அன்சாரிகள் என்று அழைக்கப்படும் மதீனாவாசிகளுக்கு என்றுமே வரலாற்றில் தனி இடமும் தனிச்சிறப்பும் உள்ளது. 'அன்சாரிகள்' என்றால் 'உதவியாளர்கள்' என்று பொருள். இது ஒரு சிறப்புப் பெயர். இந்த சிறப்புப் பெயரை அடைந்துகொள்வதற்கு முன்னர் அவர்களுடைய பெயர் என்ன தெரியுமா..? அவ்ஸ்– கஸ்ரஜ்.

ஆம் இவ்வாறுதான் அவர்களுடைய பழைய பெயரை வரலாறு பதிவு செய்து வைத்துள்ளது. எனில், அவர்கள் எவ்வாறு இந்த சிறப்புப் பெயருக்குத் தகுதி படைத்தவர் களாக மாறினார்கள்..?

இறைமார்க்கத்திற்கும் இறைதூதருக்கும் எவ்வகையிலாவது உதவிகள் புரிய வேண்டும் என்ற ஒற்றை லட்சியத்துடன் செயலாற்றியதால். பதவி சுகங்களுக்கோ அதிகார மோகத்திற்கோ அவர்கள் ஆசைப்படவில்லை. அவர்களுடைய லட்சியம் எல்லாம் இறைமார்க்கத்திற்கு உதவிகள் புரிய வேண்டும். அதன் மூலம் தங்களுக்கு வாக்களிக்கப்பட்ட சுவனத்தை அடைந்துகொள்ள வேண்டும் என்பது மட்டுமே அவர்களுடைய ஒரே குறிக்கோளாக இருந்தது.

அவ்வாறெனில்.. சுவனம் குறித்த உத்தரவாதத்தை அவர்களுக்கு வழங்கியது யார்..? எப்போது வழங்கப்பட்டது..?

ஆம், அண்ணல் நபி (ஸல்) அவர்கள் தான் அந்த உத்தரவாதத்தை வழங்கினார்கள்.

எப்போது வழங்கினார்கள் தெரியுமா..?

மக்காவில் உள்ள அகபா என்ற பள்ளத்தாக்கில் வைத்துதான் அந்த உத்தரவாதத்தை வழங்கினார்கள்.

அது என்ன நிகழ்வு என்பது குறித்து அறிய வேண்டும் என்ற ஆவல் மனதுக்குள் எழுகிறது அல்லவா.. வாருங்கள் பார்ப்போம்.

அன்சாரிகளின் செயல்களுக்கு உத்வேகம் கொடுத்த அந்த சம்பவம் குறித்து தெரிந்துகொள்ளலாம்.

இஸ்லாம் தழைத்தோங்குவதற்கு முன்னரே நடைபெற்ற வரலாற்றுச் சிறப்பு மிக்க ஓர் ஒப்பந்தம் அது. அதில் பெண்களும் கலந்துகொண்டனர் என்பது அந்த ஒப்பந்தத்திற்கு மேலும் சிறப்பு சேர்க்கின்றது. ஆரம்ப கால மதீனத்து அன்சாரிகள் மட்டும் அந்நிகழ்வில் கலந்துகொண்டனர். அண்ணலாரை மதீனாவுக்கு வந்துவிடுமாறு அழைப்பு விடுத்தனர் அவர்கள்.

அந்த அழைப்பை மையமாக வைத்து கூடியிருந்த மக்களிடையே அப்பாஸ் (ரலி) பேசத் தொடங்கினார்கள்: 'மதீனாவாசிகளே..! அல்லாஹ்வின் தூதருக்கு இதுநாள் வரை நாங்களே பாதுகாப்பாளர்களாக இருந்தோம். அவர் கள் உங்களிடம் வரவேண்டும் என்று நீங்கள் விரும்பினால், அவர்களுடைய பாதுகாப்புக்கு நீங்கள் உத்தரவாதம் வழங்க வேண்டும். இல்லையேல் அவர்களை விட்டுவிடுங்கள்.. நாங்களே பார்த்துக்கொள்கின்றோம்..'

அப்பாஸ் (ரலி) அவர்கள் பேசி முடித்ததும்.. 'உங்கள் பேச்சைக் கேட்டோம் அப்பாஸ்..! இனி அல்லாஹ்வின் தூதர் பேசட்டும்..!' என்று கூறி, 'அல்லாஹ்வின் தூதரே! தாங்கள் மதீனாவுக்கு வாருங்கள். அதற்காக.. உங்களுக்காகவும் உங்கள் இறைவனுக்காகவும் நீங்கள் விரும்பிய நிபந்தனைகளை எங்கள் மீது விதித்துக்கொள்ளலாம். எதுவாக இருந்தாலும் கூறுங்கள்..' என்று நபி (ஸல்) அவர்களிடம் அன்சாரிகள் வேண்டினர்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பேசத்தொடங்கினார்கள்: 'நான் அங்கு வருவதாக இருந்தால் பின்வரும் நிபந்தனைகளுக்கு நீங்கள் கட்டுப்பட வேண்டும். 1) சுகத்திலும், துக்கத்திலும் என் பேச்சுக்கு நீங்கள் கட்டுப்பட வேண்டும். 2) சிரமத்திலும், இலகுவிலும் இறைப்பாதையில் செலவு செய்ய வேண்டும். 3) நன்மையை ஏவி தீமையைத் தடுக்க வேண்டும். 4) யாருடைய பழிச்சொல்லுக்கும் செவிசாய்க்காமல் இறைவனுக்காக மட்டுமே பணியாற்ற வேண்டும். 5) உங்கள் உயிர்களையும், உடைமைகளையும் எதிரிகளிடமிருந்து எப்படிக் காப்பீர்களோ அப்படியே என்னையும் காக்க வேண்டும்'.

கேட்பதற்கு இலகுவாகத் தோன்றினாலும் மிகவும் அபாயகரமான நிபந்தனைகள் இவை. ஆயினும் எதைக் குறித்தும் கவலைப்படவில்லை அன்சாரிகள். அவர்களுடைய கவலை எல்லாம் இந்த நிபந்தனைகளுக்குக் கட்டுப்பட்டால் தங்களுக்கு என்ன கிடைக்கும் என்பதாக மட்டுமே இருந்தது.

அதனை இறைத்தூதர் (ஸல்) அவர்களிடமே கேட்டார்கள்: 'அல்லாஹ்வின் தூதரே! இந்த நிபந்தனைகளுக்கு நாங்கள் கட்டுப்பட்டு நடந்தால் எங்களுக்கு என்ன கிடைக்கும்..?'

அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: 'சுவனத்தைத் தவிர வேறு எதையும் என்னால் வாக்களிக்க முடியாது. உங்களுக்கு சொர்க்கம் கிடைக்கும்..!'

உடனே அன்சாரிகள் அனைவரும் ஒருமித்த குரலில், 'இது ஓர் லாபகரமான வணிகம்..! இந்த வணிகத்தை நாங்கள் ஒருபோதும் முறிக்க மாட்டோம். முறிக்குமாறு கோரவும் மாட்டோம். இதிலிருந்து நாங்கள் ஒருபோதும் பின்வாங்கவும் மாட்டோம். அல்லாஹ்வின் தூதரே..! நீட்டுங்கள் உங்கள் கரங்களை..! இதோ நாங்கள் ஒப்பந்தம் செய்கிறோம்'.

கூடியிருந்த ஒட்டுமொத்த அன்சாரிகளும் அண்ணல் நபி (ஸல்) அவர்களிடம் உடன்படிக்கை செய்ய முன்னோக்கி விரைந்து வந்தனர். ஒருவர் முதுகில் ஒருவர் ஏறி.. யார் முதலில் இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் உடன்படிக்கை செய்வது என்று போட்டியிட்டனர். ஒவ்வொருவருடைய எண்ண வேட்கையும்.. யார் முதலில் உடன்படிக்கைச் செய்கின்றாரோ அவரே முதலில் சுவனத்திற்குள் முதல் காலடி எடுத்து வைப்பார் என்பதாகவே இருந்தது.

நபிகளார் கொடுத்த இந்த உத்தரவாதம் தான் அன்சாரிகளை ஓர் லட்சிய வேட்கையுடன் இயங்கச் செய்தது.

இந்த ஒப்பந்தம் நமக்குச் சொல்லும் ஒரே செய்தி இதுதான்.. யார் அல்லாஹ்விடம் இவ்வாறு ஒப்பந்தம் செய்கின்றாரோ, மேலும் அதற்கேற்ப செயலாற்றுகின்றாரோ அவருக்கு மகத்தான கூலியும், வானம்–பூமி அளவுக்கு விசாலமான சுவனமும் உண்டு எனும் நற்செய்திதான். இந்த நற்செய்தி தரும் நிம்மதியைவிட வேறெந்த செய்திதான் நமக்கு நிம்மதியைத் தரும்..?!

ஆக்கம்: முஹம்மத் நூஹ் மஹ்ழரி

Add comment

காயல் நியுஸ், வாசகர்கள் கருத்துக்களை வரவேற்கிறது. வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் நியுஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்த விதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். முரண்பாடான மரியாதைக்குறைவான, கண்ணியமில்லாத கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கும் அவைகளை நீக்குவதற்கும் எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு. தங்களது பெயர் மற்றும் கருத்துக்களை தமிழில் தட்டச்சு செய்யலாம். உதாரணமாக "காயல்பட்டினம்" என்று தட்டச்சு செய்ய ஆங்கிலத்தில் "kaayalpattinam" என்று தட்டச்சு செய்து Space bar-ஐ அழுத்தினால் தங்கள் தட்டச்சு செய்த சொல் தமிழாக மாற்றப்படும். ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.


Security code
Refresh

 

செய்திகள்

ஊழலை எதிர்ப்பவர்கள் அனைவருமே தனது உறவினர்கள்: நடிகர் கமல் , டில்லி முதல்வர் கெஜ்ரிவால் சந்திப்பு!!
செவ்வாயன்று ஆய்வுகள் மேற்கொண்டோம்! சிங்கித்துறையில் மீன்பிடி தளம் / அணுகு சாலை குறித்த வழக்கில் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் வாக்குமூலம்!
நாளை ஆகஸ்ட் 22 அன்று நகர மஜக சார்பில் ரோஹிங்யா முஸ்லிம்கள் இன அழிப்புக்கு எதிரான" மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்!
காயல்பட்டினம் அரசு மருத்துவமனையின் மூன்றாவது மருத்துவராக டாக்டர் SD ஹமீது ஹில்மி பணியில் இணைந்தார்! சுகாதாரத்துறையின் முதன்மை செயலர், DMS இயக்குனர் ஆகியோருக்கு நடப்பது என்ன? குழுமம் நன்றி!!*
அக். 03இல் நடைபெறும் குருதிக்கொடை முகாமில் பங்கேற்க 3 வழிகளில் முன்பதிவு செய்யலாம்! “நடப்பது என்ன?” குழுமம் அறிவிப்பு!!

சுடச்சுட காயல் செய்திகள்! சுவையான இஸ்லாமிய கட்டுரைகள் !!
தொடர்பு கொள்ள : admin@kayalnews.com
© Copyright : Kayalnews.com