بسم الله الرحمن الرحيم
Saturday 18th November 2017 | 28 ஸஃபர் 1439AH
பதாகை
news menu left
news menu right

பதாகை

பதாகை

  • Google Bookmarks
  • Twitter
  • Windows Live
  • Facebook
  • MySpace
  • deli.cio.us
  • Digg
  • Newsvine
  • reddit
  • StumbleUpon
  • Yahoo! Bookmarks
  • Yigg
சமாதானத்தை விதையுங்கள்..ஆன்மீக கட்டுரை!அச்சிடுகமின்-அஞ்சல்
31 அக்டோபர் 2015 மாலை 03:49

இன்றைய காலகட்டத்தில், மனிதர்கள் இயந்திர கதியில் இயங்குகின்றனர். எங்கு நோக்கினும் பரபரப்பு, அமைதியின்மை, நிம்மதியற்ற தன்மை நிலவுகிறது. குடும்பத்தில், பணியிடத்தில் கருத்துவேறுபாடுகளும், சண்டை சச்சரவுகளும் மிகுந்துள்ளன.

கல்வி அறிவு குறைவாக இருந்த காலத்தில் வாழ்ந்த நம் முன்னோர்கள், கண்ணியமான, கட்டுப்பாடான வாழ்வை நடத்தினார்கள். எந்த நவீன கண்டுபிடிப்பும் இல்லாத காலத்தில் வேறுபாடுகள் இன்றி ஒற்றுமையாய், உறவுகளைப்பேணி வாழ்ந்தனர்.

ஆனால் இன்றைய நிலை என்ன? விஞ்ஞான வளர்ச்சியும், நவீனமும் நமது வாழ்க்கையை மேம்படுத்தி இருக்கின்றன. ஆனால் உள்ளங்கள் பிளவுபட்டு பிரிந்துள்ளன. பிரச்சினை வந்தால் அதை தீர்ப்பதற்கு பதில் தூண்டி விடுவதற்கான கூட்டமே நம்மிடையே நிறைந்திருக்கின்றன. மனிதன் தவறு செய்வது இயல்பு. அந்த தவறை உணர்ந்து திருத்திக் கொள்வதற்கு அறிவும் கொடுக்கப்பட்டிருக் கிறது.

தவறு செய்வது மனிதம், திருந்தி வாழ்வது புனிதம். ஆனால் மனிதனை புனிதனாக மாறவிடாமல் அவனுக்குள் புதைந்து கிடக்கும் வன்மம், பகைமை, பொறாமை, கோபம் போன்ற தீயகுணங்கள் தடுக்கின்றன.

உலகிலும் சரி, சமுதாயத்திலும் சரி, குடும்பங்களிலும் சரி, பிரச்சினைகள் ஏற்பட்டால் அதை சரி செய்து கொள்வதற்கு உங்களில் யாராவது முயற்சி செய்யுங்கள் என்று அருள்மறை திருக்குர்ஆன் இவ்வாறு வழிகாட்டுகின்றது:

'நிச்சயமாக நம்பிக்கையாளர்கள் அனைவரும் சகோதரர்களே! ஆகவே உங்கள் சகோதரர்களிடையே ஒழுங்கையும், சமாதானத்தையும் நிலை நிறுத்துங்கள். இதில் அல்லாஹ்விற்கு பயந்து நடங்கள், இதன் காரணமாக அல்லாஹ்வுடைய அருளை நீங்கள் அடைவீர்கள்'. (49–10)

சண்டையிட்டுக் கொண்டிருக்கும் இருவரின் வாழ்விலும் அக்கறை கொண்ட ஒருவர் நிச்சயமாக அவர்களிடையே சமாதானத்தை உண்டாக்க முடியும் என்றால், அதற்கு முயற்சி செய்ய வேண்டும். ஆனால் சிலர் நமக்கு எதற்கு வம்பு, இதனால் ஒருவரது வெறுப்பை சம்பாதிக்க நேரிடுமே என்று தயங்கி ஒதுங்கலாம். இது தவறாகும். மேலும் கடமையை செய்யத் தவறியவர் என்ற நிலையைத்தான் இறைவனிடம் பெற்றுத் தரும்.

ஆனால், அதே மனிதன் அல்லாஹ்வின் அருளை நாடி, சமாதானத்திற்கு முயற்சி செய்து ஒரு முடிவை சொன்னால், முதலில் ஒரு பகையை அவன் எதிர்பார்க்கலாம். அல்லாஹ்வின் அருள் காரணமாக நாளடைவில் பாதிக்கப்பட்டவனின் மனநிலை மாறி, 'அன்று அவர் சொன்னது சரிதான்' என்ற ஞானம் ஏற்படும்.

இதுமட்டுமல்ல, எந்த ஒரு செய்தியையும் தீர விசாரிக்காமல் அப்படியே நம்புவது அறிவுடைமை ஆகாது. அதைப்பற்றி திருக்குர்ஆன் இவ்வாறு கூறுகிறது:

'நம்பிக்கையாளர்களே! யாதொரு விஷமி உங்களிடம் யாதொரு செய்தியைக் கொண்டு வந்தால், அதன் உண்மையை அறியும் பொருட்டு, அதனை தீர்க்க விசாரணை செய்து கொள்ளுங்கள், இல்லையெனில் அவனுடைய சொல்லை நம்பி அறியாமையால் யாதொரு மக்களுக்கு நீங்கள் தீங்கிழைத்துவிட்டு, பின்னர் நீங்கள் செய்தவைகள் பற்றி நீங்களே துக்கித்து கவலைப்படும்படி நேர்ந்துவிடும்'. (49–6)

இதுபோல கருத்து வேறுபாடு ஏற்பட்ட இரண்டு தரப்பினரிடையே சமாதானத்தை ஏற்படுத்த வேண்டும் என்றால் அதற்கும் கீழ்க்கண்ட வழிமுறையைச் சொல்லித்தருகிறது திருக்குர்ஆன்:

'நம்பிக்கையாளர்களில் இரு வகுப்பார்கள் தங்களுக்குள் சச்சரவு செய்து கொண்டால் அவர்களை சமாதானப்படுத்தி விடுங்கள். அவர்களில் ஒரு வகுப்பார் மற்றொரு வகுப்பார் மீது வரம்புமீறி அநியாயம் செய்தால், அநியாயம் செய்தவர்கள் அல்லாஹ்வின் கட்டளையின் பக்கம் வரும்வரையில் அவர்களுடன் போர் புரியுங்கள். அவர்கள் அல்லாஹ்வின் கட்டளையின் பக்கம் திரும்பி விட்டால் நியாயமான முறையில் அவ்விரு வகுப்பாரிடையே சமாதானம் செய்து நீதமாக தீர்ப்பளியுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீதி செய்பவர்களை நேசிக்கின்றான்'. (49–9)

'அவர்கள் சமாதானத்திற்கு இறங்கி வந்தால், நீங்களும் அதன் பக்கம் இணங்கி வாருங்கள். அல்லாஹ்விடமே பொறுப்பு சாட்டுங்கள். நிச்சயமாக அவன் செவியுறுபவனும், அனைத்தையும் நன்கு அறிந்தவனாகவும் இருக்கின்றான்'. (8–61)

எங்கெல்லாம் முடியுமோ அங்கெல்லாம் சமாதானத்தை விதையுங்கள். இதனால் சமுதாயம் மேம்படும். இந்த சமாதானங்கள் சகோதர சகோதரிகளின் உறவை சரி செய்யலாம். பங்காளிகளின் பகையை மறக்கடிக்கலாம். இளம் உள்ளங்களின் மனம் மற்றும் மண முறிவுகளுக்கு மாற்றங்களை ஏற்படுத்தி தரலாம்.

இத்தகைய சமாதானங்கள், இதயங்கள் இணைந்து, மனங்கள் ஒன்றுபட்டு, ஒவ்வாமைகள் ஒதுக்கப்பட்டு, மாச்சரியங்கள் களையப்பட்டு, நியாயமான சமாதானமாய் இருக்க வேண்டும். இந்த சமாதானம் இழிவுதரும் வகையில் மண்டியிட்டு இறைஞ்சி பெறக்கூடியதாக இருக்கக்கூடாது. அதனையும் இவ்வாறு அழகாய் கோடிட்டு காட்டுகிறது திருக்குர்ஆன்:

'நம்பிக்கையாளர்களே! இழிவு தரக்கூடிய விதத்தில் நீங்கள் தைரியமிழந்து சமாதானத்தை கோராதீர்கள்'. (47–35)

ஏனென்றால் அவ்வாறு கிடைக்கும் சமாதானம் நிலைத்திருப்பதில்லை.

'பாதிக்கப்படக்கூடியவர் நம் நெருங்கிய சொந்தமாக இருந்தாலும் நீங்கள் நியாயத்தையே கூறுங்கள்' என்ற நபிமொழிக்கேற்ப சமாதானம் செய்து வைப்பவர் விருப்பு, வெறுப்பு இன்றி, பார பட்சமின்றி, நீதியின் அடிப்படையில் செயல்பட வேண்டும்.

அருமை சஹாபாக்கள் வாழ்க்கையில் எத்தனையோ சிறப்புமிகு நிகழ்வுகள் நிகழ்ந்திருக்கின்றன. அவை எல்லாம் நம் வாழ்விற்கு வழி காட்டியாய் இன்றும் நிலைத்திருக்கின்றன. அல்லாஹ் நீதி செலுத்துவதை விரும்புகிறான். நீதி செலுத்துபவர்களை தன் நேசனாக்கி கொள்கின்றான். எனவே சமாதானம் செய்து வைப்பதற்கு தகுதியும் வாய்ப்பும் உள்ளவர்கள் அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, வேறுபட்ட உள்ளங்களை இணைத்து ஒற்றுமையை ஏற்படுத்துங்கள். அல்லாஹ் நம் அனைவரையும் பொருத்திக் கொள்வான். சமாதானத்தை விதையுங்கள், அதன் மூலம் சமூகங்கள் மேம்படும்.

ஆக்கம் :

– எம். முஹம்மது யூசுஃப், உடன்குடி.

Add comment

காயல் நியுஸ், வாசகர்கள் கருத்துக்களை வரவேற்கிறது. வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் நியுஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்த விதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். முரண்பாடான மரியாதைக்குறைவான, கண்ணியமில்லாத கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கும் அவைகளை நீக்குவதற்கும் எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு. தங்களது பெயர் மற்றும் கருத்துக்களை தமிழில் தட்டச்சு செய்யலாம். உதாரணமாக "காயல்பட்டினம்" என்று தட்டச்சு செய்ய ஆங்கிலத்தில் "kaayalpattinam" என்று தட்டச்சு செய்து Space bar-ஐ அழுத்தினால் தங்கள் தட்டச்சு செய்த சொல் தமிழாக மாற்றப்படும். ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.


Security code
Refresh

 

செய்திகள்

அல்ஜாமிஉல் அஸ்ஹர் சார்பில் தமிழ்நாடு மாநிலம் தழுவிய திருக்குர்ஆன் மனன திறனாய்வுப் போட்டி! உமராபாத் மாணவர் முதற்பரிசாக ரூ.50 ஆயிரம் பெற்றார்!!
“நடப்பது என்ன?” குழுமம் நடத்திய நிகழ்ச்சியில், போதைப் பொருட்களின் தீமைகள் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (SP) உரை! நகர பள்ளி மாணவர்கள் திரளாகப் பங்கேற்பு!!
நகரில் வெட்டும் ஒரு மரத்திற்குப் பகரமாக 20 மரங்களை நட்டுப் பராமரிக்க, அரசுக்கு “நடப்பது என்ன?” குழுமம் கோரிக்கை!
அரசு சேவைகளைப் பெற லஞ்சம் கோரப்பட்டால், ஊழல் நடப்பதை அறிந்தால், புகார் அளிக்க வேண்டிய விபரங்கள்! “நடப்பது என்ன?” குழுமம் வெளியீடு!!
சாலையை மறித்துப் போக்குவரத்துக்கு இடையூறாகவுள்ள கீழ சித்தன் தெரு, நெய்னார் தெரு மரங்களை அகற்றி ஏலம் விட கோட்டாட்சியர் உத்தரவு! “நடப்பது என்ன?” குழும மனு மீது நடவடிக்கை!!

சுடச்சுட காயல் செய்திகள்! சுவையான இஸ்லாமிய கட்டுரைகள் !!
தொடர்பு கொள்ள : admin@kayalnews.com
© Copyright : Kayalnews.com