بسم الله الرحمن الرحيم
Friday 19th January 2018 | 02 ஜமாதுல் அவ்வல் 1439AH
பதாகை
news menu left
news menu right

பதாகை

பதாகை

  • Google Bookmarks
  • Twitter
  • Windows Live
  • Facebook
  • MySpace
  • deli.cio.us
  • Digg
  • Newsvine
  • reddit
  • StumbleUpon
  • Yahoo! Bookmarks
  • Yigg
சுவனம் தரும் நற்செயல்கள்! கட்டுரை!!அச்சிடுகமின்-அஞ்சல்
03 நவம்பர் 2015 காலை 08:37

சமூகப் பிரச்சினைகளை தீர்ப்பதன் மூலம் ஒரு குடும்பமும், நாடும் வளம் பெறமுடியும் என்பதை இஸ்லாம் பல வழிகளில் வலியுறுத்துகிறது. குறிப்பாக சமூக பிரச்சினைகளுக்கு ஏற்ற தீர்வுகளை சொல்லி இருக்கிறது.

பெற்றோருக்கு பணிவிடை செய்தல், கல்வியை நாடிச்சென்று கற்றுக்கொள்ளுதல், நோயாளிகளைத் தேடிச்சென்று நலம் விசாரித்தல் ஆகியவற்றின் மூலம் ஒருவருக்கு சுவனம் கிடைக்கும் என்று இஸ்லாம் வலியுறுத்தியதை கடந்த வாரம் பார்த்தோம். அதன் தொடர்ச்சியாக இந்த வாரம்...

எந்த நிலையிலும் பொறுமை அவசியம்

பெரும் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் சிலபோது.. 'எனக்கு மட்டும் ஏன் இந்தச் சோதனை..? இறைவா..! உனக்குக் கருணையே கிடையாதா..?' என்று இறைவனையே நிந்தனை செய்வார்கள்.

ஆனால் அதன் மூலமாகக் கூட இறைவன் சுவனப்பேற்றைத் தருகின்றான் என்பதை அறிந்து கொள்ளும்போது ஒருவித நிம்மதி பிறக்கின்றது. சோதனையைத் தாங்கிக் கொள்ளும் மனோதிடம் உ ருவாகின்றது.

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அதாஉ பின் அபீரபாஹ் (ரஹ்) அவர்களிடம், ஒரு கருப்பு நிறப்பெண்மணியை சுட்டிக்காட்டி, 'இவர் சொர்க்கவாசியான பெண்மணி' என்று கூறினார்.

தொடர்ந்து கூறினார்: 'இவர் ஒரு தடவை நபி (ஸல்) அவர்களிடம் வந்து, நான் வலிப்பு நோயால் அடிக்கடிப் பாதிக்கப்படுகிறேன். அப்போது என் உடலில் இருந்து ஆடை விலகிவிடுகிறது. ஆகவே எனக்காக அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்' என்றார்.

நபி (ஸல்) அவர்கள், 'நீ நினைத்தால் பொறுமையாக இருக்கலாம். (இதற்குப் பதிலாக) உனக்குச் சொர்க்கம் கிடைக்கும். நீ விரும்பினால் உனக்குக் குணமளிக்கும்படி அல்லாஹ்விடம் நான் பிரார்த்திக்கின்றேன்' என்று சொன்னார்கள்.

இந்தப் பெண்மணி 'நான் பொறுமையாகவே இருந்துவிடுகிறேன். ஆனால், வலிப்பு வரும்போது ஆடை விலகி விடுகிறது. அப்படி விலகிவிடாமல் இருக்க நீங்கள் பிரார்த்தியுங்கள்' என்று சொன்னார். அவ்வாறே நபி (ஸல்) அவர்கள் இப்பெண்ணுக்காகப் பிரார்த்தனை செய்தார்கள். (புகாரி)

பெரும் நோயால் பாதிக்கப்பட்ட ஒவ்வொருவருக்கும் இந்த நபிமொழி ஒரு நற்செய்தியைச் சொல்லித் தருகின்றது. ஆம், பொறுமையை மேற்கொண்டால் நிச்சயம் சுவனம் உண்டு எனும் செய்திதான் அது.

அநாதைகள் குறித்து

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்கள் அறிவிப்பதாவது: 'நானும் அநாதையின் காப்பாளரும் சொர்க்கத்தில் இப்படி இருப்போம்' என்று கூறியபடி தம் சுட்டு விரலையும் நடுவிரலையும் இணைத்து அந்த இரண்டுக்கும் இடையே சற்று இடைவெளி விட்டு சைகை செய்தார்கள். (புகாரி)

இவ்வாறு சமூகப்பிரச்சினைகளுக்கு சுவனத்தை உத்தரவாதமாகக் கூறி இஸ்லாம் தீர்த்து வைத்த பிரச்சினைகள் ஒன்றல்ல இரண்டல்ல. ஏராளம்..! ஏராளம்..!

ஆயினும் எந்தெந்த பிரச்சினைகளுக்கு எல்லாம் சுவனம் உத்தரவாதமாகக் கூறப்பட்டதோ, அவை இன்னும் சமூகத்தில் பரவலாக இருக்கத் தான் செய்கிறது. காரணம் இந்த உத்தரவாதங்கள் அனைத்தும் வேறு யாருக்கோ சொல்லப்பட்டது என்ற கருத்தோட்டத்தில் நாம் இருப்பதுதான்.

நபித்தோழர்களுக்கும் இவ்வாறுதான் சுவனம் குறித்த நற்செய்தி கூறப்பட்டது. ஆனால் அவர்கள் அதனை உளப்பூர்வமாக ஏற்று செயல்பட்டனர். ஆகவேதான் எத்தகைய துன்பம் வந்தபோதும் மனப்பூர்வமாக அதனைத் தாங்கிக்கொண்டனர்.

உம்மு உமாரா (ரலி) நபித்தோழியர்களில் வீரமங்கை. ஒரு போரில் அவரது தோள்பட்டை வெட்டப்பட்டு துண்டிக்கப்படுகிறது. ஒரு கையுடன் வெளியே சென்றால் பெண்கள் சிரிப்பார்கள் என்பதற்காக வீட்டைவிட்டு வெளியேறாமலேயே இருந்தார்கள்.

செய்தி அறிந்த உமர் (ரலி) அவர்கள் உம்மு உமாரா (ரலி) அவர்களிடம் இவ்வாறு கூறினார்கள்: 'உங்களுக்கு ஓர் நற்செய்தி! நீங்கள் சுவனம் செல்வதற்கு முன்னரே உங்கள் உடலின் ஓர் உறுப்பு சுவனம் சென்றுவிட்டது. மதீனாவின் பெண்களிலேயே நீங்கள் தான் பெருமைக் குரியவர்'.

பின்னர் அப்பெண்மணி பெண்களுக்கு மத்தியில் பெருமையுடன் தனது ஒற்றைக் கையுடன் வலம் வந்ததாக வரலாறு கூறுகின்றது.

ஸலமத் இப்னு அக்வஉ (ரலி). சுவனம் செல்ல வேண்டும் என்ற வேட்கை கொண்ட ஒரு நபித்தோழர். மதீனாவை உளவு பார்க்க குதிரையில் ஓர் உளவாளி வந்தான். கூடியிருந்த தோழர்களிடம் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: 'யார் அந்த உளவாளியைப் பிடித்து வருகின்றாரோ அவருக்கு சுவனம் உண்டு'.

அவ்வளவுதான்... அங்கிருந்த அனைவரும் வேகமாகப் புறப்பட்டனர். ஒருவர் ஒட்டகத்தில் புறப்பட்டார். மற்றொருவர் குதிரையில் புறப்பட்டார். ஆனால் ஸலமத் இப்னு அக்வஉ (ரலி) அவர்களோ வெறும் காலுடன் ஓடினார்.

முதலில் ஒட்டகத்தை முந்தினார். பின்னர் வேகமாக ஓடி குதிரையை முந்தினார். பின்னர் மீண்டும் வேகமாக ஓடி அந்த உளவாளியை பிடித்து வந்தார்.

எவ்வாறு இது நடைபெற்றது..? சுவன வேட்கைதான் காரணம். இதுதான் நமக்கான பாடம். விலை மதிக்க முடியாத அந்த சொர்க்கம் நமக்காக காத்திருக்கின்றது என்ற நம்பிக்கை உறுதியாக இருந்தால் எந்த இழப்பும் நம்மை ஒன்றும் செய்யாது. எவ்வகை துன்பம் எதிர் வந்த போதும் இந்த நம்பிக்கை மட்டும் இருந்தால் போதும்.. நாம் கலங்கவும் மாட்டோம்.. நிம்மதியை ஒருபோதும் இழக்கவும் மாட்டோம்.

ஆக்கம்: முஹம்மத் நூஹ் மஹ்ழரி

Add comment

காயல் நியுஸ், வாசகர்கள் கருத்துக்களை வரவேற்கிறது. வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் நியுஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்த விதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். முரண்பாடான மரியாதைக்குறைவான, கண்ணியமில்லாத கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கும் அவைகளை நீக்குவதற்கும் எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு. தங்களது பெயர் மற்றும் கருத்துக்களை தமிழில் தட்டச்சு செய்யலாம். உதாரணமாக "காயல்பட்டினம்" என்று தட்டச்சு செய்ய ஆங்கிலத்தில் "kaayalpattinam" என்று தட்டச்சு செய்து Space bar-ஐ அழுத்தினால் தங்கள் தட்டச்சு செய்த சொல் தமிழாக மாற்றப்படும். ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.


Security code
Refresh

 

செய்திகள்

“நடப்பது என்ன?” மகளிர் குழுமத்தின் தொடர் முயற்சியையடுத்து தைக்கா பள்ளிக்கூடத்தின் பழுதடைந்த பழைய கட்டிடம் இடித்தகற்றம்!
NeXTGen Kayalites (நடப்பது என்ன?) குழும ஏற்பாட்டில் ரெட் ஸ்டார் சங்கத்தில் குருதிக் கொடை முகாம்! மாணவர்கள் உட்பட திரளானோர் குருதிக்கொடையளித்தனர்!!
வார்டுகள் மறுவரையறை: தவறான வீட்டுத் தீர்வைப் பட்டியல் படி அமையப் பெற்றுள்ளதைச் சுட்டிக்காட்டி, நகராட்சி ஆணையரிடம் “நடப்பது என்ன?” குழுமம் மீண்டும் ஆட்சேபனைக் கடிதம்!
துளிரின் 'நேர மேலான்மை' குறித்த கருத்தரங்கம்!
வார்டுகள் மறுவரையறை: தவறான வீட்டுத் தீர்வைப் பட்டியல் படி அமையப் பெற்றுள்ளதைச் சுட்டிக்காட்டி, நகராட்சி ஆணையரிடம் “நடப்பது என்ன?” குழுமம் மீண்டும் ஆட்சேபனைக் கடிதம்!

சுடச்சுட காயல் செய்திகள்! சுவையான இஸ்லாமிய கட்டுரைகள் !!
தொடர்பு கொள்ள : admin@kayalnews.com
© Copyright : Kayalnews.com