بسم الله الرحمن الرحيم
Sunday 21st October 2018 | 10 ஸஃபர் 1440AH
பதாகை
news menu left
news menu right

பதாகை

பதாகை

  • Google Bookmarks
  • Twitter
  • Windows Live
  • Facebook
  • MySpace
  • deli.cio.us
  • Digg
  • Newsvine
  • reddit
  • StumbleUpon
  • Yahoo! Bookmarks
  • Yigg
சொர்க்கத்திற்கு வழிகாட்டும் மக்கள் சேவை! கட்டுரை!!அச்சிடுகமின்-அஞ்சல்
22 டிசம்பர் 2015 காலை 10:55

முஸ்லிம்களாக இருப்பவர்களுக்கு இரண்டு முக்கியக் கடமைகளை இஸ்லாம் வலியுறுத்துகின்றது.

1. படைத்தவனுக்குச் செய்ய வேண்டிய கடமைகள், 2. படைப்புகளுக்குச் செய்ய வேண்டிய கடமைகள்.

படைத்தவனுக்குச் செய்ய வேண்டிய வணக்க வழிபாடுகளில் மட்டும் ஈடுபட்டுவிட்டு, படைப்புகளுக்குச் செய்யவேண்டிய சீர்திருத்தப் பணிகள் செய்யாவிட்டால், இறைவனிடம் மறுமையில் அதற்குப் பதில் சொல்லியாக வேண்டும்.

'முழுமையான வெற்றி வெறும் வணக்க வழிபாடுகளால் மட்டும் கிட்டாது' என்று திருக்குர்ஆன் கூறுகிறது:

''இறைநம்பிக்கை கொண்டவர்களே! நீங்கள் ருகூவும், ஸுஜூதும் செய்யுங்கள். உங்கள் இறைவனுக்கு அடிபணியுங்கள். மேலும், நற்பணியாற்றுங்கள். (இதன் மூலமே) நீங்கள் வெற்றி அடைவீர்கள்!'' (22:77).

வெற்றி பெறுவதற்கு வெறும் தொழுகை மட்டும் போதாதா...?

ஆம்; போதாது என்கிறான் இறைவன். மக்கள் சேவையில் ஈடுபட வேண்டும். நற்பணியாற்ற வேண்டும். அப்போதுதான் முழுமையான வெற்றி பெறமுடியும்.

நாம் ஒன்றை நினைவில் வைக்க வேண்டும். இறைவனுக்குச் செய்யவேண்டிய கடமைகளில் தவறிழைத்தால்கூட இறைவன் மன்னிப்பான். ஆனால் சக மனிதனுக்குச் செய்யவேண்டிய சேவைகளிலோ, கடமைகளிலோ தவறிழைத்தால் சக மனிதன் மன்னிக்காத வரை ஆண்டவன் மன்னிக்க மாட்டான்.

இஸ்லாத்தில் வணக்கம்

இஸ்லாம் கூறும் வணக்கத்தின் பட்டியல்:

கவலைப்பட்டவனின் கண்ணீரைத் துடைப்பது ஒரு (ஸதகா) வணக்கம். காயமடைந்தவனுக்கு உதவி புரிதல் ஒரு வணக்கம். நோயாளியை நலம் விசாரித்தல் ஒரு வணக்கம். பிறர் துன்பம் நீக்க பாடுபடல் ஒரு வணக்கம். முதியோருக்கு உதவுதல், முகவரி தெரியாதவனுக்கு முகவரி சொல்லிக் கொடுத்தல், தாகித்தவனுக்குத் தண்ணீர் புகட்டல், சண்டையில் சமாதானம் செய்தல்...

இவ்வாறு வணக்கத்தின் பட்டியல் நீண்டுகொண்டே போகிறது.

இஸ்லாம் இதுபோன்ற மக்கள் சேவையை வெறுமனே புகழ்வதுடன் நிறுத்தவில்லை. மாறாக அதன்பால் மக்களைத் தூண்டுகிறது. முஸ்லிம்களின் அன்றாடக் கடமைகளில் இதுவும் ஒன்றாக இருக்கவேண்டும் என்று வலியுறுத்துகிறது.

சுவனத்தின்பால் நெருக்கமாக்கி வைக்கும் செயல், நரகை விட்டும் தூரமாக்கும் செயல் என்று மக்கள் சேவையைக் கூறுகிறது.

பிறருக்கு நன்மை பயக்கும் எந்த ஒரு நற்கருமத்தையும் நாம் துச்சமாக மதிப்பிட வேண்டாம். ஒரு முஸ்லிம் எப்போதும் ஏதாவது ஒரு வகையில் பிறருக்கு நன்மை புரிபவனாகவே இருக்க வேண்டும் என்பதை பின்வரும் ஹதீஸ் கூறுகிறது. அபூதர் அல் கிபாரி (ரலி) அவர்களின் சரமாரியான கேள்விகளும், நபி (ஸல்) அவர்களின் பதிலையும் பாருங்கள்.

அபூதர் (ரலி): 'இறைத்தூதரே! ஒரு மனிதனை நரகத்தை விட்டும் பாதுகாப்பது எது?'

நபி (ஸல்): 'அல்லாஹ்வை ஈமான் கொள்வது'.

'அந்த ஈமானுடன் செயல் ஏதாவது உண்டா?'

'ஆம், அல்லாஹ் தந்தவற்றில் இருந்து செலவு செய்வது'.

'செலவு செய்ய முடியாத ஏழை என்றால்...?'

'நன்மையை ஏவி, தீமையைத் தடுக்கட்டும்'.

'அதற்கும் முடியாவிட்டால்?'

'தமக்குத் தெரிந்ததை பிறருக்குக் கற்றுக்கொடுக்கட்டும்'.

'அதற்கும் முடியாவிட்டால்...?'

'தமக்குத் தெரிந்த தொழிலை சொல்லிக் கொடுக்கட்டும்'.

'அதற்கும் முடியாவிட்டால்...?'

'அநீதம் இழைக்கப்பட்டவனுக்கு உதவட்டும்'.

'இறைத்தூதரே! அவன் பலவீனமானவன், பிறருக்கு உதவ முடியாது என்றால்...?'

அபூதர் (ரலி) அவர்களின் இந்த சரமாரி கேள்விகளால் வியப்புற்று நபி (ஸல்) என்ன கேட்டார்கள் தெரியுமா...?

'உம்முடன் இருக்கும் சக மனிதனுக்கு நன்மை செய்ய வேண்டும் என்ற எண்ணமே உமக்கு இல்லையா...? அவ்வாறெனில் பிறருக்குத் தீங்கு செய்யாதே! அதுவே நீர் பிறருக்குச் செய்யும் நன்மையாகும்'.

ஆனாலும் அபூதர் (ரலி) விடவில்லை. நபியிடம் கேட்டார்கள்: 'இறைத்தூதரே! இவற்றையெல்லாம் செய்தால் ஓர் அடியான் சுவனத்தில் நுழைய முடியுமா?'

நபி (ஸல்) வியப்பு மேலிட்டவராக: 'இந்த நற்குணங் களில் ஏதாவது ஒன்றை ஒரு முஃமின் கடைப்பிடித்தாலே அது அவன் கைகளைப் பிடித்து சுவனத்திற்கு அழைத்துச் செல்லும்' என்றார்கள். (பைஹகீ, தபரானீ)

இந்த உரையாடலை மீண்டும் படித்துப் பாருங்கள். எந்த ஒரு முஸ்லிமும் நான் பிறருக்கு உதவ முடியாது; எனக்கு இயலாது என்று கூறி தப்பிக்கவே முடியாத வகையில் நபி (ஸல்) அவர்களின் பதில் அமைந்துள்ளதை நாம் கவனிக்கலாம்.

மக்கள் சேவைக்கு சிரமம் தேவையில்லை. எங்கும் எப்போதும் செய்யலாம். பணக்காரன் மட்டும் பிறருக்கு உதவ முடியும், ஓர் ஏழையால் முடியாது என்று இதில் சாக்குப்போக்குகள் சொல்ல முடியாது. படித்தவர்கள் மட்டுமே தொண்டு செய்ய முடியும், பாமரனால் எதுவும் முடியாது என்று ஒதுங்கிவிடவும் முடியாது.

எல்லோராலும் எப்போது வேண்டுமானாலும் செய்யும் நல்ல சேவையே பிறர் நலனுக்குப் பாடுபடுதல். இதைத்தான் இஸ்லாம் வணக்கம் எனும் பட்டியலில் சேர்த்து பெருமைப்படுத்துகிறது.

'என்னிடத்திலும், என் சமூகத்தைச் சார்ந்தவர்களிடத்திலும் மறுமை நாள்வரை நன்மை இருந்து கொண்டே இருக்கும்' என நபி (ஸல்) கூறினார்கள். இறைவனை நேசிக்கின்ற மக்களின் பட்டியலில் நாம் இல்லாவிட்டால் கூட பரவாயில்லை. சக மனிதன் மீது அன்பு காட்டி சேவை செய்பவர்களாக இருந்தாலே போதும். அப்போது இறைவன் யாரை நேசிக்கிறானோ அவர்களின் பட்டியலில் நாம் நிச்சயம் இடம் பெறுவோம். அதுதானே பெரும் பேறு...!

 

ஆக்கம் :

மவ்லவி நூஹ் மஹ்ழரி,

Add comment

காயல் நியுஸ், வாசகர்கள் கருத்துக்களை வரவேற்கிறது. வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் நியுஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்த விதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். முரண்பாடான மரியாதைக்குறைவான, கண்ணியமில்லாத கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கும் அவைகளை நீக்குவதற்கும் எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு. தங்களது பெயர் மற்றும் கருத்துக்களை தமிழில் தட்டச்சு செய்யலாம். உதாரணமாக "காயல்பட்டினம்" என்று தட்டச்சு செய்ய ஆங்கிலத்தில் "kaayalpattinam" என்று தட்டச்சு செய்து Space bar-ஐ அழுத்தினால் தங்கள் தட்டச்சு செய்த சொல் தமிழாக மாற்றப்படும். ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.


Security code
Refresh

 

செய்திகள்

வாவு வஜீஹா வனிதையர் கல்லூரியில் மாநில அளவிலான திறன்மிகு கருத்தரங்கம்!
காயல்பட்டினத்தில் இருந்து இ சேவை மாற்றல் விஷயம்! மாவட்ட ஆட்சியரின் கவனத்திற்கு திங்களன்று கொண்டு செல்வதாக துணை தாசில்தார் உறுதி!!
இ சேவை மையம்: காயலபட்டினத்தில் இருந்து மாற்றப்படக்கூடாது என கோரி மாவட்ட ஆட்சியருக்கு பொது மக்கள் - ஈமெயில், FAX குறுஞ்செய்தி மற்றும் WHATSAPP செய்தி அனுப்ப வேண்டுகோள்!
மண்டலம் வாரியாக அதிகரிக்க உத்தேசிக்கப்பட்டுள்ள காயல்பட்டினம் நகராட்சியின் சொத்து வரி! உங்கள் தெரு எந்த மண்டலத்தில்?
படிவம் 7 பயன்படுத்தி வாக்காளர் பட்டியலில் தவறுதலாக இடம்பெற்றுள்ள பெயரை எவ்வாறு நீக்குவது?

சுடச்சுட காயல் செய்திகள்! சுவையான இஸ்லாமிய கட்டுரைகள் !!
தொடர்பு கொள்ள : admin@kayalnews.com
© Copyright : Kayalnews.com