بسم الله الرحمن الرحيم
Friday 19th January 2018 | 02 ஜமாதுல் அவ்வல் 1439AH
பதாகை
news menu left
news menu right

பதாகை

பதாகை

 • Google Bookmarks
 • Twitter
 • Windows Live
 • Facebook
 • MySpace
 • deli.cio.us
 • Digg
 • Newsvine
 • reddit
 • StumbleUpon
 • Yahoo! Bookmarks
 • Yigg
உள்ளத்து உணர்வுகள்..சொல்லி மாளாது..ஆன்மீக கட்டுரை!அச்சிடுகமின்-அஞ்சல்
01 ஏப்ரல் 2016 மாலை 04:27

அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) ஒல்லியான தேகம் கொண்ட நபித்தோழர். ஒருதடவை நபி (ஸல்) அவர்களுடன் ஒரு பாதையினூடாக நடந்து செல்கின்றார். ஏனைய தோழர்களும் உடன் இருந்தனர். வழியில் ஒரு மிஸ்வாக் மரத்தைக் கண்டனர். அந்த மரத்தில் ஏறி தமக்காக ஒரு மிஸ்வாக் குச்சியைப் பறித்துத் தருமாறு நபி (ஸல்) அவர்கள் இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்களிடம் கேட்டார்கள்.

ஆடையை சற்று தூக்கிப் பிடித்தவாறு அவரும் மரத்தில் ஏறினார். அந்த நேரம் பார்த்து காற்று சற்று பலமாக வீசியது. ஆடை கலைந்து இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்களுடைய முழங்காலுக்கும் கணுக்காலுக்கும் இடைப்பட்ட பகுதி வெளியே தெரிந்தது. அது மிக மிக ஒல்லியாக இருந்தது. அக்காட்சியைப் பார்த்த நபித்தொழர்கள் சிரிக்கத் துவங்கினர்.

உடனே நபி (ஸல்) அவர்கள், ”எதற்காக சிரிக்கின்றீர்கள்..? அவருடைய கால்கள் ஒல்லியாக இருப்பதற்காக சிரிக்கின்றீர்களா..? எனது உயிர் யார் கைவசம் இருக்கின்றதோ அவன் மீது சத்தியம்! மறுமை நாளில் நன்மை தீமை நிறுக்கும் தராசில் இப்னு மஸ்ஊதுடைய இரண்டு கால்களும் உஹுத் மலையைவிட அதிக கனம் தரக்கூடியதாக இருக்கும்” என்று கூறினார்கள். (அஹ்மத், அபூயஃலா)

தோழர்கள் தம்மைக் குறித்து சிரிநத்த போது இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்களுடைய உள்ளத்து உணர்வுகள் எப்படி இருந்திருக்கும் என்பதை யோசித்துப் பாருங்கள். தமக்காக பரிந்து பேச யாராவது முன்வரமாட்டார்களா.. என்று யோசித்து இருப்பார். இக்கட்டான சூழல் அறிந்து தகுந்த நேரத்தில் தமக்கு ஆதரவாக பரிந்து பேசிய நபிகளாரை நிச்சயம் ஓர் ஆபத்பாந்தவனாகவே அவர் பார்த்திருப்பார்.. இல்லையா..? இதுதான் பண்பாடு..! இதுதான் இஸ்லாமிய நாகரிகம்...!

ஒரு சபையில் அமர்ந்து இருக்கின்றோம். நம்முடைய நடத்தை, தோற்றம், ஆடை அல்லது பேச்சு எதையோ மையமாக வைத்து கொச்சையாகப் பேசி ஒருவர் நம்மைக் கலாய்கின்றார்... கிண்டலடிக்கின்றார். ஓர் இக்கட்டான சூழ்நிலைக்கு நாம் தள்ளப்படுகின்றோம். வாய் பேச முடியாத மெளனியாக நிற்கிறோம்.

நாமே எதிர்பாக்காத வேளையில் ஒருவர் நமக்காக பரிந்து பேசுகிறார் எனில் அந்த விநாடியை நாம் எப்படி உணர்வோம்..? குழியில் தள்ளப்பட்டு வீழ்ந்துகிடக்கும் நம்மை கைகொடுத்துத் தூக்கிவிடும் ஆபத்பாந்தவனாக அவரை நாம் பார்க்கமாட்டோமா...?

இதே நிலை மற்றவர்களுக்கும் ஏற்பட்டு கை கொடுத்துத் தூக்கிவிடும் நபராக நாம் இருந்தால்... மற்றவர்களும் அப்படித்தானே நம்மைப் பார்ப்பார்கள்..!

மக்கள் மனங்களைக் கொள்ளை கொள்வது ஒரு கலை. அதற்கான சந்தர்ப்பம் எங்கும் எப்போதும் இருந்துகொண்டே இருக்கும் என்று சொல்லமுடியாது. அரிதாக வாய்க்கும் இதுபோன்ற சந்தர்ப்பங்களை புத்திசாலிகள் மட்டுமே வேட்டையாடி வெற்றிகொள்வார்கள்.

ஓர் இறைநம்பிக்கையாளன் (முஃமின்) புத்திசாலியாகவே எப்போதும் இருக்க வேண்டும்.

கட்டுரை : நூஹ் மஹ்ழரி 

Add comment

காயல் நியுஸ், வாசகர்கள் கருத்துக்களை வரவேற்கிறது. வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் நியுஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்த விதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். முரண்பாடான மரியாதைக்குறைவான, கண்ணியமில்லாத கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கும் அவைகளை நீக்குவதற்கும் எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு. தங்களது பெயர் மற்றும் கருத்துக்களை தமிழில் தட்டச்சு செய்யலாம். உதாரணமாக "காயல்பட்டினம்" என்று தட்டச்சு செய்ய ஆங்கிலத்தில் "kaayalpattinam" என்று தட்டச்சு செய்து Space bar-ஐ அழுத்தினால் தங்கள் தட்டச்சு செய்த சொல் தமிழாக மாற்றப்படும். ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.


Security code
Refresh

 

செய்திகள்

“நடப்பது என்ன?” மகளிர் குழுமத்தின் தொடர் முயற்சியையடுத்து தைக்கா பள்ளிக்கூடத்தின் பழுதடைந்த பழைய கட்டிடம் இடித்தகற்றம்!
NeXTGen Kayalites (நடப்பது என்ன?) குழும ஏற்பாட்டில் ரெட் ஸ்டார் சங்கத்தில் குருதிக் கொடை முகாம்! மாணவர்கள் உட்பட திரளானோர் குருதிக்கொடையளித்தனர்!!
வார்டுகள் மறுவரையறை: தவறான வீட்டுத் தீர்வைப் பட்டியல் படி அமையப் பெற்றுள்ளதைச் சுட்டிக்காட்டி, நகராட்சி ஆணையரிடம் “நடப்பது என்ன?” குழுமம் மீண்டும் ஆட்சேபனைக் கடிதம்!
துளிரின் 'நேர மேலான்மை' குறித்த கருத்தரங்கம்!
வார்டுகள் மறுவரையறை: தவறான வீட்டுத் தீர்வைப் பட்டியல் படி அமையப் பெற்றுள்ளதைச் சுட்டிக்காட்டி, நகராட்சி ஆணையரிடம் “நடப்பது என்ன?” குழுமம் மீண்டும் ஆட்சேபனைக் கடிதம்!

சுடச்சுட காயல் செய்திகள்! சுவையான இஸ்லாமிய கட்டுரைகள் !!
தொடர்பு கொள்ள : admin@kayalnews.com
© Copyright : Kayalnews.com