பூ பறிக்கக் கோடரி எதற்கு..? ஆன்மீக கட்டுரை!!அச்சிடுக
01 ஏப்ரல் 2016 மாலை 04:32

தவறு செய்வது மனித இயல்பு. பிறர் செய்யும் தவறுகளைத் திருத்த முற்படும்போது ஆசிரியன்போல் செயல்படக்கூடாது. இது ஒன்றும் வகுப்பறை அல்ல.. வாழ்க்கைப் பாடம். தவறுகளைக் காணும்போது வானுக்கும் பூமிக்கும் குதிப்பதால் என்ன பயன் ஏற்பட்டுவிடப்போகிறது..?

ஆசிரியர் போன்று எப்போது பார்த்தாலும் கையில் ஒரு குச்சியுடன் எல்லோரையும் கண்காணித்துக்கொண்டு இருக்க முடியுமா..? முடியாது.

உபதேசிக்கலாம். ஆனால், உடனே திருந்திவிட வேண்டும் என்ற எண்ணத்தில் அல்ல. மாறாக, அது பிறரை சிந்திக்க வைக்கும் உபதேசமாக இருக்க வேண்டும். அதுவே அதிக பலன் தரும்.

ஆனால்,நாம் என்ன செய்கிறோம்..? மாற்றுக்கருத்து ஒன்றை ஒருவர் சொல்லிவிட்டால்.. எங்கள் கருத்துக்கு எதிர் கருத்தா.. என்று வானுக்கும் பூமிக்கும் குதிக்கின்றோம். அறியாமையால் நமது மதிப்பை நாமே குறைத்துக்கொள்கிறோம்.

ஒருதடவை நன்மையின் வாசல்களைக் குறித்து நபி (ஸல்) அவர்கள் தோழர்களுக்கு விளக்கிக் கொண்டிருந்தார்கள். அப்போது, ”உங்கள் மனைவியருடன் நீங்கள் உறவு கொண்டால் அதுவும் நன்மையே..” என்று கூறினார்கள்.

அருகிலிருந்த ஒருவர் சட்டெனக் கேட்டார்: ”இறைத்தூதரே! அது எப்படி? ஒருவர் தனது மனைவியுடன் இச்சையைத் தீர்த்துக்கொள்வதும் நன்மை பயக்கும் செயலா..?”

நான் எதைச் சொன்னாலும் காது கொடுத்துக் கேட்க வேண்டும். எதிர் கேள்வி கேட்கக் கூடாது என்று ஆசிரியர் போல் நபி (ஸல்) அவர்கள் அப்போது செயல்படவில்லை.

புரியவைத்தார்கள். எதிர் கேள்வி ஒன்றைக் கேட்டார்கள்: ”தவறான (ஹராம்) பாதையில் ஒருவர் தமது இச்சையைத் தீர்த்துக்கொண்டால் அது பாவம்தானே..?”

”ஆம். அல்லாஹ்வின் தூதரே!”

”அவ்வாறெனில் ஆகுமான (ஹலால்) பாதையில் அதனைத் தீர்த்துக்கொண்டால் அது நன்மையே” (முஸ்லிம்)

முடிந்தது விஷயம். புரிந்துகொண்டார் அந்த நபித்தோழர். அவர் மட்டுமல்ல, அருகில் இருந்த அனைவரும் புரிந்துகொண்டனர். இதுதான் நபிவழி. இதுதான் சரியான அணுகுமுறை.

பூ பறிக்கக் கோடரி எதற்கு...?

கட்டுரை: நூஹ் மஹ்ழரி 

Add comment

காயல் நியுஸ், வாசகர்கள் கருத்துக்களை வரவேற்கிறது. வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் நியுஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்த விதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். முரண்பாடான மரியாதைக்குறைவான, கண்ணியமில்லாத கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கும் அவைகளை நீக்குவதற்கும் எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு. தங்களது பெயர் மற்றும் கருத்துக்களை தமிழில் தட்டச்சு செய்யலாம். உதாரணமாக "காயல்பட்டினம்" என்று தட்டச்சு செய்ய ஆங்கிலத்தில் "kaayalpattinam" என்று தட்டச்சு செய்து Space bar-ஐ அழுத்தினால் தங்கள் தட்டச்சு செய்த சொல் தமிழாக மாற்றப்படும். ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.


Security code
Refresh