بسم الله الرحمن الرحيم
Monday 22nd January 2018 | 05 ஜமாதுல் அவ்வல் 1439AH
பதாகை
news menu left
news menu right

பதாகை

பதாகை

 • Google Bookmarks
 • Twitter
 • Windows Live
 • Facebook
 • MySpace
 • deli.cio.us
 • Digg
 • Newsvine
 • reddit
 • StumbleUpon
 • Yahoo! Bookmarks
 • Yigg
தூய்மை: நபிமொழிகள் வழியில் ஒரு பார்வைஅச்சிடுகமின்-அஞ்சல்
16 ஜூன் 2011 மாலை 05:01

தூய்மை என்பதற்கு அத்தஹாரா என்பது அரபியில் மூலப்பொருள் ஆகும்.

தூய்மை தொழுகையின் திறவுகோல்.தொழுகை மார்க்கத்தின் தூண்.

தூய்மையின்றி எந்தத் தொழுகையும் ஏற்கப்படாது. தூய்மை மூலம் சிறு பாவங்கள் துடைக்கபடுகின்றன.நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : (திர்மிதி)

தூய்மையின்றி எந்தத் தொழுகையும் (இறைவனிடம்)
ஏற்கப்படாது. மோசடிப் பொருளால் செய்யப்படும் எந்தத் தர்மமும் ஏற்கப்படாது.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:(திர்மிதி)

முஸ்லிமான அடியார் அங்கத் தூய்மை (உளு) செய்யும் போது தமது முகத்தை கழுவினால், கண்களால் நிகழ்ந்த பாவங்கள் அனைத்தும் ‘நீருடன்’ அல்லது ‘நீரின் கடைசி துளியுடன்’ முகத்திலிருந்து வெளியேறிவிடுகின்றன.

நபி (ஸல்) அவர்கள் கூறுவதாக அலி (ரலி) அறிவிக்கிறார்கள்.(திர்மிதி)

தொழுகையின் திறவுகோல் தூய்மை ஆகும். தொழுகையில் (புரசெயல் களைத்) தடை செய்வது ‘தக்பீர்’ ஆகும். (புறசெயல்களை) அனுமதிப்பது ‘சலாம்’ ஆகும்.

கதவைத் திறக்க எப்படி திறவுகோல் அவசியமோ அதைப் போன்று
தொழுகையை நிறைவேற்ற அங்கத் தூய்மை அவசியமாகும். அவ்வாறே சொர்க்க வாயில்களைத்
திறக்க வழிபாடுகள் அவசியம். வழிபாடுகளில் முதன்மையானது தொழுகை. ஆகவேதான் தொழுகை
சொர்க்கத்தின் திறவுகோல் என உவமை நயத்துடன் நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

ஈமானின் பாதி தூய்மை என்று பெருமானார் (ஸல்) அவர்கள் கூறியிருப்படிதில் இருந்தே தூய்மையின்
அவசியத்தை நாம் உணரலாம் .

இறைத்தூதர் நபி (ஸல்) அவர்களிடத்தில் அல்லாஹ் மக்களுக்கு மார்க்கத்தை எடுத்து சொல்லுமாறு கட்டளையிட்டபோது முதலில் அவர்களுக்கு சொன்ன கட்டளை

உன்ஆடையை தூய்மைப்படுத்துவீராக. அசுத்தத்தை வெறுப்பீராக. (அல்குர்ஆன் 74:34)

இஸ்லாத்தில் ஆரம்ப போதனைகளில் தூய்மையாக இருக்க வேண்டும் என்ற கட்டளையும் இருந்தது என்பதை நம்மால்  விளங்க முடிகிறது. இன் னும் இஸ்லாம் இறைவனை நம்புகின்ற நம்பிக்கையில் ஒரு பகுதியாகவே தூய்மையை கூறுகிறது.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்

தூய்மை என்பது இறை நம்பிக்கையில்பாதி, அறிவிப்பவர் : அபூமாலிக் அல்அஷ் அரீ (ரலி)

இஸ்லாத்தில் இறைவனை வணங்குவதற்கு அடையாளமான தொழுகைக்கு கூட தூய்மை என்று இஸ்லாம் கூறுகிறது. இல்லையென்றால் அந்த வணக்கம் கூட ஏற்றுக் கொள்ளப்படாது.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

தூய்மையில்லாமல் தொழுகை இல்லை அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி), நூல் : முஸ்லிம் 382

இவ்வாறு எந்த ஒரு கட்டத்திலும் இஸ்லாம் தூய்மையை போதிக்காமல் இருந்ததில்லை. ஒரு முஸ்லிமாக இருப்பதற்கு அவசியம் தூய்மை என் பதை இவைகளின் மூலமாக விளங்கிக் கொள்ள
முடிகிறது.

இஸ்லாம் ஒரு மனிதன் தூங்கி எழுந்ததிலிருந்தே தூய்மையை கடைப்பிடிக்க வேண்டும் என்று கட்டளையிடுகிறது.

நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள்

உங்களில் ஒருவர் தூங்கி விழித்தெழுந்தால் மூன்றுமுறை தன் கையை கழுவுகின்றவரை பாத்திரத்தில்
கையை நுழைக்க வேண் டாம். அறிவிப்பவர் :
அபூ ஹுரைரா (ரலி)

எனவே நாம் அனைவரும் தூய்மையை பேணி அல்லாஹ்வின் நல்லருளையும்
பாவமன்னிப்பையும் பெறுவோமாக.

ஆக்கம்: ஹசன் .

Reference:
Muslim, TirmidhiAdd comment

காயல் நியுஸ், வாசகர்கள் கருத்துக்களை வரவேற்கிறது. வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் நியுஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்த விதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். முரண்பாடான மரியாதைக்குறைவான, கண்ணியமில்லாத கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கும் அவைகளை நீக்குவதற்கும் எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு. தங்களது பெயர் மற்றும் கருத்துக்களை தமிழில் தட்டச்சு செய்யலாம். உதாரணமாக "காயல்பட்டினம்" என்று தட்டச்சு செய்ய ஆங்கிலத்தில் "kaayalpattinam" என்று தட்டச்சு செய்து Space bar-ஐ அழுத்தினால் தங்கள் தட்டச்சு செய்த சொல் தமிழாக மாற்றப்படும். ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.


Security code
Refresh

 

செய்திகள்

“நடப்பது என்ன?” மகளிர் குழுமத்தின் தொடர் முயற்சியையடுத்து தைக்கா பள்ளிக்கூடத்தின் பழுதடைந்த பழைய கட்டிடம் இடித்தகற்றம்!
NeXTGen Kayalites (நடப்பது என்ன?) குழும ஏற்பாட்டில் ரெட் ஸ்டார் சங்கத்தில் குருதிக் கொடை முகாம்! மாணவர்கள் உட்பட திரளானோர் குருதிக்கொடையளித்தனர்!!
வார்டுகள் மறுவரையறை: தவறான வீட்டுத் தீர்வைப் பட்டியல் படி அமையப் பெற்றுள்ளதைச் சுட்டிக்காட்டி, நகராட்சி ஆணையரிடம் “நடப்பது என்ன?” குழுமம் மீண்டும் ஆட்சேபனைக் கடிதம்!
துளிரின் 'நேர மேலான்மை' குறித்த கருத்தரங்கம்!
வார்டுகள் மறுவரையறை: தவறான வீட்டுத் தீர்வைப் பட்டியல் படி அமையப் பெற்றுள்ளதைச் சுட்டிக்காட்டி, நகராட்சி ஆணையரிடம் “நடப்பது என்ன?” குழுமம் மீண்டும் ஆட்சேபனைக் கடிதம்!

சுடச்சுட காயல் செய்திகள்! சுவையான இஸ்லாமிய கட்டுரைகள் !!
தொடர்பு கொள்ள : admin@kayalnews.com
© Copyright : Kayalnews.com