بسم الله الرحمن الرحيم
Saturday 16th February 2019 | 10 ஜமாதுல் ஆஹிர் 1440AH
பதாகை
news menu left
news menu right

பதாகை

பதாகை

 • Google Bookmarks
 • Twitter
 • Windows Live
 • Facebook
 • MySpace
 • deli.cio.us
 • Digg
 • Newsvine
 • reddit
 • StumbleUpon
 • Yahoo! Bookmarks
 • Yigg
டாலர் கலாசாரம்...அச்சிடுகமின்-அஞ்சல்
18 டிசம்பர் 2012 காலை 08:29

அமெரிக்காவில் கனெக்டிகட் மாகாணத்தில், சாண்டி ஹூக் பள்ளியில் நுழைந்த ஆதம் லான்சா என்பவர் சுட்டுக்கொன்ற 26 பேரில் 20 பேர் ஆறு, ஏழு வயதான சிறுவர்கள் என்பது அமெரிக்கர்களை மட்டுமல்ல, உலக மக்கள் அனைவருடைய இதயங்களையும் உலுக்கிவிட்டது.

பள்ளி, கல்லூரி வளாகத்தில் நுழைந்து தாக்குதல் நடத்துவது பல நாடுகளிலும் நடந்துள்ளது. ஆனாலும் அமெரிக்காவில்தான் இது அதிகம்.

சில ஆண்டுகளுக்கு முன்பு வெர்ஜீனியா டெக் பல்கலைக்கழகத்தில் 32 மாணவர்கள் மற்றும் பேராசிரியர்களை (அவர்களில் ஒரு பேராசிரியர் ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்தவர்) ஒருவர் சுட்டுக்கொன்றார்.

கடந்த 30 ஆண்டுகளில் அமெரிக்காவில் இவ்வாறு பள்ளி கல்லூரி வளாகங்களில் துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற சம்பவங்கள் 62 நடைபெற்றுள்ளன. குறிப்பிட்ட ஒரு மாகாணத்தில்தான் இப்படி நடக்கின்றது என்பதும் இல்லை. பரவலாக எல்லா மாகாணங்களிலும் இத்தகைய சம்பவங்கள் நடக்கின்றன. எண்ணிக்கைதான்

சிறிதும் பெரிதுமாக மாறுகின்றது.

இத்தகைய தாக்குதல்கள் நடக்கும்போதெல்லாம், ""அமெரிக்காவின் துப்பாக்கி சட்டத்தைக் கடுமையாக்க வேண்டும், அல்லது விதிமுறைகளை மாற்றியமைக்க வேண்டும்'' என்ற கருத்து உலா வரும். இப்போதும் அதே கருத்து, ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்கள் மூலம் பேசப்பட்டு வருகின்றன.

இந்தச் சம்பவம் குறித்த இரங்கல் செய்தியில் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா கண்கலங்கினார். ""நாம் மாறத்தான் வேண்டும்'' என்றார். ஆனால் துப்பாக்கிச் சட்டத்தைப் பற்றி அவர் குறிப்பிடவில்லை.

பாதுகாப்பு கருதி, துப்பாக்கி வைத்துக்கொள்ள அமெரிக்க சட்டம் அனுமதிக்கிறது. ஆனாலும் இந்தச் சட்டம் எல்லா மாகாணங்களிலும் ஒன்று போல இருக்கவில்லை. சிறுசிறு மாறுதல்களுடன் அமல்படுத்தப்படுகிறது. தனிநபர் பாதுகாப்புக்கு துப்பாக்கி வைத்துக் கொள்வது தவிர்க்க முடியாதது என்பதுதான் அமெரிக்கர்களின் ஒட்டுமொத்த கருத்தாக இருக்கிறது. பொதுமக்கள் துப்பாக்கி வைத்துக்கொள்ளக் கூடாது என்ற கருத்து அமெரிக்காவில் யாரிடத்திலும் இல்லை.

தனிநபர் பாதுகாப்புக்காக வீட்டுக்குள் மட்டுமே துப்பாக்கியை வைத்திருக்க வேண்டும், வெளியே பொது இடத்திற்குக் கொண்டுவருவது குற்றமாகக் கருதப்பட வேண்டும் என்பதும், ஒரு தனிநபருக்கு அனுமதிக்கப்படும் துப்பாக்கி ரவைகளின் எண்ணிக்கை 10-க்கும் அதிகமாக இருக்கக்கூடாது என்பதோடு எவ்வகையான துப்பாக்கியை வைத்துக்கொள்ளலாம் என்ற வரன்முறையும் அவசியம் போன்ற கருத்துகள்தான் தற்போது 40% அமெரிக்க மக்களால் முன்வைக்கப்படுகின்றன.

ஆனால் இது தீர்வாக ஆகிவிடாது என்ற எதிர்கருத்தும் அமெரிக்காவில் இருக்கவே செய்கிறது.

அமெரிக்காவில், கனெக்டிகட் மாகாணத்தில் 20 பள்ளிச் சிறார்கள் சுட்டுக்கொல்லப்பட்ட அதே நாளில் சீனாவில், ஹாங்காங் நகரிலும் ஒரு பள்ளியில் இதேபோன்று ஒரு சம்பவம் நடந்துள்ளது. ஆனால் அந்த நபர் பயன்படுத்திய ஆயுதம் துப்பாக்கி அல்ல, கத்தி! பள்ளியின் 22 குழந்தைகளையும் கத்தியால் வெட்டி காயப்படுத்தியுள்ளான். அந்தக் குழந்தைகளில் யாரும் இறக்கவில்லை என்றாலும், மோசமான காயங்களுக்கு ஆளாகியுள்ளனர். ஆக, ஒருவர் ஒரு பள்ளி, கல்லூரியில் நுழைந்து தாக்குவதும் பல குழந்தைகளை வெறித்தனமாகச் சுடுவதும் உளவியல் கோளாறு. இதை, துப்பாக்கிச் சட்டத்தைக் கடுமையாக்கினால் மட்டும் தடுத்துவிட முடியுமா என்கிறார்கள்.

மேலும், அமெரிக்காவில் இத்தகைய கண்மூடித்தனமான தாக்குதல்களில் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கிகளில் பாதிக்கும் மேற்பட்டவை, சட்டவிரோதமான வழிகளில் வாங்கப்பட்டவை.

துப்பாக்கி வைத்துக்கொள்ளும் உரிமை தனிநபர் அனைவருக்கும் உண்டு என்பதைக் காட்டிலும் மனவளம் உள்ளவரா என்ற பரிசோதனைக்குப் பிறகு இந்த உரிமம் வழங்குவதுதான் சரியான முடிவாக இருக்க முடியும்.

வெர்ஜீனியா டெக் பல்கலைக்கழகத்தில் சுட்ட நபர், "பேட்மேன்' திரைப்படம் வெளியான திரையரங்கில் சுட்ட நபர், தற்போது பள்ளி வளாகத்தில் குழந்தைகளைக் கொன்றுள்ள ஆதம் லான்சா எல்லாரும் புத்திசாலிகள் என்பதும் இவர்கள் பல காரணங்களால் மனம் பேதலித்தவர்கள் என்பதையும் பார்க்கும்போது, ஒரு மனிதரின் மனநலன் குறித்த சோதனைகள் இல்லாமல் துப்பாக்கி உரிமம் வழங்குவது தடுக்கப்பட வேண்டும் என்று தெரிகிறது. அது மட்டுமே அமெரிக்காவில் இதுபோன்று பள்ளி, கல்லூரிகளில் மாணவர்கள் மீதான தாக்குதலைத் தடுக்கும். பொதுவான ஆதாயக் கொலைகளையும், பழிவாங்கல் கொலைகளையும்கூட குறைக்க உதவும்.

இத்தகைய மனப்பிறழ்வு கொலையாளிகள் தங்கள் நோக்கத்தை சில தினங்களுக்கு முன்னதாகவே, சில அறிகுறிகள் மூலம் வெளிப்படுத்தத் தொடங்கிவிடுகிறார்கள். மற்றவர்களிடம் பேசும்போதும், சமூக வலைதளங்களில் கருத்துப்பதிவின்போதும், பள்ளி, கல்லூரிகளில் பழகும் விதத்தில் ஏற்படும் மாற்றத்தாலும் உணர்த்திவிடுகிறார்கள் என்று - சம்பவம் முடிந்த பிறகு - கண்டுபிடித்துச் சொல்கிறார்கள்.

அமெரிக்காவின் வாழ்க்கைமுறை பணத்துக்கு முக்கியத்துவம் தருகிறதே தவிர, உறவுக்கும் அன்புக்கும் அல்ல. உறவுகளின் பிரிவும், மறுக்கப்படும் அன்பும்தான் அங்கே மிகப்பெரிய மனப்பிறழ்வுகளுக்கு இட்டுச்செல்கிறது. அமெரிக்க கலாசாரத்தின் மீது மோகம் கொள்ளும் இளைஞர்கள் அனைவரும், இதேபோன்ற மனப்பிறழ்வுக்கு ஆளாவது தவிர்க்க முடியாதது. அது இந்தியாவிலும் நேரிடலாம்.

பணம், சுகம் ஆகிய இரண்டு மட்டுமே வாழ்க்கை எனச் சொல்லும் ""டாலர் கலாசாரம்'' ஆபத்தானது.

தினமணி

18 December 2012 02:52 AM IST

Add comment

காயல் நியுஸ், வாசகர்கள் கருத்துக்களை வரவேற்கிறது. வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் நியுஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்த விதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். முரண்பாடான மரியாதைக்குறைவான, கண்ணியமில்லாத கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கும் அவைகளை நீக்குவதற்கும் எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு. தங்களது பெயர் மற்றும் கருத்துக்களை தமிழில் தட்டச்சு செய்யலாம். உதாரணமாக "காயல்பட்டினம்" என்று தட்டச்சு செய்ய ஆங்கிலத்தில் "kaayalpattinam" என்று தட்டச்சு செய்து Space bar-ஐ அழுத்தினால் தங்கள் தட்டச்சு செய்த சொல் தமிழாக மாற்றப்படும். ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.


Security code
Refresh

 

செய்திகள்

வாவு வஜீஹா வனிதையர் கல்லூரியில் மாநில அளவிலான திறன்மிகு கருத்தரங்கம்!
காயல்பட்டினத்தில் இருந்து இ சேவை மாற்றல் விஷயம்! மாவட்ட ஆட்சியரின் கவனத்திற்கு திங்களன்று கொண்டு செல்வதாக துணை தாசில்தார் உறுதி!!
இ சேவை மையம்: காயலபட்டினத்தில் இருந்து மாற்றப்படக்கூடாது என கோரி மாவட்ட ஆட்சியருக்கு பொது மக்கள் - ஈமெயில், FAX குறுஞ்செய்தி மற்றும் WHATSAPP செய்தி அனுப்ப வேண்டுகோள்!
மண்டலம் வாரியாக அதிகரிக்க உத்தேசிக்கப்பட்டுள்ள காயல்பட்டினம் நகராட்சியின் சொத்து வரி! உங்கள் தெரு எந்த மண்டலத்தில்?
படிவம் 7 பயன்படுத்தி வாக்காளர் பட்டியலில் தவறுதலாக இடம்பெற்றுள்ள பெயரை எவ்வாறு நீக்குவது?

சுடச்சுட காயல் செய்திகள்! சுவையான இஸ்லாமிய கட்டுரைகள் !!
தொடர்பு கொள்ள : admin@kayalnews.com
© Copyright : Kayalnews.com