சுற்றுச்சூழல் மாசு மற்றும் சுற்றுச்சூழலியல் படிப்புகள் ஓர் கண்ணோட்டம்! | ![]() | ![]() |
08 ஜனவரி 2013 மாலை 10:41 | |||
வெகு வேகமாக வளரும் மக்கள் தொகை, அதிகரித்து வரும் சுற்றுச்சூழல் மாசுபாடு ஆகியவற்றால் இன்று சுற்றுச்சூழல் பற்றிய விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளதை அறிவோம். இயற்கை மற்றும் சமூக அறிவியல்களின் ஒருங்கிணைப்பாக சுற்றுச்சூழலியல் விளங்குகிறது. சுற்றுச் சுழல் மாசுபாடு :- தொழிற்சாலை கழிவுகள் ரசாயண திரவம் மற்றும் கதிரியக்க கசிவுகள், வாகனங்களின் இறைச்சல் வாகனங்களிலிருந்து வெளிப்படும் புகை, மனிதன் புகைக்கும் பீடி, சிகரேட், பாலித்தீன் பயன்பாடுகள் மலைகளையும், காடுகளையும் அழித்து மரம் வெட்டுதல் மனித கழிவுகளை நேராக பருகும் நீர்நிலைகளில் விடுதல், இரசாயண உரம், பூச்சிக்கொல்ளி மருந்துகளின் பயன்பாடுகள் போன்றவைகளாகும். நிலம் மாசுபடுததல்:- தொழிற்சாலை கழிவுகளும், ரசாயண திரவங்களும் அசுத்தமுள்ள நிலையிலும் விஷத்தன்மை கொண்ட நிலையிலும் மண்ணில் செலுத்தப்படுவதால் மண்ணின் மகத்துவம் கெட்டுவிடுகிறது. மேலும் பிளாஷ்டிக் பொருட்களும் பாலித்தீன் பைகளும் மண்ணில் புதையுண்டு போவதால் விளை நிலங்கள் மாசுபட்டு வீரியமிக்க கனிகளையும், செடி கொடிகளையும் தாவரங்களையும் வளரவிடமால் தடுக்கிறது. நீர் மாசுபடுதல்:- மனிதனின் அத்தியாவசிய நீர் தேவையை கிணறுகளும், ஏரி, குளம், குட்டைகளும் தற்போது போரிங் பைப்புகளும் நிவர்த்தி செய்கின்றன. ஆனால் இந்த அரிய பொக்கிஷத்தை கூட தொழிற்சாலை கழிவுகள் மற்றும் மனிதக் கழிவுகள் அதிகமான அளவில் நீர்நிலைகளில் நேரடியாக கலப்பதால் நீர் மாசுபடுபவதுடன் அந்த நீரை பருகுவதால் குடல் நோய்களும் மனித பயன்பாட்டிற்கு உபயோகிப்பதால் தோல் நோய்களும் ஏற்படுகிறது. இவை மனிதனுக்கு மட்டுமல்லாமல் பல்வேறு கால்நடைகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. காற்று மாசுபடுதல்:- சுவாசிக்கும் காற்றில் மனிதன் ரசாயன கதிரியக்கம் தாக்கத்தை ஏற்படுத்தியும், தொழிற்சாலைகளின் கரியமில வாயுக்கள் வெளிப்பட்டு வான் மண்டலத்தையும் பாதித்து ஓசோன் படலத்தை ஓட்டையாக்குகிறது. இதுமட்டுமல்லாமல் மனிதன் பீடி, சிகரெட், கஞ்சா போன்ற கொடிய தற்கொலைக்கு ஈடான விஷத்தை உள்ளே இழுத்து அதை வெளியிடுவதால் அருகில் இருப்பவர்களுக்க மூச்சுத்திணரல், சுவாச உறுப்புக்களில் கோளாறுகள் மற்றும் கேன்சர் போன்ற கொடிய நோய்களை உருவாக்கிக்கொள்கிறான். இன்றைய நவீன யுகத்தில் சாட்டிலைட்டுகள், வின் கேமிராக்கள் என்று அதிக அளவிலான சமிங்கை தரும் பொருட்கள் அவ்வப்போது ஏவப்படுகிறது இவைகள் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மேல் செயலிழந்துவிடுகின்றன மேலும் இந்த வின்கலங்கள் வானவெளியில் அப்படியே அநாதைகயாக மிதந்து வருவதால் புதிய செயற்கை கோள்களுக்கு இடையுறு ஏற்படுத்துவதுடன் வான் மண்டலத்தில் குப்பைகளாக சேர்ந்து சுற்ற ஆரம்பிக்கின்றன. இந்த வின்வெளி குப்பைகள் புவியின் ஈர்ப்பு மையத்தை தொடும்போது அவை நிலத்தை நோக்கி ரசாயண குண்டுகள் போல வேகமாக வந்து வெடிக்கின்றன. இவைகளின் வெடிப்புகளால் அந்த பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படுவதுடன் அங்கு கதிரியக்கம் வெளிப்பட்டு மக்களின் உடலில் பல்வேறு நோய்களையும் ஏற்படுத்துகின்றன. இவ்வளவு பிரச்னைகள் அடங்கிய சூழலில் வாழும் நாம், குறிப்பாக மாணவ, மாணவியர் இது சமந்தமான துறைசார் படிப்புகளை தெரிந்து கொள்வது காலத்தின் கட்டாயம். சுற்றுச்சூழலியல் படிப்புகள்:- சுற்றுச்சூழல் விஞ்ஞானிகள், சுற்றுச்சூழல் உயிரியலாளர்கள், சுற்றுச்சூழல் இன்ஜினியர்கள், சுற்றுச்சூழல் மாதிரி வடிவமைப்பாளர்கள், சுற்றுச்சூழல் மீடியாத் துறையினர் என இன்று இத்துறையில் எண்ணற்ற வாய்ப்புகள் இருக்கின்றன. சுற்றுச்சூழல் சமநிலை, பயோடைவர்சிடி மற்றும் வேஸ்ட்லேண்ட் மேனேஜ்மென்ட் என்னும் இலக்குகளை நோக்கி இவர்களின் பணி அமைகிறது. இத் துறையில் ஆய்வுப் படிப்புகளை பல பல்கலைக்கழகங்கள் தருகின்றன. சமீப காலமாக சில கல்வி நிறுவனங்கள் இத்துறையில் பி.எஸ்சி. மற்றும் எம்.எஸ்சி. படிப்புகளைத் தருகின்றன. நல்ல சம்பளத்தையும் சிறப்பான எதிர்காலத்தையும் இத்துறை தருவதால் இப்படிப்புகளுக்கான போட்டி அதிகரித்துள்ளது. பெங்களூருவில் உள்ள இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ், டேராடூனில் உள்ள வைல்ட்லைப் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா, புதுடில்லியிலுள்ள ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகம், புதுடில்லியிலுள்ள ஜமியா ஹம்டார்ட் பல்கலைக்கழகம், பந்த் நகரிலுள்ள ஜி.பி. பந்த் விவசாய பல்கலைக்கழகம். கல்வி கலவை
Add commentகாயல் நியுஸ், வாசகர்கள் கருத்துக்களை வரவேற்கிறது. வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் நியுஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்த விதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். முரண்பாடான மரியாதைக்குறைவான, கண்ணியமில்லாத கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கும் அவைகளை நீக்குவதற்கும் எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு. தங்களது பெயர் மற்றும் கருத்துக்களை தமிழில் தட்டச்சு செய்யலாம். உதாரணமாக "காயல்பட்டினம்" என்று தட்டச்சு செய்ய ஆங்கிலத்தில் "kaayalpattinam" என்று தட்டச்சு செய்து Space bar-ஐ அழுத்தினால் தங்கள் தட்டச்சு செய்த சொல் தமிழாக மாற்றப்படும். ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும். |
செய்திகள்
![]() | வாவு வஜீஹா வனிதையர் கல்லூரியில் மாநில அளவிலான திறன்மிகு கருத்தரங்கம்! |
![]() | காயல்பட்டினத்தில் இருந்து இ சேவை மாற்றல் விஷயம்! மாவட்ட ஆட்சியரின் கவனத்திற்கு திங்களன்று கொண்டு செல்வதாக துணை தாசில்தார் உறுதி!! |
![]() | இ சேவை மையம்: காயலபட்டினத்தில் இருந்து மாற்றப்படக்கூடாது என கோரி மாவட்ட ஆட்சியருக்கு பொது மக்கள் - ஈமெயில், FAX குறுஞ்செய்தி மற்றும் WHATSAPP செய்தி அனுப்ப வேண்டுகோள்! |
![]() | மண்டலம் வாரியாக அதிகரிக்க உத்தேசிக்கப்பட்டுள்ள காயல்பட்டினம் நகராட்சியின் சொத்து வரி! உங்கள் தெரு எந்த மண்டலத்தில்? |
![]() | படிவம் 7 பயன்படுத்தி வாக்காளர் பட்டியலில் தவறுதலாக இடம்பெற்றுள்ள பெயரை எவ்வாறு நீக்குவது? |
சமீபத்திய கட்டுரைகள்
![]() | பிப் 14ஆம்தேதி . காதலர் தினம்..? ஓர் இஸ்லாமிய பார்வை!! |
![]() | எறும்பின் குற்றம்..! கட்டுரை!! |
![]() | ஒவ்வொருவரும் கண்காணிக்கப்படுகிறோம்! கட்டுரை!! |
![]() | இன்று போதை ஒழிப்பு தினம்! போதை என்னும் அழிவுப்பாதை! கட்டுரை!! |
![]() | வெயிலைச் சமாளிப்பது எப்படி? கட்டுரை!! |
ஏகத்துவம்
![]() | அல்லாஹ்வின் நேசர்களுக்கு எந்தப் பயமும் இல்லை,அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள்! |
![]() | "வெள்ளை வெளேர் என்ற நிலையில் உங்களை நான் விட்டுச் செல்கிறேன்! அதன் இரவும் பகலைப் போன்றது!! (நபிமொழி) |