بسم الله الرحمن الرحيم
Saturday 16th February 2019 | 10 ஜமாதுல் ஆஹிர் 1440AH
பதாகை
news menu left
news menu right

பதாகை

பதாகை

 • Google Bookmarks
 • Twitter
 • Windows Live
 • Facebook
 • MySpace
 • deli.cio.us
 • Digg
 • Newsvine
 • reddit
 • StumbleUpon
 • Yahoo! Bookmarks
 • Yigg
"எனது பயணம்" காயலரின் ஓர் அழகிய மொழிப்பெயர்ப்பு! அச்சிடுகமின்-அஞ்சல்
12 ஜூலை 2013 மாலை 03:17

ஆசிரியர் : முஹம்மது அஸத் (லியோ போல்டுவில்)

தமிழில் : எஸ்.ஓ.அபுல் ஹஸன் கலாமி,

தலைவர் : அன்னை ஆயிஷா சித்தீக்கா

மகளிர் இஸ்லாமிய கல்லூரி, காயல்பட்டினம்

வெளியீடு : சாஜிதா புக் சென்டர், 248 தம்பு செட்டி தெரு,

மண்ணடி, சென்னை – 1.

மானுட வாழ்வில் 'பயணம்' என்பது தவிக்க இயலாத ஒன்றாகும். பொதுவாக பயணத்தில் மனிதனுக்கு பல புதிய அனுபவம், கலாச்சாரம், மொழி, மற்றும் பல்வேறு மனிதர்களுடனான கலந்துரையாடல்களில் கிடைக்கும் புரிந்துணர்வு ஆகியன கிடைக்கும். மொத்தத்தில் பயணம் மனிதர்களுக்கு பூமியைப் பற்றிய அறிவைக் கற்றுக் கொடுக்கின்றது என்றால் அது மிகையல்ல.

அந்த வகையில், ஒரு மனிதர் மேற்கொண்ட நீண்ட பயணம் இந்த பூமிப்பந்தின் மேல் மானுடன் எப்படி வாழ்ந்தால் பூமிக்கு கீழே (அதாவது மரணத்திற்கு பின் உள்ள) அவரின் வாழ்வு சுபிட்சமாக அமையும் என்ற உண்மையைக் கற்றுக் கொடுத்தது.

அந்த உண்மை தான் 'இஸ்லாம்' ஆகும். அதை அறிந்து கொண்டவர்கள் லியோ போல்ட்வைஸ் (யூதர்) ஆக இருந்து, முஹம்மத் அஸத் ஆக மாற்றம் பெற்றவர் ஆவார். பி;ரபல பத்திரிக்கையாளரும், எழுத்தாளருமான அவர் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டபின் தன் அனுபவங்களை பகிர்ந்து கொள்ளும் விதமாக இரண்டு புத்தகங்களை ((ISLAM AT CROSS ROADS, ROAD TO MAKKAH)ர்) எழுதுகின்றார். அதில் ஒன்றான “ROAD TO MAKKAH” என்ற நூல் 'எனது பயணம்' என்ற பெயரில் சாஜிதா பதிப்பகத்தாரால் மொழியாக்கம் செய்து வெளியிடப்பட்டுள்ளது.

Mujahid

ஆஸ்திரேலியா நாட்டில் ஆசாரம் மிக்க யூதக்குடும்பத்தில் பிறக்கின்றார் லியோ போல்ட். அவரது குடும்ப பாரம்பரியபடி ஹீப்ரு மொழி, பழைய ஏற்பாடு, யூதக் கிரந்தங்களின் விரிவுரையென அனைத்திலும் தகைமை மிக்கவராக ஆகின்றார். இருப்பினும் இவை அனைத்தையும் தாண்டி அவர் தன் விருப்பத்தை இப்படி தெரிவிக்கின்றார் :

'நான் காண வேண்டிய ஆன்மீக அமைப்பு ஒன்று கண்டிப்பாக இருக்க வேண்டும் என்பது எனக்குத் தெரிந்து இருந்தது. அதை நோக்கிச் செல்ல வேண்டுமென விரும்பினேன்'.

பின்னர் பல்கலைக்கழக படிப்பில் வெறுப்பு கொண்டு பத்திரிக்கையாளர் ஆக வேண்டும் என்ற தன் விருப்பத்திற்கு தந்தை எதிர்ப்பு தெரிவிக்கவே 1920-ம் ஆண்டு வீட்டை வெளியேறி தனது பயணத்தை துவங்குகின்றார்.

ஒரு பத்திரிக்கையாளனாக இருந்து அவர் மேற்கொண்ட 'பயணம்' உலகைப் பற்றிய புரிதலை குறிப்பாக ஐரோப்பியா அரபு உலகத்தை எப்படி தவறாகப் புரிந்து வைத்துள்ளது என்பதை படம் பிடித்து காட்டியது. பத்திரிக்கையாளனாக 1922-ல் மத்திய கிழக்கிற்கு (பலஸ்தீன்)-க்கு தன்னுடைய பயணத்தை மேற்கொண்ட அவர் நூலை வாசிக்கக் கூடியவர்களையும் தன்னுடன் அழைத்துச் செல்கின்றார்.

பலஸ்தீனை யூதர்களின் தாயகமாக்கிக் கொள்ள கட்டாயப்படுத்தியது. ஐரோப்பியர்களின் திட்டமேயாகும். சுருங்கக் கூறின், யூதர்கள் இந்த பகுதிக்கு புதியவர்கள் குறிப்பிடும் அவர் அந்த பயணத்தின் போது சியோனிச இயக்கத்தின் தலைவரான செய்ம் வைஸ்மேனை சந்திக்கின்றார். அந்த சந்திப்பில் வைஸ்மேன் யூத தேசிய தாயகம் அமைப்பது குறித்து உரையாடுகின்றார். அவ்வேளையில் இவருக்கும் வைஸ்மேனுக்கும் இடையில் ஒரு சூடான விவாதம், (1922-ல்) நடைபெறுகின்றது. அதனை தன்னுடைய நூலில் (பக் -122) இப்படி பதிவு செய்கின்றார்.

அவர்களின் தீவிர எதிர்ப்பலையின் மத்தியில் எப்படி நீங்கள் பலஸ்தீனத்தை உங்கள் தாயகமாக ஆக்கப் போகின்றீர்கள்.? எல்லாவற்றுக்கும் மேலாக அவர்கள் இந்த நாட்டின் பெரும்பான்மை மக்களாக உள்ளார்கள்?' என்றார் இவர்.

இந்த சியோனிச தலைவர் தனது தோல்களை குலுக்கிக் கொண்டு 'இன்னும் சில ஆண்டுகளில் பெரும்பான்மையினராக இருக்க மாட்டார்கள் என்று நாங்கள் நம்புகின்றோம்' என்று சூடாக பதில் கூறினார். (அது தான் நடக்கவும் செய்தது).

இப்படி தொடர்ந்த அவர்களது விவாதத்தில் லியோபோல்ட் பலஸ்தீன பூமியின் முழு வரலாற்றையும் அவர்கள் முன் (நமக்கும் சேர்த்து) விளக்குகின்றார். பலஸ்தீன பூமியில் அவர் மேற்கொண்ட பயணம் பல அரிய தகவல்களை நமக்கு அரியத் தருகின்றது.

பின்பு டமாஸ்கஸ் (சிரியா) தொடங்கி அரபு உலகம் முழுவதையும் வலம் வருகின்றார். ஒவ்வொரு நாட்டிற்கும் அவர் பயணிக்கும் போது நம்மையும் உடன் அழைத்துச் செல்கின்றார். டமாஸ்கஸின் கடை வீதியில் தான் கண்ட அனுபவத்தை இப்படி பதிவு செய்கின்றார்;.,

'ஒரு வாடிக்கையாளர் ஆளில்லாத அந்த கடை முன் நின்று கடைக்காரர் சீக்கிரம் வருவாரா? அல்லது வேறு கடைக்கு செல்வோமா? என சிந்தித்துக் கொண்டு அடுத்தக் கடைக்கு செல்ல காலடி எடுத்து வைக்கும் போது அந்த அடுத்த கடைக்காரர் உடனே வந்து அந்த வாடிக்கையாளரின் தேவையைக் கேட்டு சாமான்களை எடுத்துக் கொடுக்கின்றார், எங்கிருந்து? தமது கடையிலிருந்தா? இல்லை! அந்த ஆளில்லாத கடையில் இருந்தே எடுத்து கொடுத்து பணத்தை வாங்கி அந்த கடையின் கல்லாவில் போடுகிறார். ஐரோப்பாவில் இதுபோன்ற பரிவர்த்தனையை பார்க்க முடியுமா? என்று கேள்வி எழுப்புகின்றார்.

அரேபியாவின் மன்னர் இப்னு சவூதுடன் நட்பு கொண்டு நெருக்கமாக இருந்த நாட்களில் அரேபிய தீபகற்பம் இருந்த சூழ்நிலை மற்றும் அரபுகளின் நிலை என்று அவரின் பயண அனுபவங்களை வாசிக்கும் ஒருவர் சவூதி அரேபியாவின் முழு வரலாற்றையும் ஒரு முறையாவது வாசித்தே தீர வேண்டும் என்ற முடிவுக்கு வருவார்.

மன்னர் இப்னு சவூதின் கீர்த்தி மிக்க பண்புகள், குணநலன்களை பல இடங்களில் பதிவு செய்துள்ள அஸத், எதிர்காலத்தை பற்றிய மன்னரின் அக்கறை இன்மை, நிர்வாகத்தில் தொலைநோக்கு பார்வையில்லாமை போன்றவற்றையும் தெளிவாக பதிவு செய்கின்றார். மன்னர் இப்னு சவூதைப் பற்றி நூலில் இப்படி பதிவு செய்கின்றார். 'சுருக்கமாக சொல்வதென்றால் இப்னு சவூத் பெற்றிருந்த பல தகைமைகள் ஒரு மனிதனை சிகரத்திற்கு உயர்த்துபவை. ஆனால் அவரோ அத்தகைய உயர்வினைப் பெற எவ்வித உண்மையான நடவடிக்கையும் எடுக்கவில்லை.'

அதன் பிரதிபலிப்பைத் தான் இன்றைய அரேபியா அனுபவித்து வருகின்றது என்பது அனைவரும் அறிந்த உண்மையாகும்.

அரபு உலகில் அவர் மேற்கொண்ட பயணத்தில் இஸ்லாத்தை நமக்கு இப்படி அறிமுகப்படுத்துகின்றார் : 'இஸ்லாம் கலாச்சார சாதனைகளுக்கு ஒரு மகத்தான ஆர்வம் ஊட்டும் சக்தியாக விளங்கியது. அதன் காரணமாக மனிதன் சமுதாய வரலாற்றில் பெருமைக்குரிய பக்கங்களை அது உருவாக்கியது. அது அறிவொளிக்கும் ஆமாம் சொன்னது. ஆராய்ச்சி மறுப்புக்கு இல்லையென்றது. செயல்திறனுக்கு ஆமாhம் என்றது. சோம்பலுக்கு இல்லை என்றது. வாழ்க்கைக்கு ஆமாம் என்றது. துறவுக்கு இல்லை என்றது'. என்று சொல்லிக் கொண்டே செல்கின்றார்.

1930 களில் மதீனா நகரில் மாண்புகள் குறித்த வரிகள் வாசிப்போரின் கண்களை பனிக்கச் செய்கின்றது. ஆப்கான், ஈரான் என அவர் மேற்கொண்ட பயணங்களும், சந்தித்த அனுபவங்களும் வாசிப்போரை வியப்பில் ஆழ்த்துகின்றது.

ஸனூசி இயக்கத்தை பற்றிய அறிமுகம் அவர்களின் இறை வழிப் போராட்டம் (ஜிஹாத்), இத்தாலிய ஆக்கிரமிப்பிற்கு எதிராக லிபியாவில் உமர் முக்தார் அவர்கள் நடத்திய போரில் போர்க்களத்திலேயே எதிரிகளின் விமான தாக்குதல், குண்டு வெடிப்புகளுக்கு மத்தியில் அவரைச் சந்தித்து உரையாடிய போன்ற அனுபவங்கள் சிலிர்ப்பை ஏற்படுத்துகின்றது.

நான்கு ஆண்டுகள் இஸ்லாமிய உலகில் தான் மேற்கொண்ட பயணத்தின் மூலம் கிடைத்த அனுபவங்களை இப்படி பதிவு செய்கின்றார். 'நான்கு ஆண்டுகள் அந்த நாடுகளில் சுற்றியதில் நான் கண்டறிந்த உண்மை இஸ்லாம். அங்கு இன்றும் ஜீவனோடு இருக்கிறது என்பதே.

முஸ்லிம்கள் இஸ்லாத்தின் திட்டங்களை நடைமுறைப்படுத்ததை விடவும், எனக்கு அதிக கவலை அளிக்கும் விஷயம் என்னவெனில், திட்டங்களை நடைமுறைப்படுத்தும் சாத்தியக் கூறுகளை கூட அவர்கள் தெரிந்து கொள்ளவில்லை என்பதே.

மேலும் மேற்குலகம் இஸ்லாமிய உலகில் எப்படி தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றது என்பதே இப்படி பதிவு செய்கின்றார். 'மேற்குலகில் கலாச்சார தாக்கத்தால் பல இஸ்லாமிய ஆண்களின், பெண்களின் ஆன்மா மெல்ல மெல்ல சுருங்கிப் போய்விட்டது. மேற்குலகினரை இவர்களும் அபிவிருத்தி என்ற சிலை வணங்கிகளாக மாறிவிட்டார்கள்.! என்று பதிவு செய்துள்ளது. எவ்வளவு நிதர்சனமானது என்பதே நாம் இப்போது நேரில் கண்டு வருகின்றோம்.

நூலின் இறுதிப்பகுதியில் 1926-ம் ஆண்டு பெர்லினில் தம் மனைவியுடனான ரயில் பயணத்தின் தான் மற்றும் மனைவி இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ள காரணமாக இருந்த நிகழ்வை பதிவு செய்துள்ள விதம் படிப்பினையே தருவதும் நிகழ்காலத்தில் நடந்து வருவதை நினைவூட்டுவதுமாக அமைந்துள்ளது.

ஆங்கிலத்திலான இந்நூலைப் பற்றி பல முறை கேள்விப்பட்டிருந்த போதிலும் தமிழில் அதை வாசிக்கும் போது சிந்தனையை தூண்டி பிரமிப்பை ஏற்படுத்துகின்றது. தமிழ் கூறும் நல்லுலகிற்கு இந்நூல் மிகவும் தாமதாக வெளிவந்துள்ளதே என்ற வருத்தமும் ஏற்படுகின்றது.

இந்நூலைத் தேர்வு செய்து மொழி பெயர்த்து வெளியிட்ட சாஜிதா பதிப்பகத்தார் பாராட்டிற்குரியவர்கள். இருப்பினும் நூலில் உள்ள குறைகளையும் பதிப்பகத்தார் கவனத்தில் கொள்ள வேண்டும். துவக்கத்தின் நூலாசிரியர் பற்றிய சிறு குறிப்பு ஒன்றை கொடுத்திருக்கலாம். மொழிபெயர்ப்பாளர் பற்றிய அறிமுகத்தைக் கொடுத்திருக்கலாம். நூலின் முன்னுரைக்கு முன்பாக 'இந்த கதையின் கதை' என்ற தலைப்பில் எதிர்மறையான கருத்துக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும்.

மேலும் இவ்வளவு பெரிய நூலை மொழி பெயர்ப்பதில் உள்ள கஷ்டங்களை நாம் அறிவோம். இருப்பினும் இதுபோன்ற சிறந்த அரிய நூலை வெளியிடும் போது மிகுந்த கவனம் எடுக்கப்பட்டிருக்க வேண்டும். முன்னுரை உட்பட மொழிபெயர்ப்பு, மொழிநடை, மற்றும் வார்த்தை அமைப்பு வாசிப்போரின் வேகத்தை மட்டுப்படுத்துவதுடன் சலிப்பையும் ஏற்படுத்துகின்றது.

அதைப் போன்று, நூலில் சில பிழைகள் இருக்கலாம், ஆனால் ஏராளமான எழுத்துப் பிழைகள் உள்ளது. கருத்தில் பிழையைக் கொடுப்பதுடன், வாசிப்பதில் தொய்வை ஏற்படுத்துகின்றது. இதனை பதிப்பகத்தார் கண்டிப்பாக கருத்திற்கொள்ள வேண்டும். இவைகளைத் தவிர்த்து பார்த்தோமேயானால் 'எனது பயணம்' என்ற இந்நூல் தமிழ் இஸ்லாமிய இலக்கிய உலகிற்கு கிடைத்த அரிய பொக்கிஷம் ஆகும்.

நூலாய்வு: முஹம்மது இஸ்மாயீல்

Add comment

காயல் நியுஸ், வாசகர்கள் கருத்துக்களை வரவேற்கிறது. வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் நியுஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்த விதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். முரண்பாடான மரியாதைக்குறைவான, கண்ணியமில்லாத கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கும் அவைகளை நீக்குவதற்கும் எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு. தங்களது பெயர் மற்றும் கருத்துக்களை தமிழில் தட்டச்சு செய்யலாம். உதாரணமாக "காயல்பட்டினம்" என்று தட்டச்சு செய்ய ஆங்கிலத்தில் "kaayalpattinam" என்று தட்டச்சு செய்து Space bar-ஐ அழுத்தினால் தங்கள் தட்டச்சு செய்த சொல் தமிழாக மாற்றப்படும். ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.


Security code
Refresh

 

செய்திகள்

வாவு வஜீஹா வனிதையர் கல்லூரியில் மாநில அளவிலான திறன்மிகு கருத்தரங்கம்!
காயல்பட்டினத்தில் இருந்து இ சேவை மாற்றல் விஷயம்! மாவட்ட ஆட்சியரின் கவனத்திற்கு திங்களன்று கொண்டு செல்வதாக துணை தாசில்தார் உறுதி!!
இ சேவை மையம்: காயலபட்டினத்தில் இருந்து மாற்றப்படக்கூடாது என கோரி மாவட்ட ஆட்சியருக்கு பொது மக்கள் - ஈமெயில், FAX குறுஞ்செய்தி மற்றும் WHATSAPP செய்தி அனுப்ப வேண்டுகோள்!
மண்டலம் வாரியாக அதிகரிக்க உத்தேசிக்கப்பட்டுள்ள காயல்பட்டினம் நகராட்சியின் சொத்து வரி! உங்கள் தெரு எந்த மண்டலத்தில்?
படிவம் 7 பயன்படுத்தி வாக்காளர் பட்டியலில் தவறுதலாக இடம்பெற்றுள்ள பெயரை எவ்வாறு நீக்குவது?

சுடச்சுட காயல் செய்திகள்! சுவையான இஸ்லாமிய கட்டுரைகள் !!
தொடர்பு கொள்ள : admin@kayalnews.com
© Copyright : Kayalnews.com