بسم الله الرحمن الرحيم
Saturday 16th February 2019 | 10 ஜமாதுல் ஆஹிர் 1440AH
பதாகை
news menu left
news menu right

பதாகை

பதாகை

 • Google Bookmarks
 • Twitter
 • Windows Live
 • Facebook
 • MySpace
 • deli.cio.us
 • Digg
 • Newsvine
 • reddit
 • StumbleUpon
 • Yahoo! Bookmarks
 • Yigg
மீடியா உலகில் முஸ்லிம்கள்! (பாகம்-7)அச்சிடுகமின்-அஞ்சல்
22 நவம்பர் 2013 மாலை 12:13

ஆங்கிலத்தில்  Call the dog mad and then shoot  என்று சொல்வார்கள். அதாவது, ஒரு நாயை அது வெறி பிடித்த நாய், பைத்தியம் பிடித்த நாய் என்று சொல்லி, அதன் பின் அதனைச் சுட்டுத் தள்ளுவது. வெறி பிடித்த நாயைச் சுட்டுத் தள்ளினால் யாரும் ஒன்றும் கேட்க மாட்டார்கள். அது செத்தால் நல்லது தான் என்று எண்ணுவார்கள். இந்தக் கொள்கையைத்தான் மேற்குலகம் முஸ்லிம்கள் மேல் நடைமுறைப் படுத்துகின்றது. இந்தத் தந்திரத்தைத் தான் அமெரிக்கா தலைமையில் செயல்படும் "நவீன சிலுவைக்காரர்கள்" கையாளுகின்றார்கள்.

அதாவது முஸ்லிம்களைப் "பைத்தியம்" என்று அழைப்பது, அல்லது அவர்களைப் பற்றிய செய்திகளைத் தொடர்ந்து தவறாகவே கொடுத்து முஸ்லிம்கள் "பைத்தியங்கள்" என்று மற்றவர்களைச் சொல்ல வைப்பது. அதன்பின் ஆக்கிரமிப்பாளர்கள் அவர்களைச் சுட்டுக் கொல்வது.

இந்தியாவில் ஹிந்துத்துவ ஃபாசிஸ்டுகள் குண்டுகளை வைத்து முஸ்லிம்களைக் கொன்றுவிட்டு, இங்குள்ள மீடியாக்களின் துணையோடு முஸ்லிம்கள்தான் அந்தக் குண்டுகளை வைத்தார்கள் என்று முஸ்லிம்கள் மீதே பழியைப் போடுவதைக் கண்டு வருகின்றோம்.

இதே பாணி சர்வதேச அளவிலும் கடைப்பிடிக்கப்படுகிறது.

அதாவது, உளவுத்துறை ஏஜன்சிகள் பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டு விட்டு, பழியை முஸ்லிம்கள் மேல் போடுவது உலக அளவிலும் நடக்கிறது. ஃபிரான்ஸ் தலைநகர் பாரிஸில் அல்ஜீரியாவைச் சார்ந்த ரகசிய போலீசார் குண்டுகளைப் போட்டனர். ஆனால் பழி முஸ்லிம்கள் மீது போடப்பட்டது.

60 சதவீதத்திற்கும் மேல் செய்திகள் மேலை நாட்டிலிருந்தே வருவதால், முஸ்லிம்கள் தங்கள் மேல் சுமத்தப்படும் தவறான குற்றச்சாட்டுகளை எப்படி எதிர்கொள்வது என்று தெரியாமல் தவிக்கிறார்கள்; தடுமாறுகிறார்கள். ஏனெனில் மொத்த உலகிலும் மீடியாவை வழிநடத்திச் செல்வது மேற்குலகம்தான்.

இனி நமது இந்தியாவின் பக்கம் வருவோம்.

நமது தேசிய நாளிதழ்களும், காட்சி ஊடகங்களும் மேற்குலகின் உண்மையான சீடர்கள். நடுநிலையான, சுதந்திர சிந்தனை என்ற தங்கள் பாம்பரியத்தை நமது தேசிய அளவிலுள்ள ஊடகங்கள் என்றோ தொலைத்துவிட்டன.மாநில அளவிலுள்ள பத்திரிகைகளை எடுத்துக் கொண்டாலும் இதே கதிதான். முஸ்லிம்களைப் பயங்கரவாதிகளாகச் சித்தரிப்பதில் இந்தப் பத்திரிகைகள் வெற்றி பெற்றுள்ளன

. அனைத்துவிதமான பயங்கரவாத நடவடிக்கைகளுக்கும் முஸ்லிம்களே காரணம் என்று சொல்லும் இந்தப் பத்திரிகைகள் அந்தக் கதைகளைப் பின்தொடர்ந்து (Follow up) வெளியிடும்போது காரத்தைக் கொஞ்சம் கூட்டிக்கொள்ளும். இன்னும் உணர்வைத் தூண்டும் விதமாகப் பல்வேறு குட்டிக் கதைகளைச் சேர்த்துக்கொள்ளும். காவல்துறை இந்தக் கதைகளை அப்படியே உண்மை என்று நம்புகின்றது. இதில் அதிர்ச்சிகரமான விஷயம் என்னவெனில் நீதித்துறையும் இதற்கு விதிவிலக்கல்ல.

நடுநிலைக் கண்ணோட்டத்தோடு அனைத்தையும் கவனித்து, எந்தச் சமுதாயத்திற்கும் அநீதி இழைத்துவிடாமல் நீதியை நிலைநாட்டவேண்டிய நீதித்துறை கழிசடைப் பத்திரிகையாளர்கள் எழுதும் கண்ட கண்ட புரட்டுக் கதைகளை நம்புகிறது. இந்தக் கதைகளின் மறுபக்கத்தை யாருமே கேள்வி கேட்பதில்லை. யாருமே விசாரணை செய்வதில்லை. இதனால் ஏற்படும் விளைவுகள் பாரதூரமானது; பயங்கரமானது.

இதற்கு ஓர் உதாரணத்தைக் காணலாம். ஒருமுறை சென்னையில் தாடி வைத்த ஒரு முஸ்லிம் அவருடைய முஸ்லிமல்லாத நண்பரின் வீட்டுக்கு வந்து, அழைப்பு மணியை அழுத்தினார். ஒரு சிறுவன் வீட்டினுள்ளிருந்து கதவுக்கருகில் வந்து, ஜன்னல் வழியாக வந்திருப்பது யார் என்று எட்டிப் பார்த்தான். அங்கே தாடி வைத்து ஒருவர் நிற்பதைக் கண்ட அந்தச் சிறுவன் நேரே தன் தந்தையிடம் ஓடி "ஒரு தீவிரவாதி நிற்கிறான்" என்று கூறினான்.

பதறியடித்து ஓடோடி வந்த தந்தை வந்தவரைப் பார்த்தார். வந்தவர் அவருடைய நண்பர் என்பதை அறிந்தபின்தான் சமாதானமடைந்தார்.

மீடியா பிஞ்சு உள்ளங்களைக்கூட விட்டு வைக்கவில்லை என்பதற்கு இது ஓர் உதாரணம்.

மீடியா எப்படி முஸ்லிம்களைக் கொல்கிறது?

இங்கே முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதியும், பிரபல மனித உரிமை ஆர்வலருமான வி.ஆர். கிருஷ்ணய்யர் அவர்களின் கூற்றைக் குறிப்பிடுவது பொருத்தமாக இருக்கும்.

202ம் ஆண்டு குஜராத்தில் மோடி தலைமையில் முஸ்லிம் இனப்படுகொலைகள் நடந்தன. ஆயிரக்கணக்கான முஸ்லிம் பெண்கள் கதறக் கதறக் கற்பழிக்கப்பட்டு, உயிரோடு எரிக்கப்பட்டார்கள். பிஞ்சுக்குழந்தைகள் கூட வாயில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக் கொல்லப்பட்டார்கள். கோடிக்கணக்கான முஸ்லிம்களின் சொத்துகள் சூறையாடப்பட்டன; அழிக்கப்பட்டன. இந்தக் கொடுமைகளைக் கண்டு திடுக்குற்ற நடுநிலையான மனித உரிமை ஆர்வலர்கள் இந்த இனப்படுகொலையின் உண்மைகளை அறிந்து உலகுக்கு அறிவிக்கவேண்டும் என்று முடிவுசெய்தார்கள். அதற்காக ஓர் உண்மையறியும் குழுவை ஏற்படுத்தினார்கள். அந்தக்குழுவிற்குப் பெயர் "அக்கறையுள்ள குடிமக்களின் குழுமம்" (Concerned Citizens Tribunal).

இனப்படுகொலைகளின் சூடு ஆறுவதற்கு முன்பே இந்தக் குழு மம் களத்தில் இறங்கியது. குஜராத்துக்குச் சென்று பாதிக்கப்பட்ட அத்தனை பேரிடமும் நடந்த விவரங்களைக் கேட்டறிந்து, பதிவு செய்தது. முஸ்லிம்கள், ஹிந்துக்கள், ஃபார்சிகள் என்று எல்லோரையும் இந்தக் குழுமம் பேட்டி கண்டது.

மனித இனத்திற்கெதிரான குற்றம்

இறுதியில் தங்கள் பதிவுகள் அனைத்தையும் "மனித இனத்திற்கெதிரான குற்றம்" (Crime Against Humanity) என்ற பெயரில் அறிக்கையாக இரண்டு பகுதிளாக ஆங்கிலத்தில் வெளியிட்டது. ("மனித இனத்திற் கெதிரானகுற்றம்" என்றபெயரில் 'இலக்கியச்சோலை' நூல் வெளியீட்டு நிறுவனம் இதன் முதல் பாகத்தைத் தமிழில்வெளியிட்டுள்ளது.) இதனை வாசிக்கும் பொழுது இன்னொன்றையும் மனதிற் கொள்ளவேண்டும். இந்தக் குழுமத்தின் அறிக்கை வெளிவரும் சமயம் கோத்ராவில் நடந்தவை பற்றி பெரும்பாலான உண்மைகள் வெளிவரவில்லை. ஆனால் தற்பொழுது கோத்ராவில் சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயில் எரிப்புக்கும் முஸ்லிம்களுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்று கூறி விசாரணை அறிக்கைகள் வந்துவிட்ட.ன.

(ஆனாலும் அரசு அமைத்த விசாரணைக்க மிஷனின் கூற்றைக் குறிப்பிட்டு கோத்ரா ரயில் எரிப்பு வழக்கு சிறப்புநீதிமன்றம் முஸ்லிம்களையே குற்றப்படுத்தி, முஸ்லிம்களுக்குத் தண்டனை வழங்கியிருக்கின்றது என்பதுவேறுவிஷயம்) ஆனால் இந்த அறிக்கைகள் ஒன்றும் வெளிவராத அந்தக்காலகட்டத்தில் அக்கறையுள்ள குடிமக்களின் குழுமம் இவ்வாறு தனது அறிக்கையில் குறிப்பிட்டது:

"இந்த இனப்படுகொலையில் வானொலி, தொலைக்காட்சி, அச்சு என்று அனைத்து மீடியாக்களின் பங்கும் மிக முக்கியமானது. எந்தப்பாரபட்சமும் இல்லாமல் செய்திகளை வெளியிடுதல், விசாரணைகளை மேற்கொண்டு உண்மைகளை வெளிக்கொண்டுவரதூண்டுதல், உண்மைகளை உலகுக்கு அறிவித்தல், அநீதிகளை அம்பலப்படுத்துதல் போன்றவை மீடியாவின் உடன்பாடான அம்சங்கள் (Positive aspects of media coverage). இதில் எதிர்மறையான அம்சங்கள் (Negative aspects) என்று பார்த்தோமானால் இனவெறியைத் தூண்டும், விதமாகத் கொட்டை எழுத்துகளில் தலைப்புகளைப்போடுதல், பொய்யான செய்திகளை அறிவித்தல் போன்றவையாகும். இந்த எதிர்மறையான அம்சங்கள் வதந்திகளுக்கு எண்ணை ஊற்றும், பகை எனும் புகையைக் காற்று வீசிப்பற்றவைக்கும், குறிவைக்கப்பட்டு தாக்கப்படும் ஓர் இனத்திற்கெதிராகவன் முறையைத்தூண்டும், அந்த வன்முறையைச் சரிகாணும்.

இந்த இரண்டாவது எதிர்மறையான அம்சங்கள் மூலம் மீடியா தனக்கென்று உள்ள சுதந்திரமான, நடுநிலையான நெறியைக் கைவிட்டுவிடுகிறது. அதாவது, நேர்மையான செய்தி, நடுநிலையான அலசல், நீதியை நிலைநாட்டும் விமர்சனம் போன்றவைகள் காற்றில் பறந்தோடி விடுகின்றன. அதற்குப்பதிலாக, அந்த அக்கிரமங்களின் ஒருபகுதியாக இந்த மீடியா மாறிவிடுகிறது. நரேந்திரமோடியின் கட்டளைக்கேற்ப, சபர்மதி எக்பிரஸ் ரயிலில் கொல்லப்பட்ட பயணிகளின் பிணங்கள் சாலையில் ஊர்வலமாகக் கொண்டுவரப்பட்டு, அஹமதாபாதிலுள்ள சோலா சிவில் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டன. இந்த ஊர்வலத்தில் வந்த "ராமபக்தர்கள்" முஸ்லிம்களுக்கெதிராக வெறியைத்தூண்டும் விதமாக கோஷங்களைஎழுப்பினர், தங்கள்வெறியை வெளிக்காட்டினர், பழிவாங்குவோம் என்று மிரட்டினர்.

அரசின் கட்டுப்பாட்டிலுள்ள அத்தனை மீடியாக்களும் இந்த ஊர்வலத்தை ஒளிபரப்ப பயன்படுத்தப்பட்டன. பிணங்கள் மருத்துவமனையை அடையும் சமயத்தில், அதற்கு முன்பே வெறி முறுக்கேறிய மக்கள் அங்கே ஒன்று கூடியிருந்தனர். "ரத்தத்திற்கு ரத்தத்தால் பழிவாங்குவோம்" என்று வெறியோடுஅவர்கள் கோஷங்களை எழுப்பிக்கொண்டிருந்தனர்."

தொடரும் இன்ஷா அல்லாஹ்..

ஆக்கம் : எம்.எஸ் அப்துல் ஹமீது

Add comment

காயல் நியுஸ், வாசகர்கள் கருத்துக்களை வரவேற்கிறது. வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் நியுஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்த விதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். முரண்பாடான மரியாதைக்குறைவான, கண்ணியமில்லாத கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கும் அவைகளை நீக்குவதற்கும் எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு. தங்களது பெயர் மற்றும் கருத்துக்களை தமிழில் தட்டச்சு செய்யலாம். உதாரணமாக "காயல்பட்டினம்" என்று தட்டச்சு செய்ய ஆங்கிலத்தில் "kaayalpattinam" என்று தட்டச்சு செய்து Space bar-ஐ அழுத்தினால் தங்கள் தட்டச்சு செய்த சொல் தமிழாக மாற்றப்படும். ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.


Security code
Refresh

 

செய்திகள்

வாவு வஜீஹா வனிதையர் கல்லூரியில் மாநில அளவிலான திறன்மிகு கருத்தரங்கம்!
காயல்பட்டினத்தில் இருந்து இ சேவை மாற்றல் விஷயம்! மாவட்ட ஆட்சியரின் கவனத்திற்கு திங்களன்று கொண்டு செல்வதாக துணை தாசில்தார் உறுதி!!
இ சேவை மையம்: காயலபட்டினத்தில் இருந்து மாற்றப்படக்கூடாது என கோரி மாவட்ட ஆட்சியருக்கு பொது மக்கள் - ஈமெயில், FAX குறுஞ்செய்தி மற்றும் WHATSAPP செய்தி அனுப்ப வேண்டுகோள்!
மண்டலம் வாரியாக அதிகரிக்க உத்தேசிக்கப்பட்டுள்ள காயல்பட்டினம் நகராட்சியின் சொத்து வரி! உங்கள் தெரு எந்த மண்டலத்தில்?
படிவம் 7 பயன்படுத்தி வாக்காளர் பட்டியலில் தவறுதலாக இடம்பெற்றுள்ள பெயரை எவ்வாறு நீக்குவது?

சுடச்சுட காயல் செய்திகள்! சுவையான இஸ்லாமிய கட்டுரைகள் !!
தொடர்பு கொள்ள : admin@kayalnews.com
© Copyright : Kayalnews.com