بسم الله الرحمن الرحيم
Tuesday 21st November 2017 | 02 ரபீஉல் அவ்வல் 1439AH
பதாகை
news menu left
news menu right

பதாகை

பதாகை

  • Google Bookmarks
  • Twitter
  • Windows Live
  • Facebook
  • MySpace
  • deli.cio.us
  • Digg
  • Newsvine
  • reddit
  • StumbleUpon
  • Yahoo! Bookmarks
  • Yigg
நூலகம் சென்று புத்தகம் படிப்போர் எத்தனை பேர்?அச்சிடுகமின்-அஞ்சல்
23 நவம்பர் 2013 மாலை 02:04

கால மாற்றத்தாலும், இணயதள வளர்ச்சி பெருகி வருவதாலும், நொடி பொழுதில் செய்திகள் பத்த்ரிக்கையில் வருமுன் ராக்கெட்டை விட மிக வேகமாக முந்தி இணையதளத்தில் செய்தி வெளியாகி விடுகிறது.

அதிகாலை செய்தி கே.டி.எம். தெருவில் மக்கள் மத்தியில் பரவி இருந்தால் அது நமது மக்கள் வாழும் மக்கா நகருக்கு சுபுஹூ தொழுதுவிட்டு வரும்போது அவர்களின் கைபேசியில் வருகிறது யாரோ இணையதளத்தில் போட படுவேகமாக உலகம் பூராவும் பரவி அங்கு இருந்து நாம் செய்தி அறியும் வகையில் இன்று நம் ஊரும் உலகமும் மாறி வருகிறது.

படிக்கும் ஆர்வம் குறைந்தது ஏன் ?

இதனால் பத்திரிகை படிப்பதும், நூலகம் வந்து படிப்போர் குறிப்பாக அறிவு நூல்கள் வாசிப்போர் எண்ணிக்கை குறைந்து விட்டது. சில வயோதிகர்கள் செய்தி படிக்க பல இளைஞர்கள் விளையாட்டுக்களை மட்டுமே படிக்க அத்துடன் சினிமா படங்களை மட்டுமே ரசிக்கும் ஓர் இனம் தெரியாத கும்பலும் தின வார மாத இதழை புரட்டுகிறது. சில பெரியவர்கள் டீ கடை பெஞ்சில் பேச அல்லது பள்ளிவாசல் அருகிலுள்ள சதுக்கையில் சேர் போட்டு பேசும் காலமாகி விட்டது. படிக்கும் ஆற்றல் மெல்ல மெல்ல குறைந்து வருவதற்கு இணையதளம் கைபேசியில் கூட செய்தி அறியும் காலத்தை குறை கூறலாம்

muj3

நூலகம் சென்று புத்தகங்களை படிப்பது போல அதில் முழுமை திருப்தி ஏற்படாது. நம் பகுதியில் இண்டர்நெட் 2ஜி நிலை இருப்பதால் நெட் தொடர்பு நிலை டெட் சுலோ. இது வேறு படிக்கும் பார்க்கும் ஆர்வத்தை குறைக்கிறது. இணையதளத்தில் ஒரு வரலாற்று செய்தி அல்லது தேசத்தலைவர் அறிவியல் செய்தியை இணையதளத்தில் மின்சாரம் இருந்தால் போய் தேடலாம். ஆனால் புத்தகம் அப்படி அல்ல நமதூர் அரசு நூலகர் அ.முஜீப் இடம் புத்தகம் குறித்து விபரம் தந்தால் போதும். ஐநூறு பக்கம் அளவு நூல் கைகளில் தருகிறார். படித்து குறிப்பு எடுக்க முடியும் இதில் படிப்பது -இணையதளத்தில் பார்ப்பது மூலம் படிப்பதையே இன்றைய இளைஞர் கூட்டம் விரும்புகிறது. அதனால் நூல் படிக்கும் ஆர்வம் குறைகிறது.

படிக்க சொல்வது இஸ்லாம் :

ஓதுவீராக என்று நபிகளாரைப் பார்த்து இக்ரஃ சூரா வெளியானது. நீண்ட வரலாற்றை நீங்கள் அறிவீர்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பொன்மொழி ஒன்றைப் பாருங்கள்.

கற்றுக்கொண்டே இருங்கள்,

கற்றுக் கொடுப்பவராக இருங்கள்,

கற்றவரிடம் கேட்டு தெரிந்து கொள்பவராக இருங்கள்.

நான்காவது மனிதராக இருக்காதீர். இது நபி மொழி.

ஆசிரியராக, மாணவராக அல்லது அறிந்து கொள்ளும் மனிதராக இருக்க வேண்டும். ஒன்றுமே அறியாமல் இருக்காதீர்கள். படித்துக் கொண்டே இருங்கள் என்பது தான் நபி வழியாகும்.

muj1

அரபி மொழி பரம்பரியமொழி :

 நமது போதகர் மற்றும் வழிகாட்டியான முஹம்மது நபி அவர்களின் மொழி அரபி என்பதால் உலகில் வாழும் முஸ்லீம்கள் அனைவரும் அரபி மொழியிலுள்ள குர்ஆன் மூலம் சன்மார்க்க செய்திகளை படித்து வாழ்வை உயர்த்தி வருகிறோம். எல்லா மொழிகளிலும் மொழிபெயர்ப்பு குர்ஆன் வெளிவந்துள்ளது. குர்ஆனுக்கு கிடைத்த மறுமலர்ச்சி நமக்கு பெருமை. அது மட்டுமல்ல முஸ்லீம் மக்களை வழி நடத்தி செல்லும் ஆலீம் (அறிஞர்) ஆலீமாக்கள் (பெண் அறிஞர்) அரபி மத்ரஸா சென்று அரபி மொழியின் மூலம் மார்க்க ஞானம், அறிவியல், குடும்ப போக்கு, பாகப்பிரிவினை சட்டம் அனைத்துப் பாடங்களையும் ஐந்து ஆண்டு அல்லது ஏழு ஆண்டுகளில் கற்று பட்டம் பெறுகிறார்.

இவர்கள் அரபிக் கல்லூரிகளில் கற்கும் நூல்களில் ருஹூல் பயான், இமாம்களின் சட்ட நூல்கள் அறிவுநூல் பர்ஜன்ஜி பறவை மிருகம் ஊர்வன பற்றிய ஹயாத்துல் ஹைவான் போன்ற இன்னும் பல ஆயிரம் பக்கம் கொண்ட நூல்களை படித்து பட்டம் பெற்று வெளியேறுகிறார்கள்.

அரபி மத்ரஸா என்ற கல்லூரி ஓர் நூலகம் போன்றவையே. ஆங்கில மொழிகளில் அரபி சொல் கலந்திருக்கும் அரபி மொழிகளில் ஆங்கில சொல் எங்கும் கலந்திருப்பதை காண முடியாது. இது போல தமிழ் மொழியில் அரபி சொல் ஆயிரம் கலந்துள்ளது. ஆனால் அரபிமொழியில் தமிழ் சொல் கலப்பு இல்லை. இதிலிருந்து அரபி மொழி ஓர் தாய் - தந்தை மொழி பாரம்பரிய மிக்க புகழ்பெற்ற எங்கள் நபிகள் நாதரின் மொழி. ஆலீம் ஆலிமாக்கள் பட்டம் பெற்றதால் சிறந்த அறிஞர் அவர்களிடம் எதைக் கேட்டாலும் சொல்லும் திறன் படைத்த பட்டதாரிகள்.

மாணவர்களை புத்தகம் படிக்கத் தூண்ட வேண்டும்

மாணவ மாணவியர்களை புத்தகம் படிக்கத் தூண்ட வேண்டிய கடமை அனைத்து பெற்றோர்களின் கடமையாகும். படிப்பது என்பது பள்ளி கல்லூரி பாடங்களை மட்டும் என்று இருந்துவிடக்கூடாது. அனைத்து பள்ளி கல்லூரி மாணவர் அரசு நூலகம் சென்று சிறந்த நூல்களை படித்து குறிப்பு எழுதி மாதம் தோறும் சொற்பயிற்சி மன்றத்தில் பேச வேண்டும். இதற்காக தமிழக அரசு நூலகம் சென்று புத்தகம் படிப்பு சம்பந்தமான கேள்விகளை தந்து அதற்கு மதிப்பெண் கொடுத்தால் பள்ளி கல்லூரி மாணவர்கள் புத்தகம் படிக்கும் ஆர்வம் ஏற்படும். இது ஒருபுறம்.

பெற்றோர்கள் அனைவரும் நமது பிள்ளைகளை நல்ல நூல்களை படிக்கத் தூண்ட வேண்டும். புத்தக கண்காட்சி நடந்தால் அவன் வயதுக்கு தகுந்தாற்போல அவன் விரும்பிய சிறந்த நூலை வாங்கித் தர வேண்டும்.

ஒவ்வொரு மாதமும் பெற்றோர்கள் தனது மகன் மகளுக்கு புத்தகம் வாங்க புத்தக சேமிப்புத் தொகை சிறிது ஒதுக்கித் தரலாம். இந்த சேமிப்பு பணம் சேரும் போது அவன் விரும்பும் - அறிவியல் - நாட்டுக்கு உழைத்தவர்கள் குறித்த நூல் அதிக மதிப்பு விலையில் தமிழ் ஆங்கில மொழியில் வாங்க முடியும்.

மாணவ மாணவியர்கள் தான் தனது பிள்ளைகளை நூலகம் சென்று நூல் எடு என்று தூண்ட வேண்டும். பள்ளி கல்லூரி நூல் நிலையங்களை தூசிப்படாமல் பாதுகாக்க வேண்டும்.

நல்ல நூல்களை தேடுவது எப்படி ?

அனைத்து புத்தகங்களையும் படிப்பது எப்படி?

சென்னையில் நான் இருந்த காலம் சுமார் 50 வருடங்கள். விடுமுறை காலத்தில் மார்க்கெட், மெரினா கடற்கரை, நடைபாதை கடைகளில் சென்னையிலுள்ள பழைய பேப்பர் கடைகளில் அரை விலை கால் விலை கொடுத்து வாங்கிய நூல்கள் ஆயிரக்கணக்கில் என்னிடம் உள்ளது. அன்னை கதீஜா அறிவு நூலகம் ஒன்றை நான் எனக்காக வைத்துள்ளேன். படிப்பதில் எனக்குள்ள ஆர்வம் சொன்னால் மிகையாகாது. சுவாசிக்க நல்ல உயிர் காற்று வேண்டும். வாசிக்க அதிக பக்கமுள்ள அறிவு நூலை படிக்க ஆர்வம் காட்டுகின்றேன். எனக்கு வயது 67. நான் இதுவரை படித்த நூல்கள் ஆராயிரம் தான். என் அறிவுப் பசிக்கு இது போதாது. என் ஆயுட்காலம் முடிவதற்குள் 20 ஆயிரம் நூல்களை வாசிக்க வேண்டும் என்று விரும்புகின்றேன். நூல் படிப்பதால் சந்தோஷமும், மன மகிழ்ச்சியும் ஏற்படுகிறது. இணையதளத்தில் கட்டுரை எழுத முடிகிறது. எனது கட்டுரை முடிவில் நூலின் ஆதாரப்பட்டியல் -நூலகப் பெயர் நூல் பதிவு எண் விபரம் தருவது ஆர்வமுள்ளோர் அதை போய் படிக்கலாம். யான் பெற்ற புத்தக இன்பம் இவ்வையகத்தாரும் பெற விரும்புகின்றேன். பெரிய நூலை வாங்கி வந்து விட்டோம் எப்படி படிப்பது அதற்கு விடை தருகிறார் பேராசிரியர் க.அனுமந்தன் 1967-ல் வெளியிட்ட மெரினா வார இதழ் சென்னையில் பட்டியலிட்டார்.

பெரிய நூல் ஒன்றை சொந்தமாக வாங்கி இருந்தாலும் - நூலகம் மூலம் பெற்றிருந்தாலும் சுலபமாக படிக்கும் முறையை காணுங்கள் :

1. வெளியூர் பஸ் பயணத்தில் நூலை எடுத்து செல்லுங்கள். பஸ் வரும் வரை பேருந்து நிலையத்தில் சில பக்கம் படிக்கலாம்.

2. பேருந்து – மின்சார ரயில் ஓடும்போது படிக்கக் கூடாது. அது நிற்கும் சிறிது நேரம் விட்ட பக்கத்தை தொடர்ந்து படிக்கலாம்.

3. ரயில் பயணத்தில் அமைதியாக வாசிக்கலாம். பதிவு செய்யும் பக்கங்களின் எண் வரிசைகளை அதன் வரிகளை ஒரு காகிதத்தில் உடன் பதிவு செய்து கொள்ளுங்கள்.

4. வெளியில் ஷாப்பிங் சென்றாலும் கூட ஒரு நூல் உங்கள் நண்பன் போல கையில் எடுத்து செல்லுங்கள்.

5. ஆலயங்கள் சென்றாலும் (நாம் பள்ளி வாசலில் தொழுதுவிட்டு வெளிவராண்டாவில் நாம் எடுத்து சென்ற நூலை படிக்கலாம். வீண் பேச்சு நாவுக்கு இல்லாமல் போகும்.

muj2

இது தான் நூலை படிக்கும் முறை என்று அவர் எழுதி இருந்தாhர். தங்கத்தை விலை கொடுத்து நினைத்த நேரம் வாங்கி விடலாம். அரிய நூல்களை வாங்க முடியாது. உங்களுக்கு பயன்படாத அரிய நூல்களை அருகிலுள்ள பழைய பேப்பர் கடையில் விற்காதீர். நூலகங்களுக்கு அன்பளிப்பு செய்யுங்கள். அரிய நூல்களை நாம் சேர்க்க வேண்டும். அரிய நூல்கள் என்னிடம் இருந்ததை சிலர் தந்திரத்தால் வாங்கி திரும்ப தரவில்லை. அதனால் நான் யாருக்கு என் நூல்களை தருவதில்லை. புத்தகம் படிப்பதால் நம் அறிவு வளர்கிறது. ஆற்றல் பிறக்கிறது. முன்னேற வழி பிறக்கிறது. அவை அறிந்து சபை புரிந்து பேச வைக்கிறது.

அரசு நூலகம் சென்று புத்தகம் படித்து புத்துணர்வு கொள்வோம். வாரீர்! நமது அரசு நூலகர் விடா முயற்சி அவருக்கு தமிழக அரசு சார்பில் நூலகர் விருது கிடைத்திருக்கிறது. அவர் மன வலிமையைப் பாராட்டுவோம்.

ஆக்கம் : எழுத்தாளர் : ஏ.எல்.எஸ். இப்னு அப்பாஸ்


Add comment

காயல் நியுஸ், வாசகர்கள் கருத்துக்களை வரவேற்கிறது. வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் நியுஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்த விதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். முரண்பாடான மரியாதைக்குறைவான, கண்ணியமில்லாத கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கும் அவைகளை நீக்குவதற்கும் எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு. தங்களது பெயர் மற்றும் கருத்துக்களை தமிழில் தட்டச்சு செய்யலாம். உதாரணமாக "காயல்பட்டினம்" என்று தட்டச்சு செய்ய ஆங்கிலத்தில் "kaayalpattinam" என்று தட்டச்சு செய்து Space bar-ஐ அழுத்தினால் தங்கள் தட்டச்சு செய்த சொல் தமிழாக மாற்றப்படும். ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.


Security code
Refresh

 

செய்திகள்

“நடப்பது என்ன?” முறையீட்டைத் தொடர்ந்து, மகுதூம் தெருவிலுள்ள குப்பைத்தேக்கம் நகராட்சியால் அகற்றம்!
நெடுஞ்சாலை நிலுவைப் பணிகளை விரைந்து செய்திட நடவடிக்கை கோரி - சென்னையிலுள்ள அரசு செயலரிடம் “நடப்பது என்ன?” குழுமம் மனு!
பொது இடங்களில் சிசிடீவி கேமரா நிறுவுவதில் நகராட்சி அலட்சியம்: மாவட்ட ஆட்சியர், காவல்துறை கண்காணிப்பாளரிடம் “நடப்பது என்ன?” குழுமம் புகார் மனு!
காட்சிப் பொருளான நகராட்சி குடிநீர்த் தொட்டிகள்: 7 நாட்களுக்குள் வரைமுறைப்படுத்தவில்லையெனில் உள்ளாட்சி அமைப்புகள் முறைமன்ற நடுவத்தில் புகார் பதிவு செய்யப்போவதாக “நடப்பது என்ன?” அறிவிப்பு!
அரசு மருத்துவமனையை அதிகளவில் பொதுமக்கள் பயன்படுத்தினால் புதிய வசதிகள்! மருத்துவம் மற்றும் ஊரகப் பணிகள் துணை இயக்குநர் (DMS) “நடப்பது என்ன?” குழுமத்திடம் தகவல்!!

சுடச்சுட காயல் செய்திகள்! சுவையான இஸ்லாமிய கட்டுரைகள் !!
தொடர்பு கொள்ள : admin@kayalnews.com
© Copyright : Kayalnews.com