بسم الله الرحمن الرحيم
Friday 21st September 2018 | 10 முஹர்ரம் 1440AH
பதாகை
news menu left
news menu right

பதாகை

பதாகை

  • Google Bookmarks
  • Twitter
  • Windows Live
  • Facebook
  • MySpace
  • deli.cio.us
  • Digg
  • Newsvine
  • reddit
  • StumbleUpon
  • Yahoo! Bookmarks
  • Yigg
"நரேந்திர மோடியின் நரித்தனம்" மீடியா உலகில் முஸ்லிம்கள் (பாகம் - 8)அச்சிடுகமின்-அஞ்சல்
29 நவம்பர் 2013 காலை 08:59

"இரவு 7.30 மணிக்கு ஆகாஷவாணி வானொலியில், 'கோத்ரா ரயில் எரிப்புக்குப் பின்னால் ஐ.எஸ்.ஐ.யோ அல்லது ஒரு வெளிநாட்டு சக்தியோ உள்ளது" என்று முதல் முறையாக மோடி அறிவித்தார்.

இது குஜராத் அரசின் அதிகாரப்பூர்வ அறிவிப்பாகவும், பா.ஜ.க.வின் நிலைப்பாடாகவும் வெளிப்பட்டது. அதேபோல் அவரது சங்கப்பரிவாரக் கூட்டாளிகளுக்கு 'எதிர்வினை'க்கான நியாயப்படுத்துதலாகவும் இது அமைந்தது.

Modi_riots

இதில் வேதனையான விஷயம் என்னவெனில், அரசு இயந்திரம் எந்தவித விசாரணையும் மேற்கொள்ளாமல், எந்தவித உறுதியான ஆதாரமும் இல்லாமல் 'வெளிநாட்டு சக்தி' என்று சொன்னது. அத்தோடு எந்த அடிப்படையில் மோடி அந்த முடிவுக்கு அவ்வளவு விரைவாக வர முடிந்தது என்று எந்த விதக் கேள்வியும் எழுப்பாமல் அந்த அறிவிப்பை பெரும்பாலான மீடியாக்கள் பரபரப்பாக வெளியிட்டன.

ஏன், குஜராத் இனப்படுகொலை விஷயத்தில் நடுநிலையாக செய்திகளை வெளியிட்ட ஆங்கிலப் பத்திரிகைகள்கூட கோத்ரா சம்பவத்திற்கும் ஐ.எஸ்.ஐ.க்கும் தொடர்புண்டு என்று மோடி புளுகியதை அப்படியே வெளியிட்டன.

STN

உதாரணத்திற்கு ஒன்றைப் பார்ப்போம். 2002 மார்ச் மாதக் கடைசி வாரம் கோத்ரா ரயில் எரிப்பு தொடர்பாக விசாரணை செய்துவரும் அதிகாரிகளின் கூற்றின் அடிப்படையில் கோத்ரா சம்பவம் முன்பே திட்டமிட்டு நடத்தப்பட்டதல்ல என்று டைம்ஸ் ஆஃப் இந்தியா ஆங்கில நாளிதழ் செய்தி வெளியிட்டது. ஆனால் அதே டைம்ஸ் ஆஃப் இந்தியா ஒரு சில வாரங்களுக்கு முன்பு வரை குஜராத் அமைச்சர்கள் சொல்லி வந்த புரட்டுகளின் அடிப்படையிலான அறிக்கைகளை அப்படியே வெளியிட்டது. கோத்ரா சம்பவம் தானாக நடந்ததல்ல, திட்டமிட்டு நடத்தப்பட்டது என்று எந்த அடிப்படை ஆதாரமும் இல்லாமல் அவர்கள் புளுகிவந்ததை அப்படியே வெளியிட்டது.

பின்னர், அஹமதாபாத்தை மையமாகக் கொண்டு செயல்படும் தடய அறிவியல் பரிசோதனைக்கூடம் (Forensic Science Laboratory) ஆழமான ஆராய்ச்சியை மேற்கொண்டு எஸ் 6 பெட்டியில் வெளியிலிருந்து பெட்ரோலை ஊற்றியிருக்க வாய்ப்பே இல்லை என்று திட்டவட்டமாக அறிவித்தது.

TRAIN

ஆஜ்தக் தொலைக் காட்சிச் சானல் தான் முதன் முதலில் கோத்ரா மரணங்கள் குறித்த செய்தியைப் பரபரப்பாக வெளியிட்டது. அதன்பின், ஸீ தொலைக்காட்சியின் கேமரா மேன் கோத்ராவிலிருந்து தான் எடுத்த காட்சிகளை உடனே அஹமதாபாதிற்கு அனுப்பிவைத்தார்.

இது அன்று மதியம் 2 மணிக்கு ஒளிபரப்பானது. அதன்பின் தூர்தர்ஷன் உட்பட இன்னபிற தொலைக் காட்சிகள், அஹமதாபாத்திலும், வதோதராவிலும், டெல்லியிலும் தங்கள் கேமரா மேன்களை அனுப்பி செய்திகளை வெளியிட்டன.

கொடுமை என்னவெனில் அன்று மாலை தொலைக் காட்சிச் சானல்கள் அனைத்தும் கோத்ராவில் எரிந்த ரயில் பெட்டியையும், அதில் எரிந்த பிணங்களின் கோரப்படங்களையும் மீண்டும் மீண்டும் ஒளிபரப்பிக்கொண்டே இருந்ததன. காட்சி ஊடகங்கள் கடைப்பிடிக்க வேண்டிய நெறி முறைகளை மீறி அன்று கோரப்படங்களை தொலைக்காட்சிகள் வெளியிட்டன."

G1_copy_copy

"பிப்ரவரி 28 அன்று அதிகமாக விற்பனையாகும் சந்தேஷ், குஜராத் சமாச்சார் ஆகிய இரண்டு குஜராத் செய்தித்தாள்கள் கோத்ரா ரயில் எரிப்பில் "அந்நியக்கைகள்" இருக்கின்றன என்ற அரசின்பொய்ச் செய்தியைத் திரும் பத்திரும்ப ஒளிபரப்பிக்கொண்டேஇருந்தன.

3-4 வாரங்கள் கழித்து இந்தச் செய்தி மகா பொய்யானது என்று மீடியா வில்கசிய ஆரம்பித்தது .ஆனால் அதற்குள் அனைத்து அக்கிரமங்களும் அரங்கேறி அடங்கியிருந்தன.

1998ல் பா.ஜ.க. அரசு மீண்டும் குஜராத்தில் அரியணையில் அமர்ந்ததும் சந்தேஷ், குஜராத் சமாச்சார் ஆகிய இரண்டு செய்தித்தாள்களும் வகுப்புவாத வெறியைத் தூண்டிவிட்டுக் கொண்டே இருந்தன. இந்த இனப்படுகொலையில் சந்தேஷ் நாளிதழின் பங்கு மிகக் கீழ்த்தரமாக இருந்தது. ஆனால் குஜராத்டுடே, ஸத்பார், குஜராத் மித்ரா ஆகிய நாளிதழ்கள் பொறுப்புணர்வுடன் நடந்துகொண்டன.

கோத்ரா ரயில் எரிப்பு நடந்த அடுத்த நாள், அதாவது பிப்ரவரி 28 அன்று சந்தேஷ் நாளிதழ் ஸபர்மதி எக்ஸ்பிரஸ் ரயிலின் எரிந்த பெட்டியின் படத்தைப் போட்டு இவ்வாறு கொட்டை எழுத்தில் தலைப்பிட்டிருந்தது: "50 ஹிந்துக்கள் உயிருடன் எரிப்பு!"

அதற்குக் கீழே எரிந்த உடல்களின் கோரப்படங்களை பல வண்ணங்களில் வெளியிட்டிருந்தது. மீடியா தர்மத்தை மீறிய மிகப்பெரிய செயல் இது. எரிந்த உடல்களின் கோரப்படங்களைத் தாங்கிய சந்தேஷ் நாளிதழை ஆர்.எஸ்.எஸ்., வி.ஹெச்.பி., பஜ்ரங்க்தள் குண்டர்கள் பல பிரதிகளைப் போட்டு கிராமப் புற மக்களிடம் பரவலாக வினியோகித்தனர்.

G2

சாதாரண மக்களைக் கோபமூட்டி, தொடர்ந்து நடந்த இனப்படுகொலையில் பங்கெடுக்கவைக்கவே இப்படி வினியோகிக்கப்பட்டது. அதே நாளிதழில் இன்னொரு தலைப்புச் செய்தியும் இவ்வாறு இடம் பெற்றிருந்தது: "ஸபர்மதி எக்ஸ்பிரஸ் ரயிலிலிருந்து கடத்தப் பட்டவர்களில் இரண்டு இளம் ஹிந்துப் பெண்களின் உடல்கள் சிதிலமடைந்த நிலையில் கலோலுக்கு அருகில் கண்டெடுக்கப்பட்டன!"

இந்தத் தலைப்பின் கீழ்பின் வரும் செய்தி இடம்பெற்றிருந்தது: "வதோதரா, வியாழன்: நேற்று ஸபர்மதி எக்ஸ்பிரஸ் ரயிலின் மீது தொடுக்கப்பட்டதாக்குதலில், அதிலிருந்து கடத்தப்பட்ட இரண்டு இளம் பெண்களின் உடல்கள் கலோலில் ஒரு குளத்துக்கருகில் சிதிலமடைந்தநிலையில், கோரமாக உருமாற்றப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டன. இந்தச் செய்தி ஏற்கனவே பதட்டமாக இருக்கும் பாஞ்ச் மஹால் மட்டுமல்லாமல் மொத்த மாநிலத்திலுமே எரிகிற நெருப்பில் எண்ணையை ஊற்றியது. மனிதாபிமானமற்ற இந்தக்கோரச் செயலின் உச்சம் என்னவெனில் அந்த இரண்டு இளம் பெண்களின் மார்பகங்களும் வெட்டிஎடுக்கப்பட்டுள்ளன. இந்தச் சடலங்களின் நிலையைப் பார்க்கும் பொழுது அந்த இரு இளம் பெண்களும் திரும்பத் திரும்பக் கற்பழிக்கப்பட்டுள்ளனர்.

G4

இந்தப் பாலியல் வன்புணர்வினாலேயே அவர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்று நம்பப்படுகிறது." இந்தச் செய்தி முற்றிலும் பொய்யானது என்று காவல் துறை விசாரணைகளுக்குப் பின் கண்டுபிடித்தது.

ஆனால் காவல்துறை எந்த அடிப்படையும் இல்லாமல் வெளியிடப்பட்ட, மிகப் பெரிய ஓர் இனப்படுகொலைக்குக் காரணமாக இருந்த இந்தப் பொய்ச் செய்தியை வெளியிட்ட சந்தேஷ் பத்திரிகை மீது எந்த நடவடிக்கையும்எ டுக்கவில்லை. மௌனமாக இருந்தது. அந்தவகையில் காவல் துறையும் குற்றவாளிக் கூண்டில் நிற்கிறது.

இதற்கிடையில் சந்தேஷ் நாளிதழ் தனது வெறுப்பூட்டும் பணியைத் தொடர்ந்தது. முஸ்லிம்களை ஈன இரக்கமற்ற கொலை காரர்களாகவும், தேசத் துரோகிகளாகவும் சித்தரித்து செய்திகளை வெளியிட்டது.

மார்ச் 1ம்தேதி அது ஒரு செய்திக்கு இவ்வாறு தலைப்பிட்டிருந்தது: "பள்ளிவாசலிலிருந்து அழைப்பு :

விசுவாசிகளல்லாதவர்களைக் கொல்லுங்கள் – இஸ்லாம் இப்பொழுது ஆபத்தில்!" இந்தத் தலைப்பின் கீழ் இவ்வாறு செய்தி வெளியிடப்பட்டிருந்தது: "பிப்ரவரி 27ம்தேதி, காலை 11.30 மணியளவில், ரயில் தண்டவாளத்தின் அருகிலுள்ள ஒரு பள்ளிவாசலிலிருந்து மக்கள் கூவியழைக்கப்பட்டார்கள். "விசுவாசிகளல்லாதவர்களைக் கொல்லுங்கள் .இஸ்லாம் ஆபத்தில் இருக்கிறது. இந்த அழைப்பைக் கேட்டவுடன், ஒருகூட்டம் எரிக்கப்பட்ட ரயில் பெட்டியில் உயிரோடிருந்த எஞ்சியுள்ள ராம சேவகர்களைத் தாக்க ஆரம்பித்தது. அவர்கள் ரயில் தண்டவாளங்களில் அமர்ந்திருந்தனர்."

இந்தச் செய்தியும் எந்த அடிப்படையும் அற்றது. குஜராத் இனப்படுகொலை குறித்து நேரடிக்கள ஆய்வு செய்து அக்கறையுள்ள குடிமக்களின் குழுமம் என்ற மனித உரிமை அமைப்பு "மனித இனத்திற்கெதிரான குற்றம்" என்ற தலைப்பில் இரண்டு பாகங்களாக அறிக்கைகளை வெளியிட்டது. அந்த அறிக்கையில் குஜராத் இனப்படுகொலை குறித்து வெளிவந்த செய்தியைத் தான் நாம் இப்பொழுது பார்த்து வருகின்றோம்.

அந்த அறிக்கையின் தொடர்ச்சி வருமாறு:

மீடியாவில் வந்த செய்திகளை வைத்தும், இந்தக் குழுமத்திற்குக் கிடைத்த ஆவணங்களை வைத்தும் பார்க்கும் பொழுது, கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்திற்குக்காரணம் என்று சொல்லப்பட்டவர்கள் "தேசவிரோத பாகிஸ்தானிகள்" என்று அழைக்கப்பட்டார்கள். இப்படி அழைக்கப்படுவதற்கு குஜராத் உள்துறை அமைச்சர் கோர்தான் ஸடாஃபியாதான் காரணம், இவர்தான்" தேசவிரோத பாகிஸ்தானிகள் தான் கோத்ராரயில் எரிப்பு சம்பவத்திற்குக் காரணம் என்று பொய்ச்செய்தியைப் பரப்பியவர். இவர் விஷ்வ ஹிந்து பரிஷத்தின் மூத்த தலைவரும் ஆவார்.

அவர் கூறுகிறார்: "கொல்கத்தாவிலுள்ள அமெரிக்கன் சென்டரின் மேல் தொடுக்கப்பட்ட தாக்குதல் போல கோத்ராரயில் எரிப்பு சம்பவமும் ஒரு பயங்கரவாத நடவடிக்கையே. இந்த இரண்டு சம்பவங்களிலும் குற்றவாளிகள் ஒரே ஆள்தான்."

இப்படிச் சொல்லிவிட்டு அவர் இவ்வாறு தைரியமாக மிரட்டுகிறார்: "இந்தச் செயலைச் செய்தவர்களுக்கு நாம்தக்கபாடம் புகட்டுவோம்.யாரும் இதிலிருந்து தப்பிக்கமுடியாது. மேலும் இந்தச் செயலைச் செய்த சக்திகள் இனி ஒருபொழுதும் இது மாதிரி திரும்பச் செய்ய தைரியம் வராத அளவுக்கு நாம் உறுதிப்படுத்துவோம்."

G6

மார்ச் 7 அன்று சந்தேஷ் நாளிதழ் மோசமான தலைப்பில் ஒரு செய்தியை வெளியிட்டிருந்தது. ஹஜ் கிரியையை முடித்து விட்டு திரும்ப வரும் இந்திய முஸ்லிம்கள் ஹிந்துக்களுக் கெதிரான "பயங்கரவாதிகளாக" இருக்க வாய்ப்பு உள்ளது என்பதே அந்தச் செய்தியின் சாரம்சம். அந்தச் செய்தியின் தலைப்பு இது தான்: "ஹிந்துக்களுக்கு ஆபத்து! அவர்கள் மேல் பயங்கரவாதிகளின் ஆதரவுடன் தாக்குதல் நடக்கலாம்! திரும்ப வரும் ஹாஜிகளிடம் நடுங்க வைக்கும் தாக்குதல்திட்டம்!"

அந்தச் செய்தியில் இவ்வாறு குறிப்பிடப்பட்டிருந்தது: "பல்வேறு அரசு நிறுவனங்களுக்கு பயங்கரவாதத் தாக்குதல்கள் குறித்த அச்சம் அதிகரித்து வருகிறது. பயங்கரவாதிகள் அந்நிய நாட்டுப் பொருளாதார உதவியுடன் வாங்கப்பட்ட ஆர்.டி.எக்ஸ். குண்டுகளைப் பயன்படுத்துவார்கள். அல்லது குண்டுகளை எறிவார்கள். அல்லது விமானங்களைக் கடத்துவார்கள். கோத்ராவில் கரசேவகர்களின் மேல்தாக்குதல் தொடுத்தது பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ.தான் என்று புலனாய்த் துறை நிறுவனங்கள் உறுதி செய்துள்ளன. இந்தத் தேச விரோதிகள் தற்பொழுது தலை மறைவாகி விட்டார்கள். ஆனால் தாக்குதலுக்காக தகுந்த தருணத்தை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். ஹஜ் முடித்து விட்டு ஹாஜிகள் சவூதி அரேபியாவிலிருந்து திரும்ப வந்த பிறகு இந்தத் தாக்குதல்கள் நடக்கலாம். ஹாஜிகள் பாதுகாப்பாக திரும்பி வருவதற்காகவே இந்தத் தாக்குதல்கள் தள்ளிப் போடப்பட்டுள்ளன. 1993ல் மும்பையில் நடந்த குண்டு வெடிப்புகள் போல் மிகப் பிரம்மாண்டமாக இந்தத் தாக்குதல்கள் நடைபெறும் என்று உளவுத் துறையின் எஸ்.பி.சஞ்சீவ் பட் கூறுகிறார்.

G5

கோத்ராரயில் எரிப்புக்குப் பின் நடைபெற்ற இனப்படுகொலை குறித்து குறிப்பிடும் பெரும்பாலான அனைத்துச் செய்திகளும் இப்படியே துவங்கின: "காட்டுமிராண்டித்தனமான கோத்ரா ரயில் எரிப்புக்கு எதிர்வினையாக நடந்த வகுப்புக் கலவரத்தில்..."

கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்திற்கு அவர்கள் கொடுக்கும் உணர்வைத் தூண்டும் அடைமொழிகள் அதன் பிறகு மிகவும் கொடூரமாக நடத்தப்பட்ட இனப்படுகொலையைப்பற்றிக் குறிப்பிடும் பொழுது கொடுக்கப்படுவதில்லை.

குஜராத் முழுவதும் கொடூரமாக நடத்தப்பட்ட இனப்படுகொலையை குஜராத் அரசு கூறுவது போலவே சந்தேஷ் நாளிதழும் கோத்ரா சம்பவம் நடந்ததன் எதிர்வினை தான் என்று தெளிவாகக் கூறி வந்தது.

தொடரும்..இன்ஷா அல்லாஹ்..

ஆக்கம்: M.S அப்துல் ஹமீத்

Add comment

காயல் நியுஸ், வாசகர்கள் கருத்துக்களை வரவேற்கிறது. வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் நியுஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்த விதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். முரண்பாடான மரியாதைக்குறைவான, கண்ணியமில்லாத கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கும் அவைகளை நீக்குவதற்கும் எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு. தங்களது பெயர் மற்றும் கருத்துக்களை தமிழில் தட்டச்சு செய்யலாம். உதாரணமாக "காயல்பட்டினம்" என்று தட்டச்சு செய்ய ஆங்கிலத்தில் "kaayalpattinam" என்று தட்டச்சு செய்து Space bar-ஐ அழுத்தினால் தங்கள் தட்டச்சு செய்த சொல் தமிழாக மாற்றப்படும். ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.


Security code
Refresh

 

செய்திகள்

வாவு வஜீஹா வனிதையர் கல்லூரியில் மாநில அளவிலான திறன்மிகு கருத்தரங்கம்!
காயல்பட்டினத்தில் இருந்து இ சேவை மாற்றல் விஷயம்! மாவட்ட ஆட்சியரின் கவனத்திற்கு திங்களன்று கொண்டு செல்வதாக துணை தாசில்தார் உறுதி!!
இ சேவை மையம்: காயலபட்டினத்தில் இருந்து மாற்றப்படக்கூடாது என கோரி மாவட்ட ஆட்சியருக்கு பொது மக்கள் - ஈமெயில், FAX குறுஞ்செய்தி மற்றும் WHATSAPP செய்தி அனுப்ப வேண்டுகோள்!
மண்டலம் வாரியாக அதிகரிக்க உத்தேசிக்கப்பட்டுள்ள காயல்பட்டினம் நகராட்சியின் சொத்து வரி! உங்கள் தெரு எந்த மண்டலத்தில்?
படிவம் 7 பயன்படுத்தி வாக்காளர் பட்டியலில் தவறுதலாக இடம்பெற்றுள்ள பெயரை எவ்வாறு நீக்குவது?

சுடச்சுட காயல் செய்திகள்! சுவையான இஸ்லாமிய கட்டுரைகள் !!
தொடர்பு கொள்ள : admin@kayalnews.com
© Copyright : Kayalnews.com