மொழியும் மூலமும்.. (தொகுப்பு -1) அச்சிடுக
25 நவம்பர் 2013 காலை 11:38

PEN 

எழுதுகோல் அல்லது பேனா எனப்படுவது, எழுத உதவும் ஒரு கருவி ஆகும். பேனா என்னும் சொல் ஆங்கிலத்தில் pen (பென்) என்னும் சொல்லில் இருந்து பெற்றது.

இதில் பலவகையன எழுதுகோல்களும் உண்டு. அவை உருளைப‌ந்து எழுதுகோல்ஊற்று எழுதுகோல்மை பேனா மற்றும் பல வகைகளும் உண்டு.

பேனா நமது எண்ணங்களை எழுத்து வடிவமாக மாற்றும் உன்னதப் படைப்பு. பள்ளிக் குழந்தைகள் முதல் பேரறிஞர்கள் வரை பாகுபாடின்றி அனைவருடைய கைகளிலும் தவழ்வதாகும். கம்ப்யூட்டர் யுகத்தில் நாம் கால் பதித்து விட்டாலும் இன்றளவும் பேனாவைத்தான் எழுதப் பயன்படுத்துகிறோம். உயிரற்ற பொருளாக இருந்தாலும் பேனா மீது உயிரையே வைத்திருப்பவர்களும் நம்மில் பலருண்டு.

line_copy

பேனாவின் தோற்றமும், வளர்ச்சியும் ஒரு சுவாரசியமான வரலாறு. அச்சுக் கலைக்கு வித்திட்ட சீனர்கள் கூட தொடக்கத்தில் தூரிகைகளைக் கொண்டுதான் துணிகளில் எழுதினர். இந்தியர்கள் எழுத்தாணிகளைக் கொண்டு ஓலைச் சுவடிகளைக் கீறி எழுதினார்கள். பண்டைய ரோமானியர்களோ பலகை மீது மெழுகை மென்மையாகத் தடவி, அதன் மீது கூர்மையான கருவி கொண்டு எழுதினர் என்றாலும் காகிதம் கண்டு பிடிக்கப்பட்ட பிறகுதான் பேனாவிற்கே அவசியம் ஏற்பட்டது.

முதன் முதலில் நாணலைச் சீவி, அதை மைக்கூட்டில் தோய்த்து எழுதினார்கள். இதுவே பேனாவின் முதல் வடிவம் எனலாம். இதற்குப் பிறகுதான், வாத்து, அன்னம் போன்றவற்றின் இறகைச் சீவி அதை மைக்கூட்டில் தோய்த்தெடுத்து எழுத ஆரம்பித்தனர். இதுதான் 'இறகுப் பேனா' என்றழைக்கப்பட்டது.

இறகு என்றால் லத்தீன் மொழியில் 'பென்னா' என்று சொல்வார்கள். இதுவே ஆங்கிலத்தில் 'பென்' என்ற சொல்லாக மாறியது.

இறகைக் கூர்மையாக சீவ சிறிய கத்தி பயன்படுத்தப்பட்டது. இதைத்தான் ஆங்கிலத்தில் 'பென் நைஃப்' என்கிறார்கள். இன்று கூட நாம் சிறிய கத்தியை 'பேனாக் கத்தி' என்றழைக்கிறோம்.

குறிப்புதவி :

வணிகமணி - 05.08.1996

ஆக்கம் : L.T இபுறாஹீம்

Add comment

காயல் நியுஸ், வாசகர்கள் கருத்துக்களை வரவேற்கிறது. வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் நியுஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்த விதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். முரண்பாடான மரியாதைக்குறைவான, கண்ணியமில்லாத கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கும் அவைகளை நீக்குவதற்கும் எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு. தங்களது பெயர் மற்றும் கருத்துக்களை தமிழில் தட்டச்சு செய்யலாம். உதாரணமாக "காயல்பட்டினம்" என்று தட்டச்சு செய்ய ஆங்கிலத்தில் "kaayalpattinam" என்று தட்டச்சு செய்து Space bar-ஐ அழுத்தினால் தங்கள் தட்டச்சு செய்த சொல் தமிழாக மாற்றப்படும். ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.


Security code
Refresh