بسم الله الرحمن الرحيم
Monday 16th July 2018 | 03 துல்கஃதா 1439AH
பதாகை
news menu left
news menu right

பதாகை

பதாகை

  • Google Bookmarks
  • Twitter
  • Windows Live
  • Facebook
  • MySpace
  • deli.cio.us
  • Digg
  • Newsvine
  • reddit
  • StumbleUpon
  • Yahoo! Bookmarks
  • Yigg
குழந்தைகளை சிந்திக்கத் தூண்டுதல்..அச்சிடுகமின்-அஞ்சல்
19 செப்டம்பர் 2011 மாலை 10:15

வானில் பறக்கும் விமானத்தைபுதிதாக பார்க்கும் சிறு குழந்தைஉம்மாஇது என்னம்மா? என்று கேட்கிறது அதற்க்கு தாய் , அது ப்லைட் மா செல்லம். மீண்டும் அக்குழந்தை தாயிடம் ப்ளைட் னா என்னம்மா என்று வினவுகிறது.அதற்க்கு தாய், ப்ளைட் னா தூரமான இடத்துக்கு பயணம் செய்ய உதவுகிற ஒரு போக்குவரத்து என்கிறாள். மீண்டும், போக்குவரத்து என்றால் என்னம்மா என்கிறது. போக்குவரத்து என்றால் ரோட்டில் போகும் வாகனம்,கடலில் போகும் கப்பல் படகு போன்ற வாகனம், வானில் போகும் ப்ளைட், ஹெலிகாப்ட்டர் போன்றவைகளில் பயணம் செய்ய பயன்படுத்துவதற்கு பெயர் தான் போக்குவரத்து..... இப்படி நாம் எரிச்சலடையும் வரை புதிது புதிதாக குழந்தைகளின் கேள்வி நீண்டுக்கொண்டே இருக்கும்....

child-beh-1

குழந்தையின் மூளை ஒரு ரகசியக் களஞ்சியம். அதன் எண்ணற்ற விந்தைகளை விஞ்ஞானிகள் இப்போது தான் கொஞ்சம் கொஞ்சமாக அறிந்து வருகிறார்கள்.

இப்படிதான் சில குழந்தைகள் எதனைக்கன்டாலும் இது என்ன? இது என்ன? என்று கேள்வி கேட்டுக்கொண்ட இருக்கும். நாமும் அதற்க்கு சளைக்காமல் பதிலளித்து கொண்டிருக்க வேண்டும்.

ஏன்? எதற்கு? எப்படி?எங்கே? என்று கேள்விகள் கேட்டுகொண்டிருந்தால் அறிவு வளரும் என்று சொல்வார்கள். குழந்தைகள் கேள்விக்கு நாம் பதிலளிப்பது போல நாமும்அவர்களிடத்தில் கேள்விக்கேட்டு பதிலை வரவழைக்கும்போது அவர்கள் அறிவாளியாகிறார்கள். இவ்வாறு செய்வதால் மூளைக்கு வேலை கொடுக்கப்பட்டு சிந்திக்க ஆரம்பிக்கிறார்கள்.

abacus

child-beh-2

நபி (ஸல்) அவர்கள் இந்த வழிமுறையை கையாண்டு கற்றுகொடுப்பவர்களாக இருந்தார்கள்.

"மரங்களில் ( இப்படியும் ) ஒருவகை மரம உண்டு. அதன் இலை உதிர்வதில்லை. அது முஸ்லிமுக்கு உவமையாகும். அது என்ன மரம என்று சொல்லுங்கள் ?" என நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். நாட்டு மரங்களை நோக்கி மக்களின் கவனம் போயிற்று. அது பேரீச்சம் மரம்தான் என்று எனக்கு தோன்றியது. மூத்தவர்கள் மவுனமாய் இருக்கும் அவையில் நான் எப்படி சொல்வது? என்று வெட்கப்பட்டுக்கொண்டு (அமைதியாக) இருந்துவிட்டேன். பிறகு மக்கள், " அது என்ன மரம என்று தாங்களே சொல்லுங்கள் அல்லாஹ்வின் தூதரே!" என்று கேட்க. "அது பேரீச்சம் மரம்" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.  அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் உமர (ரழி). நூல்:புகாரி (131)

குழந்தைகளுக்கு சந்தேகம் ஏற்பட்டு அதை நிவர்த்தி செய்வதற்காக பெற்றோர்களிடம் வருவார்கள். அப்போது பெற்றோர் அதை உதாசீனபடுத்தி விடாமல் சந்தோசத்துடன் அதற்க்கு முறையான அடிப்படையில் பதில் சொல்ல வேண்டும்.child-beh-3

குழந்தையின் வினாவாக்கியங்களை தீர ஆராய்ந்தோமானால் பெரும்பாலும் கண்முன்னே குழந்தை காணும் காட்சிகளையும், பொருட்களையும் பற்றியதாகவே அவை இருக்கும். "மழை எப்படி பெய்யுது?வெயில் எப்படி வருது? விதை போட்டால் எப்படி மரம் வருது?" கம்ப்யூட்டர் எப்படி இயங்குது? போன்ற வினாக்கள் புலன்வழித் தொடர்புள்ளவை.

6151766-muslim-mom

கேள்விகளால் துளைத்தெடுக்கும் குழந்தையை "நச்சரிப்பு , தொணதொணப்பு, என்று குழந்தையின் தேடலை முளையிலேயே கிள்ளியெறிதலே பரவலாக நடைபெறுகிறது.துருவி ஆராயும் பண்பானது கேள்விகளால் துளைத்தெடுப்பதுடன் மட்டும் நின்றுவிடுவதில்லை. அது பொருட்களை புதிதாக தாமே சிந்தித்து முயன்று உருவாக்கும் தூண்டலை குழந்தையிடம் உருவாக்கக் கூடியது.

எனவே பெற்றோர்கள் குழந்தையின் தேடலைப் புரிந்து கொண்டு அதற்கேற்றவாறு பதிலளிக்க தெரிந்துக் கொண்டால், எதையும் வெல்லும் உங்கள் குழந்தையும்........

ஆக்கம்: உம்மு ஷுர ஃபா

Add comment

காயல் நியுஸ், வாசகர்கள் கருத்துக்களை வரவேற்கிறது. வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் நியுஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்த விதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். முரண்பாடான மரியாதைக்குறைவான, கண்ணியமில்லாத கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கும் அவைகளை நீக்குவதற்கும் எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு. தங்களது பெயர் மற்றும் கருத்துக்களை தமிழில் தட்டச்சு செய்யலாம். உதாரணமாக "காயல்பட்டினம்" என்று தட்டச்சு செய்ய ஆங்கிலத்தில் "kaayalpattinam" என்று தட்டச்சு செய்து Space bar-ஐ அழுத்தினால் தங்கள் தட்டச்சு செய்த சொல் தமிழாக மாற்றப்படும். ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.


Security code
Refresh

 

சுடச்சுட காயல் செய்திகள்! சுவையான இஸ்லாமிய கட்டுரைகள் !!
தொடர்பு கொள்ள : admin@kayalnews.com
© Copyright : Kayalnews.com