بسم الله الرحمن الرحيم
Saturday 23rd February 2019 | 17 ஜமாதுல் ஆஹிர் 1440AH
பதாகை
news menu left
news menu right

பதாகை

பதாகை

 • Google Bookmarks
 • Twitter
 • Windows Live
 • Facebook
 • MySpace
 • deli.cio.us
 • Digg
 • Newsvine
 • reddit
 • StumbleUpon
 • Yahoo! Bookmarks
 • Yigg
குருவுக்கு நேர்ந்த கொடூரம்...அச்சிடுகமின்-அஞ்சல்
11 பிப்ரவரி 2012 காலை 08:58

 அஸ்ஸலாமு அழைக்கும். அன்பார்ந்த காயல் நியுஸ் வாசகர்களே அண்மையில் தமிழகத்தையே உழுக்கிய ஒரு சம்பவத்தை பல நாளேடுகள், பத்திரிகைகள், இணையதளங்கள் மற்றும் தொலைக்காட்சி மூலமாக நாம் கண்டு கேட்டு அது நம்மையே சோகத்தில் ஆழ்த்தியது. இப்படியுமா ஒன்று நடை பெரும் ? இது வெறும் கனவா நனவா என்று நாம் நம்மையே கேள்வி கேட்கும் போது, இல்லை இல்லை இது நிஜம் தான் என்று ஊர்ஜிதம் ஆகும் போது இன்னும் சோகம் அதிகமாக நம்மை ஆட்கொள்கிறது. ஒரு பதினைந்து வயது மாணவனால் இப்படியுமா ஒரு காரியத்தை செய்யமுடியும். கட்டம் போட்டு திட்டம் தீட்டி தனது ஆசிரியையே கத்தியால் குத்தி கொலை வெறியாட்டம் நடத்தியிருப்பத்தின் பின்னணி தான் என்ன என்று நாம் சற்று ஆராய கடமைப்பட்டுள்ளோம். ஆசிரியர்கள் பிள்ளைகளிடம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும். பெற்றோர்கள் பிள்ளைகளை எவ்வாறு வளர்க்க வேண்டும். ஒழுக்கம் மற்றும் மார்க்க நெறி எவ்வாறு பிள்ளைகளிடம் போதிக்கபடுகின்றது. இத்தகைய கருத்துக்களை இன்ஷா அல்லாஹ் இனி நாம் இஸ்லாத்தின் அடிப்படையில் அவைகளை காண்போம்.

சென்னை, பாரிமுனை அரண்மனைக்காரன் தெருவில் உள்ளது, செயின்ட் மேரிஸ் ஆங்கிலோ இந்தியன் தனியார் பள்ளி. 160 ஆண்டுகள் பழமையானது. இங்கு 1,500 பேர் படிக்கின்றனர். இப்பள்ளியில் ஏழு ஆண்டுகளாக இந்தி மற்றும் அறிவியல் பாட ஆசிரியராக பணியாற்றுபவர் உமாமகேஸ்வரி, வயது 39. இவரின் கணவர் பெயர் ரவிசங்கர். இவர்களுக்கு இரண்டு பிள்ளைகள். ஏழுகிணறு, போர்ச்சுகீசியஸ் தெருவை சேர்ந்தவரின் 15 வயது மகன் இந்த பள்ளியில் ஒன்பதாம் வகுப்பில் படிக்கிறான். ஆசிரியை உமா மகேஸ்வரி பத்தாம் வகுப்பு அறைக்குச் சென்றார். அப்போது அவரை பின்தொடர்ந்து சென்ற ஒன்பதாம் வகுப்பு மாணவன், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் சரமாரியாக குத்தினான். முதலில், கழுத்து பகுதியில் வெட்டியதும், ரத்தம் பீறிட்டு வெளியேறியது. இதில், ஆசிரியையின் கழுத்து நரம்புகள் வெட்டுப்பட்டன. அடுத்து, முகம், வயிறு மற்றும் இடுப்பு என மொத்தம் ஏழு இடங்களில் குத்தினான். ஆசிரியையின் அலறல் சத்தம் கேட்டு வந்த மற்ற மாணவர்கள், சக மாணவன் கையில் கத்தியுடனும், ஆசிரியை ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்து கிடப்பதையும் பார்த்து, பதட்டமடைந்து, பள்ளி முதல்வருக்குத் தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த பள்ளி முதல்வர், மற்ற ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள், ஆசிரியையை அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு, சிகிச்சை பலனின்றி, ஆசிரியை உமாமகேஸ்வரி இறந்தார்.

classroom1 இது போன்ற சம்பவங்கள் மேலை நாடுகளில் நடப்பதை தான் நாம் முன்பெல்லாம் கேள்வி பட்டு இருக்கின்றோம். தொலைக்காட்சி வாயிலாக, நாளிதழ்கள் வாயிலாக அறிந்து இருக்கின்றோம். "ஆசிரியரை மாணவன் துப்பாகியால் சுட்டு கொன்றான்", "ஒரு மாணவன் சக மாணவர்களை துப்பாக்கியால் சுட்டு தானும் சுட்டு தற்கொலை செய்து கொண்டான்" - இது போன்ற தலைப்புகளை பார்த்து இருக்கிறோம். ஆனால் சென்னையில் இது போன்ற ஒரு சம்பவம் நடைபெறும் என்று நாம் கனவில் கூட நினைத்துப்பார்த்திருக்க மாட்டோம். மேலை நாட்டு கலாசார மோகத்தில் நம் கலாசாரத்தையே இன்று நாம் தொலைக்க நினைக்கும் போது, அமெரிக்க பள்ளிகளில் நடைபெறும் இது போன்ற சம்பவங்களை நம் தமிழகத்திலும் நடைபெறலாம் என்பதை நாம் முன்பே எதிர்பார்த்து இருக்க வேண்டும். இந்த சம்பவம் மொத்த தமிழகத்துக்கும் ஒரு எச்சரிக்கை மணி. இப்பொழுதே நாம் விழித்துக்கொண்டு இதற்கான தீர்வை நாம் காணாவிடில் இந்த சம்பவங்கள் நாளுக்கு நாள் வெவ்வேறு வடிவில் நடைபெற வாய்ப்பு அதிகம்.

இந்த சம்பவத்தால் பெற்றோர்களின் மனது பதைக்கிறது. ஆசிரியர்கள் ஆச்சிரியத்தில் அகப்பட்டு இருக்கிறார்கள். மொத்த தமிழகமுமே மொத்தமாக கேட்கும் கேள்வி, இது ஏன் ஏற்பட்டது ? காரணம் என்ன ? இனி இது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க நாம் செய்ய வேண்டியது என்ன? இன்ஷா அல்லாஹ் இவைகளுக்கு இஸ்லாமிய பார்வையில் நாம் இதற்கு விடை காண்போம்.

பெற்றோர்களாக இருக்க கூடிய நாம் நம் பிள்ளைகளுக்காக வல்ல அல்லாஹ்விடம் துஆக்கள் பல கேட்டு இருப்போம். அவைகளில் ஒன்று "என் இரட்சகனே! உன் பாலிருந்து எனக்கொரு பரிசுத்தமான சந்ததியை அளிப்பாயாக! நிச்சயமாக நீ பிரார்த்தனையை செவியுறுகிறவன்." [ அல்-குர்ஆன் 3:38 ]. அல்லாஹ்விடம் என் பிள்ளைகளை சாலிஹான குழந்தைகளாக ஆக்கி வைப்பாயாக என்று இறைஞ்சும் நாம், அந்த பிள்ளைகளை சாலிஹான முறையில் வளர்ப்பதற்கு நாம் எடுத்துக்கொள்ளும் சிரத்தை மிக மிக குறைவு. பெற்றோர்களாகிய நாமும் நம்மாலான முயற்சியில் ஈடு பட்டு நம் பிள்ளைகளை இஸ்லாம் கூறும் வழியில் நன்னடத்தையோடு வளர்க்க வேண்டும்.

மாணவர்களின் மன அழுத்தமே இதுபோன்ற பிரச்னைகளுக்கு காரணம். தற்போது பள்ளிகளில் கல்வியை திணிக்கின்றனர். பாடம் படிப்பது மட்டுமே பிரதானமாக உள்ளது. விளையாட்டு, கலை, தியானம் போன்ற துறைகளில் மாணவர்களை ஈடுபடுத்துவது இல்லை. சில பள்ளிகளில் உள்ள கட்டுப்பாடுகளால் ஆசிரியர் மாணவர் உறவு சீராக இல்லை. ஆசிரியர்களை எதிர் கண்ணோட்டத்தில் பார்க்கின்றனர். மாணவர்களை கையாளுவதில் சில பள்ளிகள் தவறி விடுகின்றன. மாணவர்களுக்கு தண்டனை அளிப்பதை தவிர்த்து, வேறு வகைகளில் தவறுகளை உணர்த்தலாம். புத்தகம் மட்டும் படிப்பு அல்ல. இதில் அதிக அழுத்தம் கொடுக்க கூடாது. சில பள்ளிகளில் மாணவர்களின் நடவடிக்கைகள் குறித்து ஆசிரியர்களுக்கு தெரிவதில்லை. பெற்றோரின் தவறுகளும், தாக்கமும் மாணவர்களை பாதிக்கின்றன. மாணவர் ஆசிரியர் உறவை சீராக்கினால் தவறுகளுக்கு இடம் இல்லை.

நம் பிள்ளை எப்பொழுதும் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற வேண்டும்; எப்போதும் முதல் மாணவனாக வர வேண்டும் என்று பெற்றோர்கள் தம் பிள்ளைகளிடம் பாடங்களை திணிப்பதால் மன உளைச்சல்கள் ஏற்படுகின்றது. பெற்றோர்கள் ஒன்றை புரிந்துக்கொள்ள வேண்டும். ஒவ்வொரு மாணவனும் ஒவ்வொரு மாதிரி. தனக்கிருக்கும் பிள்ளைகளுக்கு மத்தியிலயே குணம், அறிவு, ஒழுக்கம், படிப்பு போன்றவைகள் மாறுபடும். "ஐந்து விரல்களும் ஒரே அளவாக இருக்காது" என்பதை நாம் உணர்ந்தாக வேண்டும். முதலில் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் வருங்கால ஆசை என்ன என்பதை கேட்பதே கிடையாது. மாறாக நீ டாக்டராக இன்ஜிநீராக வர வேண்டும் என்று நம் ஆசையை அவர்கள் மீது திணிப்பது தான். ஏனென்றால் நம்மால் தான் இவ்வாறாக வர முடியவில்லை, நம் பிள்ளைகளாவது வரவேண்டும் என்று எண்ணுவது தான்.

classroom3

இன்று சில வீடுகளில் தந்தையோ தாயோ மிக கோபம் மிகுந்தவராக இருக்கக்கூடும். சில வீடுகளில் தந்தையை ஹிட்லராஹவே சில பிள்ளைகள் காண்பது உண்டு. பள்ளிகூட பாடங்களின் குறைந்த மதிப்பெண் பெற்றால் போதும். அவ்வளவு தான் பெல்டை கழற்றி தன் பிள்ளையை அடித்தே விடுவார். இதனால் தான் பிள்ளைகள் பெரும்பாலான விஷயங்களை தன் பெற்றோர்களிடம் பகிர்ந்துக்கொள்ள மறுக்கின்றனர். தன்னை பற்றி தன் சக நண்பர்களோ அல்லது பள்ளி ஆசிரியர்களோ தன் பெற்றோரிடம் தனது குறையை தெரிவித்து விட்டால் அவனுக்கு வரும் கோபமே எல்லை இல்லாதது. காரணம், பெற்றோர்கள் தன் பிள்ளைகளின் குறை நிறைகளை ஒன்றாக பார்ப்பது கிடையாது. தன் பிள்ளைகளை தனது உற்ற நண்பர்காளாக எண்ணி கருத்து பறிமாற்றம் செய்வது கிடையாது. இது போன்ற சூழல்களே மாணவர்களுக்கு ஒரு மன அழுத்தத்தை ஏற்படுத்தி அவர்களையும் மிஞ்சி அவர்களே எண்ணிடாத செய்கைகளை செய்ய தூண்டுகிறது.

அன்பார்ந்த பெற்றோர்களே, தங்கள் பிள்ளைகளை பாசத்தின் அரவணைப்பில் வைத்துக்கொள்வதோடு கொஞ்சம் கண்டிப்பையும் கடைபிடியுங்கள். இசைவான உணவு வகைகளை ஊட்டி வளர்ப்பதோடு இஸ்லாம் போதிக்கும் இனிய உபதேசங்களை உங்கள் பிள்ளைகளுக்கு ஊட்டி வளருங்கள். இஸ்லாம் கூறும் அன்பு, பொறுமை, நற்பண்புகள் ஆகியவற்றை அவர்களுக்கு உபதேசம் செய்யுங்கள். கோபம் வந்தால் அதை எவ்வாறு கட்டுப்படுத்த வேண்டும் என்று ரசூல்(ஸல்) அவர்கள் கூறிய பொன்மொழிகளை நம் பிள்ளைகளுக்கு அறிவுறுத்தி வாருங்கள். இவைகளை ஒன்று இரண்டு நாள் மட்டும் கூறி விட்டு நிறுத்தி விடாதீர்கள். நேரம் கிடைக்கும்போது தினம் தினம் நினைவுர்த்தி வாருங்கள்.

ஆசிரியர்களுக்கும் பெரியோர்களுக்கும் எவ்வாறு மதிப்பளித்து நடக்க வேண்டும் என்பதை நளினமாக எடுத்து கூறுங்கள்.

படிப்பு மட்டும் தான் வாழ்கை என்று நினைக்காதீர்கள். பல்வேறு துறைகளில் சாதித்தோர் பட்டியல் நமக்கு தெரியாமல் இல்லை. "கற்றது கை மண்ணளவு. கல்லாதது உலகளவு." ஒரு மாணவனிடம் ஒழுக்கம் இல்லை என்றால் அவன் படிப்பில் முதல் மாணவனாக இருந்தும் ஒரு பிரயோஜனமில்லை. அதபும், அஹ்லாக்கும் ஒரு மாணவனிடம் இருக்கும் பட்சத்தில் கல்வி தானாக வந்து சேர்ந்து விடும். கல்வியிலும் நாம் நம் பிள்ளைகளிடம் அதிக கவனம் செலுத்துவது இந்த உலக கல்வியில் தான். மார்க்க கல்வியை போதிப்பதில் நாம் சற்று சோம்பேறிகளாக தான் இருக்கிறோம். மார்க்க கல்வி நிறுவனங்கள் நம்ம்மூரில் எவ்வளவு இருந்தும் அவைகளுக்கு தம் பிள்ளைகளை அனுப்புகின்ற பெற்றோர்கள் வெகு சிலரே. இந்த நிலை மாற வேண்டும். பிள்ளைகள் தான் நம் சொத்து. நாளைய வழிகாட்டிகள். நாம் நல்ல வழி காட்டாவிட்டால் எதிர்காலம் இருளில் தான்.

பள்ளியிலேயே மாணவனால் ஆசிரியை கொல்லப்பட்டது எல்லோரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. எங்கே செல்கிறது மாணவர் சமுதாயம்? எதிர்கால இந்தியாவை உருவாக்கும் மாணவ சமுதாயமே, கையில் கத்தி எடுத்தால் நாடு என்னாகும்?வன்முறையை சினிமா, டிவிக்களில் பார்த்துவிட்டு, மாணவர்கள் அதே மாதிரி நடக்க முயற்சிக்கின்றனர். மாணவர்களை கண்டிக்கக் கூடாது என பெற்றோர் மற்றும் அரசு கூறுவதால் தண்டிக்க முடியவில்லை. எனவே மாணவர்கள் நாம் செய்வதெல்லாம் சரியானதுதான் என கருதுகின்றனர். எனவே இது குறித்து மாணவர்கள், பெற்றோர் மற்றும் ஆசிரியர்களுக்கு கவுன்சிலிங் வழங்க வேண்டும். மாணவர்களை கட்டுப்பாட்டுக்குள் வைக்க ஆசிரியர்களுக்கு சரியான தெளிவான வழிகாட்டுதல்கள், நடைமுறைகள், அறிவுறுத்துதல்களை வழங்க வேண்டும்.

classroom2

மாணவர்களுக்கு தண்டனை தரக்கூடாது என, அரசு ஆசிரியர்களின் கையை கட்டிப்போட்டுள்ளது. எனவே அவர்களை திருத்துவதற்குக்கூட, ஆசிரியர்கள் சுயமாக செயல்பட முடிவதில்லை. எனவே மாணவர்களை குறிப்பிட்ட வயது வரை கண்டித்து திருத்த வேண்டும். அது இல்லாததற்கு சினிமா, "டிவி' காரணம். நடத்தை சரியில்லையெனில் அதை பெற்றோருக்கே தெரியப்படுத்தக் கூடாது என மாணவர்கள் கருதுகின்றனர். அவர்களை உளவியல் ரீதியாக நல்ல முறையில் நடத்த வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. அதேசமயம் நல்லது, கெட்டது தெரிவதற்கான வயது வரை கண்டிப்பதில் தவறேதும் இல்லை.

ஆசிரியை "பிளாக் மார்க் ரிப்போர்ட்' எழுதியதால் கொன்றதாக மாணவர் வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார். ஆசிரியை உமா மகேஸ்வரியைக் கொலை செய்த மாணவர் போலீசாரிடம் கூறியதாவது: பள்ளிக்கு அடிக்கடி லீவு போட்டதால், ஆசிரியை "பிளாக் மார்க் ரிப்போர்ட்' எழுதினார். இதனால், ஆசிரியை மீது கோபம் அதிகமாகி கொலை செய்யும் முடிவுக்கு வந்து விட்டேன். ஆனால், எப்படி கொலை செய்வது என தெரியாமல் இருந்தபோது, "அக்னி பாத்' என்ற இந்தி படத்தை பார்த்து கொலை செய்வதை தெரிந்து கொண்டேன். இதற்காக கடையில் 10 ரூபாய் கொடுத்து கத்தியை வாங்கினேன். அதை, பேப்பரில் மறைத்து பள்ளிக்கு எடுத்து சென்றேன். சந்தர்ப்பம் கிடைத்தபோது ஆசிரிரியை கழுத்து, கை, வயிற்றுப் பகுதியில் வெட்டினேன். இவ்வாறு மாணவர் கூறினார்.

சமுதாயம் சீரழிவை நோக்கிப் போவதையே இந்த சம்பவம் காட்டுகிறது. முன்பெல்லாம் ஆசிரியர்-மாணவர் உறவு குரு-சீடர் உறவாக இருந்தது. மாணவரின் குடும்பத்திற்கே ஆசிரியர் வழிகாட்டியாக இருந்தார். ஆனால் இப்போது வியாபார நோக்குடைய உறவாக போய்விட்டது. ஒரு ஆசிரியர் இல்லையெனில் வேறு ஆசிரியர் மூலம் மதிப்பெண்ணையும் அதன்மூலம் எதிர்காலத்தில் பணத்தையும் சம்பாதிக்கலாம் என மாணவர்கள் கருதுகின்றனர். பெற்றோரின் வளர்ப்பு முறை, அளவுக்கு மீறிய சுதந்திரத்தால், மாணவர் தவறு செய்யும்போது அவர்களாலேயே கண்டிக்க முடிவதில்லை. அப்படி இருக்கும்போது ஆசிரியர்கள் கண்டிக்கும்போதும் ஆத்திரப்படுகின்றனர். தாங்கள் வைத்ததே சட்டம், செய்வதே நடைமுறை என கருதுகின்றனர். முன்பிருந்த நீதி, நியாயம், ஒழுங்கு முறை இல்லாததற்கு சினிமா, டிவி காரணம். மாணவர்களை திருத்த ஆசிரியர்கள் மாணவர்களுக்கு கவுன்சிலிங் அவசியம். இதற்காகவே உலக சுகாதார அமைப்பானது மாணவர்களுக்கு வாழ்க்கை திறன் பயிற்சியில் குறிக்கோளுடன் வாழ்வது எப்படி, பொறுமை, சகிப்புத்தன்மை, ஒழுக்கம் போன்ற 10 விஷயங்களில் பயிற்சி அளிக்கும்படி தெரிவித்துள்ளது. பெற்றோருக்கும் கவுன்சிலிங் தேவை.

classroom4

மாணவர்களுக்கு ஒழுக்க நெறிகளைக் கூறி வளர்க்க வேண்டும். குறையை மட்டும் சுட்டிக் காட்டுவது, வன்முறையைத் தூண்டும் காட்சிகள் போன்ற காரணங்களால், அதிக மன அழுத்தத்துக்கு உள்ளாகின்றனர். சிறு வயதிலிருந்தே ஒழுக்க நெறிகள், தோல்வியுற்றால் ஊக்கப்படுத்துவது போன்ற செயல்களில் பெற்றோர் ஈடுபட வேண்டும். வீட்டில் பெற்றோர் பிள்ளைகளை திட்டுதல், வெறுப்பைக் காட்டுதல் போன்ற நிகழ்வுகளும், ஆசிரியர்கள் மாணவர்களிடம் அன்பாகப் பழகாமல் இருப்பது, தவறை மட்டும் சுட்டிக் காட்டுவது, பாடத்தில் தோல்வியுற்றால் திட்டுவது போன்ற செயல்களால், மாணவர்கள் மன அழுத்தத்துக்கு உள்ளாகின்றனர். இது தவறான செயல்களில் ஈடுபடத் தூண்டுகிறது.

மன அழுத்தத்திற்கு தீர்வு:

பெற்றோர்களுக்கு...

 • குழந்தைகளுடன் தினமும் ஒரு மணி நேரம் சந்தோஷமாக இருக்க வேண்டும்.
 • கேட்பதை உடனடியாக வாங்கித் தராமல், காலம் தாழ்த்தி வாங்கிக் கொடுக்க வேண்டும்.
 • அதிக செல்லம் கொடுக்கக் கூடாது.
 • குறைகளை அன்போடு சுட்டிக் காட்டி திருத்த வேண்டும்.

ஆசிரியர்களுக்கு...

 • அன்போடு நடந்து கொள்ள வேண்டும்.
 • தேர்வில், விளையாட்டில் தோற்றால், ஊக்கப்படுத்தும் கதைகள் மற்றும் முயற்சியால், முன்னேறியவர்கள் கதையைக் கூற வேண்டும்.
 • தலைமையாசிரியர் வாரம் ஒரு முறை கூட்டம் நடத்தி, மாணவர்களிடம் நடந்து கொள்ளும் விதம், பேசும் விதம், கண்டிக்கும் விதம் போன்றவற்றை எடுத்துக் கூற வேண்டும்.
 • பள்ளிகளில் ஒழுக்க நெறி வகுப்புகளை, கட்டாயம் நடத்த வேண்டும்.

மாணவர்களுக்கு...

 • எப்போதும் பொறுமையை கடை பிடியுங்கள்
 • கோபம் வரும் போது அதை கட்டுப்படுத்துங்கள்
 • உங்கள் பெற்றோர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் மரியாதை கொடுங்கள்
 • டிவி, சினிமா பார்ப்பதை தவிர்த்துக்கொள்ளுங்கள்
 • உங்கள் நல்லொழுக்கத்துக்கும் நன்னடத்தைகளுக்கும் பங்கம் வராமல் பார்த்துக்கொள்ளுங்கள்.

ஆக்கம் : காயல் நியூஸ் 

Add comment

காயல் நியுஸ், வாசகர்கள் கருத்துக்களை வரவேற்கிறது. வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் நியுஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்த விதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். முரண்பாடான மரியாதைக்குறைவான, கண்ணியமில்லாத கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கும் அவைகளை நீக்குவதற்கும் எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு. தங்களது பெயர் மற்றும் கருத்துக்களை தமிழில் தட்டச்சு செய்யலாம். உதாரணமாக "காயல்பட்டினம்" என்று தட்டச்சு செய்ய ஆங்கிலத்தில் "kaayalpattinam" என்று தட்டச்சு செய்து Space bar-ஐ அழுத்தினால் தங்கள் தட்டச்சு செய்த சொல் தமிழாக மாற்றப்படும். ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.


Security code
Refresh

 

செய்திகள்

வாவு வஜீஹா வனிதையர் கல்லூரியில் மாநில அளவிலான திறன்மிகு கருத்தரங்கம்!
காயல்பட்டினத்தில் இருந்து இ சேவை மாற்றல் விஷயம்! மாவட்ட ஆட்சியரின் கவனத்திற்கு திங்களன்று கொண்டு செல்வதாக துணை தாசில்தார் உறுதி!!
இ சேவை மையம்: காயலபட்டினத்தில் இருந்து மாற்றப்படக்கூடாது என கோரி மாவட்ட ஆட்சியருக்கு பொது மக்கள் - ஈமெயில், FAX குறுஞ்செய்தி மற்றும் WHATSAPP செய்தி அனுப்ப வேண்டுகோள்!
மண்டலம் வாரியாக அதிகரிக்க உத்தேசிக்கப்பட்டுள்ள காயல்பட்டினம் நகராட்சியின் சொத்து வரி! உங்கள் தெரு எந்த மண்டலத்தில்?
படிவம் 7 பயன்படுத்தி வாக்காளர் பட்டியலில் தவறுதலாக இடம்பெற்றுள்ள பெயரை எவ்வாறு நீக்குவது?

சுடச்சுட காயல் செய்திகள்! சுவையான இஸ்லாமிய கட்டுரைகள் !!
தொடர்பு கொள்ள : admin@kayalnews.com
© Copyright : Kayalnews.com