بسم الله الرحمن الرحيم
Monday 23rd July 2018 | 10 துல்கஃதா 1439AH
பதாகை
news menu left
news menu right

பதாகை

பதாகை

  • Google Bookmarks
  • Twitter
  • Windows Live
  • Facebook
  • MySpace
  • deli.cio.us
  • Digg
  • Newsvine
  • reddit
  • StumbleUpon
  • Yahoo! Bookmarks
  • Yigg
சிறுவர்களுக்கு சலாம் கூறுதல்அச்சிடுகமின்-அஞ்சல்
28 ஜூன் 2011 காலை 08:13

குழந்தைகளுக்கு சிறு பருவத்தில் இருந்தே இஸ்லாமிய பயிற்சியினை சொல்லிக்கொடுத்து அதைபின்பற்றி நடக்க கற்று கொடுக்கவேண்டும். முதல் படியாக சலாம் சொல்லுவதை கற்று கொடுப்பது மிக சுலபமான விஷயமாகும்.

salam-kids

தற்காலத்தில் வெஸ்டர்ன் ஆங்கிலேய கலாச்சாரம் தான் சிறுவர்கள் முதல் பெரியவர்கள்வரை பற்றிகொண்டிருக்கு. வெளியிலோ அல்லது உறவினர் வீடுகளுக்கோ செல்லும்போது good morning , good night, hello, hi, bye.. என்று தான் ஸ்டைலுக்கு கற்று கொடுப்பதை கவுரவமாக நினைக்கும் பெற்றோர்கள் இன்னும் இருக்கத்தான் செய்கிறார்கள். "அஸ்ஸலாமு அழைக்கும்" (தங்கள் மீது இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக!" என்கிற அழகான பொருள்.) என்று சொல்லி கொடுப்பதையே ஒவ்வொரு பெற்றோரும் விரும்ப வேண்டும். அப்படி நாம் குழந்தைகளுக்கு முகமலர்ச்சியுடன் சலாம் கூறி அவர்களிடமிருந்து பதில் சலாமை பெற வேண்டும்.

இவ்வாறு நாம் செய்யும் போது குழந்தைகள் இதைப் பார்த்து மற்றவர்களை சந்திக்கும்போது போட்டி போட்டு முந்திக்கொண்டு அழகாக சலாம் கூறுவார்கள். நமது வீட்டில் நுழையும்போதுகூட சலாம் கூறி அனுமதி பெற்று உள்ளே வரும் பழக்கத்தை அவர்கள் எற்படுத்திகொள்வார்கள். சலாம் சொல்லுவதற்கு கிடைக்கும் நன்மையையும் எடுத்து கூறி ஆர்வத்தை ஏற்படுத்தவேண்டும்.

நபி (ஸல்) அவர்களிடம் ஒரு மனிதர் வந்து ''அஸ்ஸலாமு அலைக்கும் '' என்று கூறினார். நபியவர்கள் அவருக்குப் பதில் ஸலாம் கூறினார்கள். பின்னர் அவர் உட்கார்ந்தார். நபி (ஸல்) அவர்கள் (இவருக்கு) பத்து (நன்மைகள்) என்று கூறினார்கள். பிறகு மற்றொருவர் வந்தார். அவர் ''அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹ்'' என்று கூறினார்.

நபி (ஸல்) அவர்கள் அவருக்குப் பதில் கூறியவுடன் அவர் அமர்ந்தார். நபியவர்கள் ''(இவருக்கு) இருபது (நன்மைகள்)'' என்று கூறினார்கள். பிறகு மற்றொருவர் வந்தார். அவர் ''அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாதுஹு'' என்று கூறினார். அவருக்கு நபியவர்கள் பதில் கூறினார்கள். பிறகு அவர் உட்கார்ந்தார்.

நபி (ஸல்) அவர்கள் ''(இவருக்கு) முப்பது (நன்மைகள்)'' என்று கூறினார்கள்.'' அறிவிப்பாளர் : இம்ரான் பின் ஹுசைன் (ரலி)நூல் : அபூ தாவூத் (4521)

ஆக்கம் : உம்மு ஷுரஃபா

 

Add comment

காயல் நியுஸ், வாசகர்கள் கருத்துக்களை வரவேற்கிறது. வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் நியுஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்த விதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். முரண்பாடான மரியாதைக்குறைவான, கண்ணியமில்லாத கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கும் அவைகளை நீக்குவதற்கும் எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு. தங்களது பெயர் மற்றும் கருத்துக்களை தமிழில் தட்டச்சு செய்யலாம். உதாரணமாக "காயல்பட்டினம்" என்று தட்டச்சு செய்ய ஆங்கிலத்தில் "kaayalpattinam" என்று தட்டச்சு செய்து Space bar-ஐ அழுத்தினால் தங்கள் தட்டச்சு செய்த சொல் தமிழாக மாற்றப்படும். ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.


Security code
Refresh

 

சுடச்சுட காயல் செய்திகள்! சுவையான இஸ்லாமிய கட்டுரைகள் !!
தொடர்பு கொள்ள : admin@kayalnews.com
© Copyright : Kayalnews.com