بسم الله الرحمن الرحيم
Saturday 29th February 2020 | 05 ரஜப் 1441AH
பதாகை
news menu left
news menu right
 • Google Bookmarks
 • Twitter
 • Windows Live
 • Facebook
 • MySpace
 • deli.cio.us
 • Digg
 • Newsvine
 • reddit
 • StumbleUpon
 • Yahoo! Bookmarks
 • Yigg
உம்மாமார்களுக்காக...அச்சிடுகமின்-அஞ்சல்
29 ஜூன் 2011 காலை 09:05

சிலர் குழந்தைகளை வளர்க்கும் விதத்தைப் பார்த்தால், சர்க்கஸ் தான் நினைவிற்கு வருகிறது. மிருகங்களை அடித்து, துன்புறுத்தி, பார்வையாளர்களை மகிழ்விக்கும் சர்க்கஸ்காரனைப் போல குழந்தைகளை அடித்து, திருத்தி வசப்படுத்துவது யாரை மகிழ்விக்க.. குழந்தையை நல்லா வளர்த்திருக்கிறாங்க என்று பிறரிடம் பாராட்டு பெறுவதற்காகவா? இடையில நாம காப்பாத்த போன இன்னும் இரண்டு அடி எந்த குழந்தைக்கு எக்ஸ்ட்ராவா விழும். ஏன் அடிக்கிறாய் என்று கேட்டால்.. ஆமா நீங்க பாட்டுக்கு இரண்டு மாசம் வந்து உக்காந்துட்டு ஜாலியா போயிடுவீங்க. நான் தான் கிடந்தது மாறடிக்கணும், படிக்காத குழந்தையை அடிக்காம வேறென்ன பண்ணுவாங்களாம் என்று கிழி வாங்கியவர்கள் தான் நம்மில் பலர் இருப்பார்கள்.

பொதுவாக குழந்தைகள் எல்லாத்தையும் ஆராய்ச்சி செய்து நோண்டி பார்த்துட்டுதான் இருக்கும்.இதை நாம் சில நேரம் ரசிக்கிறோம் ,சில நேரம் சேட்டைன்னு சொல்லி அடி வெளுக்கிறோம்.சேட்டை என்றால் என்ன? நாம் சந்தோஷமாக இருக்கும் போது குழந்தை நமது கண்ணிலே விரலை வைத்து குத்தினால் கூட சிரித்து மகிழ்கிறோம். நாம் வேறு மனநிலையில் மாப்பிளையுடனோ , மாமியாருடனோ சண்டை பிடிச்சு கோவமா இருக்கும்போது குழந்தை சாதாரணமாக மண்ணைத் தொட்டால் கூட குழந்தையை அடித்து கண்படி திட்டுகிறோம் . சேட்டை என்பது குழந்தையை மையப்படுத்தி அல்ல. நம்மை மையப்படுத்தி இருக்கிறது.

குழந்தைகளை அடித்து சரிபடுத்த அவர்கள் இரும்பு கம்பியுமல்ல ,மத்தளமுமல்ல. கண்டிப்பு என்பது, இந்தச் செயல் எனக்குப் பிடிக்கவில்லை என்பதை உணர்த்துவது. சில குழந்தைகள் நான் உன்கூட பேசமாட்டேன் என்று சொன்னாலே தங்களது தவறுகளை திருத்திக் கொள்ளும். இப்படி ஒவ்வொரு குழந்தைக்கும் ஒவ்வொரு விதமான சைக்காலஜி உண்டு.

நம்ம ஊர்ல பார்த்தீங்கனா.. பெரும்பாலான வீட்டுல குழந்தைக்கு சோறு ஊட்டும் போது அவங்கள படுத்துற பாடு இருக்கே அப்பப்பப்பா... உதாரணமாக 8 மாதக் குழந்தையை அதன் உம்மா இடுப்பில் வைத்து சோறு ஊட்டும்போது அந்தக் குழந்தை தனக்குத் தெரிந்த மழலையில் வேண்டாம் என்று சொன்னாலும் அந்தத் உம்மா எப்படியாவது இன்னும் இரு வாய் அந்தக் குழந்தைக்குத் திணித்துவிடுவார். அப்போதுதான் அவங்களுக்கு உச்சி குளிர்ந்து . தன் பிள்ளைக்கு வயிறு நிறைய சோறு ஊட்டி விட்டதாக ஒரு திருப்தி . ஆனால் அந்த குழந்தைக்கு வயிறு ஒத்துக்காம அடுத்த நிமிசமே வாந்தி எடுக்கும். உடனே பளார் பளார்னு அடிய விட்டுட்டு . சனியனே.. அப்பன மாதிரியே திமிரு பிடிச்சு வளருதுன்னு கிழி வேற.. ஏற்கனவே வாந்தி எடுத்ததால் மூக்கிலும் வாயிலும் ஏற்படும் எரிச்சலோடு, சேர்ந்து அடியும் வாங்கியதால், அந்தக் குழந்தை மேலும் மேலும் துன்புறுத்தப் படுகின்றது . இந்த செயல் அன்பினால் ஏற்பட்ட வன்முறை. இதெல்லாம் வன்முறையா நாங்கள் என்ன நினைக்கின்றோம் என்றால், குழந்தையை ஒழுங்காகவும், நல்ல பிள்ளையாகவும் வளர்ப்பதற்கு அடித்து வளர்க்கிறோம் என்று கூறுகிறார்கள் இந்த உம்மாமார்கள்.

உங்கள் எதிர் பார்ப்புகளை, விருப்பங்களை, எண்ணங்களை, அவர்கள் மீது திணிக்காதீர்கள். அவர்கள் எதிர்கால உலகிற்கு உங்கள் கம்மா கால சடங்குகளை திணிப்பது தவறு. நீங்கள் வேண்டுமானால் குழந்தைகளைப் போல இருங்கள். ஆனால் உங்களைப் போல அவர்கள் இருக்க வேண்டும் என்று எதிர் பார்க்காதீர்கள். ஏனென்றால், குழந்தைகளை நாம் உருவாக்கின போதும், அவர்கள் நமது அடிமைகள் அல்ல.

அடிக்கிற கைதான் அணைக்கும் என்னும் பழமொழி எல்லாம் உதவவே உதவாது. அணைக்கும் என்பதற்காக அடிக்க வேண்டுமா? நல்ல புத்திய சொல்லி ஒழுங்கா வளர்த்தாள் அவன் நாளை நம்மை அணைப்பான். இல்லாவிட்டால், அவனும் அடிக்கிற கை அணைக்கும் என்று நம்மை அடிப்பான். நாம் என்ன சொல்லிக் கொடுக்கிறோமே அதைத்தானே குழந்தைகள் செய்வார்கள்.

அதுமாதிரி குழந்தைகளை நீ எதுக்கும் லாய்க்கு இல்லாதவள் என்று சொல்லி கொண்டே இருந்தால் அந்த குழந்தையின் மனதில் தன்னைப் பற்றிய தாழ்வு மனப்பான்மை ஏற்பட்டு உண்மையிலேயே அவளால் எந்த ஒரு காரியத்தையும் செய்ய லாயக்கில்லாதவளாகிவிடக் கூடும். அது மாதிரி நம்ம ஊரில் குழந்தைகள் அந்த மகனே இந்த மகனே என்ற கெட்ட வார்த்தைகளை சர்வ சாதரணமாக உபோயோகிக்கிராங்க.. இதை அவர்கள் நம்மிடமிருந்துதான் படிக்கிறார்கள் ஒரு சிறு குழந்தை தன்னுடைய மழலை மொழியில் கெட்ட வார்த்தையை சொன்ன்னல் நாம் ரசிக்கிறோம் அதுமட்டுமல்லாமல் வீட்டுக்கு வருபவர்களிடம் மாமாவ பார்த்து அப்படி சொல்லு என்று சொல்ல சொல்லி பெருமை கூட பட்டுகொள்கிறோம். இந்த வார்த்தைகள் எல்லாம் நமதூரில் வழக்கில் இருப்பதால் நமக்கு பெரிதாக தெரியவில்லை . நமதூர் பிள்ளைங்க வெளியூர் சென்று படிக்கும் பொது அங்குள்ளவர்களிடம் இதே வார்த்தைகளை பயன்படுத்தும் பொது பெரிய பிரச்சனை ஆகிவிடுகின்றது ஆகவே இதை நாம் தொட்டிலிலேயே களைய வேண்டும் அதற்கு நாம் இது போன்று வார்த்தைகள் பேசுவதை தவிர்த்தாலே போதும்.

எல்லாம் வல்ல அல்லாஹ் நம் அனைவரின் குழந்தைகளையும் சாலிஹான, நல்ல மார்க்கப்பற்றுள்ள, நம் ஊருக்கும்,நாட்டிற்கும்,வீட்டிற்கும், நம் சமுதாயத்திற்கும் பயனுள்ளதாக ஆக்குவானாக .. ஆமின் ஆமின் யா ரப்பல் ஆலமீன்...

அன்பு சகோதரன்

முத்துவாப்பா.....

Add comment

காயல் நியுஸ், வாசகர்கள் கருத்துக்களை வரவேற்கிறது. வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் நியுஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்த விதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். முரண்பாடான மரியாதைக்குறைவான, கண்ணியமில்லாத கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கும் அவைகளை நீக்குவதற்கும் எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு. தங்களது பெயர் மற்றும் கருத்துக்களை தமிழில் தட்டச்சு செய்யலாம். உதாரணமாக "காயல்பட்டினம்" என்று தட்டச்சு செய்ய ஆங்கிலத்தில் "kaayalpattinam" என்று தட்டச்சு செய்து Space bar-ஐ அழுத்தினால் தங்கள் தட்டச்சு செய்த சொல் தமிழாக மாற்றப்படும். ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.


Security code
Refresh

 

சுடச்சுட காயல் செய்திகள்! சுவையான இஸ்லாமிய கட்டுரைகள் !!
தொடர்பு கொள்ள : admin@kayalnews.com
© Copyright : Kayalnews.com