வாப்பாமார்களுக்காக .....அச்சிடுக
04 ஆகஸ்ட் 2011 காலை 01:14

குழந்தை வளர்ப்பு என்பது பெரும்பாலான ஆண்களைப் பொறுத்த வரை பெண்கள் சமாச்சாரம். குழந்தையை விரும்புகிற வாப்பாக்கள் கூட கைக்குழந்தையைத் தூக்கவோ கவனித்துக் கொள்ளவோ தயாராக இருப்பதில்லை. காரணம் குழந்தையை தூக்கும் போது சிறுநீர் மலம் கழிக்கலாம். அல்லது வாந்தி எடுக்கும். இதனால் அருவருப்பு அடையும் தந்தைகள் சிலர் பச்சிளம் பருவ சிரமங்களைக் கடந்த பிறகு ஓரளவுக்கு வளர்ந்த பிறகே அதன் வளர்ச்சியில் அக்கறை எடுத்துக் கொள்வார்கள். இந்த மனப்பான்மை மிகத் தவறானது. குழந்தை வளர்ப்பில் ஆரம்ப காலத்திலிருந்தே வாப்பாக்களும் பழக்கப்படுத்தபட வேண்டும். எந்தெந்த விதங்களில் குழந்தை வளர்ப்பில் பங்கு கொள்ளச் செய்ய முடியும் என்பதற்கு சில யோசனைகள் இதோ.......

பிறந்த குழந்தையை தூக்க முதல் நாளிலிருந்தே தன் கணவனுக்கு கற்றுத்தர வேண்டும் மனைவி. கழுத்து நிற்காத குழந்தையை எப்படி சப்போர்ட்டாக பிடித்துக் கொள்ள வேண்டும் எப்படி வைத்துக் கொள்ள வேண்டும் என்று ஒன்றிரண்டு முறைகள் கற்றுக் கொடுத்தால் பழகி விடும்.

குழந்தைக்கு பாட்டிலில் எப்படிப் புரை ஏறாமல் பால் கொடுக்க வேண்டும். பால் குடித்தவுடன் எப்படி ஏப்பம் விட வைக்க வேண்டும் என்பதை குழந்தையின் தந்தைக்கும் கற்றுத் தரலாம். இதனால் பிள்ளை அழும்போதெல்லாம் பிரசவித்த தாய் எழுந்து உடலை வருத்திக் கொள்ளாமல் ஓய்வெடுக்க முடியும்.

daddy

வேலைகளை கணவன் மனைவி இருவரும் பகிர்ந்து கொள்ளலாம். உதாரணத்திற்கு குழந்தையைக் குளிப்பாட்டுவது சாப்பாடு கொடுப்பது போன்றவற்றை ஒருவரும் இரவில் அதற்குச் சாப்பாடு கொடுத்துத் தூங்க வைப்பதை இன்னொருவரும் பிரித்துக் கொள்ளலாம்.

என்ன தான் தலை போற பிசியான வேலையில் இருந்தாலும் தினம் சிறிது நேரத்தைக் குழந்தையுடன் செலவிடுவதை வழக்காமாகக் கொள்ளும்படி தந்தையரை பழக்குங்கள்.  வாப்பாவின் முகத்தைப் பார்த்ததும் சில குழந்தைகள் பேச முயற்சி செய்யும். அந்த மழலை மொழியை காது கொடுத்து கேட்க வேண்டியது முக்கியம். அதை கண்டுகொள்ளாமல் தட்டிக் கழிப்பது உதாசீனப்படுத்தப்படுகிறோம் என்ற உணர்வைக் குழந்தையின் மனதில் ஏற்படுத்தி விடும். குழந்தைக்கு பிடித்தை எல்லாம் வாங்கிக் கொடுப்பதோடு வாப்பாக்களின் கடமை முடிந்து விடுவதில்லை. தன் அன்பை அடிக்கடி வார்த்தைகளால் வெளிப்படுத்த வேண்டும். வார்த்தைகளாலும் செயல்களாலும் மட்டுமே அன்பைக் குழந்தைகளால் புரிந்து கொள்ளமுடியும்.

பொதுவாக வெளிநாடுகளிலோ வெளியூர்களிலோ தனிகுடும்பமாக இருப்பவர்களின் பேறுகாலத்திற்கு உதவிக்கு யாரும் வரமுடியாத சூழலில் கணவன்மார்கள் இதுபோன்ற சின்ன சின்ன குழந்தை வளர்ப்பு விஷயங்களை தெரிந்து வைத்துகொண்டு மனைவிக்கு உதவியாக இருந்தால் அவர்களுக்கு நல்ல ஒரு சப்போர்ட்டாக இருக்கும்.  குழந்தையின் பள்ளிக்கூடத்தில் நடக்கும் போட்டிகள்இ விழாக்கள் போன்றவற்றிற்குத் தவறாமல் தந்தை சென்று உற்சாகப்படுத்த வேண்டும்.

நம் குழந்தைகள் சந்தோஷமான குழந்தைகளாக வளர்வதற்கும் நல்ல மார்க்க ஒழுக்க பண்புகள் கொண்டவர்களாக வருங்காலத்தில் இருப்பதற்கும் சாதனைகள் புரிவதற்கும் அடிப்படை காரணம் பெற்றோர்களின் வளர்ப்புதான். உங்களுடைய குழந்தைகளுக்கு சம்பாதிக்கவோ அல்லது பணத்தை சேர்த்து வைக்கவோ கற்றுத் தர வேண்டாம். நல்ல குணங்களை... வாழ்க்கையை கற்றுக் கொடுங்கள். சம்பாதிக்கவும் சேமிக்கவும் அவர்களே கற்றுக் கொள்வார்கள்.

 

வழங்கியவர் : உம்மு ஷுரஃபா

Add comment

காயல் நியுஸ், வாசகர்கள் கருத்துக்களை வரவேற்கிறது. வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் நியுஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்த விதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். முரண்பாடான மரியாதைக்குறைவான, கண்ணியமில்லாத கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கும் அவைகளை நீக்குவதற்கும் எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு. தங்களது பெயர் மற்றும் கருத்துக்களை தமிழில் தட்டச்சு செய்யலாம். உதாரணமாக "காயல்பட்டினம்" என்று தட்டச்சு செய்ய ஆங்கிலத்தில் "kaayalpattinam" என்று தட்டச்சு செய்து Space bar-ஐ அழுத்தினால் தங்கள் தட்டச்சு செய்த சொல் தமிழாக மாற்றப்படும். ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.


Security code
Refresh