بسم الله الرحمن الرحيم
Thursday 19th April 2018 | 03 ஷஃபான் 1439AH
பதாகை
news menu left
news menu right

பதாகை

பதாகை

  • Google Bookmarks
  • Twitter
  • Windows Live
  • Facebook
  • MySpace
  • deli.cio.us
  • Digg
  • Newsvine
  • reddit
  • StumbleUpon
  • Yahoo! Bookmarks
  • Yigg
பெருநாள் வட்லாப்பம்அச்சிடுகமின்-அஞ்சல்
06 நவம்பர் 2011 காலை 07:39

வாங்க ...சாப்பிடலாம் வட்லாப்பம்.

பெருநாள் என்றாலே எல்லார் வீட்டிலும் இனிப்பு நிச்சயம் இருக்கும்.  அதுவும் வட்லாப்பம் தான் பெரும்பாலான வீடுகளில் செய்வார்கள்.  அதன் எளிமையான வித்தியாசமான செய்முறையை விளக்குகிறேன்.  இன்ஷா அல்லாஹ்.

தேவையான பொருட்கள்

முட்டை - 8

காய்ச்சிய பசும் பால் – 1 ½ லிட்டர்

சீனி – 2 ரைஸ் குக்கர் கப்

வன்னிலா எசன்ஸ் – சில சொட்டுக்கள்

செய்முறை

  • பாலை காய்ச்சி ஆறவைத்து வன்னிலா எசன்ஸ் சேர்க்கவும்.
  • முட்டையையும் சீனியையும் நுரை வரும் அளவுக்கு மிக்ஸ்யில் அடித்து வைக்கவும்.
  • இப்போது அடித்து வைத்த முட்டையையும் சீனியையும் சேர்த்து வடித்து ஆறிய பாலோடு சேர்த்து கலக்கவும்.
  • குக்கரில் தண்ணீர் வைத்து அதற்கு மேல் சரியாக பொருந்தக்கூடிய ஒரு பாத்திரத்தில் நெய் தடவி வட்லாப்ப கலவையை ஊற்றி மூடி போட்டு மிதமான தீயில் வைத்து நீராவியில் வேகவிடவும்.
  • வெந்ததும் இறக்கி நன்றாக ஆறவிட்டு பின் துண்டுகள் போட்டு பரிமாறவும்.
  • விருப்பமிருந்தால் நட்ஸ் திரித்து தூவி அலங்கரிக்கவும்.

இந்த வட்லாப்பம் வாய்க்கு ருசியாகவும் சாப்பிட மிருதுவாகவும் இருக்கும்.

vattalaappam

இந்த வட்லாப்பத்தை தேங்காய்பால் பயன்படுத்திதான் பெரும்பாலும்

செய்வார்கள். ஆனால் பசும்பாலில் செய்வதால் திகட்டாமல் சாப்பிடலாம்.

குழந்தைகளுக்கும் சத்துள்ள ஒரு உணவாக அமையும். கேராமல் புட்டிங் போன்ற சுவையுடன் சூப்பராக இருக்கும்.

அனைவருக்கும் ஈதுல் அத்ஹா வாழ்த்துக்கள்.

வழங்கியவர்: உம்மு ரஹீஃபா

Add comment

காயல் நியுஸ், வாசகர்கள் கருத்துக்களை வரவேற்கிறது. வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் நியுஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்த விதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். முரண்பாடான மரியாதைக்குறைவான, கண்ணியமில்லாத கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கும் அவைகளை நீக்குவதற்கும் எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு. தங்களது பெயர் மற்றும் கருத்துக்களை தமிழில் தட்டச்சு செய்யலாம். உதாரணமாக "காயல்பட்டினம்" என்று தட்டச்சு செய்ய ஆங்கிலத்தில் "kaayalpattinam" என்று தட்டச்சு செய்து Space bar-ஐ அழுத்தினால் தங்கள் தட்டச்சு செய்த சொல் தமிழாக மாற்றப்படும். ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.


Security code
Refresh

 

சுடச்சுட காயல் செய்திகள்! சுவையான இஸ்லாமிய கட்டுரைகள் !!
தொடர்பு கொள்ள : admin@kayalnews.com
© Copyright : Kayalnews.com