بسم الله الرحمن الرحيم
Monday 22nd January 2018 | 05 ஜமாதுல் அவ்வல் 1439AH
பதாகை
news menu left
news menu right

பதாகை

பதாகை

  • Google Bookmarks
  • Twitter
  • Windows Live
  • Facebook
  • MySpace
  • deli.cio.us
  • Digg
  • Newsvine
  • reddit
  • StumbleUpon
  • Yahoo! Bookmarks
  • Yigg
ஹைதராபாத் சிக்கன் பிரியாணிஅச்சிடுகமின்-அஞ்சல்
19 டிசம்பர் 2011 காலை 08:30

 நம்ம ஊரு பிரயாணி சாப்பிட்டு அலுத்து விட்டதா ? பிரயாணிக்கு பெயர போன ஊர் ஹைதராபாத். உங்களுக்கு செய்து சாப்பிட ஆசையா ? இதோ உங்களுக்காக எளிய முறையில்....

தேவையான பொருட்கள்

தரமான பாஸ்மதி அரிசி – 4 கப்

சிக்கன் – ½ கிலோ

இஞ்சி பூண்டு விழுது – 1 தேக்கரண்டி

மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி

மஞ்சள் தூள் - ½ தேக்கரண்டி

நச்சீரக தூள் – ½ தேக்கரண்டி

மல்லித்தூள் – ½ தேக்கரண்டி

மிளகுதூள் - ¼ தேக்கரண்டி

பசைமிளகாய் - 2

பட்டை – 2

ஏலம் – 4 to 6

பிரிஞ்சி இலை (bay leaves) - 3

கிராம்பு – 3

முழு சீரகம்- 1 தேக்கரண்டி

வெங்காயம் – 2 பெரியது

எண்ணெய் + நெய் – 2 மேசைக்கரண்டி

தயிர் - 2 கப்

புதினா – 1 கப்

மல்லி - 1 கப்

இளம் சூடான பால் – ½ கப் பால்

குங்குமப்பூ

உப்பு – தேவைக்கு

எலுமிச்சை சாறு – தேவைக்கு

செய்முறை விளக்கம்

முதலில் வெங்காயத்தை நீளவாக்கில் அரிந்து பிறகு அதை எண்ணெயில் பொறித்து பொன்முருவளாக எடுத்து தனியாக வைக்கவும்.

ஒரு வாயகன்ற பாத்திரத்தில் சுத்தப்படுத்திய சிக்கன், மேலே கொடுத்திருக்கும் அனைத்து வகை மசாலா தூள்கள், பட்டை , ஏலம், பிரிஞ்சி இலை, கிராம்பு, முழு சீரகம், பச்சைமிளகாய், இஞ்சிபூண்டு விழுது, எண்ணெய் + நெய் பாதியளவு, புதினா – மல்லி பாதியளவு, தயிர் , பொறித்து வைத்திருக்கும் வெங்காயத்தில் முக்கால் பகுதி, எலுமிச்சை சாறு, தேவையான அளவு உப்பு இவை அனைத்தையும் நன்றாக கையால் கலந்துமுப்பது நிமிடம் ஊறவிடவும்.

இதற்கிடையில், ஒரு பெரிய பாத்திரத்தில் நிறைய தண்ணீர் எடுத்து தண்ணீரில் சிறிது முழு நச்சீரகம், ஒரு பிரிஞ்சி இலை, பட்டை ஏலம், தேவைக்கு உப்பு சேர்த்து கொதிக்கவைக்கவும். அரிசியை சேர்க்கவும். அரிசியை பாதி பகுதி மட்டும் வேகவிட்டு வடிகட்டி எடுத்து வைக்கவும்.

ஒரு அடிகனமான அகன்ற பாத்திரத்தில் ஊறவைத்திருக்கும் சிக்கன் கலவையை பரப்பினார் போல சமப்படுத்தி வைக்கவும். அதன் மேல் வடிகட்டி வைத்திருக்கும் அரிசியை சிக்கன் மேலே போட்டு சமப்படுத்தவும்.  அதன் மேல் மீதமிருக்கும் மல்லிபுதினா மற்றும் பொறித்த வெங்காயம், பரவலாக போடவும். கடைசியாக பாலில் சிறிது குங்குமப்பூவை கரைத்து சுற்றிவர ஊற்றவும்.

இப்போது நீராவி வெளியே போகாமல் காற்று புகாதவாறு மூடியிட்டு 30 – 45 நிமிடங்கள் சிறு தீயில் வேகவிடவும்.

ஹ்ம்ம்ம்ம்ம்ம்ம் இப்போது பிரியாணி மணம் மூக்கை துளைக்கும். இந்நேரம் பிரயாணி தயாராகி இருக்கும். மூடியை திறந்து அடியிலிருந்து மேலாக அரிசியை உடையாமல் பக்குவமாக கிளறி விட்டு பின்பு சுடச்சுட பரிமாறவும்.

hyd-biryani

இந்த பிரயாணி முறை நாம் வழக்கமாக செய்வதை விட சுலபம் தான்.  சரியான விகிதத்தில் கலந்து தம்மில்யே போட்டு செய்வது. நேரமும் மிச்சப்படும். புதுமையான சுவையும் கிடைக்கும். செய்து பாருங்களேன் !  வாழ்த்துக்கள் !

வழங்கியவர்: உம்மு ரஹீஃபா

Add comment

காயல் நியுஸ், வாசகர்கள் கருத்துக்களை வரவேற்கிறது. வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் நியுஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்த விதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். முரண்பாடான மரியாதைக்குறைவான, கண்ணியமில்லாத கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கும் அவைகளை நீக்குவதற்கும் எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு. தங்களது பெயர் மற்றும் கருத்துக்களை தமிழில் தட்டச்சு செய்யலாம். உதாரணமாக "காயல்பட்டினம்" என்று தட்டச்சு செய்ய ஆங்கிலத்தில் "kaayalpattinam" என்று தட்டச்சு செய்து Space bar-ஐ அழுத்தினால் தங்கள் தட்டச்சு செய்த சொல் தமிழாக மாற்றப்படும். ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.


Security code
Refresh

 

செய்திகள்

“நடப்பது என்ன?” மகளிர் குழுமத்தின் தொடர் முயற்சியையடுத்து தைக்கா பள்ளிக்கூடத்தின் பழுதடைந்த பழைய கட்டிடம் இடித்தகற்றம்!
NeXTGen Kayalites (நடப்பது என்ன?) குழும ஏற்பாட்டில் ரெட் ஸ்டார் சங்கத்தில் குருதிக் கொடை முகாம்! மாணவர்கள் உட்பட திரளானோர் குருதிக்கொடையளித்தனர்!!
வார்டுகள் மறுவரையறை: தவறான வீட்டுத் தீர்வைப் பட்டியல் படி அமையப் பெற்றுள்ளதைச் சுட்டிக்காட்டி, நகராட்சி ஆணையரிடம் “நடப்பது என்ன?” குழுமம் மீண்டும் ஆட்சேபனைக் கடிதம்!
துளிரின் 'நேர மேலான்மை' குறித்த கருத்தரங்கம்!
வார்டுகள் மறுவரையறை: தவறான வீட்டுத் தீர்வைப் பட்டியல் படி அமையப் பெற்றுள்ளதைச் சுட்டிக்காட்டி, நகராட்சி ஆணையரிடம் “நடப்பது என்ன?” குழுமம் மீண்டும் ஆட்சேபனைக் கடிதம்!

சுடச்சுட காயல் செய்திகள்! சுவையான இஸ்லாமிய கட்டுரைகள் !!
தொடர்பு கொள்ள : admin@kayalnews.com
© Copyright : Kayalnews.com